Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர் தமிழர்கள் எந்த நிமிடமும் விழிப்பாயிருக்க வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் தமிழர்கள் எந்த நிமிடமும் விழிப்பாயிருக்க வேண்டும்.

ஈழத்தமிழரின் விடுதலைப் போர் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு மனிதப்படுகொலையுடன் முடிவிற்கு கொண்டு வந்ததாக கூறும் இலங்கையரசு தமிழர்களை எந்தெந்த வகையில் அழிக்க முடியுமோ அந்தந்த வகையில் திட்டமிட்டு அழித்து வருகின்றமையை நாளாந்த செய்திகளிலிருந்து அறிய முடிகின்றது.

ஈழத்தமிழர்களை இலங்கைத் தீவினின்றும் முற்றுமுழுதாக துடைத்தெறியும் தூர நோக்குடன்கூடிய திட்டமிடல் சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளால் ஈழத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. முற்றுமுழுதான மனிதப் படுகொலையை நடத்தி முடித்த இலங்கை ஜனாதிபதியின் நரபலி நடவடிக்கைகளை வெளி உலகிற்கு கொண்டு வந்து அவரைப் போர்க்குற்றவாளியாக்கும் நடவடிக்கைகளை புலம்பெயர் தமிழர்கள் செய்து வருகின்றமை இலங்கை ஜனாதிபதியைச் சீற்றமடைய வைத்திருந்தமையே திடீர் அறிவித்தலுடன் தேசிய கீதத்தை தமிழர் பகுதிகளிலேயே சிங்கள மொழியில் பாட வைத்த செயலாகும்.

முள்ளிவாய்க்காலுடன் முடிவுற்ற மனிதப் பேரழிவிற்கு தமிழர்களை அழித்துவிட்டு பயங்கரவாதத்தை அழித்துவிட்டோம் எனப் பெயர் சூட்டியிருக்கின்றது இலங்கையரசு.பயங்கரவாதிகள் என்பது தமிழர்களே என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழர் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.

இலங்கை ஜனாதிபதியால் மேறகொள்ளப்பட்ட இன அழிப்பு,இலங்கையரசால் மேற்கொள்ளப்படுகின்ற தமிழருக்கான நியாயமான அரசியல் உரிமை மறுப்பு போன்றவற்றை தட்டிக் கேட்கவோ போராடவோ இயலாத நிலையில் சூழ்நிலையின் கைதிகளாக இருக்கும் தமிழர்களுக்காக புலம்பெயர்ந்து வாழும் ஒரே இரத்தமான தமிழர்கள் அதிதீவரமாக தமது போராட்டங்களை முன்னெடுத்துவருவதும் அதனால் இலங்கையரசு திணறி புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை முடக்கியே தீருவோம் என கங்கணம் கட்டி செயல்படுவதற்குச் சாதகமாக எம்மவர்கள் பலர் வீடு எரிக்கும் அரசனுக்கு பந்தத்தில் எண்ணை ஊற்றிய கதையாக தமிழர்களை காட்டிக் கொடுத்து வருகின்றனர்.

இலங்கை அரசை போர்க்குற்றவாளியாக்க வேண்டிய சகல நிருபணங்களும் தமிழ் உறவுகளால் ஐக்கிய நாடுகள் சபை உட்பட அக்கறை உள்ள அனைத்து அமைப்புகளுக்கும் அனுப்பப்பட்டு விசாரணைக்கான முன்னெடுப்புகள் இடம்பெறுவதற்கு புலமு;பெயர் தமிழர்களே காரணம் என்பதை அறிந்த இலங்கை ஜனாதிபதியவர்கள் புலம்பெயர் தேசத்திற்குள் பலரை ஊடுருவ விட்டிருக்கின்றார்.

சனல்4 தொடக்கம் பத்திரிகைகளில் வெளியான பல்வேறு கட்டங்களில,; போராளிகள் பொதுமக்கள் எனக் கொலை செய்யப்பாட்டவர்களின் ஆதார புகைப்படங்களை ஒளிப்படக் காட்சிகளை இலங்கை தொடர்ந்து மறுத்து வருகின்றது.அதே வேளை அரசின் மந்திரி சபையில் அங்கம் வகிக்கம் அமைச்சர்கள் தானாடாவிட்டாலும் தசையாடும் என்பார்களே அதுகூட இல்லாது ரோசம் கெட்ட மனிதர்களாக அதுவும் இராணுவம் ஒழுக்கத்துடனேயே நடந்து கொள்கின்றது என்று வெட்கங்கெட்டு அறிக்கையையும் விடுகின்றார்கள்.

புலம்பெயர் சமூக ஒழுங்கினையும்;,புலம்பெயர் தமிழர்களின் இனமான உணர்வினையும் சிதைத்து அவர்களின் இனமான உணர்வையும் விடுதலை நோக்கிய செயல்பாட்டையும் அழிக்கும் விதமாக பல புதிய முகங்கள் உலக நாடுகள் எங்கு இறக்குமதி செய்யப்பட்டு அவர்கள் தமது சகுனி வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.

முள்ளிவாய்க்கால் போர் முடிவடைந்ததன் பின்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிய செய்தியினால் புலம்பெயர் தமிழர்கள் சோர்வடைந்தது ஏதோ உண்மைதான்.ஆனால் அத்துடன் தமிழரின் விடுதலைப் பயணம் முற்றுப் பெற்றுவிட்டது என்று நினைப்பது ஒரு விவேகமான எண்ணமே அல்ல.

தனிமனிதன் ஒருவனின் முனைப்பை ஆற்றலை இல்லாமல் செய்வதற்கு அவன் பலவீனம் எது என அறிந்து அந்த இடத்தில் இலக்கு வைத்து தாக்கினால் எப்படி துவண்டு விழுவானோ அது போன்று ஒரு சமூகத்திற்கும் பலவீனமிருக்கும்.

புலம்பெயர் தமிழர் சமூகத்திற்குள் இருக்கும் கீழ்வரும் பலவீனங்கள் நிச்சயமாக இலங்கையரசிற்கு சாதகமான பலமே.

1.ஒரு புள்ளியில் நின்று செயல்படாது ஆளாளுக்கு நானே பெரியவன் என எண்ணுவது,அதற்கேற்றாற் போல் நடந்து கொள்வது.

2.தங்களைத் தாங்களே சுயவிமரசனம் செய்து பொதுமக்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வதைத் தவிர்ப்பது.

3.பொதுமக்கள் தங்களைவிட புத்திசாலிகளாகவும் சிந்தனையாளர்களாகவும் இருப்பதை ஜீரணிக்க முடியாமல் செயல்பாட்டாளர்கள் தவிப்பது,பொதுமக்களை அலட்சியப்படுத்துவது.

4.குறிப்பாக ஐரோப்பாக் கண்டத்திலிருக்கும் செயல்பாட்டாளர்கள் அனைவரும் ஒருவரின் கீழ்தான் பணியாற்றுகிறார்களா எனப் பொதுமக்களைச் சந்தேகங் கொள்ள வைத்தல்.

இது போன்ற காரணங்களால் பாரதூரமாண விளைவுகளை தமிழ்ச் சமூகம் எதிர் நோக்க வேண்டியுள்ளது.தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தி அழித்தது போல் தமிழர்களின் ஜனநாயகப் போரை அழிக்க முடியாது இலங்கையரசு திணறுகின்றது.

புலம்பெயர் தமிழர்களின் ஜனநாயகப் போரை முடக்குவதற்கு தலைவர் பற்றிய செய்தியை இலங்கையரசு கையிலெடுத்து தமிழர்களைவிட அதிவேகமாக தமிழர்களுக்குள் பரவவிட்டு வருகின்றது.இதனால் ஜனநாயக முனைப்புகள் போட்டது போட்டபடி என்ற சூழ்நிலை உருவாகி சமூகத்திற்குள் ஸ்தம்பித நிலை உருவாகுகின்றது .எமது தவறு எம்மை நோக்கியே அம்பாக எய்யப்படுகின்றது.தலைவர் எப்பொழுது வர வேண்டுமோ அப்பொழுது வருவார்.அவரின் மாவீர் நாள் உரையொன்றில் புலம்பெயர் தமிழர்களே விடுதலையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதை கூறியிருந்தார் என்பதை நாங்கள் நினைவு கூரவேணடிய பொறுப்பிலிருக்கின்றோம்.

ஒரு புள்ளியில் நின்று செயல்பட்டு ஒருவரின் செயல்பாட்டின் கீழ் அனைத்து செயல்பாட்டாளர்கள் செயல்படத் தவறும் பட்சத்திலும்,தாங்கள் நடந்து கொள்வது சரிதானா எனத் தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்யத்தவறுவதும் பொதுமக்கள் தம்மைவிட புத்திசாலிகளல்ல என நினைப்பதும் அதனால் பொதுமக்களின் அதிருப்தி என்ற வாகனத்தில் எறி இலங்கையரசின் உளவாளிகள் தங்களை „விடுதலைத் தீ“என்ற பெயருடன் அதிருப்தியாளர்களை அணுகி அவர்களை மூளைச்சலவை செய்து ஒரு புதிய அணி ஒன்றை உருவாக்கி விடுவார்கள்.இதனால் புலம்பெயர் தமிழர் சமூகம் பிளவுபட்டு சிதிலமடைந்து போகின்ற நிகழ்வே நடக்கும்.

ஐரோப்பிய நாடுகளை இலக்கு வைத்து அண்மை நாட்களில் எல்லோராலுமே அறியப்பட்ட முக்கிய பெயரைத் தாங்கிய ஒருவரின் குழு புலம்பெயர் தமிழர்களை சந்தித்து குற்றங்குறைகளை கேட்டறிந்து சென்றிருக்கின்றது.இச்சந்திப்புகளின் பெறுபேறுகள் யாவும் அறிக்கைகளாக அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டு புலம்பெயர் தமிழர்களை எவ்வாறு கையாலாம் என இலங்கையரசால் தெளிவாகவே திட்டமிடப்படுகின்றது.

எம்மிடம் ஒரு குறைபாடு உண்டு,அது என்னவெனில் தன்னுடன் கருத்து முரண்பாடுடையவரைப் பற்றித் தவறான செய்திகளை சொல்பவர்களை மிக மகிழவொடு ஆரவாரித்து நம்புவது.இந்த அபிப்பராய அணுகுமுறை தவறே.

தமிழர்கள் புத்திசாலிகள் அதனால்தான் விழ விழ மீண்டும் எழுந்து நிற்கின்றார்கள் என்பது உலக நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு நன்றாகவே தெரியும்.குறிப்பாக இந்தியாவிற்கு மிக நன்றாகவே தெரியும்.பழமும் திண்று கொட்டையைப் போட்டவன் என்று சொல்வார்களே அது போல் ஈழத்தமிழர்களின் வல்லமையை இந்தியா கரைத்துக் குடித்தே வைத்திருக்கின்றது.

கோடு போட விட்டால் அவர்கள் ஆகாயத்திலேயே வீதி போடக்கூடியவர்கள் என்பதைத் தெளிவாக அறிந்த காரணத்தால்தான் நிமிர்ந்து நின்ற விடுதலைப் போராட்டத்தை இராட்சத முனைப்பில் அழித்தது.இப்பொழுது அதைவிடத் தமிழர்கள் தீவரமாக இருக்கிறார்களே என்பதானால் இந்தியாவும் இலங்கையும் ஆற அமர உட்கார்ந்து தமிழர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை சிதைக்க அழகாக திட்டம் தீட்டி நடைமுறைப்படுத்தி வருகின்றன.

புலம்பெயர் தமிழர்களை எவர் சந்திக்க வந்தாலும்,அவர் எவராகவிருந்தாலும் அவரைப் பற்றி தீர விசாரிக்காமல் தங்கள் மனதில் இருப்பதை நெல்லிக்காய் மூட்டை மாதிரி அவிழ்த்துக் கொட்டவே கூடாது.

அமெரிக்க இராஜதந்திரத்தில் ஒரு நடவடிக்கை இப்படியாகவிருக்கும்.இந்தக் குளத்தில் மீன் இல்லை என்று திட்டவட்டமாக அறிந்தாலும் எப்பொழுதாவது ஒரு மீனாவது சிக்கும் என்பதற்காக தூண்டிலைப் போட்டு வைப்பது போல் சிலதை அறிய சிலரை நியமிப்பார்களாம்.அது போல்தான் புலம்பெயர் சமூகத்திற்குள் பல தூண்டில்கள் போடப்பட்டுள்ளன.

மூளைச்சலவையில் சிக்குகின்ற தமிழர்களிடமிருந்து தகவல்களைப் பெற்று அதற்கமைய தமது நடவடிக்கையை நகர்த்த இலங்கையரசு நிழல் அமைச்சகம் ஒன்றையே அமைந்திருக்கின்றது.புலம்பெயர் தமிழர்களின் மனங்களை பகுத்து பல்வேறு கட்டங்களாகவும்,பல பிரிவுகளாகவும் வகுக்கப்பட்டு அணுகப்படுவதை அறியாத புலம்பெயர் தமிழர்கள் இலங்கையரசின் சதிப் பின்னலில் விழ வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள்நூறு வீதம் நம்புவது என்பது எப்பொழுதுமே இருக்கக்கூடாது.தொண்ணூற்றொன்பது வீத நம்பிக்கையும் ஒரு வீத எச்சரிக்கை உணர்வும் புலம்பெயர் தமிழர்களுக்குத் தேவை.

அவ்வாறு இருந்தால்தான் விடுதலைப் போரை ஜனநாயக வழியில் சென்று வெற்றியீட்ட முடியும்.இல்லையெனில் சாண் ஏற முழம் சறுக்கும் ஆபத்தான நிலையே தோன்றும்.

-அவதானி-

http://meenakam.com/

Edited by விடியல்

:D

இன்று அநேகமான புலம்பெயர் அரசியல் அமைப்புக்கள் சனநாயக பண்பை கொண்டவை. அதனால் ஒரு அமைப்பு சோரம் போவது அவ்வளவு இலகு அல்ல,ஆனால் சாத்தியம். மேலும், புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஒருகுடையின் கீழே நிற்காதுள்ளன, ஆனால் கூடுதலாக ஒரே இலக்கை கொண்டவையாக உள்ளன. இது கூட ஒருவிதத்தில் பலம் என்றுதான் பார்க்கப்படும்.

தொடர்ந்து ஒற்றுமையாகவும் விழிப்புணர்வுடனும் இருப்பதும் செயற்படுவதும் எமது தமிழீழ மக்களின் இருப்புக்கும் விடுதலைக்கும் அவசியமானதாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.