Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத இராணுவம் உலக இராணுவத்துக்கு எப்படி பயிற்சியளிக்கும்?

Featured Replies

கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத இராணுவம் உலக இராணுவத்துக்கு எப்படி பயிற்சியளிக்கும்?

யாழ். குடாநாட்டில் நடைபெறுகின்ற கொலை, கொள்ளை, ஆட்கடத்தல்களில் ஈடுபடுகின்றவர்களை உரிய முறையில் கைது செய்யத் தவறும் இராணுவம், பயங்கரவாதத்தினை எவ்வாறு ஒழிப்பது என்பது குறித்து வெளிநாட்டு படையினருக்கு பயிற்சியளிப்பது எந்தவகையில் சாத்தியமாகுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ். மாநகரசபை மாநாட்டு மண்டபத்தில் நடந்த இவ்வருட இறுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு யாழ். மாநகர சபை உதவி மேயர் து. இளங்கோ முன்வைத்த பிரேரனையை முன்மொழியும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளர். அங்கு அவர் மேலும் கூறுகையில்.

முள்ளிவாய்கால் நந்திக் கடலோரம் முடிவடைந்து போன யுத்தத்தின் மூலம் இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு விட்டது. பயங்கரவாதத் தலைமைகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு விட்டன. இனிமேல் இலங்கையில் நடைபெறுகின்ற அசம்பாவிதங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு என்றும், உலகில் உள்ள அனைத்து நாட்டு இராணுவத்தினருக்கும் பயங்கர வாதத்தினை ஒழிப்பது எவ்வாறு என்ற பயிற்சியை வழங்கக்கூடிய நிலையில் இலங்கை இராணுவம் உள்ளது. இதன் மூலமாக உலகில் அதி சிறந்த இராணுவமாகவும் இலங்கை இராணுவமே திகழ்கின்றது என்று மார்தட்டிக் கொள்ளும் இராணுவம் யாழ். குடாநாட்டில் தினந் தோறும் நடைபெறும் கொலை, கொள்ளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், ஆட்கடத்தல்கள் போன்ற செயல்களில் முன்னாள் போராளிகளே ஈடுபடுகின்றனர் என்று குற்றம் சுமத்துவது எந்த வகையில் சாத்தியமாகும்.

யாழாப்பாணத்தில் நடைபெறுகின்ற அனைத்து சம்பவங்களிற்கும் அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்.

சங்கானையில் மதகுரு மீது ஆரம்பித்த படுகொலைத் தாக்குதல் அரசியல் வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களை இலக்கு வைக்காது என்பது என்ன நிச்சயம். எனவே இவ்வாறான அசம்பாவிதங்களை உடனடியாக ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் தெரியப்படுத்தி உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மாநகரசபை உறுப்பினர் மௌலவி சுபியான் கருத்துத் தெரிவிக்கையில்; ஒட்டு மொத்தமாகத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான செயல்கள் ழுமுவதும் திட்டமிட்டே நடைபெறுகின்றது. இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றவர்களின் குறிக்கோள் குடாநாட்டில் நிலவுகின்ற சுமுகமான சூழலினை குழப்பி மீண்டும் வீதித்தடைகளையும் இராணுவக் காவலரண்களையும் அதிகரிப்பதற்காகவே என்றும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக யாழ். மாநகரசபை முன்வைத்த பிரேரணையை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=4972:2011-01-07-05-11-30&catid=74:jaffna&Itemid=102

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.