Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்

Featured Replies

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் கொழும்பு தமிழ் சங்கத்தில் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிமை வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இம்மாநாடு நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் ஈழத்துத் தமிழ் இலக்கியம், உலகத் தமிழ் இலக்கியம், செவ்விதாக்கம், மொழிபெயர்ப்பு, நாட்டாரியல், சிற்றிதழ், சிறுவர் இலக்கியம், மகளிர் மற்றும் பல்துறை ஆகிய பிரதான பிரிவுகளின் கீழ் ஆய்வரங்குகள் நடைபெறவுள்ளது.

பல்வேறு நாடுகளிலிருந்தும் கலந்து கொள்ளும் பேராசிரியர்கள், படைப்பாளிகள், புத்திஜீவிகள் தமது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளனர்.

45 தென்னிந்திய தமிழ் எழுத்தாளர்கள் உட்பட 100 மேற்பட்ட வெளிநாட்டு எழுத்தாளர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-46-55/14345-2011-01-05-17-01-06.html

  • தொடங்கியவர்

தமிழ் பண்பாட்டை ஏனைய மொழிகளிலும் எழுத வேண்டும்: பேராசிரியர் சிவத்தம்பி

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் பண்பாட்டை ஏனைய மொழிகளிலும் எழுத வேண்டும். எனினும் அது நடைபெறுதில்லை. அதனால் பிரசுர நிலையமொன்றை அமைத்து தமிழை பரப்பும் பணிகளில் நாம் ஈடுபட வேண்டும் என தமிழ் அறிஞரான பேரசிரியர் கா.சிவத்தம்பி கூறினார்.

இதேவேளை தமிழ் மக்களின் சன சிதறலையும் அனுபவங்களையும் கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் இன்றைய எழுத்தாளர்கள் பதிவுசெய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய எழுத்தாளர்கள் தங்களை கம்பனின் வாரிசு பாரதியாரின் வாரிசு புதுமைப்பித்தனின் வாரிசு என நினைக்க வேண்டும் என கொழும்பில் இன்று வியாழக்கிழமை ஆரம்பமான சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கான வாழ்த்துரையாற்றும் போது அவர் மேற்காண்டவாறு குறிப்பிட்டார்.

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு காலை 10 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது எழுத்தாளர்கள் அனைவரும் வெள்ளவத்தை காலி வீதியிலிருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட நிலையில் மாநாடு ஆரம்பமாகியது.

சுனாமி மற்றும் யுத்தத்தால் உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து நிகழ்சிகள் ஆரம்பமான நிலையில் இம்மாநாட்டின் இணைப்பாளர் தி.ஞானசேகரன்

வரவேற்புரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த தி.ஞானசேகரன்,

நடந்து முடிந்த யுத்தத்தினால் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களிடையே மன விரிசல் எற்பட்டுள்ளது. சீர்குலைந்துள்ள உறவை மூன்று இன இலக்கியவாதிகளும் ஒன்று கூடி ஆரோக்கியமான உறவு பாலத்தை ஏற்படுத்தி கொடுக்கும் களமாக இம்மாநாடு அமையும்.

கடந்த 30 வருட காலம் இடம்பெற்ற யுத்தம் காரணமாக கலை இலக்கிய முயற்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

போரின் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துக்கொண்டு உள்நாட்டில் வாழ்ந்த எழுத்தாளர்களும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களும் போரின் அனர்த்தம் பற்றி இலக்கியம் படைத்தனர்.

இலங்கையிலுள்ள கலை இலக்கியவாதிகள் உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் கலை இலக்கியவாதிகளோடு இணைத்து பல்வேறு கலை முயற்சிகளை சமூக பணிகளாக ஆற்றுவதற்கும் வீழ்ச்சியுற்ற மனநிலையிலிருந்து எழுச்சி பெறவும் உதவும் என அவர் தெரிவித்தார்.

அபிநயஷேத்ரா நடனப்பள்ளி மாணவர்களின் வரவேற்பு நடனமும் இம்மாநாட்டில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/14387-2011-01-06-11-05-16.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.