Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“பாரிஸிலுள்ள தமிழர்களின் குட்டி யாழ்ப்பாணம்"

Featured Replies

“பாரிஸிலுள்ள தமிழர்களின் குட்டி யாழ்ப்பாணம் அநேகமாக குட்டி பம்பாய் எனத் தவறாக அழைக்கப் படுகிறது”

-ஆக்கம்: அமென்டா மொரோ

அது அநேகமாக குட்டி பம்பாய் எனத் தவறாக அழைக்கப் பட்டாலும் சென்ட் டானிஸின் போபோக் வீதியிலிருந்து லா சப்பலின் வடக்கு வரை நீண்டிருக்கும் பகுதியின் கலகலப்பான உயிரோட்டமுள்ள சுற்றுப்புறம் உண்மையில் பரிஸில் வாழும் தமிழ் சமூகத்தினரது இருப்பிடமாகும். அந்தப் பகுதியிலிருந்து தவழ்ந்து வரும் காற்றின் நறுமணத்தில் கலந்திருப்பது பலதரப்பட்ட வண்ணமயமான கடைகளில் விற்பனையாகும் பட்டுத் துணியிலிருந்து கமகமக்கும் வாசனைத் திரவியங்கள் வரையானவற்றின் சுகந்தமே. இதன் முகப்புத் தோற்றம் எப்படியாயினும் இந்தப் பகுதியின் பிறப்பிடத்துக்கான துயரம் தோய்ந்த யதார்த்தத்தின் முகமூடியையே அணிந்திருக்கிறது.

அது ஆரம்பமாகியது 1983 ல் பரிஸ் முதன்முதலாக அதன் தமிழ் கடையொன்றை திறந்து வைத்தது. அதைத் திறந்தவர் ஸ்ரீலங்காவின் வன்முறை நிறைந்த உள்நாட்டு யுத்தம் காரணமாக அங்கிருந்து வெளியேறிய அகதி ஒருவர்.அதே வருடம் எல்.ரீ.ரீ.ஈ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற அமைப்பால் தொடரப்பட்ட சுதந்திரப் போராட்டம் கடந்த மூன்று தசாப்தங்களாக நீண்டு 80,000 வரையான உயிர்களைப் பலி வாங்கியது. எனவே அவர்களால் பரிஸில் கால் பதிக்க முடிந்தது. பிரான்ஸ் அதிகாரிகளால் அகதிகளைப் பாதுகாப்பதற்காக முறையான தஞ்சக் காலகட்டத்தை வழங்கி உதவியதற்காக அவர்களுக்கு நன்றிகள் உரித்தாகட்டும். குட்டி யாழ்ப்பாணம் நகரின் வடபுற வாழ்வுக்கு வசந்தம் பாலிக்கிறது. அது பல்கிப் பெருகியது 80 மற்றும் 90களிலேயே. துணிக் கடைகள், அழகு நிலையங்கள், என்பன தொடங்கி உணவு விடுதிகள் மளிகைக் கடைகள், பாடசாலைகள், மற்றும் இந்து ஆலயங்கள் என பல்வேறுபட்ட அமைப்புகளின் கூட்டுத் தளமாக இது உள்ளது.

ராஜா ஒரு முன்னாள் தமிழ் புலிப்போராளி. 20 வருடங்களுக்கு முன் பாரீஸ_க்குத் தப்பி வந்தவர். இப்போது ஒரு பிரான்சிய உணவு விடுதியை நடத்தி வருகிறார். மோதல்கள் அவரது தாய்நாட்டில் வாழ்க்கையை அசாத்தியமாக்கி விட்டது. “1983ல் எல்.ரீ.ரீ.ஈயில் இணைந்து 1988 வரை அவர்களோடு இருந்தேன். நான் இந்தியாவுக்கு போனதும் பிரான்சுக்கான எனது பயணச் சீட்டை வாங்கினேன்” அவர் இவ்வாறு கூறினார்.

எல்லா அரசியல் பிரச்சனைகளும் மற்றும் ஸ்ரீலங்கா இராணுவத்தால் ஏற்படும் பிரச்சனைகளுமே” வெளியேறுவதற்கான காரணங்களாக என்னால் நினைக்க முடிந்தது.

ஸ்ரீலங்காவின் யுத்தம்; ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஒருவருட காலமான தாக்குதல்களின் பின்னர் எல்.ரீ.ரீ.ஈ பிரிவினைவாதிகள் நிர்மூலமாக்கப்பட்டு பயங்கரமான தோல்வியினைச் சந்தித்ததின் பயனாக மே 2009 ல் உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்தது.பல வெளிநாட்டுத் தமிழ் சமூகத்தினரையும் போல பரிஸில் வாழ்ந்த தமிழர்களும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் மோசமான செயல்களுக்கும் சர்வதேச சமூகத்தின் பாராமுகத்தையும் கண்டித்து பிரமாண்டமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அரங்கேற்றினார்கள்.

அது ராஜாவுக்கு ஒரு கசப்பான நிகழ்ச்சியாகவே தோன்றுகிறது. ஆனால் அதன் அடிப்படைக் காரணம் இன்னும் மரித்துப் போய்விடவில்லை என்று வலியுறுத்துகிறார் ராஜா. தன்னுடைய பரீஸ் அடுக்கு மாடி வீட்டிலிருந்து இன்னமும் தமிழீழ தாயகக் கனவை அவர் கண்டு கொண்டேயிருக்கிறார்.” யுத்தம் வேண்டுமானால் முடிவடைந்திருக்கலாம். ஆனால் முதற்கண் நாம் நினைவு கூர வேண்டியது அது ஏன் ஆரம்பித்தது என்று” அவர் கூறுகிறார்.” நாங்கள் எங்கள் சுதந்திரத்தை கோருகிறோம்”.

பரீசியர்களான பெரும்பாலான தமிழர்கள் புலிகளை ஆதரிக்கிறார்கள். நிகழ்காலத்தை பயன்படுத்தி ராஜா சொல்கிறார். புலிகள் ஸ்ரீலங்கா மண்ணில் தோற்கடிக்கப் பட்டிருந்தாலும், அவர்களின் சர்வதேச வலையமைப்பு இன்னமும் பரந்த செல்வாக்குள்ளதாகவே இருக்கிறதுடன் குறைந்தது பகுதியாவது பழுதுபடாமல் மீந்திருப்பதாகத் தெரிகிறது.

பிரான்சுக்கான ஸ்ரீலங்காத் தூதுவர் தயான் ஜயதிலகாவின் கூற்றுப்படி எல்.ரீ.ரீ.ஈ வலையமைப்பு மூன்று அல்லது நான்கு பெரிய பிரிவுகளாக உலகெங்கிலும் உடைந்து போயுள்ளது. இருந்த போதிலும் அதை ஒன்றுபடுத்தக் கூடிய ஒரு தலைவர் கூட இல்லை. அவர் பிரான்ஸ் சர்வதேச வானொலியிடம் மேலும் கூறுகையில் அதன் சில அங்கத்தவர்கள் அதன் கட்டமைப்பினை பழையபடி ஒன்றுபடுத்தி ஆயதப் போராட்டத்துக்கு புத்துயிரளிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளன.

“யுத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழர்கள் எத்தனை பேர் என என்னால் தலைக் கணக்கு எடுக்க முடியாது. ஆனால் எனக்குத் தோன்றுகிறது அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் சுறுசுறுப்பான தமிழ் புலம் பெயர்ந்த மூலகங்கள் - அதிகமாக பரந்துபட்ட திறமையான மூலகங்கள் எல்.ரீ.ரீ.ஈ யின் கொடியின் கீழ் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பிரியப்படுகிறார்கள் போல தெரிகிறது.” அவர் சொல்கிறார்.

“ஆனால் பரீஸிலுள்ள பெரும்பான்மையான தமிழர்களை அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள் என்று என்னால் நிச்சயமாகக் கூறமுடியாது. அல்லது செயலாற்றல் மிக்க சிறுபான்மையானவர்கள் என்று கூறலாம்”

இதில் தவறவிடப் பட்டிருப்பது பரீஸ் தமிழ் சமூகத்திலிருக்கக்கூடிய ஒரு எதிர்ப்பு இயக்கத்தை.

அவர்களுக்கு எல்.ரீ.ரீ.ஈயின் 32 துப்பாக்கி ரவைகளையும் குறுக்காக வைக்கப் பட்டிருக்கும் துப்பாக்கிகளையும் கொண்ட கொடி சௌகரியப் படாது என்று’ ஜயதிலகா மேலும் குறிப்பிடுகிறார்.

மேலும் இங்கே குட்டி யாழ்ப்பாணத்தில் பெண்கள் வண்ணமயமான சேலைகளை அணிந்து காட்சி தருகிறார்கள் ,நடைபாதைகள் சந்தைக் கடைகளால் ஜொலிக்கிறது. ஹிந்திப் பாடல்கள் கடைகளிலிருந்து ஓசையுடன் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. நாளாந்த வாழ்க்கையிலிருந்து அரசியலைப் பிரித்தெடுப்பது கடினமே.

பிரான்ஸ் 100,000உறுதியான தமிழ் சனத் தொகையைக் கொண்டது. அவர்களில் பெரும்பான்மையோர் இந்தப் பகுதியையே தமது வீடு என அழைக்கிறார்கள். தமிழ் முதலாவதாகவும் பிரெஞ்ச் இரண்டாவதாகவும் அவர்களிடையே உலா வருகிறது. அது ஒரு வகை அடையாள உணர்வு. சிலவேளைகளில் ஸ்ரீலங்காவில் அவர்கள் அனுபவித்த சிறுபான்மை இன உணர்வினால் உறுதிப்படுத்தப் பட்டதாக இருக்கலாம் அங்கு பெரும்பான்மையின சிங்களவர்களின் கட்டுப்பாட்டில்தான் இராணுவம் உள்ளது.

பேர்டொனற் வீதியில் அமைந்துள்ள ஒரு ஸ்ரீலங்கா அழகு நிலையத்தில் காணப்பட்ட சிங்கள இளம் பெண்ணான அனுசா என்பவர் பத்து வருடங்களுக்கு மேலாக பரிஸில் வாழ்கிறார். அவர் தனது தலைமுடியை அங்குள்ள தமிழ் அலுவலக அங்கத்தவர்களால் அழகு படுத்திக் கொண.டிருக்கிறார். அவர் சொல்கிறார் சோர்வடைந்துள்ள பொருளாதாரம் வாய்ப்பின்மை ஆகியவை பெரும்பான்மையான ஸ்ரீலங்கா வாசிகளை அவர்களின் இனங்களின் பின்னணியைப் பொருட்டாக்காமல் அங்கிருந்து வெளியேறத் தூண்டுகிறது என்று.

இந்த நாட்களில் அனுசா பரீஸில் நடைபெறும் ஸ்ரீலங்கா சமூக நிகழ்ச்சிகளில் பாடவும் நடனமாடவும் செய்கிறார். “ஸ்ரீலங்கன் சமூகத்தினரிடையே நான் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறேன். ஆனால் எனது நண்பர்கள் ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, அவர்கள் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கர்கள், ஜேர்மனியர்கள், டச் நாட்டவர்கள் எனப் பலர்” அவர் கூறினார்.

தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி, நண்பர்களைப் பற்றி மற்றும் வேர்களைப் பற்றி சம்சாரிப்பதில் அனுசாவுக்கு அளப்பரிய மகிழ்ச்சி. மேலும் தொடர்கையில் தான் சாத்தியமாகும் போதெல்லாம் ஸ்ரீலங்காவுக்கு போய் வருவதாகச் சொன்னார். ”இப்போது போர் ஓய்ந்து விட்டது. தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே குடும்பத்தைப் போல வாழ்கிறார்கள்”அவர் மேலும் கூட்டிச் சேர்த்தார்.

எல்.ரீ.ரீ.ஈ யின் செயற்பாட்டு அங்கத்தினர்கள் இன்னமும் பரீஸைச் சுற்றி இயங்கி வருகிறார்களா என்று அவரிடம் வினாவியபோது அவர் குழப்பமில்லாது அமைதியாகவே காணப்பட்டார். ஆனால் அவர் பதிலளிக்கத் தயாரானபோது சிகை அலங்கரிப்பாளரினால் சம்பாஷணை திடீரென முடிவுக்கு வந்தது. அவர் வேகமாக என்னைக் கதவுக்கு வெளியே தள்ளிவிட்டார்.

பல நாடுகளால் பயங்கரவாத இயக்கமாக கருதப்படும் எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு பிரான்சில் நிதி சேகரிப்பது ஏப்ரல் 2007ல் இருந்து மிகவும் நுண்ணிய ஒரு விடயமாகக் கருதப்படுகிறது, ஏனெனில் அதன் வலையமைப்பைச் சேர்ந்த பல அங்கத்தவர்கள் தமிழ் சமூக அங்கத்தினர்களிடமிருந்து கப்பம் கோரினார்கள் என்கிற குற்றச்சாட்டின் பேரில் அப்போது கைது செய்யப் பட்டிருந்தார்கள்;.

கைதுகளுக்கு முன்பாக இந்த விடயம் சம்பந்தமாக எமது சகோதர நிலையமான பிரான்ஸ் 24 டெலிவிசன் நிலையத்தில் கடமையாற்றும் பத்திரிகையாளரான நந்திதா விஜ் என்பவர்; ஒரு புலானாய்வை மேற்கொண்டிருந்தார். அவர் இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர். இப்போது செயலற்றிருக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (ரீ.சீ.சீ) வினரது பரீஸ் அலுவலகங்களுக்கு விஜயம் செய்திருந்தார். அவைகள் பின்னர் பிரான்சின் பயங்கரவாத எதிர்ப்பு காவல் துறையினரால் திடீர் சோதனைகளுக்கு உள்ளாக்கப் பட்டிருந்தன.

“நிதி சேகரிக்கும் இந்த நிறுவனங்கள் ஸ்ரீலங்காவில் உள்ள அகதிகளுக்கு உதவி செய்யும் ஒரு அரச சார்பற்ற நிறுவனமாக பணியாற்றி வந்தன,” விஜ் விளக்குகிறார். “ எனவே அவர்களின் முகவுரை அவர்கள் நிதி சேகரிப்பது சுனாமியால் பாதிக்கப் படடவர்களுக்காகவோ அல்லது தமிழ் சமூகத்தினரின் புனர் வாழ்வுக்காகவோ என்று சொல்லப் பட்டது.”

ஆரம்பத்தில் சில நபர்கள் தாய்நாட்டில் நடக்கும் இந்த மாதிரியான விடயங்களில் பணத்தை இறைப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். விஜ் கூறுகிறார் இந்த இளைய தலைமுறையினர் இந்த காரணங்களில் இறுதியாக அர்ப்பணிப்பு குறைந்தவர்களாக மாறினார்கள், எனவே இந்தக் கட்டத்தில் பலவந்தமாக பணம் அறவிடப்பட்டது.

“பணம் கொடுக்காவிட்டால் அவர்கள் அச்சுறுத்தப் பட்டார்கள் “ விஜ் கூறினார்.” சில நேரங்களில் ஸ்ரீலங்காவில் வதியும் அவர்களின் குடும்பத்தினர்கள் ஆபத்துக்கு உள்ளானார்கள் அல்லது அவர்கள் இங்கு பரீஸில் தொந்தரவுக்கு ஆளானார்கள் - மற்றும் சில சந்தர்ப்பங்களில் அவர்களின் வீட்டுக்கு வெளியில் வைத்து அவர்கள் தாக்கப்பட்டார்கள்.”

2006ல் அவரது கதை ஒலிபரப்பானதும், விஜ் ரீ.சீ.சீ அங்கத்தவர்களின் தொந்தரவால் பாதிக்கப் படலானார். இன்று கூட அவர்கள் தங்கள் அச்சுறுத்தல் பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ளவில்லை.

“நான் இன்னமும் அச்சுறுத்தலில் அகப்பட்டே இருக்கிறேன். என்னால்; வடக்கு ரயில் நிலையத்துக்கு இன்னமும் ஒரு தடவை கூடப் போக முடியவில்லை, ஏனெனில் மக்கள் என்னை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்” அவர் தொடர்ந்து சொல்கிறார். மிரட்டல்கள் இன்னமும் ஓயவில்லை அதனால் என்னால் இந்திய மளிகைப் பொருட்கள் உள்ள பகுதிக்குச் சென்று பொருட்கள் எதையும் கொள்வனவு செய்ய முடியாமலிருக்கிறது”.

ஸ்ரீலங்காவில் நடந்த யுத்தத்துக்கு புறமே பரீசில் நடந்த கப்பம் கோரிய கைதுகளும் சுதந்திர தமிழ் இராச்சியம் பெறுவதற்கான நிறைவேறாக் கனவுகளும் குட்டி யாழ்ப்பாணத்தையும் அதைச் சுற்றிப் பிரிந்து கிடக்கும் வீதிகளில் குடியிருப்பவர்களினது கலாச்சாரப் பெருமைகளைப் பறைசாற்றும் வாழ்க்கைமுறையை வெட்டி வீழ்த்தி விட்டது.

அங்கு தமிழ் பத்திரிகைகள் வானொலி நிலையங்கள் தமிழ் மொழிப் பாடசாலைகள் எல்லாம் உள்ளன. இதற்கிடையில் இந்துக் கடவுளான யானைத் தலையுடைய கணேசப் பெருமானுக்கு விநாயக சதுர்த்தியின் போது நடத்தப்படும் இரத பவனி ஒவ்வொரு செப்டம்பரின் போதும் பரீஸ் மக்களை மட்டுமன்றி உல்லாசப் பயணிகளையும் கவரும் ஒரு பிரசித்த நிகழ்வாகும்.

ராஜாவைப் பொறுத்த மட்டில் அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கால நினைவுகள் ஒரு போதும் அவர் நினைவை விட்டு வெகுதூரம் போகாது. ஆனால் அவர் இப்போது தனது புது வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவே உள்ளார். அதைப்பற்றிக் குறிப்பிடுகையில் பிரான்சில் பிறந்த அவரது பிள்ளைகளின் சிறந்த ஒரு இணைப்பாக அவர்கள் இரண்டு உலகங்களினதும் சிறப்புகளை அனுபவிக்க இயலக் கூடியதாக இருப்பதாகக் கூறினார்.

“இங்கு பிரான்சில் எனது பிள்ளைகள் தமிழ் மொழி வகுப்புக்களுக்குச் செல்கிறார்கள், அவர்கள் தமிழ் மொழியினை எழுதப் பயில்வதோடு எங்களின் தமிழ் கலாச்சாரத்தையும் கற்கிறார்கள். ராஜா சொல்கிறார்.”அத்தோடு ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் எல்லாப் பிள்ளைகளுக்கும் பரீட்சைகள் உண்டு மற்றும் அங்கு அவர்கள் பரீட்சிக்கப் படுகிறார்கள்.

பிரான்சில் பாடசாலைகளுக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு இணைப்பை ஏற்படுத்துவது வெகு சுலபமாக இருந்த போதிலும் வளர்ந்தவர்களான தமிழர்கள் பாஷைப் பரிவர்த்தனையிலும் கலாச்சாரத் தடுப்புகளாலும் அநேகமாக பெரிதும் இடர்ப்படுகிறார்கள். கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியின் கீழிருந்ததின் விளைவாக அநேகர் ஆங்கிலம் பேசுவுதில் வல்லவர்களாக உள்ளார்கள். மற்றும் பிரெஞ்சு மொழியில் ஒரு வார்த்தை கூடத் தெரியாமல் பிரான்சுக்கு வருகிறார்கள். இதன் கருத்து யாதெனில் வேலை வாய்ப்புகள் வெகுவாக மட்டுப்படுத்தப் படுகின்றன, அநேக தமிழர்கள் தங்கள் நாட்டில் பெற்றுள்ள கல்வித் தகைமைகளுக்கு அமைவான வேலைகளைப் பெறமுடியாதுள்ளனர். இந்தக் குழுவிற்குள் உட்பட்டவர்தான் ஹமாட். அவர் சென்ட் டெனிஸ் பாபோக் வீதியிலுள்ள சில்க் பலஸ் எனும் கடையில் வேலை செய்கிறார்.

அவர் ஒருகாலத்தில் பிரெஞ்சுக் காலனித்துவ பகுதியாகவிருந்த தென்னிந்தியாவின் பாண்டிச்சேரியிலிருந்து வந்தவர். இந்தப் பிரான்சிய தொடர்பைத் தவிர அவரது சகல கல்வித் தரமும் ஆங்கில மொழி மூலமே மேற்கொள்ளப் பட்டது.” நான் சிறிதளவு பிரெஞ்சு மொழி பேசிய போதிலும் நல்ல ஒரு வேலையைப் பெற்றுக் கொள்ள அது போதுமானதாக இல்லை, அதனால்தான் கடந்த எட்டு வருட காலமாக நான் ஒரு கடையில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்” அவர் தெரிவித்தார்.

“அத்தோடு எனது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் இங்கில்லை. அவர்கள் பிரெஞ்சு மொழி பேசுவதில்லை. ஒவ்வொரு நாளும் நான் ஏராளமான தமிழர்களைக் காண்கிறேன். எமது கடையின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தமிழர்களே. சில வேளைகளில் தமிழ் கலாச்சார சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்வேன்”

இப்போது ஸ்ரீலங்காவில் யுத்தம் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப் பட்டு விட்டதுடன் துப்பாக்கி ரவைகள் துளைக்கப்பட்ட தமிழ் தலைவர் பிரபாகரனின் உருவம் உலகெங்கும் காண்பிக்கப் பட்டது. பரீஸ் தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்வதைப் பற்றிக் கவனமெடுத்துள்ளார்களா?

அதற்கான ஒரு வாய்ப்பில்லை ராஜா சொல்கிறார். ஸ்ரீலங்கா இராணுவம் பிரபாகரனின் மரணத்தை பொய்யாக இட்டுக் கட்டியுள்ளதாக ஒரு பலத்த சந்தேகம் பெரும்பாலான புலம் பெயர் தமிழர்களிடையே உள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

“தனிப்பட்ட முறையில் அவர் இப்போது மறைந்து விட்டதாகவே நான் நம்புகிறேன் - ஆனால் பெரும்பாலான மக்கள் அவர் இன்னும் உயிரோடிருப்பதாகவே நம்புகிறார்கள. ,ஏனெனில் கடந்த காலங்களில் அநேக தடவை இராணுவத்தினர் அவர் இறந்து விட்டதாக அறிவித்துள்ளார்கள். ஆனால் அதன் பின்னரும் அவர் தோன்றியுள்ளார்.” ராஜா சொல்கிறார்.

“இந்த நாட்களில் இரண்டு விதமான எல்.ரீ.ரீ.ஈ குழுக்கள் உள்ளன. பிரபாகரன் இருக்கிறார் என்று சொல்பவர்களும் பிரபாகரன் இல்லை என்று சொல்பவர்களுமாக.”

பிரிவினைவாத இயக்கம் ஸ்ரீலங்காவில் தோற்கடிக்கப் பட்டாலும் கூட தமிழர்கள் படுந் துயரம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது என்று ராஜா சொல்கிறார். இதைத் தவிர அவர் சொல்வது போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்தவர்களுக்கு ஸ்ரீலங்கா இராணுவத்தினர் நிவாரண உதவிகளை வழங்குவதாக அரசாங்கம் வெறுமே வார்த்தைப் பிரச்சாரம் செய்கிறது என்று.

“இப்போதுகூட அங்கு மக்கள் பயத்துடனேயே வாழ்கிறார்கள். அது யுத்தம் பற்றிய ஒரு பயமல்ல, ஆனால் மக்கள் பயப்படுவது ஏனென்றால் அங்கு இன்னமும் ஏராளமான வன்முறைகள் இடம் பெறுகின்றன.” அவர் மேலும் சொல்வது “அங்கு குடும்பங்களில் கணவனை இழந்த பெண்கள் அநேக தடவைகளில் இராணுவத்தால் கற்பழிக்கப் படுகிறார்கள். அப்படியான எதுவும் இன்னமும்

முடிவுக்கு வரவில்லை.”

பரீஸிலுள் ஸ்ரீலங்கா தூதரகத்திலிருந்து தூதுவர் ஜயதிலகா கூறுகையில், திரும்பிச் செல்வதற்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஊக்கமளிக்கிறது மற்றும் பெரும்பாலான தமிழர்கள் ஸ்ரீலங்காவின் நிலையைப் பொறுத்த மட்டில்; போராட்டத்துக்கான கொள்கையினை கைவிட்டு விட்டார்கள்.

“நான் சொல்ல விரும்புவது ஒரு சிறிய அளவிலானவர்கள் திரும்பிச் செல்ல விரும்புகிறார்கள், மற்றும் உலகின் மற்றப் பாகங்களிலிருந்து அதாவது அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது அது தெளிவாக விளக்குவது பெரும் எண்ணிக்கையிலானவர்கள் திரும்ப விரும்புகிறாhகள் என்றே” ஜயதிலகா கூறுகிறார்.

“இது சாதாரண ஒரு வருகைக்கு மட்டும்தானா அல்லது தீவின் எந்தப் பகுதியிலிருந்து அவர்கள் வந்தார்களோ அங்கு இடம் பெயர்வதற்கா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பெரியளவிலான ஒரு நகர்வு உள்ளது, ஆனால் அந்த இடத்தில் எங்களுக்கு எதுவும் வேண்டாம் என்று யாரும் சொல்வதில்லை”

சொந்த மண்மீதான ஈர்ப்பு எதனையும் பொருட்படுத்தாமல் இங்கே குட்டி யாழ்ப்பாணத்தில் கடைகளின் விளம்பரப் பலகைகள் தமிழர்களின் தனித்தன்மையான வாசகங்களால் அலங்கரிக்கப் பட்டு அங்கே இந்தியர், பங்களாதேஷிகள் மற்றும் துருக்கியர்கள் ஆகியோருக்கு சரி எதிர்ப் பக்கமாக தமிழ்சமூகமும் ஸ்தாபிக்கப் பட்டுள்ளது. இந்தப் பகுதியில் ஏதாவது வித்தியாசம் உள்ளதா என்று கற்பனை செய்வது கூடக் கடினம்.

(நன்றி: பிரான்ஸ் சர்வதேச வானொலி)

தமிழில்:எஸ்.குமார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.