Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென் சூடான் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன

Featured Replies

A total of 98.83 percent of voters from Sudan’s oil-producing south chose to secede from the north in last month’s referendum, according to a video display of the vote seen by Reuters at the venue of the announcement.

http://www.theglobeandmail.com/news/world/africa-mideast/south-sudan-votes-for-independence-vote-report/article1896874/

தென் சூடான் தனி நாடாக 99.57% ஆதரவு

ஆப்ரிக்க நாடான சூடானின் வடபகுதியில் முஸ்லிம்கள் அதிகமாகவும் தெற்கு பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகமாகவும் வசித்து வருகின்றனர். தெற்கு சூடானில் ஏறத்தாழ 20 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். தென்பகுதி மக்கள் அரசினால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் அந்தப்பகுதி மக்கள் தனி நாடு கேட்டு போராடி வந்தனர்.

இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். கடந்த 2005 ஆம் ஆண்டு தனி நாட்டுக்கான வாக்கெடுப்பு நடத்த சூடான் அரசு ஒத்துக் கொண்டது. இந்த நிலைமையில் தெற்கு சூடானுக்குச் சுதந்திரம் வழங்கலாமா என்பதற்கான வாக்கெடுப்பு கடந்த 9.1.2011 முதல் ஒரு வார காலம் நடைபெற்றது.

முதற் கட்ட வாக்குப்பதிவின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 99.57 சதவிகித மக்கள் தனி நாட்டுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எனவே தென் சூடான் வரும் ஜூலை 9 ஆம் திகதி முதல் தனி நாடாக அறிவிக்கப்படும். போராட்டத்தை வழிநடத்திய சூடான் மக்கள் விடுதலை இயக்கத் தலைவர் ஸால்வா கீர் புதிய அதிபராக அன்று பதவியேற்பார் என சூடானிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.inneram.com/2011013113269/southsudan-to-get-independence-9957-support

தென் சூடான் தனி நாடாகப் பிரிந்து செல்வதா? இல்லையா? என்பது தொடர்பாக இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பின் இறுதி முடிவுகள் இன்று (07.02.11) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தல் முடிவுகள் 99 சதவீத்திற்கும் அதிகமான தென் சூடான் மக்கள் தனி நாடாகப் பிரிந்து செல்ல ஆதரவளித்து வாக்களித்துள்ளார்கள் என்ற செய்தி ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட போதிலும் உத்தியோகபூர்வமாக இன்று முடிவுகள் வெளிவர இருக்கின்றன.

தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக முறையிடுவதற்கான இறுதி நாளான கடந்த சனிக்கிழமை வரை முறைப்பாடுகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் எதிர்பார்க்கப்பட்டதை விட ஒரு வாரம் முன்னதாகவே இறுதி முடிவுகளை அறிவிக்க தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தென் சூடான் தற்காலிக அரசும், மக்களும், அதனுடன் நெருங்கிய வட்டாரங்களும் இந்த செய்தியை எதிர்பார்த்து ஆனந்தக் களிப்பில் பரவசம் அடைந்தவர்களாக காணப்படுவதாக அச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து எண்ணை வள பங்கீடு, எல்லை, இராணுவ பாதுகாப்பு, பிரஜா உரிமை விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Juba நகரை தென் சூடானின் தலைநகராக நிர்மாணிப்பதில் சிக்கல்கள் தோன்றி உள்ளதாகவும், இதனால் வேறு ஒரு நகரை தலைநகராக தெரிவு செய்ய தென் சூடானிய அரசு முயற்சி செய்வதாகவும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Juba நகரில் உள்ள வசதிகள் ஒரு தலைநகருக்கான போக்குவரத்து மற்றும் தொடர்பாடல், இட வசதிகள் Juba வில் போதுமானதாக இல்லை என்பதே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.

இது ஒரு புறமிருக்க, 22 ஆயிரத்துக்கும் அதிகமான தென் சூடானியர்கள் வட சூடானில் அகதிகளாக தெரு ஓரத்தில் இருப்பதாகவும், அவர்களை தென் சூடானுக்கு அழைத்து வர எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படாததால் அவர்கள் மிகவும் துன்பப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவற்றுடன் தென் சூடானில் நிலை கொண்டுள்ள வட சூடானிய துருப்புக்களை வட சூடானுக்கு நகர்த்துவது தொடர்பாக இராணுவத்தினரிடையே Malakal நகரில் ஏறட்ட மோதல் Paloich, Melut ஆகிய இரு நகரங்களுக்கும் பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வட சூடானுடன் சேர்ந்து இயங்கிய முன்னாள் தென் சூடான் போராளி துணைக் குழுவினர் தமது ஆயுதங்களை கையளிக்க மறுத்து வருவதாலேயே இம் மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இம் மோதலில் கனரக ஆயுதங்கள் பாவிக்கப்படுவதாகவும், பல நூற்றுக்கனக்கானோர் காயம் அடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகத்தர் உட்பட பலர் பலியானதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={208FF3AE-5934-4FED-AB3B-4CD5266A94B1}

  • தொடங்கியவர்

சூடானின் அதிபரான போர்க்குற்றவாளி அல்பசீர் தேர்தல் முடிவுகளை ஏற்று தான் தென் சூடான் மக்களின் ஆணையை ஏற்பதாக கூறியுள்ளார்.

Bashir Promises to Accept South's Independence Vote

Sudanese President Omar al-Bashir says he accepts southern Sudan's vote to become independent, as officials get set to announce the final results from last month's referendum.

http://www.voanews.com/english/news/africa/Bashir-Promises-to-Accept-Souths-Independence-Vote-115482569.html

கொசோவோ – தென் சூடான் என்பன எமக்கு உணர்த்தும் உண்மைகள் என்ன?

விடுதலைக்காக போரடும் ஒரு இனத்தின் அடுத்த நகர்வு என்பது தமது புதிய நாட்டை கட்டியெழுப்புதல் என்பது தான். அதற்கான ஆயத்தப்பணிகளில் தென் சூடான் மக்கள் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டுக்கொண்டிருக்கினறனர்.

கிறிஸ்த்தவர்களை பெரும்பான்மையாக கொண்ட தென் சூடான் பகுதி முஸ்லீம்களை பெரும்பான்மையாக கொண்ட வட சூடானில் இருந்து பிரிந்து செல்வது குறித்த வாக்கெடுப்புக்கள் கடந்த 15 ஆம் நாள் நிறைவுபெற்றுள்ளன.

இந்த வாக்கெடுப்புக்களில் 40 இலட்சம் மக்கள் கலந்துகொண்டனர். இரு தசாப்தங்களாக நடைபெற்ற ஆயுதப்போர் 2005 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது ஏற்படுத்தப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் தற்போதைய வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.

தாயகத்தில் மட்டுமல்லாது, புலம்பெயர்ந்து வாழும் தென் சூடான் மக்களிடமும் வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன. தாயகத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் முடிவுகள் அடுத்த மாதமே வெளிவரும் என்றபோதும், ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற வாக்கெடுப்புக்களில் 97 விகித புலம்பெயர் மக்கள் தமது ஆதரவுகளை தெரிவித்துள்ளது மிகவும் போற்றத்தக்க விடயமாக கருதப்படுகின்றது.

தென் சூடானின் விடுதலைக்காக பேராடிய சூடான் மக்கள் விடுதலை அமைப்பு அதன் கொடியை தேசியக் கொடியாகவும், அவர்களின் அமைப்பால் உருவாக்கப்பட்ட எழுச்சிப்பாடல் ஒன்றை தேசிய கீதமாகவும் கொண்டுவரத்திட்டமிட்டுள்ளனர்.

எனினும் தென் சூடான் என்ற பெயரை பயன்படுத்துவதா அல்லது வேறு புதிய பெயர்களை தேடுவதாக என்பது தொடர்பில் விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.

எனினும் புதிய நாடு உருவாகும் போது அதனை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையும், பொதுச்சபையும் அங்கீகரிக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் ஐ.நாவின் உறுப்பு நாடாக முடியும். மேலும் ஏனைய உலக நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும்.

ஆனால் இந்த அங்கீகாரங்கள் கிடைக்காது எந்தவொரு நாடும் உருவாக முடியாது என்று நாம் கருதிவிடக்கூடாது. ஏனெனில் அண்மையில் உருவாகிய கொசோவோ இன்று வரை ஐ.நாவின் உறுப்புநாடாக சேரவில்லை. ஆனால் அதன் நாட்டுக்குரிய தகமையை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அங்கீகரித்துள்ளன.

எனவே வட சூடானுடன் சீனா கொண்டுள்ள நட்புறவு காரணமாக அங்கு கொசோவோவின் நிலை உருவாகலாம் என அவதானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அது எந்தவிதத்திலும் ஒரு நாடு உருவாகுவதை தடுக்காது. அதாவது ஐ.நாவின் அங்கீகாரம் என்பது ஒரு நாட்டை அமைப்பதற்குரிய முதன்மையான காரணியல்ல.

உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணயநிதியம் ஆகியவற்றில் உறுப்புரிமை பெற்று உதவிகளை பெறுவதற்கே ஐ.நாவின் அங்கீகாரம் ஏழை நாடுகள் தேவை. ஆனால் கொசோவோ ஐ.நாவின் அங்கீகாரம் இல்லாது, இந்த அமைப்புக்களில் அமெரிக்காவின் வலுவான பரிந்துரையுடன் இணைந்துள்ளது.

நாயணத்தை உருவாக்குதல், படைக்கட்டமைப்பை உருவாக்குதல், உட்கட்டுமானப் பணிகளை அபிவிருத்தி செய்தல், எல்லைகளை வகுத்துக்கொள்ளுதல், எண்ணை போன்ற இயற்கை வளங்களை பங்குபோடுதல் என தென் சூடானின் வளர்ச்சிக்கு அதிக உதவிகள் தேவை என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சதாம் கவுஸ் எனப்படும் வெளிவிவகார ஆலோசனை அமைப்பை சேர்ந்த றொஜர் மிட்லெற்றன் தெரிவித்துள்ளார்.

உலகில் தமக்கு எதிராக வலுவாகும் சக்திகளை முறியடிப்பதற்கு பல சிறிய நாடுகளை உருவாக்குவது என்ற மேற்குலகத்தின் கொள்கையின் தொடர்ச்சியாகவே தென் சூடானின் உதயமும் அமைந்துள்ளது. பல்கன் வளைகுடாவில் முடிவுக்கு வந்த நாடுகளின் உதயம் தற்போது ஆபிரிக்க பிராந்தியத்திற்கு நகர்ந்துள்ளது.

மேற்குலகத்தின் இந்த நகர்வுக்கு சீனாவுடன், சூடான் அரசு கொண்ட நெருக்கமும் காரணம். ஆபிரிக்க பிராந்தியத்திலும், குறிப்பாக சூடானிலும் ஏற்பட்ட சீனாவின் தலையீடுகள் சூடானின் பிரிவினைக்கு விரைவான காரணமாக அமைந்துள்ளது. மேற்குலகத்தின் தடைகளையும் மீறி வட சூடான் அரசுக்கு சீனா ஆயுதங்களை விநியோகித்திருந்தது.

வட சூடானை தனிமைப்படுத்த மேற்குலகம் முயன்றபோது சீனா அதன் முக்கிய வர்த்தக நண்பராக தன்னை மாற்றிக்கொண்டது. விடுதிகள், பயணமுகவர் நிலையங்கள், கடைகள் என அங்கு கட்டியமைத்த சீனா, சூடானியர்களின் தொழில்வாய்ப்புக்களையும் தனதாக்கிக் கொண்டது.

வட சூடான் அரசு மனித உரிமைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக ஐ.நா கொண்டுவர முற்பட்ட தீர்மானங்களையும் சீனா தனது வீட்டோ அதிகாரத்தினால் தடுத்து நிறுத்தியது.

சூடானின் எண்ணை வளங்களில் 64 சதவிகிதத்தை சீனாவே கொள்வனவு செய்து வருகின்றது. அதற்கு மாற்றீடாக பாடசாலைகள், வீதிகள், பாலங்கள், வைத்தியாசாலைகளை அது வட சூடான் அரசுடன் இணைந்து கட்டி வருகின்றது.

ஆனால் டாபர் பகுதியில் ஏற்பட்ட அழிவுகளை தொடர்ந்து சீனா – வட சூடான் உறவுகள் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்ததுடன் தற்போது தென் சூடானை உருவாக்கவேண்டிய நிலைக்கும் மேற்குலகம் தள்ளப்பட்டுள்ளது.

இந்த சமயத்தில் சூடான் மக்களுக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கும் இடையில் உள்ள ஒற்றுமைகள் என்ன என ஆராய்வது பொருத்தமானது.

தென் சூடானில் வாழும் சிறுபான்மை கிறிஸ்த்தவர்கள், பெரும்பான்மை வட சூடான் அரசால் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டதுடன், வன்முறைகளும் அவர்கள் மீது பிரயோகிக்கப்பட்டது. ஈழத்தில் வடக்கு கிழக்கில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்களை பெரும்பான்னை பௌத்த தென்னிலங்கை அரசு புறக்கணித்து வருகின்றது.

வட சூடானை எதிர்த்து தென் சூடான் மக்கள் இரு தசாப்தங்களாக ஆயுதப்போரை மேற்கொணடிருந்தனர். தென்னிலங்கை அரசை எதிர்த்து வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் மூன்று தசாப்தத்திற்கு மேற்பட்ட ஆயுதப்போரை மேற்கொண்டிருந்தனர்.

தென் சூடானில் முஸ்லீம் மத சட்டங்களை நடைமுறைப்படுத்த முற்பட்டது வட சூடான் அரசு, அதேபோல வடக்கு – கிழக்கில் பௌத்த மத சட்டத்தை கொண்டுவர முற்படுகின்றது சிங்கள அரசு.

வட சூடான் அரசு பெருமளவான படுகொலைகளை மேற்கொண்டதுடன், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டிருந்தது. 1983 ஆம் ஆண்டு உருவாகிய போரில் 2005 ஆம் ஆண்டு வரையிலும் 2 மில்லியன் தென் சூடான் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இதனை ஒரு இனப்படுகொலை என அமெரிக்கா விபரித்திருந்தது.

ஈழத்தமிழரின் நிலையும் அது தான். 1983 ஆம் ஆண்டு உக்கிரமடைந்த ஈழப்போரில் இதுவரை ஏறத்தாள இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒன்றரை மில்லியன் தமிழ் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். பல இலட்சம் மக்கள் சொந்த மண்ணில் அகதிகளாக வாழ்கின்றனர்.

சூடானை போல தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் எண்ணை வளம் இல்லாதுபோனாலும், மேற்குலகத்திற்கு எதிராக வலுவடைந்துவரும் இந்துசமுத்திரப் பிராந்திய வல்லரசுகளின் வளர்ச்சியை தடுப்பதற்கு தமிழ் மக்களின் உதவி மேற்குலகத்திற்கு தேவையாகலாம்.

மேலும் சிறிய நாடுகளை உருவாக்குவது என்ற அதன் கொள்கைகள் ஆபிரிக்கா பிராந்தியத்தில் இருந்து தென்ஆசியா பிராந்தியத்திற்கும் நகரலாம். ஆனால் அவற்றை காத்திரமாக உள்வாங்கிகொள்ள ஈழத்தமிழ் மக்களுக்கு வலுவான அரசியல், இராஜதந்திர கட்டமைப்புக்கள் தேவை. ஏனெனில் ஒரு நாட்டை உருவாக்குவதற்கு ஐ.நாவின் அங்கிகாரம் முதன்மையானது அல்ல என்பதை கொசோவோவுக்கு அடுத்த படியாக தென் சூடானும் எமக்கு உணர்த்தப்போகின்றது.

– வேல்ஸ் இல் இருந்து அருஷ்

  • தொடங்கியவர்

ஐக்கிய அமெரிக்க தென் சூடானை அங்கீகரிக்க உள்ளது

  • (வட) சூடானை பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்க சம்மதம்
  • (வட) சூடான் தேர்தல் முடிவுகளை ஏற்றது

"On behalf of the people of the United States, I congratulate the people of southern Sudan for a successful and inspiring referendum in which an overwhelmingly majority of voters chose independence" Obama

"After decades of conflict, the images of millions of southern Sudanese voters deciding their own future was an inspiration to the world and another step forward in Africa's long journey toward justice and democracy" Obama

http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hyGSdYwCRpPae-akvhRq0PWJONSQ?docId=CNG.c970e20b7c30f2afe95cf0ec00d03443.8d1

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.