Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கிலீக்ஸ் தகவல்கள் குறித்து அமெரிக்காவிடம் சிறிலங்கா விசனம்!

Featured Replies

விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்ட இலங்கை தொடர்பான தகவல் பரிமாற்றக் குறிப்புக்கள் குறித்து அமெரிக்காவிடம் சிறிலங்கா அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

இவ் விவகாரம் குறித்து சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டெனிஸிடம் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் விசனம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று காலை சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டெனிஸை சந்தித்த அமைச்சர் பீரிஸ், வொஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட தகவல் பரிமாற்றக் குறிப்புக்களில் களயதார்த்தத்துக்கு மாறான தவறான குற்றச்சாட்டுக்கள் அடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் சிறுவர்கள் முகாம்களில் வேசை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுவதாகவும், சிறிலங்காப் படையினரின் பாலியல் நோக்கங்களுக்காக பெண்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில், இத்தகைய உண்மைக்குப் புறம்பான தகவல்கள் சிறிலங்கா அரசாங்கத்தை சர்வதேச ர்Pதியில் மதிப்பிழக்கச் செய்யும் நோக்கத்துடன் புனையப்பட்டவையாக அமைச்சர் பீரிஸ் இச் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இத்தகைய போக்குகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் மற்றும் புரிந்துணர்வை ஊக்குவிக்கும் இராஜதந்திர நோக்கங்களுக்கு மாறானவை எனவும் அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டெனிஸிடம் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, இவ் விடயங்களை எதிர்காலத்தில் மிக விழிப்புணர்வுடன் கையாள்வது உகந்தது எனவும் அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டெனிஸிடம் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியல் விவகாரம் தொடர்பில் விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ள ஆவணங்கள் கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

விக்கிலீக்ஸ் இணையத்தளத்தால் வெளியிடப்பட்ட இந்த ஆவணங்கள் கொழும்புக்கும், வொஷிங்டனுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு முறுகல் நிலையை ஏற்படுத்தியிருந்தது.

இந் நிலையில், இந்த முறுகல் நிலை மேலும் மோசமடைவது தற்போதைய நிலையில் தமக்குச் சாதகமாக அமையாது என்பதால் இவ் விவகாரம் குறித்து நிதானமான காய் நகர்த்தல்களை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்திருந்த நிலையில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.net/news/contentnews.asp?sectionid=1&contentid={1DD80F17-05D7-4BF5-AF15-3282523DB789}

Sri Lanka warns US over allegations in WikiLeaks

Sri Lanka on Tuesday warned the United States to exercise "circumspection" in diplomatic cables after a message released by WikilLeaks suggested Colombo had colluded with murderous paramilitary groups.

External Affairs Minister G.L. Peiris told US Ambassador Patricia Butenis that leaked US cables contained "glaring instances of allegations totally unwarranted by the ground reality, being conveyed to Washington."

The statement released by the ministry added that Peiris "expressed the view that at least where future instances may be concerned, greater circumspection (by the US) would be appropriate."

One cable released by website WikiLeaks earlier this month said President Mahinda Rajapakse and his brothers were among those responsible for war crimes during the government's bloody conflict with Tamil Tiger rebels.

In another leaked cable, in 2007 the then US ambassador to Sri Lanka, Robert Blake, cited "trusted embassy contacts" reporting that top officials allowed pro-government Tamil paramilitary groups to operate with impunity.

Blake is currently the US Assistant Secretary for South and Central Asian Affairs.

Peiris complained of "mendacious stories" in the cables about claims of killings, and children being sold into slavery and girls forced into prostitution.

Government forces finally defeated the Tiger rebels last year, ending decades of civil war on the island. The military's final onslaught sparked allegations of war crimes on both sides.

http://news.yahoo.com/s/afp/20101221/wl_sthasia_afp/srilankaunresttamilrightswikileaks_20101221122844

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.