Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் கைதிகளை நிர்வாணப்படுத்தி பரிசோதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமை, 27, டிசம்பர் 2010 (22:14 IST)

தமிழ் கைதிகளை நிர்வாணப்படுத்தி பரிசோதனை

இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் பயங்கரவாத மற்றும் அவசரகால சட்ட விதிகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை இலங்கையின் சட்ட விதிகளுக்கு புறம்பான வகையில் திடீரென முப்படையினரும் சிறைச்சாலையினுள் சென்று பரிசோதனை செய்து வருவதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது, இன்று முதல் இந்த பரிசோதனை நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறைச்சாலையினுள் உள்ள ஒரு தனியான அறையினுள் மூன்று கைதிகள் வீதம் கொண்டு செல்லப்பட்டு முற்றிலும் நிர்வாணப்படுத்தப்பட்ட பின்பு அவர்கள் சிறப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக பரிசோதனைக்கு ஆளாகிய கைதிகள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு விளக்க மறியற்சாலையில் உள்ள கைதிகளே முதன் முதலாக இன்று மிகவும் கொடுமையானதும் கேவலமானுதுமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என கூறப்படுகிறது.

இந்த பரிசோதனையின் போது படை அதிகாரிகள் தங்களது ஒவ்வொரு உறுப்புக்களையும் தடியினால் தட்டிக் காட்டி உங்களைப் பாதுகாக்க இப்போது யாரும் இல்லையே என மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் அத்துடன் மூன்று கைதிகளும் ஒரே இடத்தில் நிர்வாணமாக்கப்பட்டதானது தங்களுக்கு மிகவும் அவமானமாக இருந்ததாகவும் பரிசோதனைக்கு உள்ளானவர்கள் மிகவும் மனம் கலங்கியபடி கூறியதாகவும் அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

nakkheeran

இப்படியான மனித நாகரீகத்திற்கு சவால் விடும் சிங்கள காட்டுமிராண்டித்தன செயல்களே நாளைய "பயங்கரவாதத்திற்கு" அடித்தளமாகி விடுகின்றன. இன்று மௌனம் காத்துவிட்டு நாளை "உலகம்" மீண்டும் "பயங்கரவாதிகள்" என முத்திரை கொடுக்கும் சந்தர்ப்பத்தை நாம் அனுமதிக்ககூடாது.

இவற்றை உலகத்தின் கண்களுக்கு காதுகளுக்கு கொண்டு செல்வது புலம் பெயர் மக்களாகிய எமது கடமையும் கூட.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவற்றை உலகத்தின் கண்களுக்கு காதுகளுக்கு கொண்டு செல்வது புலம் பெயர் மக்களாகிய எமது கடமையும் கூட.

ஏன்...? உவங்களுக்கு என்ன அங்க நடக்கிறது ஒண்டும் தெரியாதா என்ன....எல்லாம் தெரிசுதான் பேசாம இருக்கிறாங்கள்....எங்களை நாங்கள்தான் காப்பத்த வேணும் ஒழிய இந்த உலகத்தை நம்பினால் அவ்வளவுதான்..... பாத்தீங்கள் தானே இந்த உலகம் வந்து காப்பாத்தும் எண்டு நம்பி நம்பி இருந்து கடசீல முள்ளிவாய்க்கால்ல நடந்தத...!!

ஒருத்தனையும் நம்பாதிங்கோ, எங்கள நாங்கள் தான் காப்பாத்த வேணும், இல்லாட்டா அழிஞ்சு போவம் - இதான் நிதர்சனமான உண்மை....

  • கருத்துக்கள உறவுகள்

சுடரொளி! நீங்க சொல்வதிலை உண்மை இருந்தாலும் இப்போ பிரச்சினை என்னவென்றால், எங்களுக்குள்ளை இன்னும் தெளிவு வரவில்லையே.

நாம்ம தெளிவடைந்திட்டால் எல்லாமே சுலபம், எதிரியும் அதிலை தானே கண்ணும் கருத்துமாக செயல்படுகிறான் அதாவது எங்களை தெளிவடையவிடாமல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.