Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே

Featured Replies

  • தொடங்கியவர்

படம்:குட்டி

பாடல்:யாரோ என் நெஞ்சை

பாடகர்கள்:ஸாகர்

இசை அமைப்பாளர்:தேவி ஸ்ரீ பிரசாத்

http://www.youtube.com/watch?v=uiGDgoDRMXs

பல்லவி:

யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே

தூங்கும் என் உயிரை தூண்டியது

யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே

வாசம் வரும் பூக்கள் வீசியது

தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்

மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம்

முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே

நிலவாக உன்னை வானில் பார்த்தேன்

அலையாக உன்னை கடலில் பார்த்தேன்

சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே

மானாக உன்னை மலையில் பார்த்தேன்

தேனாக உன்னை மலரில் பார்த்தேன்

மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

சரணம் 1

ஓ பேச சொல்கிறேன் உன்னை

நீ ஏசி செல்கிறாய் என்னை

வீணை தன்னையே மீட்டுக் கொண்டதா

எண்ணிக கொள்கிறேன் அன்பே

காலம் என்பது மாறும்

வலி தந்த காயங்கள் ஆறும்

மேற்கு சூரியன் மீண்டும் காலையில்

கிழக்கில் தோன்றி தான் தீரும்

நதியோடு போகின்ற படகு என்றால் ஆடாதா

ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா

உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா

நிலவாக உன்னை வானில் பார்த்தேன்

அலையாக உன்னை கடலில் பார்த்தேன்

சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே

மானாக உன்னை மலையில் பார்த்தேன்

தேனாக உன்னை மலரில் பார்த்தேன்

மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

சரணம் 2

ஓ பாதி கண்களால் தூங்கி

என் மீதி கண்களால் ஏங்கி

எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே

கொண்டு சேர்க்கிறேன் தாங்கி

நேசம் என்பது போதை

ஒரு தூக்கம் போக்கிடும் வாதை

என்ற போதிலும் அந்த துன்பத்தை

ஏற்று கொள்பவன் மேதை

உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா?

எந்நாளும் மறவாத நாளாகி போகாதா?

இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா ?

நிலவாக உன்னை வானில் பார்த்தேன்

அலையாக உன்னை கடலில் பார்த்தேன்

சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே

மானாக உன்னை மலையில் பார்த்தேன்

தேனாக உன்னை மலரில் பார்த்தேன்

மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

படம்: காதல் மன்னன்

பாடல்: மெட்டு கேட்டுத் தவிக்குது

பாடியவர்: M. S. விஸ்வநாதன்

http://www.youtube.com/watch?v=s9WazPj45_A&feature=related

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

பாடல்: மனமே மனமே

படம்: ரோஜாவனம்

பாடியவர்கள்: S.P.B & சீனிவாசன்

இசை: பரத்வாஜ்

http://www.youtube.com/watch?v=noNP5WuaPYE

மனமே மனமே

தடுமாறும் மனமே

உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே

பெண்ணை பார்க்கும் பொழுது நீ சிறகு விரிக்காதே

பிரிந்து போன பிறகு நீ சிகையும் வளர்க்காதே

மனமே நீ தூங்கி விடு, என்னை நினைவின்றி தூங்கவிடு

மனமே மனமே

தடுமாரும் மனமே

உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே

காதல் என்ற மாத்திரைக்கு எப்போதும் இரன்டு குணம்

போட்டு கொண்டால் போதையை கொடுக்கும்

போக போக தூக்கத்தை கெடுக்கும்

காதல் என்ற யாத்திரைக்கு எப்போதும் இரண்டு வழி

வந்த வழி வெளிச்சத்தில் ஜொலிக்கும்

போகும் வழியோ இருளுக்குள் இருக்கும்

கண் மூடினால் தூக்கம் இல்லை

கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை

ஆல விருட்சம் போல வளருது அழகு பெண்ணின் நினைப்பு

வெட்டி எரிந்து பார்த்தேன் மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு

என் நெஞ்சமே பகையானதே

உயிர் வாழ்வதே சுமையானதே

மனமே நீ தூங்கி விடு, என்னை நினைவின்றி தூங்கவிடு

காதல் தந்த நினைவுகளை

கழற்றி எரிய முடியவில்லை

அலைகள் வந்து அடிப்பதனாலே

கரைகள் எழுந்து ஓடுவதில்லை

என்னை மறக்க நினைக்கையிலும்

அவளை மறக்க முடியவில்லை

உலை மூடிட மூடிகள் உண்டு

அலை கடல் மூடிட மூடிகள் இல்லை

காதலின் கையில் பூக்களும் உண்டு

காதலின் கையில் கத்தியும் உண்டு

பூக்கள் கொண்டு வந்து நீ வாசம் வீசுவாயா

கத்தி கொண்டு வந்து நீ கழுத்தில் வீசுவாயா

என் வாழ்விலே என்ன சோதனை

.... நான் வாழ்வதே என் வேதனை

மனமே நீ தூங்கி விடு, என்னை நினைவின்றி தூங்கவிடு

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

படம்: பிதாமகன்

பாடல்: இளங்காத்து வீசுதே

இசை: இளையராஜா

பாடலாசிரியர்: பழனி பாரதி

பாடியவர்கள் : ஷ்ரேயா கௌஷல், ஸ்ரீராம் பார்த்தசாரதி

இளங்காத்து வீசுதே

இசை போல பேசுதே

வளையாத மூங்கிலில்

ராகம் வளைஞ்சு ஓடுதே

மேகம் முழிச்சு கேட்குதே

கரும் பாறை மனசுல

மயில் தொகை விரிக்குதே

மழை சாரல் தெளிக்குதே

புல் வெளி பாதை விரிக்குதே

வானவில் குடையும் புடிக்குதே

புல் வெளி பாதை விரிக்குதே

வானவில் குடையும் புடிக்குதே

மணியின் ஓசை கேட்டு மன கதவு திறக்குதே

புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே

(இளங்காத்து வீசுதே ...)

பின்னி பின்னி சின்ன இழையோடும்

நெஞ்சைஅள்ளும் வண்ண துணி போல

ஒன்னுக்கொன்னு தான் எனஞ்சி இருக்கு

உறவு எல்லாம் அமஞ்சி இருக்கு

அள்ளி அள்ளி தந்து உறவாடும்

அன்னைமடி இந்த நெலம் போல

சிலருக்கு தான் மனசு இருக்கு

உலகம் அதில் நிலைச்சு இருக்கு

நேத்து தனிமையில போச்சு

யாரும் துணை இல்லை

யாரோ வழி துணைக்கு வந்தாள்

ஏதும் இணை இல்லை

உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே

குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல

(இளங்காத்து வீசுதே ...)

மனசுல என்ன ஆகாயம்

தினம் தினம் அது புதிர் போடும்

ரகசியத்தை யாரு அறிஞ்சா ?

அதிசயத்தை யாரு புரிஞ்சா ?

வேத விதைக்கிற கை தானே

மலர் பறிக்குது தினம் தோரும்

மலர் தொடுக்க நாரை எடுத்து

யார் தொடுத்த மாலையாச்சு ?

ஆழம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம்

மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதையெல்லாம்

தாலாட்டு கேட்டிடாமலே , தாயின் மடிய தேடி ஓடும்

மலை நதி போலே .......

(கரும் பாறை மனசுல ...)

Edited by குட்டி

  • தொடங்கியவர்

படம்: வேட்டையாடு விளையாடு

பாடல்: மஞ்சள் வெயில் மாலையிலே

இசை: ஹரிஸ் ஜெயராஜ்

பாடியவர்கள்: விஜய், ஹரிஹரன், நகுல்

வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே

போகும் இடம் எல்லாமே கூடக்கூட வந்தாய்

வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே

நட்சத்திரப் பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்

மஞ்சள் வெயில் மாலையிதே

மெல்ல மெல்ல இருளுதே

பளிச்சிடும் விளக்குகள் பகல்போல் காட்டுதே

தயக்கங்கள் விலகுதே தவிப்புகள் தொடருதே

அடுத்தது என்ன என்ன என்றேதான் தேடுதே

(வெண்ணிலவே)

பூலோகத்தின் கடைசிநாள் இன்றுதானோ என்பதுபோல்

பேசிப்பேசித் தீர்த்தபின்னும் ஏதோ ஒன்று குறையுதே

உள்ளே ஒரு சின்னஞ்சிறு மரகத மாற்றம்வந்து

குறுகுறு மின்னலென குறுக்கே ஓடுதே

(வெண்ணிலவே)

(மஞ்சள் வெயில்)

(தயக்கங்கள் விலகுதே)

வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற

வழியில் வழியில் சிலர் நடக்கிறார் நடக்கிறார்

மஞ்சளும் பச்சையும் கொண்டு

பெய்யுது பெய்யுது மழை நனைகிறார் நனைகிறார்

யாரோ யாரோ யாரோ அவள்

ஹே யாரோ யாரொ யாரோ அவன்

ஒரு காலும் காலும் வெட்டிக்கொள்ள

இருதண்டவாளம் ஒட்டிச்செல்ல

(வெண்ணிலவே)

இன்னும் கொஞ்சம் நீளவேணும்

இந்த நொடி இந்த நொடி

எத்தனையொ காலம் தள்ளி

நெஞ்சோரம் பனித்துளி

நின்றுபார்க்க நேரமின்றி

சென்றுகொண்டே இருந்தேனே

நிற்கவைத்தாள் பேசவைத்தாள்

நெஞ்சோரம் பனித்துளி

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

படம் : பாண்டவர் பூமி

பாடல் : அவரவர் வாழ்கையில்

இசை : பரத்வாஜ்

பாடலாசிரியர்: சினேகன்

பாடியவர்கள் : பரத்வாஜ், குழுவினர்

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,

அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,

அது ஒரு அழகிய நிலா காலம்,

கனவினில் தினம் தினம் உல்லா போகும்,

அது ஒரு அழகிய நிலா காலம்,

கனவினில் தினம் தினம் உல்லா போகும்,

நிலவுகள் சேர்ந்து,

பூமியில் வாழ்ந்ததே,

அது ஒரு பொற்காலம்,

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,

அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,

காற்றும் கூட எங்களுடன்,

இரவினில் தூங்க இடம் கேட்கும்,

மழை துளி கூட என் தாயின்,

மடியினில் தவழ தினம் ஏங்கும்,

நத்தை கூட்டின் நீர் போதும்,

எங்களின் தாகம் தீர்த்துகொள்வோம்,

கத்தும் கடலும் கை கட்ட,

கவிதைகள் போலே வாழ்ந்து வந்தோம்,

தாயின் மடியில் தினம் இருந்து,

காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்,

கனவினில் காலையில் ஒளி பெயர்த்து,

சொல்லி சொல்லி சுகமாய்,

தினம் சிரிப்போம்,

ஐந்தெழுத்து புது மொழியை,

அரிய வைத்தாள் என் அன்னை,

அண்ணன் தங்கை ஐவருமே,

நேசம் கொண்டு தமிழ் மண்ணை,

நிலவுகள் சேர்ந்து,

பூமியில் வாழ்ந்ததே,

அது ஒரு பொற்காலம்,

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,

அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,

அன்னை ஊட்டிய பிடி சோற்றில்,

ஆயுள் முழுக்க பசி மறந்தோம்,

ஓற்றை கண்ணில் அடி பட்டால்,

பத்து கண்ணிலும் வலி கண்டோம்,

பள்ளிகூடம் தந்ததில்லை,

பாசம் என்னும் நூல் ஒன்றை,

வேதங்கள் நான்கும் சொன்னதில்லை,

எங்கள் கதை போலே வேரொன்றை,

கண்களும் நீர் துளி கண்டதில்லை,

அழுதிட அவைகளும் பழகவில்லை,

கருப்பா சிவப்பா தெரியவில்லை,

கவலைகள் இதுவரை முளைத்ததில்லை,

சேகரித்து வைப்பதற்கு,

தேவை என்று எதுவும் இல்லை,

இறைவனுக்கும் எங்களுக்கும்,

இடைவெளிகள் இருந்ததில்லை,

நிலவுகள் சேர்ந்து,

பூமியில் வாழ்ந்ததே,

அது ஒரு பொற்காலம்,

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,

அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,

அது ஒரு அழகிய நிலா காலம்,

கனவினில் தினம் தினம் உல்லா போகும்,

அது ஒரு அழகிய நிலா காலம்,

கனவினில் தினம் தினம் உல்லா போகும்,

நிலவுகள் சேர்ந்து,

பூமியில் வாழ்ந்ததே,

அது ஒரு பொற்காலம்,

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

படம்: மே மாதம்

பாடல்: என் மேல் விழுந்த மழைத்துளியே

இசை: A.R.R

பாடியவர்கள்: ஜெயச்சந்திரன் & சித்ரா

பாடல் வரிகள்: வைரமுத்து

என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை மயக்கிய மெல்லிசையே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்

உனக்குள் தானே நான் இருந்தேன்

(என் மேல் விழுந்த மழைத் துளியே...)

மண்ணை திறந்தால் நீர் இருக்கும் என்

மனதை திறந்தால் நீ இருப்பாய்

ஒலியை திறந்தால் இசை இருக்கும் என்

உயிரை திறந்தால் நீ இருப்பாய்

வானம் திறந்தால் மழை இருக்கும் என்

வயதைத் திறந்தால் நீ இருப்பாய்

இரவை திறந்தால் பகல் இருக்கும் என்

இமையைத் திறந்தால் நீ இருப்பாய்

என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இலையும் மலரும் உரசுகையில்

என்ன பாஷை பேசிடுமோ

அலையும் கரையும் உரசுகையில்

பேசும் பாஷை பேசிடுமோ

மண்ணும் விண்ணும் உரசுகையில்

என்ன பாஷை பேசிடுமோ

பார்வை ரெண்டும் பேசிக் கொண்டால்

பாஷை ஊமையாய் விடுமோ

(என் மேல் விழுந்த மழைத் துளியே..).

என்னை எழுப்பிய பூங்காற்றே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை மயக்கிய மெல்லிசையே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

(என் மேல் விழுந்த மழைத் துளியே...)

என்னை எழுப்பிய பூங்காற்றே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை மயக்கிய மெல்லிசையே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்

உனக்குள் தானே நான் இருந்தேன்

(என் மேல் விழுந்த மழைத் துளியே...)

  • தொடங்கியவர்

பாடல் இணைப்பிற்கு நன்றி ராஜா!

  • தொடங்கியவர்

பாடியவர்: கார்த்திக்

பாடல்: இத்தனை யூகமாய்

படம்: உதயன்

இசை: Manikanth Kadri

http://www.youtube.com/watch?v=s0J8vUOoFXQ

இத்தனை யூகமாய் இத்தனை யூகமாய் எங்கே இருந்தாய்

ஒற்றை நொடியில் உயிரை திருடி எங்கோ மறைந்தாய்

இதயம் வெள்ளை காகிதம் நீ அதில் இங்கே ஓவியம்

என்னிரு கண்கள் சக்கரம்

உன்னை மட்டும் சுற்றிடும் தினம் தினம்

இதயம் வெள்ளை காகிதம் நீ அதில் இங்கே ஓவியம்

என்னிரு கண்கள் சக்கரம்

உன்னை மட்டும் சுற்றிடும் தினம் தினம்

இத்தனை யூகமாய் இத்தனை யூகமாய் எங்கே இருந்தாய்

ஒற்றை நொடியில் உயிரை திருடி எங்கோ மறைந்தாய்... ஓ..ஓ..

ஒருநாள் மழையாய் ஒருநாள் வெயிலாய் என்மேல் விழுந்தாய்

மொழிகள் அறியாத ஊமை போல மௌனம் சுமந்தாய்

கடலின் தொடக்கம் மழை துளியோ

காதலின் தொடக்கம் இவள் விழியோ.. ஓ.. ஓ..

பிடிக்கும் நெருக்கம் இவள் மட்டுமே

கடைசி வரையில் இருக்கட்டுமே...ஓ.. ஓ..

நீ அறியாத ரகசியமாய்

உன்னுடன் என்றும் இருப்பேன்

நீ விடும் சுவாச காற்றினிலே

என்னுயிர் காற்றை எடுப்பேன்

இதயம் வெள்ளை காகிதம் நீ அதில் இங்கே ஓவியம்

என்னிரு கண்கள் சக்கரம்

உன்னை மட்டும் சுற்றிடும் தினம் தினம்

இத்தனை யூகமாய் இத்தனை யூகமாய் எங்கே இருந்தாய்

ஒற்றை நொடியில் உயிரை திருடி எங்கோ மறைந்தாய்... ஓ..ஓ..

ஒருநாள் மழையாய் ஒருநாள் வெயிலாய் என்மேல் விழுந்தாய்

மொழிகள் அறியாத ஊமை போல மௌனம் சுமந்தாய்... ஓ..ஓ..

தாவும் குழந்தை என் மனமோ

தாயின் மடியை உன் முகமோ

உன் கண்ணின் அசைவில் நான் பறந்தேன்

காற்றில் எங்கோ தொலைகிறேன்... ஓ..ஓ..

உன்விரல் பற்றி நான் நடந்து

உலகினை சுற்றிட தோன்றும்

கனவுகள் எல்லாம் கலைந்தாலும்

நிஜாமாய் நீ தான் வேண்டும்

இதயம் வெள்ளை காகிதம் நீ அதில் இங்கே ஓவியம்

என்னிரு கண்கள் சக்கரம்

உன்னை மட்டும் சுற்றிடும் தினம் தினம்

இத்தனை யூகமாய் இத்தனை யூகமாய் எங்கே இருந்தாய்

ஒற்றை நொடியில் உயிரை திருடி எங்கோ மறைந்தாய்

ஒருநாள் மழையாய் ஒருநாள் வெயிலாய் என்மேல் விழுந்தாய்

மொழிகள் அறியாத ஊமை போல மௌனம் சுமந்தாய்

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: இரவா பகலா குளிரா வெயிலா

  • தொடங்கியவர்

நல்ல பாடல், இணைப்பிற்கு நன்றி நுணா!

  • 3 months later...
  • தொடங்கியவர்

படம்: என் ஜீவன் பாடுது

பாடல்: மௌனம் ஏன் மௌனம் ஏன்

இசை: இசை ஞானி

பாடியவர்: மனோ

http://www.youtube.com/watch?v=R-pTJbCGsEs&feature=related

  • 2 months later...
  • தொடங்கியவர்

படம்: உன்னருகே நானிருந்தால்

பாடல்: எந்தன் உயிரே எந்தன் உயிரே

இசை: தேவா

பாடியவர்கள்: சித்ரா, கிருஷ்ணராஜ்

வரிகள்: தாமரை

எந்தன் உயிரே எந்தன் உயிரே

கண்கள் முழுதும் உந்தன் கனவே

எந்தன் உயிரே எந்தன் உயிரே

கண்கள் முழுதும் உந்தன் கனவே

என்னை மறந்தேன் என்னை மறந்தேன்

நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே

சொல்லாமல் என்னை எடுத்தாய்

பதிலாக உன்னை கொடுத்தாய்

உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே

உன்னருகில் நானிருந்தால்

தினம் உன்னருகில் நானிருந்தால்

(எந்தன் உயிரே..)

என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை

என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்

இன்று உன்னை பார்த்தவுடன்

என்னை தோற்றுவிட்டு

வெட்கத்தில் தலை குனிந்தேன்

அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க

என்னாலே முடியவில்லை

இங்கு எந்தன் நாள் முழுக்க

உன்னை நினைத்திருக்க

ஒரு போதும் அழுகவில்லை

சின்ன சின்ன கூத்து

நீ செய்யிறதை பார்த்து

உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்

வண்ண வண்ண பாதம்

நீ வச்சி வச்சி போகும்

அந்த தரையாய் நானிருப்பேன்

கவலைகள் மறக்கவே

கவிதைகள் பிறக்கவே

உன்னருகே நானிருந்தால்

தினம் உன்னருகில் நானிருந்தால்

(எந்தன் உயிரே..)

உன்னை சேர்வதற்கு யுத்தம் செய்யவில்லை

ஆனாலும் நீ கிடைத்தாய்

எங்கு எங்கோ சுற்றி வந்த என்னை

நிற்க வைத்து அடையாளம் நீ கொடுத்தாய்

உன்னை சேரும் அந்த நாளை எண்ணி எண்ணி

பார்த்து விரல் நான் மடிப்பேன்

புது மஞ்சத் தாலி மின்ன மின்ன கேளி பண்ண

பக்கத்தில் நான் கிடைப்பேன்

கண்ணில் மீனை வச்சி

புத்தும் புது தூண்டில்

போட்டது நீயல்லவா

கள்ளத்தனம் இல்ல

உன் வெள்ளை உள்ளம் கண்டு

விழுந்தது நான் அல்லவா

உலகமே காலடியில்

கரைந்ததே ஓர் நொடியில்

உன்னருகே நானிருந்தால்

தினம் உன்னருகே நானிருந்தால்

(எந்தன் உயிரே..)

Edited by குட்டி

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

படம்: ஜீ

பாடியவர்கள்: மதுபாலகிரிஷணன், மதுஸ்ரீ

இசை: வித்தியாசாகர்

டிங் டாங் கோவில் மணி நான் கேட்டேன்..

உன் பெயர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்..

நீ கேட்டது ஆசையில் எதிரொலி..

நீ தந்தது காதலின் உயிரொலி..

( டிங் டாங்.. )

சொல்லாத காதல் சொல்ல.. சொல்லாகி வந்தேன்...

நீ பேச ... இது நீ பேச...

சொல் ஏது இனி நான் பேச??

கனவுகளே.. கனவுகளே.. பகலிரவு நீள்கிறதே..

இதயத்திலே.. இரவு பகல் உன்னினைவு ஆள்கிறதே..

சற்று முன் நிலவரம்.. எந்தன் நெஞ்சில் கலவரம்...

( டிங் டாங்.. )

புல் தூங்கும்.. பூவும் தூங்கும்..

புது காற்றும் தூங்கும்..

தூங்காது நம் கண்கள் தான்..

தேம்பாதே... இது காதல் தான்..

சிரித்த நிலா பிடிக்கவில்லை..

பிடிக்கிறது உன் முகம் தான்..

கும்கும் இசை இனிக்கவில்லை..

இனிக்கிறது உன் பெயர் தான்..

எழுதிவைத்த சித்திரம்..

எந்தன் நெஞ்சில் பத்திரம்..

( டிங் டாங்.. )

Edited by குட்டி

  • தொடங்கியவர்

படம்: உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

இசை: S. A ராஜ்குமார்

பாடியவர்: ஹரிஹரன்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்

நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்

ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்

ஞாபகங்கள் தீ மூட்டும் ஞாபகங்கண் நீரூட்டும்

(ஏதோ)

கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே

கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே

பூக்களுன் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே

அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்

அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்

(ஏதோ)

தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே

வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே

தொட்டால் சிணுங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே

அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்

மறந்து போனதே எனக்கு எந்தன் ஞாபகம்

(ஏதோ)

  • தொடங்கியவர்

திரைப்படம்: பிரியமான தோழி

பாடல்: மான் குட்டியே

பாடகர்கள்: சாதனா சர்கம்

இசை: SA. ராஜ்குமார்

பாடல் ஆசிரியர்: Pa.Vijay

மாங்குட்டியே புள்ளி மாங்குட்டியே

ஓன் மேனி தான் ஒரு பூந்தொட்டியே

ஓன் கொழு கொழு கன்னங்கல் பார்த்து

என் மனசுலே தெருக்கூத்து

ஓன் ரவிக்கையின் ரகசியம் பார்த்து

என் நெஞ்சில புயல் காத்து

மாங்குட்டியே புள்ளி மாங்குட்டியே

என் மேனி தான் ஒரு பூந்தொட்டியே

உன்னால உன்னால என் மனசு உன்னால

தரையில் ஓடும் நாட போல

ஏன் ஒடுது அது ஏன் ஒடுது

உன்னால உன்னால உன்னோட நெனப்பால

கண்ணுக்குள்ள மிளகா வத்தல்

ஏன் காயுது அது ஏன் காயுது

இது பஞ்சலோக மேனி பஞ்சுத் தலகாணி

மேல வந்து ஏன் விழுந்த

நீ செக்க செக்க செவந்த

குங்குமத்தை கலந்த

வன்னதில ஏன் பொறந்தே

நீயும் நானும் தான் ஒன்னா திரியுறோம்

தீயே இல்லையே ஆனா எரியுறோம்

(மாங்குட்டியே...)

உன்னோடும் என்னோடும் உடம்போடு வேர்தாலும்

வேர்திடாத இடமும் உண்டு

நீ சொல்லனும் அத நீ சொல்லனும்

ஆணோடும் பெண்ணோடும் வேர்க்காத இடம் என்ன

உதட்டு மேல வேர்க்காதைய

நீ நம்பனும் அத நீ நம்பனும்

நீ அங்க கொஞ்சம் காட்டி இங்க கொஞ்சம் கூட்டி

பாதி உயிர் எடுக்காதே

என்ன கட்டி கட்டி புடிக்க கண்ட எடம் கடிக்க

உத்தரவு கேக்காதே

அசந்தா போதுமே அரைச்சே பார்க்கலாம்

கசந்தா போய்விடும் கலந்தே பார்க்கலாம்

(மாங்குட்டியே...)

  • தொடங்கியவர்

திரைப்படம்: பிரியமானவளே

பாடல்: எனக்கொரு சிநேகிதி

பாடகர்கள்: ஹரிஹரன், மகாலக்ஷ்மி ஐயர்

இசை: SA. ராஜ்குமார்

பாடல் ஆசிரியர்: வாலி

எனக்கொரு சிநேகிதி சிநேகிதி தென்றல் மாதிரி

நீயொரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி

உன்முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்து கொள்கிறேன்

பூக்களின் காதில் செல்லமாய் உன் பேர் சொல்லி பார்க்கிறேன்

எனக்கொரு சிநேகிதி சிநேகிதி தென்றல் மாதிரி

நீயொரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி

உன்முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்து கொள்கிறேன்

பூக்களின் காதில் செல்லமாய் உன் பேர் சொல்லி பார்க்கிறேன்

மேகம் அது சேராது வான்மழையும் வாராது

தனிமையில் தவித்தேனே உன்னை எண்ணி இளைத்தேனே

மேலிமையும் வாராது கீழிமையும் சேராது

உனக்கது புரியாதா இலக்கணம் தெரியாதா

சம்மதங்கள் உள்ளபோதும் வார்த்தை ஒன்றை சொல்ல வேண்டும்

வார்த்தை வந்து சேரும் போது நாணம் என்னை கட்டி போடும்

மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசிவிடுமே

கைவளையல் குலுங்காமல் கால்கொலுசு சிணுங்காமல்

அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும்

மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல

கனவுகள் ஒருகோடி நீ கொடு என் தோழி

உன்னை தந்து என்னை நீயும் வாங்கி கொண்டு நாட்களாச்சு

உன்னை தொட்ட பின்புதானே முட்கள் கூட பூக்களாச்சு

விரல்கள் கொண்டும் நீயும் மீட்டினால் விறகும் வீனையாகும்

எனக்கொரு சிநேகிதி சிநேகிதி தென்றல் மாதிரி

நீயொரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி

உன்முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்து கொள்கிறேன்

பூக்களின் காதில் செல்லமாய் உன் பேர் சொல்லி பார்க்கிறேன்

  • தொடங்கியவர்

படம்: பிரியமானவளே

இசை: SA ராஜ்குமார்

பாடியவர்கள்: ஹரிஹரன், மகாலெட்சுமி ஐயர்

http://www.youtube.com/watch?v=loVBVdsVwJ0

என்னவோ என்னவோ என் வசம் நானில்லை

என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை இல்லை

உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்

உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்

என்னோடு நீயாக உன்னோடு நானாகவா ப்ரியமானவளே

(என்னவோ..)

மழை தேடி நான் நனைவேன் சம்மதமா சம்மதமா

குடையாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா

விரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா சம்மதமா

நீ கடிக்க நான் வளர்ப்பேன் சம்மதமா சம்மதமா

விடிகாலை வேளை வரை என் வசம் நீ சம்மதமா

இடைவேளை வேண்டுமென்று இடை கேட்கும் சம்மதமா

நீ பாதி நான் பாதி என்றிருக்க சம்மதமா

என்னுயிரில் சரி பாதி நான் தருவேன் சம்மதமா

(என்னவோ..)

இமையாக நான் இருப்பேன் சம்மதமா சம்மதமா

இமைக்காமல் பார்த்திருப்பேன் சம்மதமா சம்மதமா

கனவாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா

கண் மூடி தவம் இருப்பேன் சம்மதமா சம்ம்தமா

ஒரு கோடி ராத்திரிகள் மடி தூங்க சம்மதமா

பலகோடி பௌர்ணமிகள் பார்த்திருப்பேன் சம்மதமா

பிரியாத வரம் ஒன்றை தர வேண்டும் சம்மதமா

பிரிந்தாலும் உனை சேரும் உயிர் வேண்டும் சம்மதமா

(என்னவோ..)

ப்ரியமானவளே

ப்ரியமானவனே..

  • 1 month later...
  • தொடங்கியவர்



[media=]

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

படம்: கல்லூரிவாசல்

  • 3 months later...
  • தொடங்கியவர்

படம்: ராஜா

பாடல்: ஒரு பௌர்ணமி நிலவில்

http://www.youtube.com/watch?v=4c1v6CBKyIk&playnext=1&list=PL94D9E8B6B929665F&feature=results_main

  • தொடங்கியவர்

படம்: சிகரம்

பாடல்: இதோ இதோ என் பல்லவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.