Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மக்களிற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் மக்கள் உதவி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கு மக்களிற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் மக்கள் உதவி

கிழக்கில் இயற்கை அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ள மக்களிற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் அத்தியாவசியப் பொருளுதவி செய்வதற்கு யாழ் மக்கள் முன்வந்துள்ளனர்.

jaffna_univ_flood_relief002.jpg

jaffna_univ_flood_relief003.jpg

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தன்னெழுச்சியாக மேற்கொண்ட முயற்சியின் விளைவாக இன்று (புதன்கிழமை) அரை நாளுக்குள் ஒன்றரை மில்லியன் (15 இலட்சம்) ரூபா பெறுமதியான உடனடித் தேவைப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு பொதி செய்யப்பட்டுள்ளன.

கிழக்கில் தொடரும் அடை மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பல இலட்சம் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளார்கள். அவர்களின் உடனடித் தேவகைள் சிலற்றை பூர்த்தி செய்யும் முகமாக யாழ் பல்கலைக்கழக மாணர்கள் ஒருங்கிணைப்புடன் யாழ் மக்கள் நிவாரணப் பொருளு;களை சேகரித்து வருகின்றனர்.

உலர் உணவுகள், மருந்துப் பொருள்கள், உடுபுடைகைள், சிறுவர்களுக்கான உணவுகள், பால்மாக்கள் மற்றும் சுகாதார பொருள்கள் என்பனவற்றை தந்துதமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதற்கு இணங்க யாழ் மக்கள் தாமாக முன்வந்து பெருமளவு பொருள்களை தமக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள யாழ் பல்கலைக்கழக சமூகத்தினர் தொடந்தும் தாம் பொருட் சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாக அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே சேகரிப்பட்ட பொருள்கள் தரம் பிரிக்கப்பட்டு குடும்பங்களுக்கு ஏற்றவாறு பொதியிடப்பட்டு நாளை அல்லது நாளை மறுநாள் உரிய மக்களிடம் சென்றடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தாம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், இன்று காலை முதல் யாழ் நகரை அண்டிய பல்கலைச் சூழலில் நிவாரணச் சேகரிப்பில் ஈடுபட்டு பெற்றுக்கொண்ட பொருள்களை பொதியிட்டு போக்குவரத்து வசதிகளுக்காக காத்திருப்பதாக மேலும் தெரித்துள்ளனர்.

தாயகத்தில் உள்ள நல்லுள்ளம் படைத்தோரும், புலம்பெயர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு உதவ முன்வருமாறும், நிர்கதியாக உள்ள கிழக்கு உறவுகளிற்கு உடனயாக உதவி செய்து, எமது உறவுப் பிணைப்பை வலுப்படுத்த விரைந்து உதவுமாறும் யாழ் பல்கலைக்கழக சமூகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர்

அரிஹரன் மற்றும் மாணவர்கள்

தொடர்புகளுக்கு:

0094 77 48 12 791

0094 77 94 52 056

0094 77 65 27 677

செய்தி: ஊடகவியலாளர் பரபிரபா

200 க்கும் மேற்பட்ட படங்கள் காண>>> http://meenakam.com/

நல்ல முயற்சி ... 79ல் இவ்வாறே மிகப்பெரிய அவலத்தை மட்டுநகர் சந்தித்தது, அன்றும் இதேபோல் யாழ்பல்கலைக்கழகம் அதற்கு வெளியிலும் உள்ள இன உணர்வான இளைஞர்கள் அங்கு சென்று இரவு பகலாக உதவிகளை புரிந்தனர். இன்று இவ்விளைஞர்களின் இன உணர்வு வடக்குக்கும் கிழக்கிற்கும் புதியபாலமாக அமையும், ஆனால் சிங்களம் இந்த யாழ் பல்கலைக்கழக இளைஞர்களின் இந்நடவடிக்கைகளை எதுவரை அனுமதிக்கப் போகிறது???

சிங்களம் இந்தப் பொருட்கள் கிழக்கை சென்றடையாமல் தடுக்க முயற்சி செய்யும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.