Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையானின் டென்மார்க் பயணம்

Featured Replies

பல இரத்தம் சிந்தலுடன் தொடர்புடையவர் பிள்ளையான் என்கிறார் டேனிஸ் ஆய்வாளர்…

கடந்த டிசம்பர் 28ம் திகதி சிறீலங்காவில் இருந்து கிழக்கு மாகாண முதலமைச்சரான சிவனேசதுரை சந்திரகாந்தன். முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இவர் பிள்ளையான் என்று அழைக்கப்பட்டுள்ளார். மேற்கண்ட பிள்ளையான் டென்மார்க் வந்து சென்ற செய்தி டேனிஸ் ஊடகமான ரீ.வி மிற் வெஸ்ரில் வெளியாகியுள்ளது.

இது குறித்து தமிழர்களின் இரு பிரிவினரிடையே நடைபெற்ற விவாதம் போல இச்செய்தி வெளியாகியுள்ளது.

பிள்ளையான் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ உதவியை பெறவே பிள்ளையான் இங்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அதேவேளை இவரை போர்க் குற்றங்கள் தொடர்பாக கைது செய்ய வேண்டுமென டென்மார்க் தமிழர் பேரவை முயற்சி செய்துள்ளது. ஆனால் ஒல்லாந்து சர்வதேச போர்க் குற்ற விசாரணைகளில் சிறு தலைவர்களின் பெயர்கள் பொறிக்கப்படாத காரணத்தால் உடன் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்துள்ளது என்கிறார் மேனிஸ் சட்டத்தரணி, ஆனால் அவர் மறுபடியும் வந்தால் பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரலாம் என்றும் தெரிவிக்கிறார்.

அதேவேளை பிள்ளையானின் கரங்கள் இரத்தக்கறை படிந்தன என்பதை மறுக்க முடியாது என்று குறிப்பிடுகிறார் டேனிஸ் ஆய்வாளர் ஒருவர். இலங்கைக்கு மருத்துவ உதவிகள் வழங்குவது நல்ல விடயம் ஆனால் போர்க் குற்றம் புரிந்த ஒருவர் மூலமாக அதை அனுப்ப முடியாது என்கிறார் டேனிஸ் தமிழர் பேரவையைச் சேர்ந்த தீபன் தம்பிராஜா. அதேவேளை நமக்கு யார் என்பது பிரச்சனையில்லை உதவிகள் போக வேண்டும் என்கிறார் பிள்ளையானை வரவேற்ற மதி குமாரதுரை.

இது தொடர்பாக டென்மார்க் தொலைக்காட்சியில் வந்த செய்தியைக் காண கீழேயுள்ள முகவரியை அழுத்துக.

http://www.tvmidtvest.dk/nettv/?id=3664

(டெனிஸ் மொழியில்)

===============================

http://www.alaikal.com/news/?p=55742#more-55742

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் மீண்டும் டென்மார்க் வந்தால் கைதாவது உறுதி: டெனிஸ் ஆய்வாளர்

* Saturday, January 29, 2011, 3:55

சிறீலங்கா அரசின் ஆதரவுடன் இயங்கும் பிள்ளையான் துணை இராணுவக்குழுவின் தலைவரும், கிழக்கு மாகாண பொம்மை அரசின் முதல்வருமான பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன் மீண்டும் டென்மார்க் வந்தால் கைது செய்யப்படுவதுஉறுதி என டென்மார்க் தொலைக்காட்சியில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் டெனிஸ் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28 ஆம் நாள் பிள்ளையான் டென்மார்க் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

சிறீலங்காவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ உதவிகளை பெற வந்ததாக தெரிவித்துள்ள பிள்ளையானை மதி குமாரதுரை என்பவரே அங்கு அழைத்துள்ளார்.

ஆனால் கிழக்கு மாகாணத்தில் பெருமளவான படுகொலைகளை முன்னின்று நடத்திய பிள்ளையானை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளில் டென்மார்க் தமிழர் பேரவை இறங்கியிருந்தது.

எனினும் ஒல்லாந்து சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் போர்க்குற்ற விசாரணைகளில் சிறு தலைவர்களின் பெயர்கள் இடம்பெறாத காரணத்தால் பிள்ளையானின் கைது அன்று வெற்றியளிக்கவில்லை என தெரிவித்துள்ளார். டெனிஸ் சட்டவாளர் ஒருவர்.

எனினும் வழக்கு பதிவாகி உள்ளதால் மறுபடியும் பிள்ளையான் டென்மார்க் வந்தால் கைது செய்யப்படுவது உறுதி என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிள்ளையானின் கரங்கள் இரத்தம் தோய்ந்தவை என்பதை மறுக்கமுடியாது என டெனிஸ் ஆய்வாளர் ஒருவரும் ஓப்புக்கொண்டுள்ளார்.

சிறீலங்காவுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படுவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அதனை போர்க்குற்றவாளி ஒருவர் மூலம் அனுப்புவதை நாம் எதிர்க்கிறோம் என டெனிஸ் தமிழர் பேரவையை சேர்ந்த தீபன் தம்பிராஜா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதரகம் அனுப்பிய முக்கிய ஆவணங்கள் என விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களில் துணைஇராணுவக்குழுவினர் மேற்கொண்ட படுகொலைகள் தெளிவாக கூறப்பட்டுள்ளதால், அது சட்டநடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, புலம்பெயர் தமிழ் மக்கள் தமது நாடுகளில் உள்ள சட்டங்களை அறிந்து சிறீலங்கா அரச தரப்பு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் வழக்கு பதிவுகளை முன்;னரே செய்துகொள்ள வேண்டும்.

அதுவே பிரித்தானியாவில்; மேற்கொள்ளப்பட்ட மகிந்தாவுக்கு எதிரான நடவடிக்கையில் நாம் கற்றுக்கொண்ட பாடம் என கந்த டிசம்பர் மாதம் ஈழம் ஈ நியூஸ் இற்கு வழங்கிய நேர்காணலில் உலகத்தமிழர் பேரவையின் தலைவர் கலாநிதி இம்மானுவேல் அடிகளார் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

செய்தித் தொகுப்பு: www.eelamenews.com

tamilthai.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.