Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மையார் அபாயகட்டத்தை தாண்டிவிட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மையார் அபாயகட்டத்தை தாண்டிவிட்டார்

Monday, February 7, 2011, 8:40

தமிழீழ தேசிய தலைவரின் தாயார் திருமதி வேலுப்பிள்ளை பார்வதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தபோதும் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக அவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறை மருத்துவமனை தகவல்கள் குறிப்பிடுகின்றன. அவசர சிகிச்சைக்காக அவரை யாழ் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டு மீண்டும் வல்வெட்டிதுரைக்கே வந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

போர் சமயத்தில் அடிக்கடி இடம் பெயரப்பட்டதாலும் அதன்பின் பணகோடா முகாமில் அடைத்துவைக்கபட்டதாலும் அவரின் உடல்நிலை மோசமடைந்தது. அவரின் ஒரு கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்வதி அம்மையாருக்கு இரத்த அழுத்தமும் சர்கரையும் உள்ளது. வல்வெட்டித்துறை மருத்துவமனை மருத்துவர், பார்வதி அம்மையாரை சிறந்த முறையில் கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

சிவாஜிலிங்கம், அம்மையாரை உடனிருந்து கவனித்து வருகிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனிமையில் வாடும் பார்வதி அம்மாள்!

செவ்வாய், 08 பெப்ரவரி 2011 09:44

பிள்ளைகள் எவரும் பார்வையிட வராமையால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரின் தாய் பார்வதி அம்மாள் மிகவும் மனம் உடைந்து போய் உள்ள்ளார் என்று யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பிரதம வைத்தியர் மயிலேறும் பெருமாள் தெரிவித்தார்.

இவர் பார்வதி அம்மாளின் உடல் நிலை குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறி உள்ளார்.

இவரது பேட்டி வருமாறு:-

" நீண்ட காலமாக பாரிசவாத நோயால் பீடிக்கப்பட்டிருக்கும் பார்வதி அம்மாளின் உடல் நைந்து கொண்டு இருக்கின்றது. அவர் மிகவும் மனம் உடைந்த நிலையில் உள்ளார்.

ஏனெனில் பிள்ளைகள் எவரும் வந்து பார்க்கவில்லை என்பது இவரின் மிகப் பெரிய மன வருத்தம்.

பேரப் பிள்ளைகள்கூட வந்து பார்க்கவில்லை என்கிற ஆதங்கத்தில் ஒடிந்து போய் உள்ளார். இதனால் அவரின் மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இவரின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று கூற முடியாது.”

tamilcnn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.