Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரானிடமிருந்து ஆயுதங்கள், அணு தொழில்நுட்பத்தைப் பெற இலங்கை முயன்றதா? விக்கிலீக்ஸ் கிளப்பும் சந்தேகம்

Featured Replies

விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின்னரும் ஈரானிடமிருந்து ஆயுதங்களையும் அணு தொழில்நுட்பத்தையும் பெற்றுக்கொள்வது தொடர்பான பேச்சுக்களை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் நடத்தியதா என்ற சந்தேகத்தை விக்கிலீக்ஸ் கசியவிட்டுள்ள பிந்திய தகவல்கள் கிளப்பிவிட்டுள்ளன.

2009 அக்டோபர் 21 ஆம் திகதி கொழும்பிலிருந்து வாஷிங்டனுக்கு அனுப்பிவைத்துள்ள இரகசிய கேபிள் அசெய்தியில் இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் பற்றீசியா புட்ரின்ஸ் இது தொடர்பாகத் தெரிவித்திருக்கின்றார். நோர்வேயிலிருந்து வெளியாகும் Aftenposten பரப்பான தகவல்களை இன்று வெளியிட்டிருக்கின்றது.

கொழும்பைத் தளமாகக்கொண்டுள்ள ஜப்பானிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஒருவரே, ஈரானிடமிருந்து ஆயுதங்களையும் அணுத் தொழில்நுட்பத்தையும் கொள்வனவு செய்வது தொடர்பாகவும், அதற்கான பேச்சுக்களை நடத்துவதற்கான சாத்தியம் குறித்தும் தன்னுடைய ஆழமான கரிசனையை வெளிப்படுத்தியிருந்தார் என அமெரிக்க தூதுவர் தனது செய்தியில் குறிப்பிட்டிருக்கின்றார்.

வடகொரியாவிடமிருந்தும் ஈரானிடமிருந்தும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கையிடமிருந்து காலதாமதமாகப் பதில் கிடைத்தது எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சேனுகா செனிவிரட்ண இது தொடர்பாகப் பதிலளித்ததாகவும் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தின்படியே இலங்கை அரசின் செயற்பாடுகள் அமைந்திருக்கும் என்பதை வலியுறுத்திக் கூறிய சேனுகா, போருக்குப் பிந்திய நிலையில் இலங்கைக்கு மேலதிக இராணுவ உபகரணங்கள் தேவையாக இருக்கவில்லை எனவும், அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளைப் பாதிப்புறச் செய்ய விரும்புபவர்களே திட்டமிட்டு இவ்வாறான தகவல்களை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளையில் 2009 மே மாதம் போர் முடிவுக்கு வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஆர்.மோரைச் சந்தித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகல்லாகம, வடகொரியாவிடமிருந்தும், ஈரானிடமிருந்தும் இலங்கை ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகப் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

2009 மே 9 ஆம் திகதி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிவைத்துள்ள இரகசிய கேபிள் செய்தியில் இது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவிடமருந்தோ அல்லது ஈரானிடமிருந்தோ இலங்கை அரசாங்கம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவில்லை அப்போது தெரிவித்த போகல்லாகம, ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்புத்தான் வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்திருப்பதாக புலனாய்வுச் செய்திகள் மூலமாக அறியவந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

http://www.pooraayam.com/mukiaya/309-2011-01-12-00-22-38.html



  • புலிகளுக்கு எதிரான போருக்கு அமெரிக்காவோ மேற்குலகமோ உதவவில்லை- சீனா, பாகிஸ்தான், ஈரான், இந்தியா போன்ற நாடுகள் தான் உதவின என்ற நிலைப்பாட்டில் இலங்கை அரசு இருக்கிறது. எனவே அமெரிக்காவின் சொல்லைக் கேட்டு ஈரானுடனான உறவுகளைக் குறைத்துக் கொள்வதற்கு இலங்கை அரசு தயாரில்லை. பல்வேறு பொருளாதார நெருக்கடிகளையும், அழுத்தங்களையும் மேற்குலக நாடுகள் கொடுத்த போதும் ஈரான் போன்ற நாடுகளின் உதவிகள் இருந்ததால் தான் இலங்கை தப்பிக் கொண்டது.

  • வடகொரியா பற்றி மூச்சுக் கூட விடவில்லை என்று விக்கிலீக்ஸ் ஆவணங்கள் கூறுகின்றன. ஈரான், வடகொரியா, சீனா போன்ற நாடுகள் இன்றைக்கும் அமெரிக்காவினால் வெறுக்கப்படுபவை. வடகொரியாவுடன் தாம் எந்தத் தொடர்பையும் பேணவில்லை என்று இப்போது இலங்கை அரசாங்கம் கூறினாலும், சீனா, ஈரான் ஆகிய நாடுகளுடனான உறவுகளை அது வெளிப்படையாகவே பேணுகிறது.

  • பொதுவாகச் சொல்லப் போனால் மேற்குலகம் தனக்கு உதவும் என்று நம்புகின்ற நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லை.

  • கடந்தவாரம் அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீது உரையாற்றிய பிரதமர் டி.எம்.ஜெயரட்ண, பெரும்பாலான மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராகவே செயற்படுகின்றன என்று அவர் சுpனார். அதுமட்டுமல்ல தன்னை போர்க்குற்றம்சாட்டி மின்சாரக் கதிரையில் ஏற்ற சில வெளிநாடுகளும், அரசசார்பற்ற நிறுவனங்களும், புலிகளின் அனுதாபிகளும் முனைவதாகக் கூறியுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=80260

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.