Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குச்சவெளி கடற்கரையில் 500 ஏக்கர் நிலரப்பரப்பு 20 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குச்சவெளி கடற்கரையில் 500 ஏக்கர் நிலரப்பரப்பு 20 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு:-

05 பெப்ரவரி 2011

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச கடற்கரை பகுதிகளில் 500 ஏக்கர் நிலரப்பரப்பு 20 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரச் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 25 ஏக்கர் நிலப்பரப்பை கொள்வனவு செய்ய முடியும் எனவும் ஒரு ஏக்கர் நிலம் 20 மில்லியன் ரூபா விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

99 வருட குத்தகை அடிப்படையில் இந்த காணிகள் வழங்கப்படவுள்ளதாகவும் ஒரே தடவையில் பணத்தை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்த பின்னர், சுற்றுலா தொழிற்துறையை ஊக்குவிப்பதற்காக குச்சவெளி பிரதேச கடற்கரை பிரதேசத்தில் 48 ஏக்கர் நிலப்பரப்பு அந்த பிரதேசத்தை சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நிதியமைச்சின் புதிய திட்டம் காரணமாக அவர்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது அந்த காணிகளை வைத்துள்ளவர்கள் ஓரே தடைவையில் பணத்தை செலுத்தி அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. எனினும் நிதியமைச்சின் இந்த தீர்மானம் அநீதியானது எனவும் தாம் காணிகளில் அபிவிருத்தி பணிகளுக்காக பல லட்சம் ரூபாவை செலவிட்டுள்ளதாகவும் 25 ஏக்கர் காணிகளை ஓரே தடவையில் பணம் செலுத்தி வாங்கும் பொருளாதார வசதிகள் தம்மிடம் இல்லை எனவும் ஏற்கனவே காணிகளை பெற்றுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

gtn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.