Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா எனும் போதினிலே மனதில் எழும் வேதனை.

Featured Replies

கனடா எனும் போதினிலே மனதில் எழும் வேதனை.

எல்லா நாடுகளிடமும் பொறுமை, கருணை, இரக்கம் என்பனவற்றை எதிர்பர்க்க முடியாது. இவை நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றன. சில நாடுகள் சில காலத்தில் பெருந் தன்மையாக நடக்கின்றன. காலப் போக்கில் அது மறைந்து எதிர்மறையான நிலைப்பாட்டை எடுக்கின்றன.

வரலாற்றில் இது போன்ற எத்தனையோ திருப்பங்களை நாம் சந்திக்கிறோம். இலட்சியத்திற்கும் நடப்பிற்கும் இடையில் பெரிய வித்தியாசம். யூதர்களுடைய நவீன வரலாற்றில் இது தெளிவாகத் தெரிகிறது. யூதர்களுக்கு மத்திய கிழக்கில் தனி நாடு தேவை என்பதை உணர்த்திய பிரித்தானியாவின் பல்பூர் பிரகடனம் (Balfour declaration) 1948ல் திடீரென கைவிடப் பட்டது.

யூதப் படுகொலை நடாத்திய நாசி அரசின் யேர்மனிக்கு நிகராக பிரித்தானியாவும் யூதர்களுக்கு எதிர் நிலை எடுத்தது. அமெரிக்க சனாதிபதி ரூமனுக்கும் (Truman) இதே தடுமாற்றம் ஏற்பட்டது. அவர் செனேற் சபை உறுப்பினராக இருந்த போது யூதர்களின் தனி நாட்டு கோரிக்கையை ஆதரித்தார்.

சனாதிபதி ஆகிய பின் அவர் பரந்து பட்ட தேசிய நலன் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில் அமுங்கிப் போனார். யேர்மனியை விட்டு படகுகளில் தப்பியோடிய 100,000 யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் புகலிடம் வழங்க அவர் தீர்மானித்தார். பரித்தானியாவின் பிரதமர் அற்லீ (Clement Atlee) இதை எதிர்த்தார்.

பெண்களும் சிறுவர்களும் அடங்கிய இந்தப் படகு மனிதர்களிடம் திருப்தியான உள்வரவு ஆவணங்கள் இல்லை. என்ற காரணத்தைக் காட்டி அற்லீ அரசு யூதர்களின் குடியேற்றத்துக்கு எதிர்ப்புக் காட்டியது. ரூமன் கடும் சினம் கொண்டு இராச தந்திர மரபுகளை மீறி சுடு சொல் நிறைந்த கடிதத்தை பிரிட்டிஷ் பிரதமருக்கு எழுதினார்.

அதே ரூமன் தனது ராஜாங்க செயலக அதிகாரிகளுடன் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருடைய பிரதம ஆலோசகர் ஜோர்ஜ் மார்ஷல் யூதர்களுக்கு தனி நாடு வழங்கக் கூடாது என்பதில் உறுதியாக நின்றார். மத்திய கிழக்கின் எண்ணை அமெரிக்காவுக்கு கிடைக்காமல் போகலாம் என்று மார்ஷல் காரணம் காட்டினார். இறுதியில் ரூமன் யூதர்களின் தனி நாட்டை அங்கிகரித்தார்.

யூதர்கள் வாழ்விடம் தேடி அலைந்த கதையை லியொன் யூரிஸ் எழுதிய எக்ஸ்சோடஸ் (Exodus; Leon Uris) என்ற நவீனத்தில் படிக்கலாம். 90,000 துருப்புக்களைப் பயன்படுத்தி பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேறுவதைப் பிரித்தானியா தடுத்தது. தடுப்பு நடவடிக்கை தோல்வி கண்டபின் இஸ்ரேயில் தோன்றியது.

1860 தொடக்கம் மூன்று வருடம் நடந்த அமெரிக்க உள்நாட்டுப் போரில் சனாதிபதி ரூமனின் பாட்டன் பாட்டி குடும்பம் உள்நாட்டு இடம் பெயர்வைச் சந்தித்தது. அவருக்கு இடப்பெயர்வின் வலி பற்றித் தெரியும். யூதர்களின் அலைச்சல் உலகளாவியது, பல நூற்றாண்டை உள்ளடக்கியது.

முந்தி வந்த குடியேறிகள் பிந்தி வரும் குடியேறிகளைச் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதும் வசதி கிடைத்தால் நாடு கடத்துவதும் வரலற்றில் ஒன்றும் புதிதல்ல. கனடா விதிவிலக்கல்ல. குடியேறிகளின் நாடான கனடா தன்னை வெள்ளை நிறத்தோர் நாடாக வைத்திருப்பதில் தீவிர அக்கறை காட்டுகிறது.

எனினும் ஹொங் கொங் தீவுகள் சீனாவுக்குக் கொடுக்கப்பட்ட போது கனடாவுக்கு வந்த சீனர்களை கனடா அரசு வரவேற்று வான் கூவரில் குடியேற்றியிருக்கிறது. ஆதனால் வான்கூவரை வான் கொங் என்று அழைப்பது வழமையாகி விட்டது. இப்படி வந்த சீனர்களிடம் பணம் இருந்தது, தொழில் திறமை இருந்தது. நிதி ஆளுகை இருந்தது. வரவேற்பு கிடைத்தது.

இது ஈழத் தமிழர்களின் அலைச்சல் காலம். படகு மனிதர்கள், கப்பல் மனிதர்கள், கள்ளத் தோணிகள் இப்படிப் பலரகமான கடற் பயணிகள். அதில் ஈழத் தமிழர்களும் ஒரு பங்கினர். நாடிழந்து வாழ்விழந்து, உடமை இழந்து, நாடு நாடாக அலைகிறார்கள்.

வாழ்வதற்கான பாதுகாப்பான சூழல் ஒன்றைத் தேடி தமிழர்கள் இலங்கையை விட்டுத் தொடர்ந்து வெளியேறிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடைய பாதுகாப்பான வெளியேற்றத்துக்கும் புகலிடக் கோரிக்கைக்கும் சர்வதேச சமூகம் பாராமுகம் காட்டுகிறது.

யூதர்களைத் துரத்திய பிரித்தானியா போன்ற நாடுகள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. கனடா தமிழர்களுக்கு வாழ்வளிக்கும் உண்மையை மறுப்பதற்கில்லை. கனடாப் பொது வாழ்வில் ஈழத் தமிழர்கள் சிறந்த பங்களிப்புச் செய்கிறார்கள். கடின உழைப்பாழிகளாகக் கனடா அரசுக்கு வரிப்பணம் செலுத்துகிறார்கள்.

கிளெமென்ற் அற்லீ அரசு யூதப் படகு மனிதர்களிடம் தகுந்த உள்நுளைவு ஆவணம் இருக்கவில்லை. என்று காரணம் காட்டித் துரத்தியது போல் கனடா அரசும் அண்மையில் கப்பல் மூலம் வந்த ஈழத்தமிழர்களையும் விரட்டப் பார்க்கிறது.

கனடா சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்ட நாடு. நீதிபரிபாலனம் திருப்தியாக இருக்கிறது. கப்பலில் வந்த ஈழத் தமிழர்கள் சிலருக்குப் பயங்கரவாத முத்திரை குத்தி நீதி மன்றத்தின் முன் நிலைப்படுத்த கனடா அரசு எத்தனிக்கிறது. கனடாவின் சட்டத்துறையில் (Jurisprudence) இது புதிய அத்தியாயத்தைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

சர்வதேச சட்டத்திலும் (International law) கனடாவின் கப்பல் பயணிகளுக்கு எதிராக உத்தேசித்திருக்கும் நீதி மன்ற வழக்குகள். கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று துறைசார் நிபுணர்கள் கணிப்பிட்டுள்ளனர். ஈழத்தமிழர் விவகாரம் சர்வதேசமயமாகியதை இதுவும் காட்டுகிறது.

1975ல் வியற்நாம் போரில் வரலாறு காணாத தோல்வியை அமெரிக்கப் படைகள் சந்தித்தபோது படகு மனிதர்கள் (Boat people) என்ற சொற்கள் பிரபலமாகின. தமக்கு வேண்டியவர்கள் சிலரை அழைத்துக் கொண்டு அமெரிக்கர்கள் தப்பியோடி விட்டார்கள்.

அமெரிக்கர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள், அமெரிக்க நிர்வாகத்தில் பணியாற்றியவர்கள், அமெர்pக்கத் தொடர்பால் இலாபம் பெற்றவர்கள் இப்படியான வியட்னாமியர்கள் நாட்டைவிட்டு படகுகள் மூலம் தப்பிச் செல்லும் நிலவரம் தோன்றியது .கொமியூனிஸ்ற் படைகளிடம் அகப்பட்டால் மரணம் நிட்சயம் என்று அவர்களுக்குத் தெரியும்.

வியட்னாம் படகு மனிதர்களின் கடற் பயணம் சுகமானதல்ல பலர் கடலில் மூழ்கினர். குழந்தைகள் நோயால் உயிரிழந்தனர். எல்லா வற்றிற்கும் மேலாகத் தென் சீனக் கடலில் நிலை கொண்டிருந்த கடற் கொள்ளையர்களின் தாக்குதலில் உயிர் இழந்தோர் ஏராளம். பயணிகள் வைத்திருந்த அற்ப சொற்ப உணவு, குடிநீர், எரிபொருள் என்பவற்றை கொள்ளையர்கள் பறிமுதல் செய்தனர்.

ஏறத்தாழ 250,000 படகு மனிதர்கள் மலேசிய தீபகற்பத்தின் கிழககுக் கரையை வந்து சேர்ந்தனர். மலேசியாவின் செம்பிறைச் சங்கம் அகதிகளுக்கான உதவிகளைச் செய்தது. புலங் பிடொங் (pulau bidong) என்ற கடற்கரைப் பிராந்தியத்தில் அகதி முகாங்கள் நிறுவப்பட்டன.

ஆறு மாதம் சென்றபின் ஐநாவின் அகதிகளுக்கான ஆணையம் படகு மனிதர்களுக்கு அகதிப் பதிவு அட்டைகளை வழங்கியது. மலேசிய அரசும் ஐநாவும் இணைந்து அகதிகளின் இருப்பிட வசதி, உணவு, சுகாதார சேவை என்பவற்றை வழங்கின.

யுஎன்எச்சி ஆனையத்தின் உழைப்பின் காரணமாக வியற்நாம் படகு மனிதர்கள் அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, பிரான்சு, பிரித்தானியா, நெதர்லாந்து, நோர்வே, யேர்மனி, சுவீடன், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் குடியமர்தப் பட்டுள்ளனர். இந்த நாடுகள் அவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளன.

கனடா எதற்காக ஈழத்தமிழர்களுக்கு ஓரவஞ்சகம் செய்கிறதோ என்று கேட்கத் தோன்றுகிறது. மிகவும் கண்டிக்கத்தக்க கேவலமான செயல்முறையை கனடா அரசு நடைமுறைப் படுத்தகிறது. அகதி அந்தஸ்துக் கோரும் ஈழத்தமிழர்கள் பற்றிய விபரங்களை சிறி லங்கா அரசிடம் கனடா அரசுபெற்று வருகின்றது.

வியற்நாம் அகதிகள் கனடாவிற்கு வந்த போது கொமியூனிஸ்;ற் வியற்நாம் அரசிடம் அகதிகளின் பூர்வீகம், தொடர்புகள், கடந்த கால நடவடிக்கைகள் பற்றிக் கனடா அரசு விசாரணை செய்ததா? இல்லை எந்த அரசுக்குப் பயந்து ஈழத்தமிழர்கள் நாட்டைவிட்டு தப்பி யோடுகிறார்களோ அதே அரசிடம் அவர்களைப் பற்றி விசாரிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

கனடா தன்னைத் தரம் தாழ்த்திக் கொள்வதாகவே எமக்குப் படுகிறது. கனடாவின் காவல்துறை, உள்வரவுத் திணைக்களம், புலனாய்வுத் துறையினர் மறைந்த சோவியத் ஒன்றியத்தின் கேஜீபி, கிழக்கு ஜேர்மனியின் ஸ்ராசி போன்ற அமைப்புக்களிலும் கூடிய கொடூரத்தை ஈழத்தமிழர்களுக்கு காட்டுகிறார்கள்.

கப்பல் மூலம் வந்த ஈழத்தமிழர்கள் கனடாவுக்கான தமது விசுவாசத்தையும் பற்றுறிதியையும் எழுத்து மூலம் தெரிவித்துள்ளனர். இதை ஏற்க எதற்காகக் கனடா அரசு மறுக்கிறது. மேலும் ஊரடங்கு உத்தரவு (Curfew) போன்ற தடுப்புச் சட்டங்களையும் அகதிகள் மீது கனடா அரசு சுமத்தியுள்ளது.

ஏதற்காக இந்தப் பாரதூரமான உத்தரவு வழங்கப்பட்டது என்று கனடா அரசு பகீரங்கமாக விளக்கம் தரவேண்டிய பொறுப்பில் இருக்கிறது. கனடாவின் அரசியல் சாசனம் இதற்கு அனுமதி அளிக்கிறதா? ஏன்பதையும் அறிய விரும்புகின்றோம். அகதிகள் மீது போடப்பட்ட தடை உத்தரவுகள் சிலவற்றைப் பார்ப்போம். அகதிகள் மீது செவேயர்லன்ஸ்(surveillance) எனப்படும் நவீன கணினி மயப்படுத்தப்பட்ட கண்காணிப்பு முறை பயன்படுத்தப் படுகிறது.

கப்பலில் சென்றோர்களில் 157 ஆண்களும் 49 பெண்களும் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மிகுதிப் பேர் விடுதலை செய்யப் படவில்லை. ஊறவினர்கள் வீடுகளுக்குச் சென்ற அதிகாரிகள் கடும விசாரனைகளை முன் கூட்டியே நடத்தியுள்ளனர்.

உறவினர்கள் வீடுகளில் தங்க அனுமதிக்கப் பட்டோர் மாலை 6 மணிக்குப் பிறகு வெளியே செல்ல முடியாது. அத்தொடு வேலைக்கச் செல்வதற்குப் பகல் நேரத்தில் மட்டும் அனுமதியில்லை. அந்த வீட்டுத் தொலைபேசிகள், மின் அஞ்சல்கள் போன்றவை இறுக்கமாக இரவு பகலாகக் கண்காணிக்கப் படுகின்றன.

இப்படியாக வெளியில் வாழ அனுமதிக்கப்பட்ட அகதிகள் ஒவ்வொரு மாதமும் அதிகாரிகள் முன்னிலையில் ஒப்பமிட வேண்டும். கண்காணிப்பு நடவடிக்கை தொடர்கிறது. அகதிகள் உறவினர்களுடன் வாழும் வீடு சீருடை தரியாத புலனாய்வாளர்களால் மேற்பார்வை செய்யப்படுகிறது.

விசாரணைகள் பற்றிய விபரங்களை வெளியிடக் கூடாது என்ற பேச்சுச் சுதந்திரத் தடையும் இவர்கள் மீது விதிக்கப் பட்டுள்ளது. அத்தோடு ஊடகவியலளர் சந்திப்பு, நேர்காணல் வழங்குதல், பொது இட உரையாடல்கள் என்பனவற்றை மேற்கொள்ளக் கூடாது என்ற கடும் தடை உத்தரவு உறவினர் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப் பட்டோருக்குப் போடப்பட்டுள்ளது.

அகதிகளின் மின்னஞ்சல்கள் உடைக்கப் பட்டு கடுமையான விசாரணைக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுத் தபால்கள் உடைத்து வாசிக்கப் படுகின்றன. கடும் கொலைக் குற்றவாளிகள் போல் அகதிகள் நடத்தப் படுவதற்கு கனடாச் சட்டத்தின் எந்தப் பிரிவு அனுமதிக்கிறது என்று விளங்க முடியவில்லை. அகதிகளினால் கனடாவின் பாதுகாப்பிற்கும் நாட்டின் உறுதிப்பாட்டிற்கும் எந்த விதத்தில் அல்லது வடிவத்தில் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரியவில்லை.

இத்தனை கொடூரங்களுக்கும் அநாகரிகமான செயற்பாடுகளுக்கும் கனடாதான் இருப்பிடம் என்று அறியும் போது கனடா பற்றி உயர்வான அபிப்பிராயம் உள்ளோருக்கு வேதனையாக இருக்கிறது.

Eelam Press <info@eelampress.com>

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.