Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோற்றுவிடும் பயத்தில் சில உள்ளூராட்சிமன்ற தேர்தல்களை அரசு ஒத்திவைத்துள்ளது

Featured Replies

நகர, உபநகர பகுதிகளிலில் உள்ளூராட்சிமன்ற தேர்தல்களை அரசாங்கம் ஒத்திவைப்பதையிட்டு தனது அதிரச்சியை ஐ.தே.க வெளியிட்டுள்ளது. தேர்தலில் தோற்றுவிடும் என்ற பயத்தினாலேயே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஐ.தே.க கூறியது.

ஆறு மாதகாலமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையில் மாற்றங்களை செய்யப்போவதாக அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கிறது. பின் இதற்கு இன்னும் பல மாதங்கள் எடுக்குமென கூறியது.

பழைய முறையிலேயே தேர்தல்கள் நடைபெறும் எனவும் கூறியது. ஆனால் இப்போது பல இடங்களில் தேர்தல்களை ஒத்திவைத்துள்ளது என ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.

மக்கள், அரசாங்கத்தில் நம்பிக்கை இழந்து விட்டனர். அரசாங்கம் மக்களை ஏமாற்றி விட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இதனால் அரசாங்கம் இந்த இடங்களில் தேர்தலை நடத்த விரும்பவில்லை.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தாலும் அரசாங்கத்துக்கு மக்களின் ஆதரவு இல்லையென அவர் கூறினார். ஐ.தே.க. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு முகங்கொடுக்க தயாராக உள்ளது. இரண்டு கட்சிகள் ஐ.தே.க.வுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக அவர் கூறினார்.

தேர்தல் காலத்தில் பொதுசொத்துக்களையும் அரச ஊடகங்களையும் துர்ப்பிரயோம் செய்வதை அரசாங்கம் தவிர்துக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/14406-2011-01-06-14-28-40.html

  • தொடங்கியவர்

'வடக்கு கிழக்கில் உள்ள 11 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடைபெறாது'

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களும் வட மாகாணத்தில் உள்ள இரண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் கலைக்கப்படமாட்டாது என உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதவுல்லா தெரிவித்தார்.

வட மாகாணத்தில் யாழ் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை தவிர்ந்த ஏனைய 32 உள்ளூராட்சி மன்றங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்பது உள்ளூராட்சி மன்றங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் விரைவில் தேர்தல் நடத்தப்படும் அவர் கூறினார்.

இதேவேளை புதிதாக உருவாக்கப்பட்ட ஐந்து மாநகர சபைகளில் ஹம்பாந்தோட்டை தவிர்ந்த 266 உள்ளூராட்சி மன்றங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் அதவுல்லா குறிப்பிட்டார்.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களும் மற்றும் 18 மாநகர சபைகளினதும் ஆயட்காலம் எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதியோடு நிறைவடையும் என அமைச்சர் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்படும் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் பிரதேச செயலாளர்களின் கீழ் கொண்டுவரப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/14408--11-.html

'உலக கிண்ண கிரிக்கெட் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படாது'

நாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் இன்று வியாழக்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ள நிலையில் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படாது என உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதவுல்லா தெரிவித்தார்.

இதனடிப்படையில் கொழும்பு மாநகர சபை, கண்டி மாநகர சபை, தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபை, கோட்டே மாநகர சபை, கொலன்னாவ நகர சபை, குண்டசால நகர சபை,ஹம்பந்தோட்டை நகர சபை மற்றும் சூரியவெவ பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்கள் இன்று நள்ளிரவு கலைக்கப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டார்.

இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நிறைவடைந்த பின்னரே நடைபெறும் என அமைச்சர் கூறினார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டிக்கொண்டதிற்கினங்கவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அதவுல்லா மேலும் குறிப்பிட்டார்.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/14407-2011-01-06-14-54-55.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.