Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழரை (மட்டும்) சோதிக்கும் இரயில்வே!

Featured Replies

சென்னையில் இருந்து வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே கோவா செல்லும் வாஸ்கோ விரைவு தொடர் வண்டியில் கடந்த வாரம் குடும்பத்துடன் சென்றுபோது, இரயில் பயண நடத்துனர் வந்து பயணிகளின் பயணச் சீட்டை வாங்கி சரி பார்த்துவிட்டுச் சென்ற சிறிது நேரத்தில், ஒரு சோதனைக் குழு (4 பெண்கள் ஒரு ஆண்) எங்கள் பயணப் பெட்டிக்கு வந்தது.

எங்கள் பெட்டியில் அடுத்தடுத்த அறைகளில் 5, 6 பேர் குழுவாக பயணம் செய்யும் இரண்டு குழுக்கள் இருந்தன. அவர்களிடம் சென்று, அவர்கள் இணையத்தின் வாயிலாக பயண சீட்டு முன் பதிவு செய்திருந்ததால், அவர்கள் ஒவ்வொருவரையும் ஏதாவது ஒரு அடையாள அட்டையை காட்டச் சொல்லிக் கேட்டது. அவர்களில் ஒருவர் தனது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை காட்டியபோது, அது போதாது, எல்லோரும் காட்ட வேண்டும் என்று அந்த சோதனைக் குழுத் தலைவி கட்டளையிட்டார். அப்படி எந்த நிபந்தனையும் பயணச் சீட்டில் இல்லையே என்று ஒரு பயணி கேட்க, அவரிடம் கோபமாக பாய்ந்த அந்தத் தலைவி, நாங்கள் சட்டப்படிதான் (எந்தச் சட்டம் என்று கேட்டதற்கு பதில் இல்லை) செய்கிறோம். இருக்கிறதா? இல்லையா? என்று அதிகார தோரணையில் மிரட்ட, வாய் தகராறு மூண்டது.

உடனே, அந்த சோதனைக் குழுத் தலைவி, ‘மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு’ என்றெல்லாம் கூறி, முறையாக வினா எழுப்பியவரை மிரட்டினார். அவர் மிரளவில்லை. அவரைத் தவிர அந்தக் குழுவில் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் அடையாள அட்டைகளை காட்ட, அவரை மட்டும் விட்டுவிட்டனர். பக்கத்து அறையில் பயணம் செய்த மாணவர்கள் 6 பேரை உலுக்கியெடுக்க, அதில் ஒருவர் வேறொருவர் பயண சீட்டில் வருவதை கண்டுபிடித்து, இரண்டு மடங்கு அபராதம் விதித்து, வசூலும் செய்துவிட்டது. அதற்கு ஒரு திருப்தி. அப்போது அந்தக் குழுவில் இருந்த ஒரு பெண் சோதகரைப் பார்த்து, “இப்படிப்பட்ட சோதனை எதுவும் மற்ற மாநிலங்களில் நடைபெறுவதில்லையே, ஏன்?” என்று கேட்டேன். அதற்கு பதிலேதும் அளிக்காமல், அரக்கோணம் வந்ததும் இறங்கி சென்றது சோதனைக் குழு! எங்களுடைய பயணச் சீட்டை சோதிக்கவில்லை. சோதித்தால் என் மனைவிக்கு ஏது அடையாள அட்டை? ஆனால் அந்தக் குழு கண்டுகொள்ளவில்லை. வந்தது, வசூலித்தது, போய்விட்டது!

ஒரு குழுவாக பயணச் சீட்டு பதிவு செய்வதும், அதில் ஒருவர் இடத்தில் வேறொருவர் பயணம் செய்வதும் எந்த விதத்தில் இரயில்வேயை பாதிக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், ஒரு குழுவாக பயணச் சீட்டு பதிவு செய்யும்போது, அதிலுள்ள அனைவரும் அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்ற விதி ஏதும் இருக்கிறதா என்று பயணப் பதிவு விவரத்தைப் பார்த்தால், அதில், “This ticket will only be valid along with an ID Proof in original” என்றுதான் உள்ளது. அதாவது ஒரு (an) அடையாள அட்டை இருக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறது. ஆனால், பயணம் செய்யும் அனைவரும் அடையாள அட்டை காட்ட வேண்டும் என்று ஒரு விதியும் இல்லை. ஆனால், குழுவாக பயணம் செய்வோரை குறி வைத்து இப்படி ஒரு வசூல் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறது தென்னக இரயில்வே, அதுவும் தமிழ்நாட்டிற்குள் மட்டும்!

இங்கிருந்து கன்னியாகுமரிக்குச் சென்றபோதும், கோவையிலிருந்து வந்தபோதும் இந்த சோதனை நடத்தப்பட்டது. ஆனால், நாட்டின் பல இடங்களில் இருந்து (கோவாவில் இருந்து திரும்பி வரும்போது கூட) அப்படி ஒரு சோதனை ஒரு இடத்திலும் நடக்கவில்லை! கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு பல முறை பயணம் செய்துள்ளேன், ஒரு முறையும் இப்படிப்பட்ட சோதனை அங்கு ஒருபோதும் நடந்து பார்க்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் இந்த ஸ்பெஷல் சோதனை? தெரியவில்லை.

இன்னொரு ஸ்பெஷல் கூட தமிழ்நாட்டில் மட்டும் தென்னக இரயில்வே நடைமுறைபடுத்துகிறது. அது காலியாக இருக்கும் முன் பதிவு பெட்டிகளில், சாதாரண பயணச் சீட்டுடன் வரும் பயணிகள் ஏறினால், ஒன்று இறக்கி விட்டுவிடுகிறார்கள், இல்லையென்றால், முன் பதிவிற்கான தண்டக் கட்டணம் வசூலிக்கிறார்கள்!

ஒரு முறை, சங்கீதா டிராவல்ஸ் எனும் ‘ஏழரை’ பேருந்தில் பயணம் செய்து, அது ஓடிய நிலை கண்டு அதிர்ந்து பாதி தூரத்தில் இறங்கி, ஜோலார் பேட்டையில் காலியாக நின்றுகொண்டிருந்த கேரளத்தை நோக்கிச் சென்ற விரைவு இரயில் ஏறி ஈரோடு நோக்கி பயணமானபோது, பயணச் சீட்டு பரிசோதகர்கள் இருவர் வந்து, முன் பதிவு பெட்டியில் சாதாரண பயணச் சீட்டுடன் பயணிக்கக் கூடாது என்றார். இந்த விதி இங்கு மட்டும்தானா அல்லது கேரளாவிலுமா? என்று கேட்ட அடுத்த கணம், பேசாமல் போய் விட்டார்கள்.

கேரளத்திற்குச் செல்லும் எந்த விரைவு இரயிலாக இருந்தாலும், காலை எர்ணாகுளம் சென்று சேர்ந்தவுடன் எல்லோரும் ஏறிக் கொண்டு பயணம் செய்கிறார்கள். சாதாரண பயணச் சீட்டு வாங்கியவர்கள், மாதாந்திர பயணச் சீட்டு பெற்றவர்கள் என்று காலியாக இருக்கும் இடத்தில் அமர்ந்துகொண்டு சாதாரணமாக பயணம் செய்கின்றனர்! ஆனால், அங்கு வந்து எந்த பரிசோதகரும் ஏன் முன் பதிவுப் பெட்டியில் பயணம் செய்கிறீர்கள் என்று ஒருவரையும் கேட்பதில்லை! எல்லாம் தமிழ்நாட்டிற்கு மட்டும்தான்.

இங்கிருந்து புறப்பட்டு வட மாநில நகரங்களுக்குச் செல்லும் விரைவு இரயில்கள் ஆந்திராவை தொட்ட பிறகு சோதிப்பதற்கென்று ஒருவரும் வருவதில்லை. வட மாநிலங்களில் ஓடிக்கொண்டிருக்கும்போது, எல்லோரும் வருகிறார்கள், ஒட்டிக்கொண்டு உட்காருகிறார்கள், யாரும் அவர்களை விரட்டுவதில்லை. எல்லாம் தமிழ்நாட்டின் எல்லையோடு முடிந்துவிடுகிறது. எதற்கு இப்படிப்பட்ட ஒரு 'தனி தர்ம'த்தை தமிழ்நாட்டில் மட்டும் கடைபிடிக்கிறது தென்னக இரயில்வே என்று தெரியவில்லை.

இதில் இன்னொரு வினோதமும் உள்ளது. இரயில் பயண பரிசோதகர்களின் நடத்தை இரண்டாம் வகுப்பு பயணிகளிடம் மிகச் சாதாரணமாக இருக்கிறது. குளிர் வசதி பெட்டிகளில் பயணம் செய்வோரிடம் மிக பவ்யமாக நடந்துகொள்கிறார்கள். காசுக்கு ஏற்ற கிளாஸ் சரி, நடத்தையிலுமா வித்தியாசம்? எல்லோரும் பயணிகள்தான், இந்தியர்கள் தான், அப்படியிருக்க வசதிக்கு தக்கவாறு நடத்தையுமா மாறவேண்டும்? புரியவில்லை.

இந்தியாவிலேயே முறையாக பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு பயணம் செய்வோர் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். ஆனால், அவர்களைத்தான் பாய்ந்து பாய்ந்து சோதிக்கிறது தென்னக இரயி்ல்வே. குனிய குனிய குட்டுவார்கள் என்பது இதுதானோ?

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1101/13/1110113057_1.htm

  • தொடங்கியவர்

சில பின்னூட்டங்கள்



  • அட என்னலே!.. புரியாமப் பேசுதீக?.. நாமல்லா ஆரு?.. வீரத்தமிழய்ங்க!.. நாம இங்கிட்டு வந்தவய்ங்கள வாழ வெப்போம்.. ஆனா நாம வாழ மாட்டோம்.. மத்த மா‌‌நில மக்களுக்கு தண்ணி, கரண்டு, காய்கறி கொடுப்போம் ?.. ஆனா குடிக்கிற தண்ணிக்காவ அடு‌த்த மா‌‌நிலத்துக்கிட்ட "பல்லை"காட்டிகிட்டு கெஞ்சிகிட்டிருப்போம்..மத்த மா‌‌நில மக்கள் இங்கிடாடு வேலை தேடி வந்தா அவங்களை "மொதலாளி"ஆக்கிட்டு அவிங்ககிட்ட வேலைக்காரனா‌‌‌ வேலை பாப்போம்!.. அதே மா‌தி‌ரி வேற மாநிலத்துக்கு நம்மாளுங்க வேலைக்குப் போனா அந்த மா‌‌நில ஆளுங்க நம்மாளுங்களை அடிச்சு சித்தரவதை பண்ணி கஷ்டப்படுத்தினா‌‌‌ல் நாம கண்டுக்கிடாம், "அட இதெல்லாம் நம்ம நாட்டுல சகஜமப்பா"ன்னு சொல்லிட்டு போயினே இருப்போம்!.. அட இதுதான்லே நம்மத் தமிழய்ங்க பண்பாடு!.. - அண்ணாச்சி

  • கொட்டக்கொட்டக் குனியும் தமிழனுக்கு இதுவும் வேண்டும், இன்னமமும் வேண்டும்! வேறென்ன சொல்வது? - சவுக்கடி

  • ரத்தத்தில் அடிமைதனமும் பயமும் ஊறிப்போய் உள்ளது. உலகின் மிகச்சிறந்த அடிமை இனம் தமிழன் மட்டும்தான். அதனால்தான் அவனை உலகமெங்கும் வெள்ளையர்கள் அடிமைகளாக கொண்டுசென்றனர். இது இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு தொடரும். கருணாநிதி , செயலலிதா , விஜயகாந்த், வைகோ என வேற்றின மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே தமிழ் நாட்டை ஆளமுடியும். - sheik mohideen

  • கருத்துக்கள உறவுகள்

:o அகோதா,

எல்லாரையும் வைதீர்கள், சரி. ஆனால் வைக்கோவையுமா...?? அவரையாவது விடலாமே??

கருநாயையும், வைக்கோவையும் ஒரே தராசிலா??

  • தொடங்கியவர்

:o அகோதா,

எல்லாரையும் வைதீர்கள், சரி. ஆனால் வைக்கோவையுமா...?? அவரையாவது விடலாமே??

கருநாயையும், வைக்கோவையும் ஒரே தராசிலா??

உங்கள் கருத்து நூறு வீதம் சரி, ஒப்பிடுவது பெரியதவறு.

வலைத்தளத்தில் இருந்ததை அப்படியே ஒட்டியிருந்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.