Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புனர்வாழ்வு முகாமில் நடப்பது என்ன ? பாகம் – 01

Featured Replies

புனர்வாழ்வு முகாமில் நடப்பது என்ன ? பாகம் – 01

எமக்கான வாழ்வாதார போரட்டம் ஆரம்பித்த அன்றிலிருந்து இன்றுவரை சிங்கள அரசபடைகளாலும், சிங்கள இனவாதிகளாலும், மக்களினது தேசியப்பற்றை சிதைத்து அழித்து ஒழிப்பதில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறான். இதற்காக அவன் செய்த மக்கள் படுகொலைகள் என்பது எண்ணில் அடங்காதவை அவற்றின் உச்சக்கட்டம் தான் திட்டமிட்ட முள்ளிவாய்கால் இனப் படுகொலை.

MAP.jpg

மாத்தளன், முள்ளிவாய்கால் பிரதேசங்கள் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பின் மக்கள் அந்த இடங்களுக்கு பாதுகாப்பு தேடி ஓடினார்கள். பெருவெள்ளமாகத் திரண்டு கொட்டும் மழையையும் பாராது கொண்டு சென்ற தரப்பாள்களையும், சிறு தடிகளையும் பயன்படுத்தி சிறு குடில் ஒன்றை அமைத்து இருந்தார்கள். எங்குமே வெள்ளம் அதுபோல் மக்களும் மாத்தளன் முழுவதும் தங்கள் உயிரைப்பாதுகாப்பதற்காக நகரமுடியாத அளவிற்கு நிரம்பி வழிந்தார்கள்.

மக்கள் அல்லோலப் பட்டுக் கொண்டு நின்ற வேளை எந்தவித அறிவித்தலும் இன்றி சிங்கள இனவெறி பிடித்த இராணுவம் பல்குழல் எறிகணை, கொத்துக்குண்டு, எரிகுண்டுத் தாக்குதல்களை சரமாரியாக நாளாந்தம் மேற்கொண்டு பெருந் தொகையான மக்களை கொன்று குவித்தான். காயப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாமல் இரத்தம் சிந்தி இறந்தார்கள். அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்கள் பலர் வைத்தியசாலையிலும், அவனது எறிகனைத்தாக்குதலில் உயிரிழந்தனர் .எங்குமே மனிதப் பிணங்கள் .யாருமே உடல்களைத் தூக்க முடியாத நிலையில் நாய்கள் குதறிய காட்சிகளையும் கண்டோம்.

இவ்வாறு காயப்பட்டவர்களை ஏற்றிச் செல்வதற்கென ICRC கப்பல் வந்தது. வரும் வேளையில் எறிகணைத் தாக்குதலை கப்பல் மீதும் மேற்கொண்டு காயப்பட்ட மக்களை மிலேச்சத்தனமாக படுகொலை செய்தான். ICRC கப்பல் மீதான தாக்குதல் கூடவா சர்வதேசத்திற்குத் தெரியாது? சர்வதேசமே, மனிதஉரிமை அமைப்புக்களே இது ஓன்றே போதும் தமிழர்கள் நிலையில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ள. தமிழர்கள் என்றபடியால் இந்தநிலையா? என நாங்கள் புலம்பிக் கதறியது உங்கள் காதில் விழவில்லையா? அல்லது எல்லோரும் சேர்ந்துதான் எங்களைக் கொன்றீர்களா?

முள்ளிவாய்காலில் மருத்துவ வசதியோ, பதுங்ககழியோ இல்லாமல் இராணுவத்தின் மும் முனைத்தாக்;குதல்களில் வகை தொகையாக குடும்பம் குடும்பம்பமாக மக்கள் கொல்லப்பட்டனர். சாவு வரும் எனத்தெரிந்தும் ஒருநேர கஞ்சிக்காக வரிசையில் நின்ற எம்மை அவனது வேவு விமானங்கள் கண்காணித்துக் கூற இராணுவத்தின் எறிகனைகளாலும், விமானகக் குண்டுவீச்சாலும் பெருந்தொகையில் கொல்லப்பட்டோம். ‘பசியா உயிரா என்று பார்த்தால் இங்கு பசிக்காக உயிர்தான் போனது”.

இவ்வாறு மக்களைக் கொன்றும், துன்புறுத்தியும் போராட்டத்தை சிதைக்கத் திட்டமிட்டான். அவ்வாறே செய்துமுடித்தான். எனவேதான் மக்களுக்காக போராடிய ஆயுதங்கள் மக்களுக்காகவே மவுனித்துப் போனது. அதன் பின்னர் நாங்களும், போராளிகளும் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுவதும், உடல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதும் தொடர்ந்தவண்ணம் உள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தில் நடைபெற்ற பெரும் மனித அவலத்;தையும், இரத்தக் களரியையும் கண்டு தாங்கணத்துன்பத்தில் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்புடனும் ஏக்கம் கலந்த நெஞ்சங்களுடனும் உடல் தளர்ந்து, உள்ளம் தளர்ந்து உணவு, உடையின்றி மிகுந்த வலியுடன் இராணுவத்தின் முற்றுகைக்குள் நாங்களும், போராளிகளும் நகரவேண்டிய சூழல் ஏற்பட்டது.

உள்ளம் நகர மறுத்தாலும் அவர்களது உறவுகளினதும், எங்களினதும் கதறல்களும், “தம்பி உதுக்க நிண்டு ஒன்றும் செய்யமாட்டியள் வாங்கோ அங்காலே கொண்டு போய்விடுகின்றோம் அதுக்குப்பிறகு ஏதாவது செய்யுங்கோ “என்ற எங்களது ஏவலும் போராளிகளுடையதும் எங்களுடையதும் கால்களை நகர்த்துகின்றது

MUL.jpg

பெற்றோரையும், உறவுகளையும் இழந்து நின்ற போராளிகளையும் எம்மோடு அனைத்தபடி வட்டுவாகல் நோக்கி நகர்ந்தோம். இவ்வாறு நகரும்போது மக்கள் பலர் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகளையும், இளம் பெண்கள் பெருந் தொகையானோர் இராணுவத்தால் இலுத்துச் செல்லப்பட்டதையும் கண்டோம். அப்போது தான் உணர்ந்தோம் இயக்கம் ஏன் எம்மைத் தடுத்து பாதுகாத்தார்கள் என்று அப்போது தான் உணர்ந்து கொண்டோம்.

வட்டுவாகலில் தமிழன் என்று மார்புதட்டி நின்ற வீரத்தை இழந்து, மானத்தை இழந்து அங்கும் எங்களுக்கும், போராளிகளுக்கும் நடந்த கொடூரங்;களைக் கண்டு வேதனையில் துடித்தோம். எங்க என்ன நடக்கப் போகிறது என்று தெரியாது எல்லாவற்றையும் பறிகொடுத்து வெற்றுடல்களாக நகர்ந்தோம்.

இராணுவத்தினரது ஏவல்களுக்கு அமைய முட்கம்பிகளால் அடைக்கப்பட்ட ஒரு வெட்டை பிரதேத்தைச் சென்றடைந்தோம். அங்கே திடீர் என மக்களின் அவலச் சத்தம் என்ன என்று பார்த்தபோது ஒட்டுக் குழுக்களாலும், இராணுவ புலனாய்வாளர்களாலும் காட்டிக் கொடுக்கப்பட்டு சந்தேகத்தின் பேரில் பல இளைஞர்களும், யுவதிகளும், போராளிகளும் தமது உறவுகளின் முன்னே மனிதாபிமானம் அற்ற முறையில் இராணுவத்தால் தாக்கப்பட்டார்கள்.

எந்தவித விசாரனைகளும் இன்றி நாம் யார் என்று கேட்கப் படாமலே இளம் வயதுடைய அனைவரும் தாக்கப்பட்டோம். இவ்வளவு கொடுமைகளையும் வேதனைகளையும் பார்த்த போராளிகள் தங்கள் உறவுகளுக்கும், மக்களுக்கும் மத்தியில் ஏன் இந்த அவலம் எதுவரினும் வரட்டும் என்ற நிலையில் தாங்களாகவே தம்மை இனங்காட்டிக் கொண்டனர்.

இவ்வாறு காட்டிக் கொடுத்து பிடிக்கப்பட்ட சந்தேக நபர்களும் போராளிகள் என தங்களை இனங்காட்டிக் கொண்டவர்களும் எங்கே என்று இன்று வரை தெரியாது உறவுகள் தவிக்கின்றார்கள். ஆனால் அங்கு இவர்களை அழைத்துச் சென்று வட்டுவாகலில் உள்ள வீடுகளில் அடைத்த இராணுவத்தினர் புலனாய்வுத் துறையினரையும், ராதா படையினரையும் எடுத்துவிட்டு அவர்களை அவ் வீடுகளினுள் விட்டு சரமாரியாக சுட்டும், குண்டு வைத்துத் தகர்த்தும் கொன்றான்.

S4.jpg

அதில் இருந்த நூற்றுக்கணக்கானோர் எங்கே என்று இல்;லை. அதனால் தான் இன்றுவரை ஆட்சியாளர்கள் தம்மிடம் உள்ளவர்களின் பெயர் விபரத்தை முழுமையாக வெளியிடவில்லை.

எல்லாவற்றையும் இழந்த எம் உறவுகள் தம் கணவர், பிள்ளைகள் பெற்றோர்கள், தம் முன்னே இழுத்துச் சென்ற காட்சியைப் பார்த்து அழுது துவண்டு அவர்களுக்கு என்ன நடக்குமோ என்ற ஏக்கங்களுடன் வட்டுவாகலில் இருந்து ஓமந்தை தடைமுகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கும்..

தொடரும்….

தொடர்புகளுக்கு – eelampress@gmail.com, epress83@yahoo.com

சோபி, ஆசிரியர் குழு,

www.eelampress.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.