Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வங்க தேசத்தில் உலகக்கோப்பை தொடக்கவிழா. நாடே விழாக்கோலம் (ஏராளமான படங்கள் மற்றும் வீடியோ)

Featured Replies

10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் டாக்காவில் இன்று துவக்க விழாவுடன் கோலாகலமாக தொடங்குகிறது.

கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் நடைபெற்று வந்த பயிற்சி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை (18-ம் தேதி) இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்துடன் நிறைவு பெறுகிறது.

உலகக் கிரிக்கெட் ரசிகர்களின் இந்திரபுரியான இந்தியாவின் முதன்மையுடன், வங்கசதேசம், இலங்கை கூட்டாக நடத்தும் இந்தத் திருவிழா, வரும் சனிக்கிழமை முதல் களைகட்ட தொடங்கும்.

நாடே விழாக்கோலம்..!

தொடக்க நாளான இன்று வங்கதேசமே கலைகட்டியுள்ளது. அந்நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடத்தும் மிகப்பெரிய பிரம்மாண்ட கிரிக்கெட் போட்டி இது என்பதால் அங்கு நாடே திருவிழா பூண்டுள்ளது.

கடந்த உலகக் கோப்பையில் இந்திய அணியை வீழ்த்திய தங்கள் அணி, தன் சொந்த மண்ணில் அதே இந்திய அணியை எதிர்கொள்வதால் அங்குள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவரும் இந்த திருவிழாவை வெகுவாக வரவேற்கின்றன.

கடந்து வந்த விளையாட்டு தொடர்களில் இந்த கிரிக்கெட் திருவிழாவுக்குதான் அதிக வருமானமும் ஈட்டியுள்ளதாக வங்கதேச மார்க்கெட்டிங் நிருவனங்கள் அறிவித்துள்ளதே இதற்கு சான்று.

இந்நிலையில் இன்று தொடங்கும் தொடக்க விழாவில் வங்கதேச சிறப்புகளை வெளிப்படுத்த 20 நிமிடமும், இந்தியா, இலங்கைக்கு 12 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் லேசர் ஷோ தனித்துவம் காட்டும் என்றும், அதை விஞ்ச வாணவேடிக்கை இருக்கும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

42 நாட்கள் நடைபெறும் இந்த உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் (ஐ.சி.சி.) சரத்பவார் மற்றும் கிரிக்கெட் நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள். பிரதமர் மற்றும் ஐ.சி.சி. தலைவர் உரையாற்றிய பிறகு, 14 நாட்டு அணிகளின் கேப்டன்களும் மைதானத்துக்ள் நுழைகிறார்கள். வங்காளதேசத்தின் பாரம்பரிய வாகனமான அலங்கரிக்கப்பட்ட ரிக்ஷாவில் கேப்டன்கள் வலம் வருவார்கள். இது மட்டுமின்றி, பிரபல கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள்.

கனடா பாடகர் பிரையன் ஆடம்ஸ் மற்றும் இந்தியாவின் புகழ் பெற்ற பாடகர் சோனு நிகாம் தொடக்க விழாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

உலக கோப்பை மையநோக்கு பாடலை உருவாக்கிய, இந்திய இசைக்குழுவினர் சங்கர் மகாதேவன், ஈசான் மற்றும் லாய் ஆகியோரும் இதில் அசத்த உள்ளனர்.

அணிகளும் தயார்!

கோப்பையை வெல்ல ஒவ்வொரு அணியும் தங்களை தயார்படுத்தி வைத்துள்ளது. கோப்பையை வெல்லும் அதிக வாய்ப்புள்ள இந்தியா, இலங்கை, தென் ஆப்பரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் என்று ரசிகர்கள் ஓவ்வொருவரும் ஒரு அணியை தேர்வு செய்து மனதில் பச்சைக் குத்தாத குறையாக கூவி வருகிறார்கள்.

அதிலும் இந்த அணியில் அவர் இடம் பெறுவாரா? இவர் இடம் பெறுவாரா என்ற கேள்வி மேலும் மேலும் ரசிகர்களிடம் ஆவலை தூண்டியுள்ளது.

எந்த ஒரு சாதாரண வீரரும் இந்திய அணியில் இடம் பெற்றுவிட்டால் அவர் அடுத்த நிமிடமே நட்சத்திர அந்தஸ்தை பெற்று விடும் அதிசயம் நம் இந்திய திருநாட்டில் மட்டுமே காணக்கூடிய பெருமையாகும்!

அதில் இந்த மாநில வீரர் இடம் கிடைக்கும், இல்லை இல்லை இந்த மாநிலத்து வீரர்க்குதான் இடம் கிடைக்கும் என்று ஓவ்வொரு ரசிகர்களும், வல்லுநர்களும் சூதாட்டம் கட்டாத குறையாக கூறி வருவது மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

கோஹ்லிக்கு முக்கியத்துவம்!

இதில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களில் கோஹ்லி, ரெய்னா, யூசுப் பதான் ஆகியோருக்கு இடையில் பெரும் போட்டி நிகழ்வது இந்திய அணிக்கு பூஸ்ட் கொடுப்பதாக உள்ளது. ஏனோ யுவராஜைப் பற்றி யாரும் விமர்சிப்பதில்லை. அவரது அனுபவம் இந்திய அணிக்கு கைக்கொடுக்கும் என்று தோனி திடமாக நம்புகிறாராம்.

இந்நிலையில் சென்னையில் நடந்த பயிற்சி ஆட்டம் மட்டுமல்ல, நியூசிலாந்து அணியின் இந்திய சுற்றுப்பயணம், தென் ஆப்பிரிக்கவில் இந்திய அணி சுற்றுப்பயணம் என்று கோஹ்லி வெளிப்படுத்திய திடமான ஆட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளதால், ரெய்னாவை விட கோஹ்லிக்கு முக்கியத்துவம் தர தோனி முடிவு எடுத்துள்ளதாக நம்பகத்தன்மை மிக்க தகவல் கிடைத்துள்ளது.

தோனியின் நம்பிக்கை கவர்ந்த வீரரான ரெய்னாவை அவர் ஓரம் கட்டுகிறார் என்றால், உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக செயல்படவே அது அமையும் என்று எதிர்பார்க்கலாம். இந்த முறை எந்த ஒரு அணியை சுலமாக இந்திய கருதாது என்றே இதை காட்டுகிறது.

விளம்பரத்திலும் அள்ளும் இ.எஸ்.பி.என். கிரிக்கெட்!

கிரிக்கெட் ஒரு பக்கம் என்றால் நிமிடத்திற்கு 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை கொடுத்தாவது தங்கள் விளம்பரங்களை எந்த தொகையை கொடுத்தாவது ஒளிபரப்ப விளம்பர நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளதால் தொலைக்காட்சியில் பார்க்கும் ரசிகர்களுக்கு பெரும் ஒளி வெள்ளமே காட்சி தர போகிறது என்பதும் உண்மையே.

அதிலும் கிரிக்கெட் ரசிகர்களின் இந்திரபுரியான இந்தியா, அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டால் விளம்பர கட்டணங்கள் மேலும் 3 முதல் 6 மடங்கு உயர்த்தும் வாய்ப்பு உள்ளதாக இ.எஸ்.பி.என். கிரிக்கெட் விளம்பரம் மேளாலர் கருத்து தெரிவித்திருக்கிறார். விளம்பரங்களை சரிக்கட்ட ஸ்டார் டிவி நிறுவனம், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், இ.எஸ்.பி.என்., ஸ்டார் கிரிக்கெட் என்று 3 சேனல்களில் போட்டியை ஒளிபரப்ப காத்திருக்கிறது. அதிலும் இந்தியாவில் ஹிந்தி பேசுவோர் அதிகம் என்பதால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும் அனைத்து போட்டிகளும் ஹிந்தியில் கமெண்ட்ரி கொடுக்க போகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் இதன் மூலம் கிடைக்கும் கணக்கையும் நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்.

மேலும் இந்திய போட்டிகளை துர்தர்ஷன் ஒலிபரப்பும் பட்சத்தில் வரும் வருமானத்தில் 70% இ.எஸ்.பி.என். கிரிக்கெட்டுக்கு டிடி செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தம் இந்த உலகக் கோப்பை ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் விருந்தாகும் என்பது சற்றும் ஐயமில்லை!

அசத்தலான தொடக்கவிழா புகைப்படங்கள் மற்றும் வீடியோ பார்க்க....

http://www.thedipaar.com/news/news.php?id=24490

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.