Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அமைச்சரைக் கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கிழமை, 22, பிப்ரவரி 2011 (13:47 IST)

இலங்கை அமைச்சரைக் கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்

விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் இந்த இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கை சென்றார்.

விமானத்தில் சென்று கொழும்பில் இறங்கிய திருமாவளவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கொழும்பு சென்ற திருமாவளவனை அதே விமானத்தில் திருப்பி அனுப்பியது இலங்கை.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனை இலங்கை அரசு திருப்பி அனுப்பி இருக்கிறது.

திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர். எந்த நாட்டிற்கும் எப்போது வேண்டுமானாலும் செல்ல இந்த பாஸ்போர்ட் அனுமதிக்கும். ஆனால் அவரை இலங்கை திருப்பி அனுப்பியது இந்திய அரசை அவமதித்த செயலாகும்.

சென்னை நீதிமன்றத்தால் கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்ட குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அமைச்சர் இந்தியாவுக்கு தாராளமாக வந்துசெல்கிறார்.

ஆனால் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரை இலங்கை திருப்பி அனுப்புகிறது. இது பெரும் அவமானம்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தேடப்பட்ட குற்றவாளி என அறிவிக்கப்பட்ட இலங்கை அமைச்சரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த சர்வதேச காவல்துறை மூலம் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

nakkheeran

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேச்சில் மட்டும்தான் இந்தக் கோமாளிகளின் கூத்து!

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் அனுதாப வாக்குகளை அள்ளும் நோக்கில் கருநாநிதி- ஸோனியாக் கும்பல் திருமாவை இலங்கைக்கு காவடி தூக்கும்படி அனுப்பியது. ஆனால், சிங்களமோ தமிழக - ஈழத்தமிழ் மீனவர் பிரச்சனையினால முடிந்தளவிற்கு லாபம் பெறும் நோக்கில் மீண்டும் ஆறிய புண்ணைக் கிளரிப் பார்த்துள்ளது. திருமா திருப்பி அனுப்பப்பட்டதன் காரணமே அவர் வல்வெட்டித்துறை சென்றால் ஆத்திரமடைந்திருக்கும் ஈழத் தமிழ் மீனவர்கள் அவரைக் கொன்று விடுவார்களாம் !!!!ஆக ஒரு நாய்க்கு இன்னொரு நாய் ஆப்படித்திருக்கிறது.

ஆக எமது மீனவர் பிரச்சனையாயிருந்தாலென்ன, தேசியத் தலைவரின் தாயாரின் அஞ்சலி நிகழ்வாயிருந்தாலென்ன லாபமடைய நினைப்பது சிங்கள அரசும், இந்திய- -தமிழக அரசியல் வாதிகளும்தான். இதில் எமது நலனென்பது எங்கோ காணாமல்ப் போய்விட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.