Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது போட்டிப்பரீட்சை நடாத்தும் நேரமல்ல, உயிரும் மானமும் கலந்த போராட்டம் - சிறீதரன் MP விவகாரம்

Featured Replies

இது போட்டிப்பரீட்சை நடாத்தும் நேரமல்ல, உயிரும் மானமும் கலந்த போராட்டம் - சிறீதரன் MP விவகாரம்

காலத்துக்கு காலம் ஊடகங்களினால் பரபாக்கப்படும் செய்திகள் வெளிவந்துகொண்டே இருக்கும். அதில் நன்மை பயப்பனவும் உண்டு. தீமையும் உண்டு. யாழ் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் செயற்பாட்டை முடக்கும் அல்லது தடுக்கும் ஒரு வேலைத்திட்டம் ஊடகங்களினூடாக பரப்புரை செய்து வரவது அனைவரும் அறிந்ததே.

செய்யத்தகாத வேலையை செய்ததாக சிறீதரன் அவர்களை ஊடகங்கள் விமர்சித்திருப்பதை அவதானிக்கும் போது, மக்களுக்கு கிட்டும் உடனடித்தேவைகளை செய்ய முன்வருபவர்களை தடுத்து முடக்கும் முயற்சியாக இதை கருத வேண்டியுள்ளது. இந்த விடயத்தை வெளிப்படுத்தி மக்கள் தீர்ப்புக்கு விடவேண்டிய தேவை ஒரு பொறுப்புள்ள தமிழனுக்கு உண்டென்று எண்ணுவதைத் தவிர இக்கட்டுரை மூலமாக எவரது மனதையும் புண்படுத்துவது நோக்கமல்ல.

சிறீதரன் பாராளுமன்ற உறுப்பினர் சார்பான நேர் உரையாடலை செவிமடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இலண்டனில் இருந்து பெண்மணியொருவர் தனது வன்னி உறவினரை இணையத்தளங்களினூடாக அவரின் ஏழ்மையையும், உண்மையையும் வெளிக்கொண்டுவந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு எந்த வகையிலும் நியாயமாகாது. இருப்பினும் உரையாடல் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் சார்பாக பிரதிநிதியாக இலண்டன் பெண்மணியோடு உரையாடியவரிடம் பெளவியம் தென்படவில்லை என்பது உண்மை. அது ஒருபுறமிருக்க, இன்றைய நிலையில் வன்னியில் வாழும் தமிழ்மக்களின் பொருளாதார நிலையோடு, புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர் நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. அதனோடு உயிப்பாதுகாப்பு தொடக்கி அனைத்து பாதுகாப்பு நிலையும் வேறுபட்டுத் தான் நிற்கிறது.

வன்னிப் பெருநிலப் பரப்பில் அனர்த்த நிலையில் வாழும் தமிழ்மக்கள் அனைவரும் இலண்டனில் வாழும் உறவினர்களைக் கொண்டவர்களும், அவர்கள் தயவில் வாழக்கூடியவர்கள் என்று கற்பிதம் கொள்வது எந்த வகையில் நியாயமாகும்.

இன்றைய நிலையில் சிங்களத்தின் பாதிப்பால் வடகிழக்கு மக்கள் அடங்கலாக வன்னியில் குடியேறியிருப்பது ஈண்டு கவனிக்கப்படல் வேண்டும். குறிப்பாக கடந்தாக அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட திருக்கோணமலை மக்கள்(தென்னமரவாடி, திரியாய், தம்பலகாமம், ஈச்சிலம்பற்று, மூதூர்) உட்பட மட்டு/அம்பாறை மக்களும் அடங்குவார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு சிறீதரன் அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் வன்னி நிலைமை பற்றி ஆழமாகக் கூறியிருந்தார்.

உண்மையாகவே இலண்டன் பெண்மணிக்கு தந்து வன்னி உறவினர் சார்பான 'கெளரவத் தாக்கம்' ஏற்படுமானால் அவரின் ஏழ்மை, அவரால்(இலண்டன்) ஏற்கனவே தீர்க்கப்பட்டிருந்தால் வன்னிப் பெண் இணையத்தளத்திற்கு காட்சிப்படுத்திய பேட்டி வழங்குவதையோ, சிறீதரன் பாராளுமன்ற உறுப்பினரிடம் உதவிகோரிய கடிதமோ கொடுத்திருக்க மாட்டார். கெளரவத் தாக்கம் என்பது முதலில் வன்னிப் பெண்மணியைத் தான் ஆட்கொண்டிருக்கும். இலண்டன் உறவினர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தொலைக்காட்சிப் பேட்டியிலிருந்து தானாகவே விலகியிருப்பார். இவை எதுவும் உண்மையில்லை என்பது தொலைக்காட்சிப் பேட்டியிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது.

இந்த கட்டுரையின் நோக்கம் சிறீதரன் பாராளுமன்ற உறுப்பினரை உத்தமனாகக் காட்டுவதல்ல. நல்லது செய்ய எவரும் முன்வராத நிலையை தோற்றுவிக்கக் கூடாதென்பதாகும். ஒரு 'இலண்டன்-வன்னிப் பணக்காரரை' வைத்துக்கொண்டு முழு வன்னி மக்களையும் எடை போடலாகாது. சிறீதரன் அவர்களின் சேவையில் குற்றம் காணப்படுவதாயின், புலம்பெயர் நாட்டவரால் கிடைக்கின்ற பொருளாதாரக் கொடைகளை துஸ்பிரயோகம் செய்திருத்தல் அல்லது உரியவருக்கு உரிய காலத்தில் உரித்துடைய உடமை சரியாகக் கிடைக்கப் பெறாமை, போன்றவை ஆதாரமாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் அதுபற்றி பரிசீலனை செய்யப்படலாம். அதை விடுத்து தனது புகழை அதிகரிக்க இந்தப் புலம்பெயர் கொடையை பயன்படுத்துகின்றார் என்ற குற்றச்சாட்டு சிறுபிள்ளைத் தனமானதும் வெறும் நகைப்புக்கிடமானதும் ஆகும். காரணம் கிடைக்கின்ற கொடைப் பணத்திற்கு பொறுப்புக்கூற ஒருவர் வேண்டும். இல்லாவிடில் துஸ்பிரயோகங்கள் நடைபெற வாய்ப்புண்டு. அவ்வேளையில் சிறீதரன் அவர்களின் முகம் தெரிய வரும்பொழுது அவரும் துஸ்பிரயோகத்திற்கு கூடவே உடந்தையாக இருந்தார் என்ற வசையும் வரும். சும்மா கிடந்த வாய்க்கு அவல் கிடைத்ததாகும்.

ஊடகங்களின் சேவையென்பது வருகின்ற செய்திகள் அனைத்தையும் ஆராயாமல் பிரசுரிக்கவேண்டும் என்பதல்ல. அதுவானது எந்த அளவு தமிழ்மக்களை பாதிக்கின்றதென்பதை உணர்தல் அவசியம். தனிப்பட்ட குரோதங்களை வெளிப்படுத்தும் களமாக பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் முதுகுகள் பாவிக்கப்படலாகாது. குறை பிடிப்பவர்களால் ஒரு சிறு துரும்பைக்கூட மக்கள் நலன் சார்பாக அசைக்க முடியாது என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. ஊடக தர்மம் என்பது 'வைக்கல் பட்டடை நாய்' போல் இருப்பதல்ல. மக்களுக்கு நன்மைகள் செய்யும் காவலனாக இருக்க வேண்டும். ஊடகங்கள் சொல்வதெல்லாம் எடுத்த எடுப்பிலே தமிழ்மக்கள் ஏற்கவேண்டுமென்பது தமிழ்மக்களின் தலையில் பொறிக்கப்பட்ட தர்மமல்ல.

சிறீதரன் பாராளுமன்ற உறுப்பினர் போன்ற பலர் உதவ முன்வருவதற்கு தவறாய் வழிநடாத்தும் ஊடங்கங்கள் மீறிய, சுயமாக சிந்திக்கும் தமிழ்மக்கள் வழியமைத்துக் கொடுக்க முன்வரவேண்டும். ஏனெனில் மீட்டெடுக்க முடியாத பெரும் இழப்பை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற எம்மக்களின் நிலையை உணர்தல் வேண்டும். அனர்த்தப்பட்ட மக்களின் துயர் துடைக்க வருபவர்களுக்கு ஊக்கம் கொடுக்க முடியாவிடினும் உபத்திரபம் கொடுக்காது இருக்க வேண்டும். இது போட்டிப்பரீட்சை நடாத்தும் நேரமல்ல. உயிரும் மானமும் கலந்த போராட்டம்.

சிறீதரன் பாராளுமன்ற உறுப்பினர் போன்றவர்களுக்கு ஒரு செய்தி!

'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டினில் நீதி மறையட்டுமே

தன்னாலே வெளிவரும் தயங்காதே

ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே'

கனக கடாட்சம்

திருக்கோணமலை

trincokadatcham@yahoo.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.