Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேச்சுவார்த்தைகளில் இந்திய உளவு நிறுவனம் RAW இரகசியப் பங்கு வகித்தது! நாராயண் சுவாமி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் இந்திய உளவு நிறுவனமான ’றோ’ ஆற்றிய இரகசியமான பங்கு தொடர்பாக பிரபல இந்திய எழுத்தாளர் நாராயண் சுவாமி அண்மையில் எழுதியுள்ள நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் இரகசியமானதும் முக்கியத்துவம் மிக்கதுமான ஒரு பாத்திரத்தை இந்திய உளவு நிறுவனம், RAW ஆற்றியதாக «The Tiger Vanquished – LTTE’s story» என்ற இவரது நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்நூலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

1998 – 99 ம் ஆண்டுகளில் ஆட்சியிலிருந்த பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கமே, சிறிலங்கா விடயங்களில் மீண்டும் நேரடியாகத் தலையிடும் கொள்கை முடிவை எடுத்திருந்தது. அப்போதைய இந்தியப் பாதுகாப்புச் செயலரும் அனுபவம் மிக்க இராஜதந்திரியுமான Brajesh Mishra இன் மேற்பார்வையில் நோர்வேயின் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் இந்தியா இரகசியப் பங்காற்ற முனைந்தது.

சிறிலங்கா தொடர்பான இந்திய அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டவுடனேயே இந்தியாவின் வெளியக உளவுப் பணிகளை மேற்கொண்ட றோ (தற்போதைய RAS) அமைப்பின் தலையீட்டை இந்திய அரசு வேண்டியது.

ஆனாலும் இப் பேச்சுவார்த்தைகளில் நோர்வேயின் சார்பில் ஆரம்பம் முதல் முக்கிய பாத்திரத்தை வகித்த எரிக் சோல்ஹெய்ம், இப் பேச்சுவார்த்தைகளில் இந்திய உளவு நிறுவனத்தின் மறைமுக பங்கு தொடர்பாக எவ்வித கருத்தையும் தெரிவிக்க மறுத்துள்ளதாக இந்நூல் தொடர்பான கட்டுரையொன்றை எழுதியுள்ள நோர்வே நாட்டுப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

‘நான் இப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தேன் என்பது உண்மை. ஆனால் இது தொடர்பாக இந்திய வெளிநாட்டமைச்சு அதிகாரிகளையும் பாதுகாப்புச் செயலரையும் மட்டுமே சந்தித்தேன்’ என எரிக் சோல்ஹெய்ம், குறிப்பிடுகின்றார்.

‘இந்தியாவை இப்பிரச்சனையின் முக்கிய பங்காளியாகவே நாம் கருதினோம். பல விடயங்களில் எமக்குள் உடன்பாடு இல்லாது போனாலும், நடந்த அனைத்து விடயங்களையும் நாம் அவர்களுக்கு தெரியப்படுத்தினோம். ஆனால் இந்திய உளவு நிறுவனம் ஆற்;றிய பங்கு தொடர்பாக நாம் வெளியில் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை’ என RAW இன் மறைமுக பங்களிப்பை ஒப்புக் கொள்கிறார் சோல்ஹெய்ம்.

நோர்வே, சிறிலங்கா, இந்திய போன்ற நாடுகளின் ஒரு சில அரசியல்வாதிகளைத் தவிர யாருக்குமே இந்திய அரசியல்வாதிகள் ஆற்றிய பங்கு குறித்துத் தெரியாது. நோர்வேயின் நான்கு இராஜதந்திரிகளுக்கு மட்டுமே இந்திய உளவு நிறுவத்தின் பங்கு குறித்து முழுமையாகத் தெரியும் எனத் தெரிவிக்கும் நூலாசிரியர் நாராயண் சுவாமி, இந்த நான்கு இராஜதந்திரிகளின் பெயர்களை வெளியிட மறுத்துள்ளார்.

‘இந்தியாவின் தீவிரமான பங்குபற்றலின்றி நாம் இதில் வெற்றி பெற்றிருக்க முடியாது. போர்நிறுத்தம் முதல் பேச்சுவார்த்தையின் ஒவ்வொரு விடயமுமே இந்தியாவின் பங்கு இன்றி முயற்சிக்கப்படவில்லை’ என்கிறார் நோர்வேயின் முன்னாள் பிரதி வெளிநாட்டமைச்சர் விதார் ஹெல்கிசன்.

விடுதலைப் புலிகள் மீது இந்தியா எவ்வித கருணையும் கொண்டிருக்கவில்லை. மாறாக புலிகளை அழிப்பதில் முக்கிய பங்கு வகித்த சிறிலங்காவின் சிறப்பு படைப்பிரிவிற்கு இந்தியா பயிற்சியளித்து உதவியது.

‘பேச்சுவார்த்தையின் பல நடைமுறை விடயங்கள் குறித்து நோர்வே இராஜதந்திரிகளுடன் இந்திய உளவு நிறுவன அதிகாரிகள் கலந்தாலோசனை செய்திருந்தனர். ஆனாலும் இந்திய உளவு நிறுவனமான RAW ஆற்றிய பங்கின் ஆழம் தொடர்பாக விடுதலைப் புலிகள் சரியாகப் புரிந்து கொண்டிருக்கவில்லை’ என நாராணய சுவாமி மேலும் இந்நாலில் குறிப்பிட்டுள்ளார்.

நூலாசிரியர் நாராணன் சுவாமி இந்திய உளவு நிறுவனமான RAW இன் முகவராக கருதப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={F549A146-8192-415F-806F-0DF21E10A545}

Edited by மோகன்
மூலம் திருத்தப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தைக்கு முன்னும் ,பின்னும் இந்தியாவுக்கு நோர்வேக்காரர் சென்றது எல்லோரும் அறிந்ததே. பேச்சுவார்த்தைக்கு "கோட்டும் சூட்டும்" விடுதலைப்புலிகள் போட்டுக்கொண்டு இலங்கை விமானத்தில் போனார்கள் வைத்தெரிச்சலுடனும் பொறாமையுடனும் ஒருவர் இங்கு கருத்து சொன்னார். அவர் மேற்படி இந்திய உளவு துறையின் பங்கு குறித்து என்ன சொல்லப்போகிறார்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.