Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதவாச்சியில் மரணப் பொறியில் சிக்கிய யாழ்ப்பாண பயணி தனது அனுபவத்தை கூறுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதவாச்சியில் மரணப் பொறியில் சிக்கிய யாழ்ப்பாண பயணி தனது அனுபவத்தை கூறுகிறார்

2011-02-05 05:13:35

வியாழக்கிழமை இரவு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த ஒருவர் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து அதிர்ச்சியில் கூறியவற்றை உங்களுக்காக தருகின்றோம்.

வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு கொழும்பிலிருந்து தனியார் பஸ்ஸில் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்தேன். அதிகாலை 3 மணிக்கு அநுராதபுரத்தைச் சென்றடைந்த போது தான் அதற்கப்பால் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்வதால் பயணத்தைத் தொடரமுடியாதெனக் கூறினர்.

யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணித்த வாகனங்கள் அநுராதபுரத்திலிருந்து இரண்டரை கிலோ மீற்றர் தூரத்துக்கு வரிசையில் நின்றன. வெள்ளம் 3 அடிக்கு மேலாகவும் சில இடங்களில் 6 அடி உயரத்துக்கும் பாய்ந்துகொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான வாகனங்களும் ஆயிரக்கணக்கான பயணிகளும் வெள்ளத்தில் அகப்பட்டு செய்வதறியாது திகைத்துப் போய்க் காணப்பட்டனர்.

மதவாச்சிப் பகுதியில் ஆறுகள் பெருக்கெடுத்ததாலும் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டதாலும் பேரிரைச்சலுடன் வெள்ளம் பாய்ந்து கொண்டிருந்தது. எங்கும் ஒரே வெள்ளக்காடாகக் காட்சியளித்தது.

பொருட்களுடன் வந்த கொள்கலன் வாகனங்கள், லொறிகள் சில வெள்ளத்தால் குடைசாய்ந்து போய்க்கிடந்தன. வான், கார் போன்ற சிறிய வாகனங்களில் வந்தவர்கள் பெரும் ஆபத்தை எதிர்கொண்டனர். இந்த வாகனங்களின் ஜன்னல்களுக்கூடாக வெள்ளம் உட்புகுந்தது. இதனால் பலர் அலறியடித்துக் கொண்டு அந்த வாகனங்களை விட்டு இறங்கி அங்கு நிறுத்தப்பட்டிருந்த பெரிய வாகனங்களில் ஏறிக் கொண்டனர்.

பெரும் வாகன நெருக்கடியும் ஏற்பட்டிருந்தது. திரும்பிப் போக நினைத்தால் கூட முடியாதளவுக்கு வாகனங்கள் இறுகுப்பட்டு நின்றன. பெண்கள், சிறுவர்கள், கைக் குழந்தைகள், கர்ப்பணிகள் என பலர் மிக மோசமான அவலங்களுக்குட்பட்டனர். சிறிய வாகனங்களில் வந்தவர்கள் எல்லாம் வெள்ளத்திற்கு பயந்து பெரிய பஸ்களில் ஏறிக் கொண்டதால் பெரும் இடநெருக்கடி ஏற்பட்டது.

சில துணிச்சல் மிக்க சாரதிகள் உயிரைப் பணயம் வைத்து பஸ்களை மிகவும் மெது மெதுவாக நகர்த்தினர். வீதி எது என்று தெரியாத நிலையில் ஒரு ஊகத்தின் அடிப்படையிலேயே பஸ்ஸை செலுத்தினர். வெள்ளம் வீதிகளை அடித்துச் சென்றதால் சில இடங்களில் பஸ்கள் குடைசாயும் நிலையும் ஏற்பட்டது. இதன் போது பயணிகள் அலறுவதும் இறைவனை பிரார்த்திப்பதுமாக இருந்தனர்.

மதவாச்சி வீதி ஒரு மரணப் பொறியாகவே காணப்பட்டது. வெள்ளம் பெருக்கெடுத்தோடும் அவ்விடத்தில் பொதுமக்கள் உதவிக்காக 2,3 கடற்படையினர் மட்டுமே நின்றனர். கனரக, வாகனங்கள், பஸ்கள் மட்டுமே பயணிக்க அவர்கள் அனுமதி வழங்கினர். சிறிய ரக வாகனங்கள் எதற்கும் அனுமதி வழங்கவில்லை. பல சிறிய வாகனங்கள் வெள்ளத்தில் சிக்குண்ட நிலையில் வீதிகளில் நின்றன.

இதேபோல் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த வாகனங்களில் 3 பெரிய பஸ்கள் மட்டுமே தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டதுடன் ஏனைய சகல வாகங்களும் திருப்பி அனுப்பப்பட்டன. பெரும் போராட்டத்துக்கு மத்தியில் காலை 9 மணிக்கு ரம்பாலையை வந்தடைந்தோம். எமது பயணத்துக்கு மதவாச்சி ஒரு மரணப் பொறியாகவே இருந்தது. அவ்வாறு ஆபத்தான இடத்தில் எந்தவிதப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்காதது தான் நிலைமையை இன்னும் மோசமாக்கியது.

உயிரைப் பணயம் வைத்துத்தான் நாம் மதவாச்சியைக் கடந்து வவுனியாவை அடைந்தோம். வழக்கமாக நாம் இங்கே இரவு 9 மணிக்கு கொழும்பில் பஸ்ஸில் ஏறினால் காலை 7 மணிக்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்து விடுவோம். ஆனால் வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்ட நான் யாழ்ப்பாணத்தைச் சென்றடையும் போது வெள்ளிக்கிழமை மாலை 4 மணியாகிவிட்டது.

வன்னிப் பாதையில் எமக்கு வெள்ளத்தால் பெரியளவில் இடையூறுகள் ஏற்படவில்லை. ஆனால் மதவாச்சியை நினைக்கும் போதுதான் உடம்பெல்லாம் நடுங்குகிறது. அந்தளவிற்கு பயணிகள் பதறிவிட்டனர். வெள்ளப்பெருக்கினால் வீதிகள் அள்ளுண்டு போய் விட்டதால் அவ்வீதியூடாக போக்குவரத்து சீரடைய சில நாட்கள் எடுக்கும் என்று நினைக்கிறேன் என்றார்.

newjaffna

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.