Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் மழை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் மழை!

[ பிரசுரித்த திகதி : 2011-01-17 07:12:31 AM GMT ]

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் குறைய ஆரம்பித்துள்ள போதிலும், சனிக்கிழமை ஓய்ந்திருந்த மழை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் மீண்டும் பெய்ய ஆரம்பித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் வெள்ள அனர்த்தத்தினால் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். வெள்ள அனர்த்தத்தினால் பட்டிப்பளை, வவுணதீவு, வெல்லாவெளி, வாகரை, வாழைச்சேனை, கிராண், செங்கலடி, ஏறாவூர் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாவியில் காணாமல் போன நபர் இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை. அரையம்பதி வாவியில் படகு கவிழ்ந்ததில் இவர் காணாமல் போயிருந்தார். இவருடன் கூடச் சென்ற மீனவர் கண்டு பிடிக்கப்பட்ட போதிலும் ஆனந்த என்ற குறித்த நபர் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் மன்னம்பிட்டியில் இன்னமும் முற்றாக வெள்ளம் குறையவில்லை. இதன் காரணமாக கனரக வாகனங்கள் மட்டுமே அவ்வீதியால் பயணிக்கின்றன. புதிதாக புனரமைக்கப்பட்டு காபட் வீதியாக மாற்றப்பட்ட அக்கறைப்பற்று திருக்கொண்டியடிமடு, வீதிக்கு சேதம் ஏற்படாத போதிலும், வீதியின் இருபுறமும் வெள்ளத்தால் அரிக்கப்பட்டுள்ளது என்று கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் வை. தர்மரத்தினம் தெரிவித்தார். 18 கிலோ மீற்றர் நீளமான அம்பிளான்துறை, தாந்தாம்மலை வீதியில் 27 இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அரிய நேந்திரன் எம்.பி. கூறினார்.

அம்பாறை மாவட்டத்திலும் வெள்ளம் வடிந்தோடியுள்ள போதிலும், அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் அவலங்களையே எதிர்நோக்கி வருகின்றனர். கல்முனைப்பிரதேசத்தில் அண்மையில் பெய்த அடைமழை காரணமாக வெள்ளநீர் கல்முனை மாகாண பிரதேசத்திலும், தேங்கி நிற்பதனால் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதுடன் டெங்கு, மலேரியா, போன்ற நோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது.

மாநகரசபைப் பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களில் சீரானவடிவகான் வசதியின்மை மற்றும் உள்ளூர் வீதிகளில் பெரும்பாலானவை எதுவித திட்டமிடலும் இன்றி அமைக்கப்பட்டமை போன்றவற்றினால் வெள்ளம் நீண்ட நாட்களாக தேங்கிநின்று நுளம்புப் பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனாலேயே தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது.

tamilulakam.com

வடிய ஆரம்பித்த வெள்ளம் மீண்டும் பெய்ய உள்ள மழையால் மக்கள் துன்பியலை தொடர வைக்கும்.

இயற்கை அன்னை எமது மக்களை மீண்டும் மீண்டும் சோதிக்கின்றாள்.

  • கருத்துக்கள உறவுகள்

பொருட்கள் விலை அதிகரிப்பை திசைதிருப்ப இயற்கை அனர்த்தத்தைப் பயன்படுத்துகிறது அரசு ஜே.வி.பி. குற்றச்சாட்டு

அண்மைய வெள்ளத்தினால் ஏற்பட்ட அழிவுகள் அரசாங்கம் தெரிவித்திருப்பதிலும் பார்க்க அதிகளவுக்கு குறைவானதெனக் குற்றஞ்சாட்டியிருக்கும் ஜே.வி.பி. அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்புத் தொடர்பான நெருக்கடிக்குத் தீர்வுகாண முடியாமல் இருக்கும் தனது கையாலாகத்தனத்தை மூடி மறைக்க இயற்கை அனர்த்தத்தைப் பயன்படுத்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக சாடியுள்ளது.கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது ஜே.வி.பி. எம்.பி. அநுர குமார திஸாநாயக்கா இந்தக் குற்றச்சாட்டைத் தெரிவித்திருக்கிறார்.

4 இலட்சம் ஏக்கர் பயிர்ச்செய்கை

நிலம் வெள்ளத்தால் அழிந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. ஆனால், நெற்செய்கை சேதத்துக்குள்ளானது குறைவானதாகும். அரசாங்கம் வழங்கிய புள்ளிவிபரங்கள் சரியானதாக இருந்தால் இரு மாவட்டங்களையும் சேர்ந்த பயிர்ச்செய்கை நிலங்கள் மூன்றில் இரண்டு அழிவடைந்திருக்கும். ஆனால், அவ்வளவு தொகை ஏக்கர் காணிகள் அழிந்திருக்கவில்லை. நெற்பயிர்கள் தண்ணீருக்குள் இரு நாட்கள் மூழ்கியிருந்தாலும் தாக்குப்பிடிக்கும். தண்ணீர் வடிந்தவுடன் அவை மீண்டும் மேலெழுந்துவிடும் என அநுர குமார திஸாநாயக்க கூறியுள்ளார்.

அத்துடன்,குளங்கள் பற்றிய தகவல்களும் தவறானவை எனவும் கந்தளாய்,இராஜாங்கனை,பராக்கிரம சமுத்திரம் போன்ற பாரிய குளங்களை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர்கள் பாதுகாத்துக் கொள்ளக்கூடியதாக இருந்துள்ள நிலையில், சேதாரங்கள் குறைவாக இருக்குமென அநுர குமார திஸாநாயக்க தெரிவித்திருக்கிறார். ஏனைய குளங்களின் நிலைமையும் இதேபோன்றுதான் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில் 400 குளங்கள் சேதமடைந்திருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கும் அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=5558:2011-01-17-05-24-25&catid=51:local&Itemid=85

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.