Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கு விழப்போகும் அடுத்த சாட்டையடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கு விழப்போகும் அடுத்த சாட்டையடி

ஜன 2, 2011

Font size:

இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடுத்த நெருக்கடி எதிர்வரும் மார்ச் மாதம் பெரும் சாட்டையடியாக மாறவுள்ளதாக ஊர்ஜிதமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வின் போது இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்றை முன்மொழிவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நம்பகமான தகவல் வட்டாரங்கள் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கென ஆதரவு திரட்டும் நோக்கில் ஐரோப்பாவின் பலம் பொருந்திய சிலநாடுகளின் உயர்மட்ட அமைச்சர்களுடனான கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அதற்கு மேலதிகமாக ஐ.நா. நிபுணர் குழுவின் ஊடாக இலங்கையின் போர்க்குற்ற ஆதாரங்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிரானதும், பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சாதகமானதுமான அறிக்கையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளும் இராஜதந்திர ரீதியில் சமகாலத்தில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிய

sangkathi

இதையும் காந்திதேசம் முன்னால் நின்று தவிடு பொடியாக்கிவிடும் என்று எதிர்பார்க்கலாம். ஏனென்றால் இலங்கையை விடவும் இந்தியாவே போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் அதிக பயத்துடன் இருக்கிறது.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கு விழப்போகும் அடுத்த சாட்டையடி

இந்தியன் சிங்களவனுக்கு விசிறி எடுத்து விசுக்கிக்கொண்டிருக்கிறான்.

சீனன் சாப்பாடு தண்ணிகுடுத்துக்கொண்டிருக்கிறான்........உந்த சாட்டையடி நடக்குமெண்டுறியள்???? அடிச்சாலும் சிங்களவனை நோகவிடமாட்டாங்கள்.

இந்தியன் சிங்களவனுக்கு விசிறி எடுத்து விசுக்கிக்கொண்டிருக்கிறான்.

சீனன் சாப்பாடு தண்ணிகுடுத்துக்கொண்டிருக்கிறான்........உந்த சாட்டையடி நடக்குமெண்டுறியள்???? அடிச்சாலும் சிங்களவனை நோகவிடமாட்டாங்கள்.

நோகாம அடிப்பாங்கள் அல்லது தட்டிக் குடுப்பாங்கள்

எங்களுக்கான முக்கிய விடயங்கள் முடிவில்லாமல் இழுபட்டுக் கொண்டே செல்வதால், நம்பிக்கையீனங்கள் ஏற்படுகிறது. ஏதாவது ஒரு விடயம் உலக நாடுகளால் நிறைவேற்றப்பட்டால்தான் நம்பிக்கை பிறக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிராக போர்க்குற்றப் பிரேரணையொன்றை முன்மொழிவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!

Posted by admin On January 3rd, 2011 at 5:51 am

ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் அமர்வின்போது இலங்கைக்கு எதிராக போர்க்குற்றப் பிரேரணையொன்றை முன்மொழிவதற்கான ஏற்பாடுகள் இப்போதிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

போர்க்குற்றப் பிரேரணையை முன்மொழிவதற்கும், அதை நிறைவேற்றிக்கொள்வதற்கும் ஐரோப்பாவின் பலம் பொருந்திய சில நாடுகளின் உயர்மட்ட அமைச்சர்களுடன் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த அமர்வில் முன்மொழியப்படவுள்ள பிரேரணைக்கு வலு சேர்க்கும் வகையில் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஆராய ஐ.நா. செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிடமிருந்து இலங்கைக்கு எதிரானதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமானதுமான அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் இராஜதந்திர ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

saritham.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.