Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்படும் கொலைகளின் பின்னணியில் : புலத்திலிருந்து மடல்

Featured Replies

உரிமையுடன் வாசகர்களுக்கு,

மூன்று தசாப்தங்கள் கடந்து சென்றுவிட்டன. தொலைபேசியில் பேசுவதற்குக் கூட பயம் மேலிடுகிறது. ஏதோ நடக்கப்போவதற்கான அறிகுறிகளும் முன்னறிவுப்புகளும் தென்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் திட்டமிட்டுத் தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்பட்டது. அதனை ஆட்சேபித்தவர்கள் கொல்லப்பட்டும் மிரட்டப்பட்டும் மயான அமைதிக்கு அழைப்பு விடுக்கிறார்கள் இலங்கை அரசின் கைக்கூலிகள்.

எப்படி எதிப்புக்கள் எழுகின்றன யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்கள் என்று நாடிபிடித்துப் பார்ப்பதற்காகவே தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்பட்டதும் அதனைப் பின் தொடர்ந்த மிரட்டல்களும் கொலைகளும்.

யாழ்ப்பாணத்தில் திருட்டுக்களும் கொள்ளைச் சம்பவங்களும் பாலியல் வல்லுறவுகளும் அதிகரித்துள்ளன. இதனை நடத்துபவர்கள் விடுதலை செய்யப்ப்பட்ட முன்னை நாள் புலிகளே என திட்டமிட்டுச் செய்தி பரப்ப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரச அதிபரும் ராஜபக்ச குடும்பத்தின் அடிமை விசுவாசியுமான இமெல்டா சுகுமார் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அரச படைகள் முனைப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அறிக்கை விடுக்கிறார்.

பத்திரிகைகள் அறிக்கைகளைத் தாங்கி வெளிவருகின்றன. விடுதலை செய்யப்பட்ட புலி ஆதரவாளர்களும் உறுப்பினர்களும் அரச எதிர்ப்பாளர்களும் கைது செய்யப்படுகின்றனர்.

பல இடங்களில் கடத்தல் கொள்ளை போன்றவற்றை அரச படைகளும் அவற்றின் துணைப்படைகளும் திட்டமிட்டு நடத்தி வருகின்றன. அவற்றை மேற்கொள்ளுவோர் என அரச எதிர்ப்பாளர்களைக் கொலை செய்கின்றனர். தொலை பேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. மின்னஞ்சல்கள் வடிகட்டப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் அரசின் அதிகாரம் தாண்டவமாடுகின்றது. மக்கள் பயப்பீதியில் வாழ ஆரம்பித்துள்ளனர். கடந்த ஒரு மாதகாலம் பயங்கர இருளுக்குள் வாழ்வதான உணர்வையே ஏற்படுத்துகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் ஹூல் துணை வேந்தராக நியமிக்கப்பட்டது போல ஏனைய எல்லா நிறுவனங்களிலும் அரசின் நேரடியான ஏஜண்டுகள் நியமிக்கப்படுகிறார்கள்.

குறிப்பாகக் கல்விக்கூடங்களில் மூலைக்கு மூலை உளவாளிகளைக் காணக்கூடியதாக உள்ளது. அரசிற்கு எதிரான பேசுகின்ற எல்லோரையும் பின் தொடர்கிறார்கள். தேனீர்க் கடையொன்றில் புத்தர் சிலைக்கு எதிராகப் பேசிய மூவர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவற்றிற்கான பின்னணியாக பாரிய திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஒன்றை நடத்துவதற்கான தயாரிப்பு மேற்கொள்ளப்படுவதாக ஊகங்கள் நிலவுகின்றன. ஏற்கனவே வடக்கின் வாக்காளர் பட்டியலிலிருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டுவிட்டனர். குறுகிய கால எல்லைக்குள் அனைவரையும் பட்டியலில் பதியுமாறு கோரிக்கை வைக்கிறார்கள். அந்தப்பதிவு முடிந்ததும் இங்கு மக்கள் தொகை போதாது என்ற காரணத்தை முன்வைத்து சிங்களக் குடியேற்றங்களை நிகழ்த்துவதே அரசின் நோக்கம் எனப் பரவலாகக் கருத்து நிலவுகிறது.

அதற்கான முன்னறிவிப்பே கொலைகள், கடத்தல்கள் மிரட்டல்கள் எல்லாம். உருவாகக் கூடிய எதிர்ப்புக் குரல்களை நசித்துவிட்டால் தாம் எண்ணியபடி செயற்படலாம் என்பதே இவர்களின் நீண்ட காலத் திட்டம்.

அதன் திடுட்டுத் தனமான தந்திரோபயமாக குறறச் செயல்களை அவர்களே புரிந்துவிட்டு அரச எதிப்பாளர்கள் மீது பழி போட்டு, அவர்களைக் கைதுசெய்து சிறையிலடப்பதும், மக்கள் அங்கீகரத்துடன் அவர்களைக் கொலைசெய்வதும் என ஒரு நாடகம் அரங்கேற்றப்படுகிறது.

இங்கிருக்கும் ஊடகங்கள் இவை பற்றிப் பேச முடியாமல் முடக்கப்பட்டுள்ளன. ஊடக வன்முறைகள் எல்லை தாண்டியுள்ளன. உலகம் இன்னொரு அழிப்பையும் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறதா?

http://inioru.com/?p=19129

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சிறிதளவும் வியப்பேதுமில்லை. யாழ்ப்பாணம் எதிர்காலத்தில் இப்படித்தான் இருக்கும் என நான் ஊகித்திருந்ததுதான். காரணம் யாழ்குடாநாடு புலிகளிடமிருந்து வீழ்சியடைந்ததிலிருந்து கிட்டத்தட்ட பதினாறு வருடங்களுக்கு அதிகமாக இராணுவத்தினது நெருக்குவாரத்திற்கு மத்தியிலேயே வாழப் பழகிய மக்கள் அவ்வேளையில் சிறுவர்களாக இருந்தோரும் அக்காலத்தின்பின்பு பிறந்தோரும் இராணுவம் தம்மைச்சுற்றியுள்ள சூழலுடனேயே வாழப்பழகிவிட்டனர். போராட்டம், விடுதலை இவற்றைப்பற்றிய எந்தவிதமான சிந்தனையும் அங்குள்ள இளைய சந்ததிகளுக்கு அறவே இல்லை. கடந்தகாலங்களில் நடந்த தேர்தல்களில் தமிழ்தேசியத்தை முழுமையாக நேசிக்கும் எவரையும் இனங்கணத்தவறிய சமூகம்தான் தற்போதைய யாழ்குடாநாட்டில் வாழ்கின்ற தமிழ்சமூகம். சிலவேளை இதையிட்டு யாழ்கள நண்பர்கள் என்னைத் தப்பாக விளங்கலாம், அதுபற்றிப் பிரச்சனையில்லை. அண்மையில் நான் வாழ்கின்ற தேசத்தில் கிழக்குமாகாணத்தைச்சேர்ந்த (திருகோணமலையை) ஒருவருடன் மனம்விட்டுப்போசக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. அப்போது அவர் கூறினார் தாங்கள் திருமலையின் நகரப்பகுதியில் வாழும்வரை (அவர் புலம்பெயர்ந்து தற்போதைய நாட்டுக்கு வரும்வரை) தமிழீழ விடுதலையைப்பற்றிய ஆழமான அறிவெதுவும் தனக்கில்லை எனவும் தாங்கள் இராணுவ அச்சுறத்தல் எதையும் அங்கு இருந்தகாலத்தில் பேரிதாக உணர்ந்ததில்லை எனவும் கைது சுற்றிவளைப்புகள் இருந்தாலும் அது தங்களுக்கு நடைமுறைவாழ்வில் இயல்பானதாக உணர்ந்ததாகவும் புலம்பெயர்ந்து வெளிநாட்டுக்க வந்தபின்பே தாம் அங்க அடக்கமுறைக்குள் வாழ்ந்ததை அடையாளம் கண்டதாகவும் கூறினார். இதேபோன்றதொரு சூழலே குடாநாட்டில் தற்போது நிகழ்கின்றது. ஆக சிங்களம் எப்படியானதொரு தமிழினத்தை வேண்டிநின்றதோ அதேதன்மையுள்ள ஒரு இனம் காலக்கிரமத்தில் உருவாக்கம் செய்யப்படும். புலம்பெயர் தமிழர்களாகிய நாம், எப்போது எமது சொந்தமண்ணைவிட்டு நீங்கி வந்தோமோ அப்போதையஈ எமது மனதில் நிலைத்த படிமங்களுடன் வாழ்வின் மீதிக்காலத்தை தேசத்தின் மீட்புக்காக ஏதாவது செய்யவேண்டுமெனும் அவாவுடன் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலராக இருபப்தில் எந்தவித பிரியோசனமும் இல்லை. புலம்பெயர் தேசத்தவரது வேட்கைக்கு மதிப்பளித்து அவர்களது, தமிழ்தேசியத்தின் எதிர்காலம் மீதான செயற்பாட்டிற்கு பலம்சேர்க்கும் வகையில் சாமாந்தரமான அரசியல் திட்டங்களைபுலத்திலுள்ளோர் முன்னெடுக்காது விடின் விளலுக்கிறைத்த நீராகவே எமது முயற்சிகள் எல்லாம் முடியும். ஆனால் சம்பந்தன் தலைமையிலான தமிழர் கூட்டமைப்பு அப்படியெதுவும் செய்யாது என்பதே எனது தாழ்மையான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கருத்து எழுஞாயிறு. நான் நினைத்ததைச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு பச்சை !!

தாயகத்திலுள்ளவர்களின் குரல்வலையில் கத்தி வைக்கப்பட்டாயிற்று. இனி அவர்களால் பேச முடியாது. ஆகவே நாம் பேசுவோம். தாயக் விடுதலையின் முயற்சிகளும், செயற்பாடுகளும் புலம்பெயர் தமிழராலேயே முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. அப்படியில்லை, அவர்கள் சார்பாக நீங்கள் பேச முடியாது, அவர்களின் சுதந்திரத்தில் தலையிடுகிறீர்கள், அவர்களுக்கு இன்னும் இடைஞ்சலாக இருக்கிறீர்கள் என்பவயெல்லாம் சிங்களக் கைக்கூலிகளின் கூப்பாடுகளேயன்றி வேறில்லை.

சம்பந்தனா, யாரவர், ஓ...அவசரகாலச் சட்டத்திற்கு இனி எதிராக வாக்களிப்பதில்லை என்று முடிவெடுத்த கட்சியின் தலைவரையா சொல்கிறீர்கள். ஓமோம், அவர் எங்களுக்கு நிச்சயம் செய்வார்...என்னவெண்டுதான் புரியாமல் கிடக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.