Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தில் இனப்படுகொலை இதயத்தில் இரத்தம் -இயக்குநர் அவதாரம் எடுத்த வை.கோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

39132114.jpg

‘‘உங்களிடம் பேச வேண்டும். மாலை 6 மணிக்கு தாயகம் வந்திடுங்கள்.’’ என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவிடமிருந்து அவசர அழைப்பு! விடுதலை ராஜேந்திரன், பேராசிரியர் சரஸ்வதி, ஓவியர் புகழேந்தி, கவிஞர் காசி ஆனந்தன், வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணன், புகழேந்தி,சில பத்திரிகையாளர்கள் என எல்லோரையும் அழைத்திருக்-கிறார் வைகோ.

10-ம் தேதியன்று மாலை 6 மணிக்கு தாயகத்தில் எல்லோரையும் வரவேற்ற வைகோ, அவர்களை கூட்ட அரங்கில் அமரச் செய்தார்.

‘எதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம்?’ என்றே தெரியாமல் அனைவரும் மௌனமாகக் காத்திருக்க, விளக்குகள் அணைக்கப்பட்டு, அந்த அரங்கிலிருந்த தொலைக்காட்சியில் உரையாக்கம், இயக்கம், வெளியீடு வைகோ என டைட்டில் கார்டுடன்,‘ஈழத்தில் இனப் படுகொலை, இதயத்தில் ரத்தம்’ என்ற தலைப்பில் ஆவணப்படம் ஓடத் தொடங்கியது. அரங்கிலிருந்த பார்வையாளர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தனர்.

ஆவணப்படத்தில் தோன்றும் வைகோ,‘‘இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்களே. தன்னுடைய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்படும் முன் நாடாளுமன்றத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆற்றிய கடைசி உரையில், ‘இலங்கை தமிழர்களுக்கே சொந்தம் என்று அறிவித்தார்’ என்று பேசத் தொடங்க,திரையில் அரிய புகைப்படங்களும் காணொளிக் காட்சிகளும் விரியத் தொடங்கின.

‘‘இந்தியாவின் பீகார் போன்ற சில மாநிலங்களிலிருந்து சென்று குடியேறியவர்கள் சிங்களவர்கள்.வந்தேறிகளான சிங்களவர்கள் மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்தினர். ராஜராஜ சோழன் இலங்கை மீது படையெடுத்து சிங்களவர்களை அடக்கினான். இந்தியாவைப் போல் பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்த இலங்கை, 1948 பிப்ரவரியில் விடுதலை பெற்றது.சிங்களவர்கள் கையில் ஆட்சியதி-காரத்தை வழங்கிவிட்டு பிரித்தானியர்கள் சென்றனர்.

சிங்களவர்கள் ஆட்சியில் கல்வி,வேலை வாய்ப்பில் தமிழர்களின் உரிமை மறுக்கப்பட்டது.அதை எதிர்த்து தந்தை செல்வா அறவழியில் போராடினார்.சிங்களவர்கள் கலவரங்களில் ஈடுபட்டு தமிழர்களைக் கொன்று குவித்தனர். யாழ் நூலகத்தை தீயிட்டு எரித்தனர். உலகத்தமிழ் மாநாட்டில் தமிழர்களை சுட்டுக் கொன்றனர்.இனி சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ முடியாது என உணர்ந்த செல்வா, தனி ஈழம் கோரினார். அந்த வழியில் ஆயுதப் போராட்டத்தைக் கையில் எடுத்தவர்தான் பிரபாகரன்.

தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். ஆகியோர் ஆயுதப் பயிற்சி அளித்தனர். இந்திரா இறந்ததும் ஆட்சிக்கு வந்த ராஜீவ் காந்தி போபர்ஸ் ஊழலில் சிக்கினார். அதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இலங்கை அரசுக்கு ஆதரவாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயல்படத் தொடங்கினார். இலங்கைக்கு அமைதிப் படை என்ற பெயரில் அராஜகப் படையை அனுப்பினார்.அதில் புலிகள் வென்றனர். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

2004-ல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க. அரசுகள் ஆயுதங்களும் கோடிக்கணக்கில் பணமும் கொடுத்து,இந்தியாவின் முப்படைத் தளபதிகளையும் இலங்கைக்கு அனுப்பி,தமிழர் அழிப்பு யுத்தத்தை இயக்கியது’’ என்று பின்னணியில் வைகோ பேசிக்கொண்டே போக,திரையெங்கும் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் பிணக்குவியல்கள் காட்சிகளாய் விரிந்தன.

‘‘அப்போது நடந்த போர்க்குற்றங்களையும், இனப்படுகொலையையும், இசைப்ரியா போன்ற தமிழ்ப் பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்ததையும் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது. அண்மையில் பிரித்தானியத் தமிழர்கள் கொட்டும் பனியில் பல்லாயிரக்கணக்கில் திரண்டு, ராஜபக்ஷேவை லண்டனை விட்டு ஓடச் செய்தனர். உலகின் மனசாட்சி இப்பொழுதுதான் தமிழர் துயரத்தை உணரத் தொடங்கி உள்ளது’’ என்று வைகோ கலங்கிய கண்ணீருடன் சொல்லி முடிக்க படமும் முடிகிறது.

பின்னர் பார்வையாளர்களிடம் ‘‘காங்கிரஸ் ஈழத் தமிழர்க்குச் செய்த துரோகத்தை மூடி மறைக்க,உளவுத்துறையுடன் இணைந்து பல ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இந்த குறுந்தகடுகளை முடிந்தவரை பதிவெடுத்து, மற்றவர்களிடம் சேர்த்து தமிழீழ விடுதலைக்கு உதவ வேண்டும்’’ என்ற வைகோ, சற்று குரலை உயர்த்தி, ‘‘இதனால் உங்களுக்குக் காவல்துறையின் நெருக்கடிகள் இருக்கக் கூடாது என்பதற்காகவே இதை நானே எழுதி இயக்கி என் பெயரையும் போட்டிருக்கிறேன். சட்ட நடவடிக்கை எதுவாக இருந்தாலும் நானே சந்திப்பேன்’’ என்று அவரது பாணியில் பொங்கினார்.

இந்தக் குறுந்தகடு பின்னணி குறித்து வைகோ தரப்பில் விசாரித்தோம்.

‘‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ் அமைப்பைச் சேர்ந்த பலரும் இதுபோன்ற குறுந்தகடுகளைத் தயாரித்தனர்.அதற்காக சிலர் கைதும் செய்யப்பட்டனர்.வைகோ இயக்கி இருக்கும் இந்தப் படம் தேர்தலை மையப்படுத்தி தயாரிக்கப்படவில்லை. தமிழீழ விடுதலைக்கு தாய்த் தமிழர்களிடம் ஆதரவைத் திரட்டுவதற்காக தயாரிக்கப்பட்டது.

10-க்கும் மேற்பட்டவர்கள் வைகோவுக்குத் துணையாக இருந்து ஒரு மணி நேரம் ஓடும் இந்தப் படத்தைத் தயாரித்தோம்.வெளியே கொடுத்தால் பிரச்னை வருமென்று எடிட்டிங் போன்ற தொழில்நுட்ப வேலைகளை யும் நாங்களே செய்தோம். இரண்டாயிரம் குறுந்தகடுகள் தயாரித்து, இலவசமாக வழங்கி வருகிறோம்’’ என்றனர்.

இந்த ஆவணப்படத்தைப் பார்த்த பார்வையாளர்கள், ‘‘இலங்கை, தமிழர்களின் தேசம் என்பதை மிக ஆணித்தரமாக வைகோ நிரூபித்திருக்கிறார். பிணக்குவியல் படங்களையும், இசைப்ரியா போன்ற தமிழ்ப் பெண்கள் பலாத்காரம் செய்யப்படும் காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம்.குழந்தைகளும் பெண்களும் பார்க்க முடியாத அளவுக்குக் காட்சிகள் கொடூரமாக இருக்கின்றன.

இது ஈழ விடுதலைக்கு ஆதரவு திரட்டத் தயாரிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு எதிராக மக்களைத் திரட்டும் நோக்கத்தில் இது தயாரிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

வேறு சிலரோ, ‘‘ஈழ ஆதரவாளர்கள், இணைய தளம் பயன்படுத்துவோர் மத்தியில் சீமானுக்கு அதிகரித்து வரும் ஆதரவால் வைகோ சற்று கலங்கிப் போயிருக்கிறார்.இந்த ஆவணப்படம் மூலம் ஈழ ஆதரவு இளைஞர்களை தன் பக்கம் இழுக்க முயல்கிறார்’’என்கிறார்கள், சிரித்தபடி.

ஆனால் வைகோவின் இந்தக் குறுந்தகடு, ஆளும் மத்திய, மாநில அரசுகளை நிச்சயம் சூடாக்கும். மீண்டும் கைதுப் படலமும் தொடரலாம்.

படம்: கணேஷ்

- வெற்றி

- குமுதம் ரிப்போட்டர்

காங்கிரசின் உலகதமிழின எதிர்ப்புக்கொள்கையின் மூல காரணம் என்ன என்பதை அறிந்து அதன் மூலம் தமிழின உணர்வான தமிழக தலைவர்கள் ஒற்றுமையாக தமது அரசியல் காய்களை சாதுரியமாக நகர்த்தவேண்டிய காலக்கட்டாயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.