Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் பாதுகாப்பு நிலைமைகள் சுமூகமடைந்துள்ளன – சுவிட்சர்லாந்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பாதுகாப்பு நிலைமைகள் சுமூகமடைந்துள்ளன – சுவிட்சர்லாந்து :

06 பெப்ரவரி 2011

இலங்கையில் பாதுகாப்பு நிலைமைகள் சுமூகமடைந்துள்ளதாக சுவிட்சர்லாந்தின் மத்திய குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

யுத்தம் நடைபெற்று வந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களிலும் பாதுகாப்பு நிலைமைகள் சுமூகமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலைமையினால் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரும் இலங்கை தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 4500 புகலிடக் கோரிக்கையாளர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

வன்னிப் பிரதேசத்தைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்களுக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

gtn

அவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்பது கூட அடக்கு முறைதான்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-06 09:02:08| யாழ்ப்பாணம்]

‘சுதந்திரம்’என்பதற்கான வரைவிலக்கணம் என்ன? என்று யாரேனும் கேட்டால் அதற்கு சரியான பதிலை எவராலும் தரமுடியாது. ஏன் எனில் ஒருவருக்குச் சுதந்திரம் இன்னொருவருக்கு அடிமைத்தனமாக இருக்கமுடியும். உதாரணமாக இலங்கை நாட்டை எடுத்துக்கொள்வோம்.

பெரும்பான்மை இனமான சிங்கள மக்கள் இலங் கையில் சுதந்திரம் உண்டு என கூறுவர். அதேநேரம் சிறுபான்மைத் தமிழர்களைக் கேட்டால் சுதந்திரமா? அது எந்தக் கடையில் விற்பனை ஆகிறது. இப்படி வினா எழுப்புவார். அந்தளவிற்கு அவர்கள் தமக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லையயன்று கூறுவர். எனவே ஒரு பகுதிக்குச் சுதந்திரம் இருக்கும் போது இன்னொரு பகுதிக்கு சுதந்திரம் இல்லாமல் இருக்கும் நிலைமை உண்டு. இந் நிலைமைதான் இலங்கையில் காணப்படுகிறது. ஆட்சியில் இருப்பவர்கள் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எந்தக் குறையும் கிடையாது. அவர்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர் எனக் கூறுவர்.

அதேநேரம் நாங்கள் அடிமைப்பட்ட இனம், எங்களுக்கு எந்த சுதந்திரமும் கிடையாது என்று தமிழ்மக்கள் கூறுகின்றனர். அதற்காக அவர் கள் பல சான்றாதாரங்களை முன்வைக்கவும் தயாராக இருக்கின்றனர்.இலங்கை சுதந்திரமடைந்து அறுபத்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த அறுபத்து மூன்று ஆண்டுகளில் தமிழர் ஒருவர் இந்தநாட்டின் பிரத மராக இருந்துள்ளாரா? இந்த நாட்டின் பிரதமராகவோ, ஜனாதிபதி யாகவோ இருக்கக் கூடிய சந்தர்ப்பத்தை தமிழ் மக்களுக்கு இந் நாடு வழங்கவில்லையாயின், எப்படி சுதந்திரம் உண்டெனக் கூறுவது?

இந்த நியாயத்துவத்தின் அடிப்படையில் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். அதாவது இலங்கையில் சிங் களவரோ, தமிழரோ, முஸ்லிமோ ஜனாதிபதி யாக இருக்க முடியும். அதற்கு எவரும் எதிர்ப்பில் லை என்ற நிலைமை உருவாக வேண்டும். அப் போது தான் சுதந்திரம் என்ற உரிமைத்துவத்தை நாட்டின் சகல பிரஜைகளும் உய்த்துணர முடி யும்.

மாறாக ஒருவரின் சுதந்திரம் இன்னொரு வருக்கு மறுக்கப்படுதல் மற்றும் ஒருவரின் சுதந் திரம் இன்னொருவரின் சுதந்திரத்திற்கு ஊறு விளைவித்தல் என்பன சுதந்திரமாகாது. அது சுதந்திரத்திற்கு அனுமதி வழங்கப் போவதுமில்லை. ஆக, ஒருவர் சுதந்திரமாக இருக்கிறார் என்று இன்னொருவர் கூறுவதுகூட சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலே. சுருங்கக் கூறின் நான் சுதந்திரத்தை அனுபவிக்கிறேன் என்பதை நானே சொல்ல வேண்டும். அப்போதுதான் தேசியக் கொடியை ஏற்றி மகிழ்வேன்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=15860

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம்!

நாட்டில் சுதந்திரம் கொட்டிக் கிடக்குது.

கொலை,கொள்ளை,கற்பழிப்பென,

அது பரவிக் கிடக்குது.

இயற்கை கூட அதை ஏற்க மறுக்குது.

இப்ப

சூறிச் நாடு ஆமோதித்து.

எங்கே போய்,யாரிடம் முறையிட?

ஈழத் தமிழினத்திற்கு

ஈனத்தை தவிர வேறில்லை புகலிடம்.

யாழிவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.