Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண மாவட்டம் உட்பட 75 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை ஒத்திவைக்க முடிபு தேர்தல் திணைக்களத் தகவல்கள் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண மாவட்டம் உட்பட 75 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை ஒத்திவைக்க முடிபு தேர்தல் திணைக்களத் தகவல்கள் தெரிவிப்பு

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-19 07:52:46| யாழ்ப்பாணம்]

யாழ்.மாவட்டம் உட்பட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை எதிர்த்து கட்சிகளினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள 75 உள்ளூராட்சி சபைக ளிற்கான தேர்தலை ஒத்திவைப்பதற்கு தேர்தல்கள் திணைக்களம் முடிபு செய்துள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் திணைக்களத் தகவல்களிலிருந்து மேலும் தெரியவருவதாவது,

நாடளாவிய ரீதியில் 301 உள்ளூராட்சி சபைக ளுக்கு எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி தேர்தலை நடத்த தேர்தல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்தது.இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த ஜனவரி 24 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.இதில் யாழ்.மாவட்டத்தில் 13 பிரதேச சபைகள், 03 நகர சபைகள் உட்பட 16 உள்ளூராட்சி சபைகளுக்குமான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனுக்கள் தேர்தல்கள் திணைக்களத்தால் நிராகரிக்கப் பட்டிருந்தது.

அத்துடன் நாடளாவிய ரீதியில் பிரதான கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக் கள் தாக்கல் செய்த சில வேட்பு மனுக் கள் தேர்தல்கள் திணைக்களத்தால் நிராகரிக்கப்பட்டன. இவ்வாறு வேட்பு மனுக்கள் நிராகரிக் கப்பட்டமைக்கு எதிராக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட பிரதான கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் கொழும்பு மேன் முறையீட்டு நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளன.

இதற்கமைய யாழ்.மாவட்டம் உட்பட 75 உள்ளூராட்சி சபைகளின் வேட்பு மனு நிராகரிப்புத் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ் வழக்குத் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு தாமதமாவதால் தேர்தலிற்கான வாக்குச்சீட்டு உட்பட ஆவணங்களை அச்சிடுவது தாமதமாகின்றது. இதனால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள யாழ். மாவட்டத்திலுள்ள 16 உள்ளூராட்சி சபைகள் உட்பட நாடளா விய ரீதியிலுள்ள 75 சபைகளிற்கான தேர்தலை தேர்தல்கள் திணைக்களம் ஒத்திவைக்கத் தீர்மானித்துள்ளது.

இதேவேளை அக்குரஸ்ஸ, அக்மீ மன, மொனராகலை ஆகிய பிரதேச சபைகளுக்கு எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு மேன் முறை யீட்டு நீதிமன்றம் இடைக் கால தடை உத்தரவு விதித்துள்ளது. தமது வேட்பு மனு நிராகரிப்புக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் சுயேட்சைக்குழுக்களும் தாக்கல் செய்த மனு ஒன்றை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

valampurii

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.