Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நயினாதீவு விகாரையை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் கடற்படையினர்: பாரிய புத்தர் சிலையொன்று புதிதாக அமைக்கப்படவுள்ளது....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நயினாதீவு விகாரையை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் கடற்படையினர்: பாரிய புத்தர் சிலையொன்று புதிதாக அமைக்கப்படவுள்ளது....

வியாழக்கிழமை, 10 பிப்ரவரி 2011 09:23

நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரையை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையில் சிறிலங்கா கடற்படை இறங்கியுள்ளது. சிறிலங்கா கடற்படையின் உதவியுடன் தேசிய கட்டட மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் இந்த விகாரை விரிவாக்கப்படவுள்ளது. விகாரை புனரமைப்பு நடவடிக்கைளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு நேற்றுமுன்தினம் காலை இடம்பெற்றது.

நயினாதீவு விகாரையில் 3,157,000 ரூபா செலவில் பாரிய புத்தர் சிலையொன்று புதிதாக அமைக்கப்படவுள்ளது. இந்தப் பாரிய புத்தர் சிலையின் அடித்தளத்துக்கான அடிக்கல்லை சிறிலங்கா கடற்படையின் வடபிராந்திய தளபதி றியர் அட்மிரல் சுசித வீரசேகர நாட்டியுள்ளார்.

அத்துடன் விகாரையின் முகப்பும் அதற்கான நடைபாதையும், இறங்குதுறை மற்றும் அதற்காக நடைபாதை ஆகியனவும் புதிதாக அமைக்கப்படவுள்ளன. சுமார் 4 கோடி ரூபா செலவில் இந்தப் புனரமைப்பு வேலைகளை சிறிலங்கா கடற்படை மேற்கொண்டு வருகிறது.

வடக்கில் பௌத்த விகாரைகளை அமைப்பது மற்றும் விரிவாக்கம் செய்யும் நடவடிக்கைகளில் சிறிலங்கா கடற்படை தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே மாதகல்- சம்பில்துறையில் 2004ம் ஆண்டில் பௌத்த விகாரையொன்றை சிறிலங்கா கடற்படை அமைத்தது.

அது இப்போது தென்பகுதியில் இருந்து வரும் பௌத்தர்களின் யாத்திரைத் தலமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

sangamam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.