Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிட்ஸ்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் துளிர் விடுவது ஒடுக்கப்படுகிறது

Featured Replies

சுவிட்ஸ்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் துளிர் விடுவது ஒடுக்கப்படுகிறது

(பகுதி 1)- டீ.பி.எஸ்.ஜெயராஜ்

தமிழீழ விடுதலைப் புலிகளை ஒடுக்கு முகமாக சுவிஸ் மத்திய காவல்துறையினர் கடந்த ஜனவரி 11ந் திகதி பத்து உயர் புலி செயற்பாட்டாளர்களைக் கைது செய்தமை மிகப் பெரிய முன்னேற்றத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

ஹெல்விற்றியா அல்லது சுவிஸ்ட்லாந்து 40-42,000 ஸ்ரீலங்காத் தமிழர்களின் வாழ்விடமாகும். ஆயினும் இத்தொகையானது, கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ், அல்லது அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள புலம் பெயர் தமிழர்களைக்காட்டிலும் குறைவாக இருந்த போதிலும்,சுவிஸில் உள்ள தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட முயற்சிக்கு வழங்கிய மிகப் பரந்த பங்களிப்பு மற்றைய மேற்கத்தைய நாடுகளில் வாழும் தமிழர்களின் பங்களிப்பின் விகிதத்தையும் விஞ்சி நிற்கிறது.

புலிகளின் கோட்டை

சுவிஸ் தமிழர்கள் சமீப காலங்களில் புலிகளின் செயற்பாடுகளுக்கு அதிக அளவிலான பணபலம் மனிதவளம் மற்றும் உடல் வலிமை என்பனவற்றை வழங்கியுள்ளார்கள். அந்தப் பங்களிப்பு சுவிஸ்ட்லாந்தினை ஐரோப்பாவில் புலிகளின் கோட்டையாக மாற்றியமைத்தது. சமீபத்தைய சுவிஸ் அதிகாரிகளின் இந்த நடவடிக்கை பற்றிய பின்னணியை அவதானிக்கும் போது சுவிஸ்ட்லாந்தில் புலிகளின் எதிhகாலமானது முரண் அலைகளின் முன்னெச்சரிக்கையாகவே தோன்றுகிறது. ஏராளமான தமிழர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சாட்சியமளிக்க முன்வந்திருப்பது சுவிஸ்ட்லாந்தில் இந்தப் புலிப் பப்படம் நொறுங்கிப் போகப்போவதாகத் தோன்றுகிறது.

கைது செய்யப் பட்டிருப்பவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ்ட்லாந்துத் தலைவர், விஜயரட்னம் சிவனேசன் அல்லது ரகு என்றழைக்கப்படும் ரகுபதி, அவருக்கு முன்பு பதவி வகித்த செல்லையா குலராஜசேகரம் அல்லது குலம் மற்றும் சுவிஸில் செல்வாக்கு மிக்க புலிகளின் நிதித்துறைத் தலைவர் செல்லையா ஜெயபாலன் அல்லது அப்துல்லா என்பவர்களும் அடங்குவர்.

சுவிஸ் அதிகாரிகள் புலிகளின் முன்னணிச் செயற்பாட்டாளர்களைக் குற்றவாளியாக்கும் தங்கள் முயற்சியில் வெற்றி பெறுவார்களாயின் அதன் முக்கியமான விளைவு சுவிஸ்ட்லாந்தில் புலிகளின் கட்டமைப்பைப் பலவீனப் படுத்துவதாகவும், அங்குள்ள தமிழர்களிடத்திலுள்ள புலிகளின் பிடியைத் தளர்த்துவதாகவும் இருக்கும்.

இப்படியான ஒரு வழக்கு வெற்றி பெறுவதற்கு புலிகளினால் பாதிக்கப்பட்ட சுவிஸ் தமிழர்களின் முழு ஒத்துழைப்பும் மிக முக்கிய தேவையாகும். இந்தத் தருணத்தில் பெரும்பாலான தமிழர்கள், புலிகளின் முன்னணிச் செயற்பாட்டாளர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வேண்டிய முழு ஒத்துழைப்பையும் வழங்குவார்கள் என்றே தென்படுகிறது. இது ஆரம்ப காலங்களில் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சாட்சியமளிக்கத் தயங்கிய நிலைக்கு முற்றிலும் முரணானது. இந்த ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க பார்வையானது உண்மையில் புலிகளுக்கு எதிராகச் சாட்சியமளிக்க விரும்புபவர்கள. எல்.ரீ.ரீ.ஈயினால் பாதிக்கப்படாத ஆனால் ஒருகாலத்தில் அந்த இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்களே. சுவிஸில் புலிகளின் ஆதரவு குமிழ்கள் வெடித்துச் சிதறியதின் முக்கிய காரணி எல்.ரீ.ரீ.ஈயின் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் தங்கள் சொந்த முகாமுக்கு எதிரான ஊதுகுழலை ஊத முன்வந்திருப்பதேயாகும்.

இந்த வழமைக்கு மாறான முன்னேற்றம் நிகழந்திருப்பது முக்கியமாக புலிகளின் செயற்பாட்டாளர்களுக்கு இடையேயுள்ள செயற்பாடுகளின் காரணமாகவே. இந்த பூரணமான பொறுப்பற்ற தன்மையும் காட்டிக் கொடுப்பும் நிகழ்ந்திருப்பது, இந்த நபர்கள் தங்கள் ஆதரவாளர்களின் பெயர்களில் வங்கிக் கடன்களைப் பெற்று அத்தொகைகளை அக்கிரமமாகக் கையாண்டதுடன் அக்கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான எந்த உதவி முயற்சிகளையும் செய்யாததே காரணமாகும்.

இது அவ்வாறான கடனகளைப் பெற்ற மக்களை பலமாகக் காயப்படுத்தியிருப்பதுடன் வெறி கொண்ட நிலைக்கு அவர்களைத் தள்ளி விட்டிருக்கிறது. அந்தக் கடன்களை வழங்கிய நிறுவனங்களையும் இது தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படியான ஒரு நிலையில் முந்தைய புலி ஆதரவாளர்கள் அதிகாரிகளிடம் முறையிட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டதுடன் சிரேட்ட எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்களைக் குற்றவாளியாக்கும் அவர்களின் கட்டளைகளுக்கும் உடன்பட வேண்டியதாயிற்று.

இந்த கருத்துள்ள முயற்சிகள் அதன் தர்க்க ரீதியான முடிவுகளை எட்டி முன்னணி புலி உறுப்பினர்களை வெற்றிகரமாகத் தண்டனைக்கு உட்படுத்தினால் அது மேற்கத்தைய நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்வதுடன் அந்நாடுகளில் வாழும் பாரியளவிலான புலி சார்பான புலம் பெயர் தமிழர் மூலகங்களுக்கிடையில் ஒரு பிரச்சார தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

நடைமுறைகள்

சமீபத்திய சுவிஸ்; கிளைத்தல்களின் ஒடுக்குமுறைகளையும் மற்றும் நடைமுறைகளைப் பற்றியும் விளங்கிக் கொள்ளவேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி சேகரிக்கும் பொறிமுறைகள் வெளிநாடுகளில் எப்படி இயங்கி வந்தன என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பொதுவாக இதில் ஐந்து விதமான முறைகள் உள்ளன.

முதலாவது முறை நிலையான கட்டளை என அறியப்படுவது. இந்த முறையானது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் தங்களின் வங்கிக் கணக்குகள் மூலமாக தங்களது நாட்டிலுள்ள எல்.ரீ.ரீ.ஈயின் முன்னணி நிறுவனங்களுக்கு நேரடியாக அனுப்பப்படுவது. ஒப்பீட்டளவில் இது சிறிய தொகையாக இருப்பினும் ஒழுங்கான வரவுக்கு உத்தரவாதமுள்ளது.

இதில் பலவந்தத்திற்கு இடமில்லை ஏனெனில் இந்தப் பங்களிப்பைச் செய்பவர்கள் நேர்மையான ஆதரவாளர்கள், அவர்கள் அதனை மிகவும் விருப்பத்துடனேயே செய்கிறார்கள். இந்த முறை மூலம் திரட்டப்படும் நிதியானது அந்த நாடுகளில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ கிளைகள் மற்றும் முன்னணிகளை நடத்துவதற்கு பயன்படும், அவை ஸ்ரீலங்காவுக்கு அனுப்பப்படவோ ஆயதக் கொள்வனவுக்கோ பயன்படுத்தப் படுவதில்லை.

இரண்டாவது வருடாந்த பொதுத் திரட்டுத் தொகை. இந்தச் சேகரிப்பானது வருடம் முழுவதுக்குமான அடிப்படையில் சேகரிக்கப்படுவது. இம்முறையில் தமிழர்கள் எல்லோரும் அவர்கள் ஆதரவாளர்களோ இல்லையோ இலக்கு வைக்கப் படுகிறார்கள். சில தவணைகளில் குறிப்பிட்டளவு தொகையான பணம் செலுத்தப் படுவதற்கான உறுதிமொழி அவர்களிடமிருந்து பெறப்படுகிறது.

மக்கள் இந்தப் பணத்தைச் செலுத்த வேண்டி பலவந்தம், மிரட்டல் கட்டாயம் என்பன பயன்படுத்தப் படுகிறது அல்லது செலுத்தத் தவறும் பட்சத்தில் வாக்களிக்கப் பட்ட தொகையானது அதிகரிக்கப் படுகிறது. தமிழர்களை அச்சுறுத்த இலகுவான வழியாக ஸ்ரீலங்காவில் வசிக்கும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு தீங்கு ஏற்படுத்தப் போவதாகப் பயமுறுத்தும் முறை பின்பற்றப் படுகிறது. விருப்பத்துடன் கூட பெரும்பாலான மக்கள் இதனைச் செலுத்தியுள்ளார்கள். ஆரம்பத்தில் புலிகளின் நிதி சேகரிப்பாளர்கள் தொண்டர் அடிப்படையில் பணி புரிந்து வந்தார்கள் ஆனால் பின்நாட்களில் இந்த நிதி சேகரிப்பாளர்களுக்கு அவர்கள் திரட்டும் தொகைக்கு ஏற்ப ஒரு தொகை கமிஷனாக வழங்கப் பட்டது. இந்த ஊக்குவிப்பு நிதி சேகரிப்பில் மிகப் பெரிய அதிகரிப்பினை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் ஆர்வக்கோளாறான நிதி சேகரிப்பாளர்கள் தங்களால் திரட்டப் படும் தொகைக்கான ஊக்குவிப்புத் தொகையின் விகிதத்தை அதிகரித்து சுயவருமானம் பெறுவதை அதிகரிக்கும் நோக்கில் வன்முறைகளிலும் அச்சுறுத்தல்களிலும் ஈடுபடத் தொடங்கினார்கள்.

பிரான்சில் பரிஸ_க்கு வெளியே எல்.ரீ.ரீ.ஈ நிதி சேகரிப்பாளர்களின் ஒரு பண்ணை வீடு உள்ளது, இங்கு தமிழர்கள் கடத்திக் கொண்டு செல்லப்பட்டு கப்பப் பணம் பெறப்படும்வரை அல்லது ஒரு பெரிய தொகைக்கான உறுதிமொழி பெறப்படும்வரை பணயக் கைதிகளாக வைக்கப் படுவார்கள். இந்த முறையில் திரட்டப்படும் நிதியானது மூன்று வழிகளில் செலவிடப் படுகிறது. ஒரு குறிப்பிடத்தக்க தொகையானது வன்னியில் உள்ள எல்.ரீ.ரீ.ஈயின் தலைமையகத்துக்கு இயக்க பராமரிப்பு மற்றும் செயற்பாடுகளுக்காக அனுப்பப்படும். மற்றொரு பகுதி ஆயுத மற்றும் தளவாட கொள்வனவுக்காக வெளிநாடுகளிலுள்ள ஆயுத கொள்வனவு முகவர்களுக்கு அனுப்பப்படும். மூன்றாவதும் மிகப் பெரியதுமான பகுதி வெளிநாடுகளில் வியாபார நிலைகளை அமைத்து முதலீட்டைப் பெருக்கப் பயன்படும்.

விசேட சேகரிப்பு

மூன்றாவது முறையான நிதி சேகரிப்பு விசேட சேகரிப்பு எனப்படும். உண்மையில் இது ஒரு வகை வரவு அல்லது கடன் ஒழுங்கு ஆகும் இது பிரத்தியேகமாக ஆயதச் சேகரிப்புக்கு உதவுவதற்காகப் பயன்படுத்தப் பட்டது. இந்தக் கருவின் முன்னோடி தசாப்தங்களுக்கு முன்னர் எல்.ரீ.ரீ.ஈயின் வெளிநாட்டு மற்றும் ஆயுத கொள்வனவுகளுக்கு பொறுப்பாகவிருந்த கேபி என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் ஆவார்.

அப்போது என்ன நடந்ததென்றால் ஆயுதக் கொள்வனவுகளை மேற்கொள்ள மிகப் பெருந்தொகையான பணம் குறுகிய கால அவகாசத்தில் தேவைப்பட்டது. கேபி அப்போது எல்.ரீ.ரீ.ஈயின் வெளிநாட்டு நிருவாகம் மற்றும் நிதி சேகரிப்பு ஆகியவற்றுக்கான சகல பொறுப்புகளையும் ஏற்றிருந்தார், அப்போதுதான் இந்த குறுகியகாலத்தில் நிதி திரட்டும் இந்த விசேட சேகரிப்பு உத்தி அவருக்குத் தோன்றியது.

விசேட சேகரிப்பு என்னவென்றால் எல்லா நாடுகளிலும் உள்ள எல்.ரீ.ரீ.ஈயின் நம்பிக்கையானதும் தீவிர பற்றும் கொண்ட ஆதரவாளர்களில் முக்கியமாக வங்கிகளில் நல்ல வரவு வைத்திருப்பவர்களினது கணக்கிலிருந்து அவர்கள் பெயர்களில் கடன் பெற்று அந்தப் பணத்தினை உள்நாட்டு எல்.ரீ.ரீ.ஈ முகவருக்கோ அல்லது முன்னணிக்கோ மாற்றுவது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்கள் வீடுகளையோ அல்லது வரவு நிலையினையோ கடன் பெறுவதற்காக ஈடாகப் பயன்படுத்தினார்கள்.

இந்த முறையின் மூலம் பெருந்தொகையான பணத்தினை விரைவாகச் சேகரித்து ஆயுதக் கொள்வனவிற்காகப் பயன்படுத்த முடிந்தது. இந்த வங்கிக் கடன்களுக்கான வட்டியை, உள்நாட்டு எல்.ரீ.ரீ.ஈ கிளைகள் நிலையான கட்டளைகள் மூலம் தாங்கள் சேகரிக்கும் நிதியிலிருந்து வழங்கி வந்தார்கள்.வட்டிகள் ஒழுங்காக வழங்கப்பட்டு வந்த அதேசமயம் முதலும் பொதுச்சேகரிப்பு மூலம் பெறப்படும் தொகையிலிருந்து பகுதி பகுதியாக வழங்கப்பட்டு வந்தது.

புலிகள் ஆதரவாளர்களின் சொந்த நிலையிலிருந்து விசேட சேகரிப்புக்காக கொள்வனவு செய்யப்பட்ட கடன்கள் யாவும் முறை தவறாது குறிக்கப்பட்ட காலத்தில் செலுத்தப்படுவதை கேபி உறுதி செய்து வந்தார். இதன்படி விசேட சேகரிப்பு உத்தி எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்களின் நம்பிக்கையைப் பெற்றதுடன் தொடர்ந்தும் பெருந்தொகையான பணம் திரட்டப் பட்டதுடன் அது தவறாமல் திருப்பிச் செலுத்தப்பட்டும் வந்தது. பதினெட்டு மாதங்களுக்கு ஒரு தடவை இந்த விசேட சேகரிப்புத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது.

இவைகளைத் தவிர வேறு இரண்டு வகையான விசால நிதி சேகரிப்பு முறைகளும் உள்ளது. ஒன்று நிகழ்ச்சிகளையும் காட்சிகளையும் மேடையேற்றி நாட்காட்டிகள், ஒளிநாடாக்கள், இறுவெட்டுக்கள், ஒலிப்பேழைகள், புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் போன்றவற்றை விற்பனை செய்வதின் மூலமாக நிதி திரட்டுவது. கரும்புலிகள் தினம் மாவீரர்கள் தினம் போன்றவற்றை மேடையேற்றுவதன் மூலமும் நிதி சேகரிக்கப்படும். ஒரு வழியில் அனுமதிக்காக பெருந்தொகை அறவிடப் படுவதுடன் நிகழ்ச்சி செலவினங்களுக்காக நிதி வழங்கும்படியும் மக்கள் கேட்கப் படுவார்கள்.

வர்த்தக நிலைகள்

இறுதியாக வர்த்தக நிலைகளில் செய்யப்படும் முதலீடுகள். எல்.ரீ.ரீ.ஈ முற்றான வர்த்தக நடவடிக்கைளில் இறங்குவதை நியாயப்படுத்தி கூறியிருப்பது, ஆயதப்போராட்டத்தை எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து பேணுவதற்கு நிலையாகக் கிடைக்கும் ஒரு வருமானத்தை உறுதிப் படுத்த வேண்டியிருக்கிறது.பங்களிப்புகளை மட்டும் நம்பிக்கொண்டு இருப்பது நீண்ட காலத் தேவைகளுக்கு உறுதியற்றது என நிரூபணமாகியுள்ளதால் புலிகள் வணிக நிறுவனங்களை விரிவான அடிப்படையில் அமைக்க வேண்டிய தேவை இருப்பதாக வாதிக்கப்பட்டது.

எல்.ரீ.ரீ.ஈயின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது சம்மதத்தை வெளிப்படுத்திய உடனேயே வெள்ளக் கதவுகள் விரியத் திறக்கப் பட்டன. எல்.ரீ.ரீ.ஈ கிளைகள் யாவும் முன்னணி முகவர்கள் ஊடாகவோ அல்லது இரவல் பெயர்களிலோ பல தரப்பட்ட வியாபாரங்களை ஆரம்பிப்பதில் தீவிரமாக ஈடுபட்டன. தமிழ் திரைப்படங்களைத் திரையிடுவது, உணவு விடுதிகள், வெளிக் கொண்டு செல்லும் உணவு சேவை,வீடு மனை விற்பனைகள். கடைகள், அச்சகங்கள், நிர்மாணம், பண மாற்ற சேவைகள், ஆதனத்துறை, கணணிச் சேவைகள் பார ஊர்திச்சேவை போன்றவை அவர்கள் ஈடுபட்டிருந்த வர்த்தகங்களில் சில.

சில வியாபாரங்கள் புதிதாகத் தொடங்கப்பட்டன அதேவேளை பலதருணங்களில் புலிகள் இயங்கிக் கொண்டிருப்பவைகளில் பணத்தை வாரியிறைத்து அவற்றைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்த வணிக நிறுவனங்கள் தமது இலாபத்தின் ஒரு பகுதியை எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு வழங்கினர் சில இடங்களில் வியாபாரத்தை நடத்துபவர்களுக்கு ஒழுங்கான சம்பளம் வழங்கப் பட்டது.

அங்கு பாரிய ஊழல்களும் முறைகேடுகளும் இடம் பெற்றன. பெரும்பாலான வியாபார முகவர்கள் முன்னணி எல்.ரீ.ரீ.ஈ முக்கியஸ்தர்களின் உறவினர்களாகவோ அல்லது நண்பர்களாகவோ இருந்ததே இதற்குக் காரணம். எல்.ரீ.ரீ.ஈ யினரால் நடத்தப்பட்ட பல வியாபார நிறுவனங்கள் திவாலாயின, அதே நேரம் மற்றவர்கள் தொடர்ந்து நட்டக் கணக்கு காண்பித்தனர். மே 2009 ல் முள்ளிவாய்க்காலில் இடம் பெற்ற திடீர் தோல்வியின் பின்னர் இந்த வியாபாரங்களை நடத்திக் கொண்டிருந்த பலர் அவற்றை தம் வசப்படுத்திக் கொண்டனர்.

வன்னியில் எல்.ரீ.ரீ.ஈயின் வீழ்ச்சிக்குப் பின்னர் சுவிட்ஸலாந்தில் எல்.ரீ.ரீ.ஈக்கு என்ன தவறு நேர்ந்துள்ளது என்பது மற்ற இடங்களிலும் என்ன நடந்து கொண.டிருக்கிறது என்பதற்கான ஒரு முன்னறிகுறியே. அதனால்தான் சுவிட்ஸலாந்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்; எதிர்காலத்தில் எல்.ரீ.ரீ.ஈக்கு கிடைக்கப் போகும் பின்விளைவுகளாகக் கருதப்பட வேண்டும்.

தொடரும்

தமிழில் எஸ்.குமார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.