Jump to content

வன்னிப் போரின்போது 1,46,679 பேர் காணாமல் போயுள்ளார்கள்: மன்னார் ஆயர் தகவல்


Recommended Posts

பதியப்பட்டது

வன்னியில் இடம்பெற்ற போரின்போது 1,46,679 பேர் காணாமல்போயிருப்பதாகத் தெரிவித்துள்ள மன்னார் மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப், இவர்களுக்கு என்ன நடந்தது என்பது இதுவரையில் தெரியாமலேயே உள்ளது எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

"முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்களின் பதிவுகளின்படி, 2008 அக்டோபரில் வன்னியின் சனத்தொகை 4,29,059 ஆகக் காணப்பட்டது. 2009 ஜுலை 10 ஆம் திகதிய ஐ.நா. தகவலின்படி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 2,82,380 எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவல்களின் அடிப்படையில் எஞ்சியுள்ள 1,46,679 பேருக்கும் என்ன நடந்தது என்பது தெரிக்கப்படவேண்டும்" என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன்பாகச் சமர்ப்பித்த அறிக்கையில் ஆயர் இராயப்பு ஜோசெப் குறிப்பிட்டிருக்கின்றார்.

மன்னாரில் நடைபெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது தன்னுடைய அறிக்கையைக் கையளித்து உரையாற்றிய அவர், வன்னிப்பகுதியில் இடம்பெறும் இராணுவ மயமாக்கல், குடியேற்றம், காணி பறிமுதல் செய்யப்படுதல், சிங்கள மயமாக்கல், பெளத்த மயமாக்கல் மற்றும் மனித உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுதல் பேன்றவை தொடர்பாக சர்ச்சையைக் கிளப்பினார்.

விடுதலைப் புலிகள் அமைப்போ அல்லது ஏனைய ஆயுதக்குழுக்களே பிரச்சினைக்கக் காரணமல்ல எனத் தெரிவித்த அவர், இந்தப் பிரச்சினையால்தான் அந்த அமைப்புக்கள் உருவாகின எனவும் குறிப்பிட்டார். அமைதியான அரசியல் வழிமுறைகளில் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்குத் தமிழர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்குச் சாதகமான தீர்வு கிடைக்காத நிலையிலேயே இந்த ஆயுதக்குழுக்கள் உருவாகின எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://www.pooraayam.com/mukiaya/310---146679------.html

Posted

146,679 people unaccounted for in the Vanni War: Bishop of Mannaar

[TamilNet, Wednesday, 12 January 2011, 00:09 GMT]

According to records of the SL Government Agent offices of Mullaiththeevu and Ki’linochchi districts, the population of Vanni was 429,059 in October 2008. The total number of people who got into SL government control after the war was 282,380, according to UN update as of 10 July 2009. “Due clarification should be made regarding what happened to 146,679 people, which is the discrepancy between the number of people who came to government controlled areas between October 2008 – May 2009 and the population reported to be in Vanni in early October 2008,” said the Catholic Bishop of Mannaar, Rt. Rev. Dr. Rayappu Joseph in his submission to the LLRC Saturday. The Bishop has also raised the issues of militarization, colonisation, land grab, Sihalicization, Buddhicisation and civil as well as human rights abuses that take place in the Tamil land following the war.

The LTTE, other armed Tamil groups and the war, are not the cause, but only results of the conflict. Their actions were prompted by the failure of successive governments to respond favourably to Tamil’s efforts to resolve their problems through peaceful and political means. Roots of the conflict and reasons for the war that caused so much pain, destruction and polarization dates much further, the Bishop pointed out.

Citing the case of Rev. Fr. Jim Brown, whose case of disappearance in 2006 was part of the mandate of a previous presidential commission proved futile, the Bishop said “we must express our disappointment that previous Commissions of Inquiry have failed to establish the truth into human rights violations and extrajudicial killings they were inquiring and bring justice and relief to victims and their families.”

“Although establishing the truth is not explicitly mentioned in your mandate, we believe you will share our conviction that there can be no genuine and lasting reconciliation without truth,” the Bishop told the LLRC.

Commenting on colonisation activities the Bishop said: “There is suspicion amongst historical inhabitants in the district that these are part of a government plan to bring about demographic changes in terms of ethnic and religious composition of the districts and the Northern Province as a whole. Such efforts in the past have been a key factor that led to the conflict, war and violence and as we try to move towards reconciliation, it is crucial to learn lessons from the mistakes made in the past and not repeat such mistakes.”

While expressing his disapproval over limiting the amount of money spent on each permanent house in the North and East to 3,25,000 which is hardly enough for decent housing, the Bishop also has cautioned against possible obstacles to the Indian plan to build 50,000 houses.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33380

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த "தொண்டர் நியமனம்" என்பது இலங்கை அரச சேவையில் காலம் காலமாக இருக்கும், தகுதிக்கு (merit) மதிப்பளிக்காமல் அரசியல் செல்வாக்கிற்கு மதிப்பளிக்கும் ஊழல் நிறைந்த முறை. ஆசிரியர் நியமனங்கள் சிறந்த உதாரணம். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படிக்காமல், பல்கலைப் பட்டதாரியாகவும் இல்லாமல், "தொண்டர் ஆசிரியர் நியமனம்" என்று நியமனமாகி நாலைந்து வருடங்கள் பணி செய்வார்கள். பின்னர் "பல வருடங்கள் பணி செய்து விட்டோம், அனுபவம் வந்து விட்டது, சான்றிதழ் ஏன் அவசியம்? நிரந்தரமாக்குங்கள்" என்று போராடுவர். வாக்குகளுக்காக யாராவது அரசியல்வாதியும் இவர்களை  நிரந்தரமாக்க  உதவுவார். இப்படி "சைட் கதவால்" நுழைந்தே நிரந்தர அரச தொழில் கிடைக்குமென்றால் , எவரும் படிக்கவோ, பயிற்சி பெறவோ போகாமல் இந்த இலகு வழியால் தான் வர முனைவர். இதையே தற்போது சுகாதார சேவையிலும் எதிர்பார்க்கின்றனர் போலும். உழைப்பவர்களுக்கும், சுய முன்னேற்றத்தை நாடுவோருக்கும் அநீதியான இந்த தொண்டர் நியமனங்களை இல்லாமல் செய்வது தான் பொருத்தமான செயல்!   அரசியல்வாதிகள் மாற வேண்டுமென்று மக்கள் வாக்களிக்கும் காலத்தில், வாக்களிக்கும் மக்களின் பகுதியாக இருக்கும் இந்த அரச ஊழியர்களும் மாற வேண்டும். அது தான் அரகலய கேட்ட "சிஸ்ரம் சேஞ்" ஆக இருக்கும்.
    • தீவுப்பகுதிகளை  அபிவிருத்தி செய்வதனூடாக இந்திய பாதிப்புக்களில் இருந்து வடக்கைப் பாதுகாக்கலாம். 
    • 2000 ம் ஆண்டு (மிலேனியம்)>.இந்தா உலகம் அழியப்போகுது என்ற செய்தியில் வாங்கின சாமானில் இப்பவும் அந்த மெழுதிரிகள்  கிடந்து சிரிக்குது😁
    • இப்படியானவர்களுக்கு நிரந்தர நியமனம் குடுத்தால் மக்களின் நிலை சொல்லி வேலை இல்லை என்று நினைக்கிறேன்..இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியாது.அனேகமான தாதியர்கள் ஒழுங்காக படித்து முடிக்காத நிலையில் ஊதியமற்ற பணி செய்வதாககே உள் நுளைந்தார்களாம்.இப்போ அவர்களுக்கும்  குடும்பம் மற்றும் இதர பொறுப்புக்கள் கூடியதாக நிரந்தர நியமனம் போன்றவற்றுக்காக போராடுகிறார்களாம்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.