Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

,அதிமுக வின் பலம் மிகப்பெரிய தொண்டர் பலம். பலவீனம் முக்கிய தலைவர்களை இழந்தது. -

Featured Replies

ஒரு பக்கம் எதிரே பலமான கூட்டணி.இன்னொரு புறம் தன் கூட்டணியை உறுதிப்படுத்திக் கொண்டு எதிரியுடன் மோத வேண்டிய சூழ்நிலை. அதற்கு முன் யாருக்கு எவ்வளவு விட்டுக் கொடுப்பது என்பதில் இழுபறி.. குழப்பம்! இக்கட்டான கட்டத்தில் இந்தப் பொதுத்தேர்தலைச் சந்திக்கவுள்ளது அ.தி.மு.க.!

உள்ளுக்குள் நெருக்கடிகள் ஆயிரம் இருந்தாலும், மிகப்பெரிய தொண்டர் பலம் இந்தக் கட்சியின் அழுத்தமான அஸ்திவாரம்.கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அந்தக் கட்சி 61சீட்டுக்களே பெற்றிருந்தாலும், அதன் வாக்கு சதவிகிதம் 32.52 என்கிறது ஒரு புள்ளிவிவரம்! இது தி.மு.க. வாக்கு வங்கி சதவிகிதத்தைவிட சற்று அதிகம்! கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியிலிருந்த இரண்டு கம்யூனிஸ்டுகளும் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. பக்கம் வந்துவிட்டன என்றால். இலையோடு இருந்த சிறுத்தைகள் இப்போது சூரியன் பக்கம் தாவி விட்டன. இந்த கூட்டல் கழித்தல்களைவிட அ.தி.மு.க.வின் இப்போதைய உண்மையான கவலை விஜயகாந்தின் தே.மு.தி.க.வை எப்படியாவது தங்கள் கூடாரத்திற்குள் கொண்டு வந்து விடவேண்டும் என்பதே!

சென்னை வானகரத்தில் இம்மாதம் 21-ம் தேதி நடக்கவிருக்கும் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் அக்கா மகள் திருமணத்தில் ஜெ. வருகை புரிந்தால் கூட்டணி உறுதியாகும் என்று ஆரூடம் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்! அப்படி இரு கட்சிகளும் கைகோக்கும் பட்சத்தில் கேப்டனுக்கு 40 சீட்களும் (ஒன்றிரண்டு கூட குறையலாம்) அமைச்சரவையில் இடமளிக்கவும் போயஸ்கார்டன் ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள்.

இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. சந்திக்கும் முக்கியமான பிரச்னை, அது காலப்போக்கில் பல அருமையான தளபதிகளை இழந்துவிட்டது என்பதுதான்! சட்டசபையிலேயே சமீபத்திய சேகர்பாபு வரை ஐந்து எம்.எல்.ஏ.க்கள் அணிமாறிவிட்டார்கள்.அதேபோல் கருப்பசாமி பாண்டியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்., செல்வகணபதி, முத்துசாமி என்று கோயில் குடமுழுக்கு விழா நோட்டீஸில் இடம் பெறும் உபயதாரர்கள் பட்டியல் போன்று அது நீள்கிறது.இதில் சோகமான தமாஷ் என்னவென்றால்,அண்மைக்காலத்தில் தமிழகத்தில் நடந்த இடைத்-தேர்தல்கள் மற்றும் மக்களவைத் தேர்தலில் இப்படி வெளியேறியவர்கள் அல்லது வெளியேற்றப்பட்டவர்கள்தான் அ.தி.மு.க. வேட்பாளர்களை கங்கணம் கட்டிக் கொண்டு தோற்கடித்தவர்கள்! இந்தக் கட்சியை விட்டுப் போனவர்கள் பலர் சொல்லும் குற்றச்சாட்டு,‘கட்சியில் அம்மாவின் விசுவாசிகளை சின்னம்மா மதிப்பதில்லை’ என்பதுதான்!

அ.தி.மு.க.விலிருந்து விலகி இப்போது காங்கிரஸில் சேர்ந்துள்ள எஸ்.வி.சேகரிடம் பேசியபோது,‘‘ஒரு செய்தியைக் கேள்விப்பட்டால் சம்பந்தப்பட்டவரை கூப்பிட்டுக் கேட்டு அதை தெளிவுபடுத்துகிற விஷயமே கிடையாது.போட்டுக் கொடுத்தவரை நம்புவார்கள்.அப்புறம் போட்டுக் கொடுத்தவரையே தூக்கிவிடுவார்கள்.ஒரு உதாரணம் கலைராஜன்,என்னைப்பற்றிச் சொல்லும் போது என்னை ஓரங்கட்டினார்கள்.இப்போது கலைராஜனையே தென்சென்னை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து தூக்கியுள்ளார்கள். இதுதான் அ.தி.மு.க. ஸ்டைல்! ‘போ’யஸ் போ என்கிறது. அறி‘வா’லயம் வா என்று அரவணைக்கிறது. பெரிய ஆளையும் ஒரே நிமிஷத்தில் தூக்கி எறிவது இன்றைய அ.தி.மு.க. பாணி’’ என்று அழகாக அலசினார்.

‘‘சில நல்ல உழைப்பாளிகளை அ.தி.மு.க. இழந்து விட்டது உண்மைதான்.சேகர்பாபு வெளியேறியதற்குக் காரணம் தினகரன்.அறுவடை செய்த நெல்லை சிதறாமல் வீட்டுக்குக் கொண்டு வருவது எவ்வளவு முக்கியமோ அப்படியேதான் வாக்குகளை ஓட்டுப் பெட்டியில் சேர்ப்பதும் என்பதை அ.தி.மு.க. தலைமை புரிந்து கொள்ள வேண்டும்! ஆனால் அ.தி.மு.க.வின் இந்த இழப்புகளை ஸ்பெக்ட்ரம் நிச்சயம் சரி செய்யும். கிராமங்களிலும் இந்தச் செய்திகள் மெதுவாக பரவத் தொடங்கியுள்ளது! இன்றைய சூழலில் விஜயகாந்த் இல்லாமலும் அ.தி.மு.க.ஆட்சி அமைக்க முடியும் என்றாலும் அவருடன் கூட்டணி சேர்வது வேலையை சுலபமாக்கும்..’’ என்று கூறினார், தென் சென்னையின் முக்கிய அ.தி.மு.க. பிரமுகர். தமிழக காங்கிரஸைப் போலவே அ.தி.மு.க.விலும் கோஷ்டிகள் வளர்ந்து கட்சியை சீர்குலைப்பதாக நம்மிடம் பேசிய சிலர் வருத்தப்பட்டார்கள்.

‘‘சென்னை முழுக்கவே கட்சி நல்லாயிருக்கு. அதேசமயம் தென்சென்னையில் கோஷ்டி அரசியல் வட சென்னையைவிட அதிகம். அம்மா விசுவாசிகள் ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள். பல வழக்குகளில் சிறை சென்ற என்னைப்போன்ற விசுவாசிகள் பலர் ஒதுக்கி வைக்கப்-படுகிறார்கள்.அதையும் தாண்டி கட்சிக்காக வேலை செய்கிறோம்’’ என்றார், தலைமைக் கழகத்தில் நம்மை சந்தித்த தென்சென்னை மாவட்ட துணைச்செயலாளராக இருந்த விருகை டி.எஸ்.கண்ணன். இதே ரீதியில் பேசினார் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் குழந்தைவேலுவின் மகன் ரவி குழந்தைவேலு.

‘‘அரசியல் தெரியாதவர்கள் கட்சியில் ஆக்கிரமிக்கிறார்கள். கட்சிக்கு உழைத்த பிரமுகர்களின் இரண்டாம் தலைமுறையினர் மற்றும் விசுவாசமான இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்.எம்.ஜி.ஆர். அப்படித்தான் செய்தார்’’ என்றார் ரவி!

ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வு, ஆளுங்கட்சியின் விழா ஆடம்பரங்கள், இலங்கைப் பிரச்னை, சினிமா மற்றும் சேனல் கபளீகரம் ஆகியவற்றை இந்தத் தேர்தலில் முழு மூச்சாக பிரசாரம் செய்யப் போவதாக அ.தி.மு.க. முன்னணி பிரமுகர்கள் சிலர் ‘பெயர் போட வேண்டாம்’என்ற நிபந்தனையுடன் தெரிவித்தார்கள்.(கூட்டணிகள் இறுதியாகும்வரை மீடியாவுடன் பேசவேண்டாம் என்பது அம்மாவின் உத்தரவாம்.) ஏற்கெனவே ஜெயலலிதாவின் திருச்சி, கோவை, மதுரை கூட்டங்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அ.தி.மு.க. தொண்டர்கள் புதிய உற்சாகத்துடன் இந்தத் தேர்தலைச் சந்திக்கின்றனர். எம்.ஜி.ஆர். உள்ளவரை அ.தி.மு.க.வின் எஃகு கோட்டையாக இருந்த தென்மாவட்டங்கள், மு.க.அழகிரியின் அதிரடி அரசியலால் சற்று கை நழுவிப் போய்விட்ட நிலையில்,அவற்றை எப்படி மீட்பது என்பது அ.தி.மு.க.வுக்கு விடப்பட்ட மற்றொரு மிகப் பெரிய சவாலாக இருக்கும். அதே நேரத்தில் கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை மற்றும் சேலத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கிய கொங்குமண்டலம் அ.தி.மு.க.வின் பெரிய வாக்கு வங்கியாக இப்போதும் இருக்கிறது.

ஸ்பெக்ட்ரத்திற்கு பதிலடியாக அ.தி.மு.க.காலத்தில் மன்னார்குடி குடும்பத்தினர் அடைந்த ஆதாயங்கள்,செய்த அட்டகாசங்கள், பெங்களூரில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை உள்பட நெகடிவ் விஷயங்களை நிச்சயமாக தி.மு.க. எடுத்துக்கொண்டு ஒரு கை பார்க்கும் என்பதில் சந்தேகமில்லை. அ.தி.மு.க.வுக்கு ஏன் ஓட்டுப் போட வேண்டும், ஏன் கூடாது,பா.ம.க.வுடன் கூட்டணி வைக்கலாமா, தே.மு.தி.க.வுடன் கூட்டணியென்றால் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கும் போன்ற கேள்விகளுடன் பொதுமக்களை அணுகினோம். சென்னையில் தொடங்கிய இந்த நெடிய சர்வே பயணம் நாகர்கோயில்வரை தொடர்ந்தது.1000 பேரிடம் எடுத்த சர்வேயில் நாம் கண்ட முக்கியமான விஷயங்கள்.

அ.தி.மு.க. விஜயகாந்தின் தே.மு.தி.க.வுடன் சேர்ந்தால் நிச்சயம் வெற்றிக் கூட்டணியாக அமையும் என்று சொன்னவர்கள் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ப்பதால் பெரிய பயன் எதுவும் வந்துவிடாது என்று ஏறத்தாழ எல்லா பகுதி மக்களுமே உறுதியாகச் சொன்னார்கள்.

‘தென்மாவட்டங்களில் மு.க.அழகிரிக்கு இணையாக கட்சியைப் பலப்படுத்த, தொண்டர்களை அரவணைக்க செல்வாக்கான தலைவர்கள் இல்லை என்பது பெரிய மைனஸ்’ என்றார்கள்.

அதேசமயம், விலைவாசி உயர்வு, குடும்ப அரசியல், இலங்கைப் பிரச்னை, மணல் கொள்ளை, பால் உற்பத்தியாளர் பிரச்னை ஆகியவை அ.தி.மு.க. பக்கம் வாக்குகளைச் சாய்க்கும் என்றனர் கம்பம்,தேனி பகுதிகளைச் சேர்ந்தவர்கள்!

அ.தி.மு.க.வின் ஸ்பெக்ட்ரம் பிரசாரங்களை தி.மு.க.வின் டி.வி, கேஸ் ஸ்டவ் போன்ற இலவசங்கள் ஓரளவு சரி செய்யும் என்றார்கள் கொங்கு மண்டலத்தில் ஒரு சாரார்.

சீட்கள் பங்கீட்டில் ஜெயலலிதா விட்டுக் கொடுத்துப் போகவேண்டும். பொதுவாகவே அவரது ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ அணுகுமுறையில் மாற்றம் வேண்டும் என்றார்கள் பரவலாக!

85 சதவிகிதம் பேர், ஜெ. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ரௌடியிஸம் ஒழிந்துவிடுகிறது என்றார்கள்.

எம்.ஜி.ஆர்.மறைவிற்குப்பிறகு 1989-ம் ஆண்டிலிருந்து தமிழக அரசியலில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மாறி மாறி வந்திருக் கிறது என்பது ஜெயலலிதாவிற்கு இம்முறை ஆறுதலான செய்தியாக இருந்தாலும், 2011 தேர்தல் நிச்சயமாக அவருக்கு அக்னிப் பரீட்சையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!

தீபிகா தேவி, கொளத்தூர்: அம்மாவைப் பொறுத்தவரையில் அவருக்கு வாரிசுன்னு யாரும் கிடையாது. ஸோ.. குடும்பத்துக்காக பதவி, மீடியா, பிஸினஸ் வாய்ப்புகளை அவங்க பரிந்துரை செய்ய மாட்டாங்க.

பாண்டி, ஆயிரம்விளக்கு :

சரியான சமயத்தில் சரியாக முடிவெடுப்பதில் ஜெயலலிதாவுக்குத் திறமை கிடையாது.திடீர்னு தடாலடியாக தன்னிச்சையா செயல்படுறது ஜெயாவின் மைனஸ்.

சுரேஷ், கரூர்: தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விலைவாசி உயர்வு, அளவுக்கதிகமான ஊழல், குடும்ப அரசியல் இவை மூன்றும் தலைது£க்கி தமிழ்நாடு பின்னோக்கிச் சென்றுவிடும்.

மாலினி, கே.கே.நகர்:

கலைஞர் ஆட்சியில் அரசாங்க ஊழியர்களுக்கு, நல்ல லாபம் இருக்கிறது. ஆனா, ஜெயலலிதா வந்தா சலுகையே கிடைக்காது. .

பாலாஜி, வடவள்ளி:

அ.தி.மு.க. அணிக்கு பா.ம.க.வை விட தே.மு.தி.க. வந்தால் அந்த கூட்டணிதான் பலமாகும்.மக்கள் ஆதரவை திருப்பச் செய்யும்.

பழனிச்சாமி, ஒட்டன்சத்திரம்:

என் ஓட்டு தி.மு.க.விற்குத்தான். இலவச டி.வி. கேஸ், இலவச வீடு என மக்கள் திட்டங்கள் ஏராளமாகச் செய்திருக்கிறார்கள்.

Thanks to kumudam.com

இச்செய்தி குறித்த படங்கள் பார்க்க....

http://www.thedipaar.com/news/news.php?id=24496

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.