Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்படையினரால் மூடப்பட்டு வருகின்ற தளங்களில் இராணுவத்தினர் புகுந்து புதிய தளங்களை அமைக்கின்றனர்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடற்படையினரால் மூடப்பட்டு வருகின்ற தளங்களில் இராணுவத்தினர் புகுந்து புதிய தளங்களை அமைக்கின்றனர்:-

08 பெப்ரவரி 2011

யாழ் குடாநாட்டில் கடற்படையினரால் மூடப்பட்டு வருகின்ற தளங்களில் இராணுவம் புகுந்து புதிய படைத் தளங்களை அமைத்து வருவதாக ஜீரீஎன்னின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மூளாய் உள்ளிட்ட நுளைவாயில்களிலும் தீவகப் பகுதிகளிலும் கடற்படைத் தளங்கள் மூடப்பட்டு வருகின்றன. சுமார் 15 வருடங்களின் பின் இந்தப் பகுதிகளில் கடற்படைத் தளங்கள் மூடப்படுவது குறித்து மக்களிடையே மகிழ்ச்சி காணப்பட்டது. ஊடகங்களும் இது குறித்து பிரமாதப்படுத்தி செய்திகளை வெளியிட்டு இருந்தன. விசேடமாக முளாய் உள்ளிட்ட பகுதிகள் சிலவற்றின் கடற்படைத் தளங்கள் முற்றாக மூடப்பட்டு கடற்படையினர் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

எனினும் அந்தக் கனவுகள் நிலைத்திருக்காமல் கடற்படையினர் வெளியேறிய தளங்களில் இராணுவத்தினர் புதிதாக படைத்தளங்களை அமைத்து வருகின்றனர். தீவகப் பகுதிகளின் பல இடங்களில் இருந்தும் கடற்படையினர் வெளியேறுவதாகவும் அவற்றை இராணுவம் பொறுப்பேற்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. யாழ் பண்ணைவீதியில் இருந்து ஊர்காவற்துறை வரையிலான வீதிகளை உள்ளடக்கியும் இந்த நடைமுறை வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தன.

அதற்கமைவாக கடற்படையினர் முகாம்களை அகற்றிச் செல்ல இராணுவத்தினர் புதிய முகாம்களை அமைத்து வருகின்றனர். இந்த வகையில் குடாநாட்டில் எந்த ஒரு படைமுகாம்களும் மூடப்படவில்லை என்பதுடன் கடற்படையினர் விட்டுச் செல்லும் இடங்களை இராணுவம் தம்வசப்படுத்துவதாக ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

gtn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.