Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரின்போது வன்னியில் நிலவிய விலை போர் முடிந்த பின்னர் நாடு முழுவதும்!

Featured Replies

ஞாயிற்றுகிழமை, டிசம்பர் 26, 2010

போர் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் எவ்வாறு பொருட்களின் விலை இருந்ததோ அதே போலவே இப்போ நாடு பூராகவும் அத்தியவசியப்பொருட்களின் விலை இருப்பதாக சிங்கள மக்கள் சினம் கொண்டுவருகின்றனர்.

அரசாங்கம் போர் முடிந்த பின்னர் எல்லாம் சுபம் என்பது போல கூறியது ஆனால் சாதாரண சிங்கள மக்கள் வாழ்வோ நாள்தோறும் இளவுதான்.

அரிசி கிலோ 120 ரூபா

மரக்கறி கிலோ 160 ரூபா

வெங்காயம் கிலோ 260 ரூபா

மீன் கிலோ 1000 ரூபா

கோழி கிலோ 400 ரூபா

தேங்காய் ஒன்று 75 ரூபா

வாழைப்பழம் கிலோ 120 ரூபா

நாட்டில் முதன் முறையாக தேங்காய், முட்டை உட்பட பல பொருட்கள் பெருமளவு இறக்குமதி செய்ய வேண்டிய நிலை.

இதனைவிட தொற்று நோய்கள் ஒருபக்கம் இந்த மாதம் வரை 25 பேர் பன்றிக்காய்ச்சலால் இறந்துள்ளனர். போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு. மருத்துவ செலவு அதிகரிப்பு என வாழ்க்கையே கிராமப்புறங்களில் கேள்விக்குறியாகியுள்ளது. இதனைவிட போர் முடியாமல் இருந்திருந்தால் பரவாயில்லையே என மக்கள் உனர தொடங்கியுள்ளனராம்.

இந்த வருட கிறிஸ்மஸ் பண்டிகை மிகவும் உயர்ந்த செலவாக இருப்பதாகவே மக்கள் உணருகின்றனராம்.

Eelanatham

- அண்மையில் உலகவங்கி இலங்கையின் சராசரி தனிநபர் வருமானம் 2000 அமெரிக்கா டாலர்களை தாண்டிவிட்டது என சொல்லியிருந்தது.

- சர்வதேச நாணய நிதி இலங்கைக்கு கொடுக்கும் கடன் வசதிகளை கூட்டியுள்ளது.

- உல்லாச பிரயாணிகள் எண்ணிக்கை ஆறு இலட்சத்தை தாண்டியுள்ளது.

- வடக்கில் சிங்களம் தன் வங்கிகளின் கிளைகளை அதிகரிக்க உள்ளது.

மேலே கூறப்படும் தரவுகள் உண்மையானவை என எடுத்துக்கொண்டால் சராசரி மக்களின் வாழ்க்கை தரம் கூடியிருக்கவேண்டும். ஆனால், சாதாரண மற்றும் வறிய மக்களின் வாழ்க்கை தரம் முன்னேறவில்லை. மக்களின் வரிப்பணம் அதிகளில் அறவிடப்பட்டு சிங்களத்தின் கடன்களை மீள அடைப்பதிலும் அரசியல் ஊழல்களுக்கும் விரயமாகப்பட்டு வருகின்றது.

மக்களின் பொறுமையை / வரக்கூடிய கிளர்ச்சிகளை அடக்குவதற்கு, அரசு இராணுவத்தை பல சலுகைகள் கொடுத்து தனது கைக்குள் வைத்துள்ளது. அதன் மூலம் ஒரு சர்வதிகார போக்கை கடைப்பிடிக்கின்றது. தேர்தலில் மட்டுமே சாதாரண / வறிய மக்கள் தமது தீர்ப்பை வழங்கலாம்.

Edited by akootha

2010 இல் ஓரளவுக்கு மறுசீர் செய்யப்பட்ட உலகப்பொருளாதாரம் 2011 இல் மீண்டும் ஒரு சரிவை எதிர்கொள்ளலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. இதன் மூலமாக ஐரோப்பாகவும் அதிலும் போர்த்துக்கல், ஸ்பெயின் நாடுகளின் வங்கி நிலைமைகள் உள்ளன.

ஐரோப்பாவின் வளர்ச்சி அதன் நாணயம் - யுரோ என்பன பதிக்கப்படும் பொழுது அமெரிக்காவின், சீனாவின் மற்றும் உலக பொருளாதாரம் பாதிக்கப்படும். இதன் மூலம் 2010 இல் அதிகம் இலங்கை ஏற்றுமதி செய்யும் நாடான அமெரிக்கா, அதிகம் உதவும் நாடானான சீனா பாதிக்கப்படுகையில் இலங்கையும் பாதிக்கப்படும். மேலும், நிச்சயமற்ற ஒரு தன்மை ( economic uncertinity) நீடித்தால் மக்களின் "உல்லாச பிரயாணங்களும்" பாதிக்கப்படும், இது இலங்கையையும் பாதிக்கலாம்.

உலக பொருளாதார வளர்ச்சி குறைகையில் மசகு எண்ணெய் தேவையும் குறையலாம். இதனால் அதன் விலை குறையலாம், இது மத்திய கிழக்கு நாடுகளையும் பாதிக்கும்போது அங்கிருந்து இந்த வருடம் வந்த 3B ( 3, 000,000,000) அமெரிக்கா டாலர் அந்நிய செலவாணியையும் பாதிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னுமொருக்கால் சுனாமியோ இல்லாட்டி சூறாவளியோ வெள்ளப்பெருக்கோ, வயித்தாலையடியோ வந்துதெண்டால் இவங்கள்(USA,UK,EU) குடுக்குற உதவிக்காசை வைச்சு ஒருமாதிரி சமாளிச்சுடுவங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.