Jump to content

தமிழ் இணைய பரப்பில் புதிய வரவாக தினக்கதிர்.


Recommended Posts

தமிழ் இணைய பரப்பில் புதிய வரவாக தினக்கதிர்.

ஊடகத்துறை வரலாறு அல்லது தொடர்பாடல்துறை வரலாறு என்பது மனித இனத்தின் தோற்றத்தோடு ஆரம்பித்து விட்டது எனலாம்.

தனக்கு கிடைத்த ஒன்றை தனக்கென பதுக்கி வைக்க அல்லது அந்த சொத்திற்கு தானே சொந்தக்காரன் என உரிமை கொண்டாட பழகிக்கொண்ட மனிதன் தனக்கு கிடைத்த செய்தியை மட்டும் ஓடிஓடி அறிவித்தான். அந்த மனித பழக்கத்தின் தொடர்ச்சிதான் ஊடகங்கள் தனக்கு கிடைத்த செய்தியை முந்திக்கொண்டு அறிவிப்பதற்காக இரவு பகலாக கண்விழித்து காத்திருக்கின்றன.

ஊடகத்துறையின் முதல் வரவான பத்திரிகைதொழிலின் வரலாறு என்பது மனிதன் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள எடுத்த நீண்டகால முயற்சியின் வரலாறு என இலங்கை தமிழ் ஊடகத்துறை வரலாறு என்ற நூலை எழுதியவரும் என்னுடைய ஆசானுமாகிய இ.சிவகுருநாதன் தன்னுடைய நூலில் தெரிவித்திருக்கிறார்.

தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் பரப்பிக்கொள்ளவும் மனிதன் எடுத்துக்கொண்ட ஒரு நீண்டமுயற்சியின் கதைதான் ஊடகத்துறையாகும்.

அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் வரிசையில் அச்சு ஊடகமான பத்திரிகையே முதலில் தோன்றியதாகும். இந்த வரிசையில் இறுதியாக தோற்றம் பெற்றிருக்கும் இணையத்தளங்கள் இன்று உலகில் அதிகம் வாசகர்களை கொண்ட ஊடகங்களாக திகழ்ந்து வருகின்றன. இணையத்தளங்களை பத்திரிகைகளின் மறுபிறப்பு என்று கூறலாம். ஒலி ஒளி ஊடகங்களுக்கு இணையாக பெரும் வாசகர் பரப்பை இன்று இணையத்தளங்களும் கொண்டிருக்கின்றன.

பத்திரிகைகள் அல்லது ஒலி ஒளி ஊடகங்களுக்கு இருக்கும் எல்லைகளைப்போல் அன்றி எல்லைகடந்து உலகெங்கும் உள்ள மக்களின் வீட்டு முற்றத்திற்கு சென்று செய்தி சொல்லும் ஊடகமாக இன்று இணையத்தளங்கள் வளர்ச்சி பெற்றிருக்கின்றன.

மனித உரிமை பட்டயத்தில் தகவல் அறியும் உரிமை பற்றியும் முக்கியமாக குறிப்பிடப்படுகிறது. மனிதனுக்கு இருக்கும் உரிமைகளில் முக்கிய உரிமைகளில் ஒன்று தகவல் அறியும் உரிமையாகும். அந்த உரிமையை வழங்கும் முக்கிய பொறுப்பு ஊடகங்களிடம் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தமிழில் வெளிவரும் அல்லது ஆசிய நாடுகளிலிருந்து வெளிவரும் ஊடகங்களில் பெரும்பாலானவை தகவல் அறியும் மனித உரிமையை சரியாக பேணி வருகின்றனவா என்றால் இல்லை என்ற பதில்தான் வருகிறது.

தமக்கு சாதகமான தகவல்களை மட்டுமே வெளியிடும் வழக்கத்தை சில ஊடகங்கள் கொண்டிருக்கின்றன. அரசுகள் மற்றும் அதிகார ஆதிக்கத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு சாதகமான செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும் என நிர்ப்பந்திக்கின்றன. இதனால் தகவல் அறியும் உரிமையை மனிதன் இழந்து நிற்கிறான். தமிழர் சமூகம் இந்த பாதிப்பை நிறையவே சந்தித்திருக்கிறது.

கடந்த மூன்று தசாப்தகாலமாக ஊடகத்துறையில் முழுநேரமாக பணியாற்றி வரும் என்னைப்போன்றவர்கள் சந்தித்த சவால்களும் வேதனைகளும் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சவால்கள் அச்சுறுத்தல்கள் வந்தாலும் வெளிப்படைத்தன்மையோடு பக்கசார்பின்றி தகவல்களை சொல்வதுதான் பத்திரிகையாளனுக்கு அழகு.

எதையும் வெளிப்படை தன்மையோடு செய்யும் போது எந்த சவால்களையும் வெற்றி கொள்ள முடியும். ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு அல்லது ஊடகங்களுக்கு வெளிப்படைத்தன்மை என்பது மிக முக்கியமானதாகும்.

முகமூடியை போட்டுக்கொண்டு தகவலை சொல்வதை விட தன்னை அடையாளம் காட்டிக்கொண்டு செய்தியை சொல்லும் போதுதான் மக்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்படுகிறது. அந்த செய்தி தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டிய கடமையும் ஏற்படுகிறது. முகமூடியை போட்டுக்கொண்டு செய்தி சொல்பவர்கள் பொறுப்பு கூறும் கடமையிலிருந்து தப்பித்து கொள்கிறார்கள்.

எனவேதான் இந்த இணையத்தளத்தை ஆரம்பிக்கும் இவ்வேளையில் நாங்கள் யார் என்பதை வெளிப்படைத்தன்மையோடு சொல்ல வேண்டியதும் எமது கடமை என்பதை உணர்ந்து கொள்கிறோம்.

இது தனிமனித முயற்சியல்ல. இலங்கையில் ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவத்தோடு மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்திருக்கும் ஊடகவியலாளர்கள் தற்போதும் இலங்கையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர்கள் என பலரையும் இணைத்துக்கொண்டு இந்த முயற்சியை ஆரம்பித்திருக்கிறோம்.

இந்த வேளையில் எம்மை விட்டு பிரிந்து போன என்னுடைய ஊடகத்துறை நண்பர்களான றிசர்ட்டி சொய்சா முதல் நிமலராசன் நடேசன், சிவராம், லசந்த ஆகியோர் எந்த இலட்சியத்தோடு பயணித்தார்களோ அதற்காக தினக்கதிர் இணையம் தன்னை அற்பணித்துக்கொள்ளும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த முயற்சிக்கு வாசகர்களாகிய உங்கள் ஆதரவு எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

நன்றி

இரா.துரைரத்தினம்

ஆசிரியர் , தினக்கதிர் இணையம்.

http://www.thinakkathir.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டு வருவதை ஏற்கமுடியாது – அமைச்சர் டக்ளஸ் 15 JUN, 2024 | 09:27 PM   நாட்டில் இயல்பான சூழ்நிலை காணப்படும் இந்த காலகட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டு வருவதை ஏற்கமுடியாது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அத்தகைய செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  யாழ் பிராந்திய ஊடகவியலாளரான பிரதீபன் வீட்டின் மீது அண்மையில் நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் தொடர்பில் கருத்து கூறும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  இதன்போது அவர் மேலும் கூறுகையில்,   ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாது. கடந்த காலங்களில் நாட்டில் எத்தனை தாக்குதல்கள் அச்சுறுத்தல்கள் கொலைகள் எல்லாம் நடந்திருந்தது என உங்களுக்கு தெரியும். அன்று அதை செய்தவர்கள் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிற மாதிரியான போர்வையிலேயே அதை முன்னெடுத்திருந்தனர். குறிப்பாக ஊடகவியலாளர் மீது தங்களுடைய வஞ்சகத்தை தீர்த்துக் கொள்வது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அதன் பழியை ஈ.பி.டி.பி மீது இலகுவாக போட்டு தாம் தப்பித்துக்கொள்வதாக இருந்தது. இதுதான் கடந்த காலங்களில் நடந்தது. அதேபோன்றுதான் இன்றைக்கும் இந்த சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. ஆனால் துரதிஸ்ரவசமாகவோ அதிர்ஷ்டவசமாகவோ ஈ.பி.டிபியின் பெயர் இன்று அத்தகைய செயற்பாடுகளில் பயன்படுத்துவது இல்லாது போய்விட்டது. அது உணர்வினுடைய வெளிப்பாடாக இருக்கலாம் அல்லது அந்த வன்முறைக்கு தலைமை தாங்கியவர்கள் இன்று அடியோடு இல்லாமையாகவும் இருக்கலாம்.  கடந்த காலத்தில் வன்முறைக்கு தலைமை தாங்கியவர்கள் ஈ.பி.டிபினுடைய மாற்றிக் கொள்கை அல்லது மாற்று வேலைதிட்டத்தை விரும்பாததால் அல்லது தாங்கள் செய்வது அம்பலப்பட்டு போகும் என்பதை விரும்பாமல் ஈ.பி.டி.பியை ஏதோ ஒரு வகையில அழிக்க முற்பட்டார்கள். குறிப்பாக உயிர் அச்சுறுத்தல் உயிராபத்துகளையும் ஏற்படுத்தியது மற்றது ஈ.பி.டிபியுடைய நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிகளை செய்தார்கள். அதைத்தான் நான் இந்த சந்தர்ப்பத்தில் சகோதரர் பிரதீபன் விடயத்திலும் கூறவிரும்புகின்றேன்.  அந்தவகையில் எல்லாரும் விழிப்பாக இருந்து உண்மை வெளிவருமானால் இவ்வாறான சம்பவங்களை நாங்கள் இல்லாமல்செய்யலாம் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடததக்கது. https://www.virakesari.lk/article/186151
    • சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைக்கும் சம்பவ இடத்தினை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் பார்வையிட்டார்...! 15 JUN, 2024 | 09:25 PM மூதூர் கிழக்கு சேனையூர் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்குள மலை பிரதேசத்தில் மலை உடைப்பதால் தமக்கு பாதிப்புள்ளதாக கல்மலை உடைக்கும் போது எதிர்ப்பு தெரிவித்த 10 பேர்  கடந்த 11ம் திகதி சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 12 ஆம் திகதி மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் அனைவரும் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்கள். இது தொடர்பான வழக்கை மூதூர் நீதிமன்றில் சம்பூர் பொலிஸார் தாக்கல் செய்ததுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு  இன்று (15) விஜயம் மேற்கொண்டு ஆராய்வதாகவும் நீதிபதி தெரிவித்திருந்தார். அந்த வகையில்  இன்று குறிப்பிட்ட இடத்திற்கு மூதூர் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டுச் சென்றார். குறித்த மலை உடைப்பின் காரணமாக அருகில் உள்ள விவசாயம்,போக்குவரத்து, கால்நடை வளர்ப்பு போன்றவற்றுக்கு பாதிப்பிருப்பதாகவும் கிராமத்தவர் ஒருவர் தெரிவித்தார். இங்கு வருகை தந்த சிரேஷ்ட சட்டத்தரணி தங்கமுத்து ஜயசிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,  சேனையூர் நெல்லிக்குள மலையைச் சுற்றி காணிகள் இருக்கின்றன. இங்கு கல் உடைப்பதற்கு எந்த வகையில் அனுமதி வழங்கப்பட்டது என்று எமக்கு தெரியாது.  நீதிமன்றத்தில் இந்த விடயம் இருப்பதால் எமக்கு கருத்து சொல்ல முடியாதுள்ளது. இதனால் இக்கிராம மக்கள் கஷ்டப்படுகிறார்கள் துன்பப்படுகிறார்கள் என்று மாத்திரம் எமக்கு தெரிகின்றது என்றார். தற்போது இந்த இடத்தினை நீதிபதி அவர்கள் வந்து பார்வையிட்டு சென்றதினால் 20 ஆம் திகதி எமக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நாம் நம்புகிறோம் என்றும் குறிப்பிட்டார்.  https://www.virakesari.lk/article/186149
    • 15 JUN, 2024 | 09:48 PM காரைதீவை சொந்த இடமாக கொண்ட வைத்திய கலாநிதி இ.தக்சிதன் உகந்தை மலை முருகன் ஆலயத்தில் இருந்து வருகின்ற வழியில் பாணமை கடலில் தவறி விழுந்து இன்று சனிக்கிழமை இரவு இறந்துள்ளார். இவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வந்தவர். கணித பாட முன்னாள் உதவி பணிப்பாளர் எஸ்.இலங்கநாதனின் மூத்த புதல்வன் ஆவார். இவருடைய சடலம் மரண பரிசோதனைக்காக பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  நேற்று வெள்ளிக்கிழமை காலை உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் எஸ்.அக்சயன் லகுகல கடலில் தவறி விழுந்து இறந்த சோகத்தில் இருந்து மீளாத காரைதீவு மக்களுக்கு மற்றுமோர் பேரிழப்பை இந்த வைத்தியரின் இழப்பு ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/186166
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.