Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜிலிங்கம் நியமனம் கூட்டமைப்பின் முடிவல்ல; மாவையின் முடிவே - பிரேமசந்திரன் அறிக்கை

Featured Replies

ஞாயிற்றுகிழமை, ஜனவரி 30, 2011

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தமிழரசுக் கட்சியின் தனித்த முடிவே தவிர அது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி எடுத்த முடிவு அல்ல என்று கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவருமான சுரேஸ்பிரேமச்சந்திரனும், ரெலோ பொதுச்செயலாளர் அ.செல்வம் அடைக்கலநாதனும் கையெழுத்திட்டு ஓர் அறிக்கை விடுத்துள்ளனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தல் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் பொருளாளர் குலநாயகத்திற்கும் சிவாஜிலிங்கத்திற்கும் இடையில் ஏற்பட்ட கூட்டும் ஒப்பந்தமும் அவர்களுக்கிடையில் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட கூட்டாகவே தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவைசேனாதிராசாவால் கூறப்படுகின்றது. சிவாஜிலிங்கத்தை கூட்டமைப்பில்இணைப்பது தொடர்பாக உத்தியயோகபூர்வமாக எந்தப் பேச்சுக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இடம்பெறவில்லை.

ஏற்கனவே கூட்டமைப்பில் ஓரிரு அமைப்புக்கள் உள்வாங்கப்பட்டதற்கு பெரும்பான்மையான த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். இருந்த பொழுதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கேட்டதற்கிணங்க அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. சிவாஜிலிங்கத்தின் நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டு பின்னர் அதனைப் பற்றி முடிவெடுக்கப்படுவதாய் இருந்தது.ஆனால் அந்த முடிவுக்கு முரணாக, தனிப்பட்ட இரண்டு நபர்களுக்கிடையிலான ஒப்பந்தம் என்ற பெயரில் அவர் தமிழரசுக் கட்சியில் உள்வாங்கப்பட்டு தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது கூட்டமைப்பு எடுத்த முடிவுகளுக்கு எதிராக மாவை சேனாதிராசா தமிழரசுக்கட்சியின் செயலாளர் என்ற வகையில் எடுத்த தனிப்பட்ட முடிவாகும்.சிவாஜிலிங்கம் கிளிநொச்சியிலும், வன்னியின் ஏனைய மாவட்டங்களிலும் டாக்டர் விக்கிரமபாகு கருணாரத்னவின் தலைமையிலான கட்சியில் வேட்பு மனுக்களை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளார். அது மாத்திரம் அல்லாமல் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஒரு பாடம் படிப்பிக்க இருப்பதாக இரு தினங்களுக்கு முன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வல்வெட்டித்துறையின் நகர சபைக்கு குலநாயகம் இரண்டு வருடங்களும் சிவாஜிலிங்கம் இரண்டு வருடங்களும் தலைவராக இருப்பது என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையில் சிவாஜிலிங்கம் தமிழரசுக் கட்சியில் இணைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

மேலும் சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை நகரசபைக்குத்தானே முதன்மை வேட்பாளர் என ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். ஆனால் கூட்டமைப்பின் எந்த ஒரு பட்டியலிலும் யாரும் முதன்மை வேட்பாளர்கள் என அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் சிவாஜிலிங்கம் தன்னைத்தானே முதன்மை வேட்பாளராக அறிவித்தது தவறானது என்பதையும் யார் விருப்பு வாக்குகள் அதிகம் பெற்றுக் கொள்கின்றார்களோ அவர்களே பிரதேச, நகரசபைகளின் முதல்வர்களாகத் தெரிவு செய்யப்படுவார்கள் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். கூட்டமைப்பு இன்னும் தேர்தல் செயலகத்தில் பதிவு செய்யப்படாததால் தமிழரசுக் கட்சிச் சின்னத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட வேண்டியிருக்கின்றது. இதனைத் தமக்கு சாதகமாக பயன்படுத்தி கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடன் கலந்து பேசாமல் முடிவுகள் எடுப்பது தமிழ் மக்களின் உரிமைக்கான காத்திரமான பங்களிப்பை செய்யவேண்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். இந்த அறிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதல்ல. மாறாக மக்களுக்கு உண்மைகளை தெரியப்படுத்த வேண்டும் என்பதுடன் தமிழ்த் தேசியகூட்டமைப்புள் ஏற்படக்கூடிய முரண்பாடுகளைக் களைந்து அதனை வலுவான ஒரு கட்சியாக மாற்றுவதற்கான ஒரு முயற்சியும் ஆகும். இதனைப் புரிந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கு தமிழ்மக்களை ஒத்துழைக்குமாறு வேண்டுகிறோம் என்றுள்ளது.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.