Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் சிங்கள குடியேற்றம்: அனுமதிக்கப்போவதில்லை, போராடுவோம்

Featured Replies

மட்டக்களப்பு மாவட்டத்தில் 74.5 சதவீதம் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தை பாதிக்கச் செய்யும் வகையிலும், சிங்கள பிரதிநிதித்துவத்தை இம்மாவட்டத்தில் உருவாக்கும் வகையிலும் அரசாங்கம் பல திட்டங்களை தீட்டி செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் ஏற்படுத்தப்படும் சிங்களக் குடியேற்றங்களை அனுமதிக்க முடியாது என ஊத்துச்சேனை, வடமுனை ஆகிய கிராமங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டங்களில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

அரசாங்கம் ஊத்துச்சேனை, வடமுனை ஆகிய பகுதிகளில் மதுருஓயா நீர்த்தேக்க திட்டத்தின் கீழ் தற்போது வெளியிடங்களில் உள்ள 100 சிங்கள மக்களுக்கு ஒருவருக்கு 50 ஏக்கர் என்ற வகையில் 5000 ஏக்கர் காணிகளை வழங்கியுள்ளது. இவ்வாறே இன்னும் 150 சிங்களவர்களுக்கு காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கின்றது.

ஆனால் வளமான காணிகளில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி தமிழரின் இன விகிதாசாரத்தை குறைத்து சிங்கள பிரதிநிதித்துவம் அற்ற ஒரு மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டமாகும். அரசாங்க அமைச்சர்கள் ஆதரவு வழங்கியதனாலேயே இதை இவர்களால் மேற்கொள்ள முடிகின்றது.

அரசுடன் இயங்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் இதனை தடுக்க முன்வரவில்லை? நாங்கள் அரசாங்க கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல ஆனாலும் எங்கள் மாவட்டத்தில் இவ்வாறான குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதை அனுமதிக்க முடியாது.

அதுமட்டுமின்றி வவுணதீவு பிரதேசத்தில் 17முஆக்கு வெளிமாவட்ட சிங்கள மக்களால் எங்களது கால்நடை வளர்ப்பு பகுதியில் வேலியிடப்பட்டுள்ளது. இதை அகற்றுவதற்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் அது இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு அனுமதி வழங்கிக் கொள்ளப்படவில்லை.

இதற்கு அனுமதி வழங்கியது யார்? இத்திட்டமிட்ட குடியேற்றம் எங்கள் தமிழ் இனத்துக்கு எதிராக இவ் அரசாங்கம் மேற்கொள்ளும் சதித்திட்டமாகும். இவ்வியடமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவாக அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அத்தோடு 1200 ஏக்கர் நிலப்பரப்பில் வாகரை பிரதேசத்தில் கிருமிச்சை பகுதியில் கடற்படை முகாம் தாபிக்கப்படுகின்றது.

இதில் இராணுவ உயர் அதிகாரிகளுக்கும், அவர்கள் குடும்பங்களுக்கும் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன. இவையும் எங்கள் இன விகதாசாரத்தையும், பிரதிநிதித்துவத்தையும் பாதிக்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறான நடவடிக்கையில் அரசாங்கத்துடன் இருக்கும் அரசியல் வாதிகள் என்ன செய்துள்ளனர். இவ்விடயம் எமது மாவட்டத்தில் நடக்கின்றது என எப்போதாவது மக்களுக்கு சுட்டிக் காட்டினார்களா? அல்லது நடவடிக்கை எடுத்தார்களா? இல்லை அவர்களால் அரசாங்கத்துக்கு எதிராக பேசமுடியாது.

எனவே தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்து அவர்கள் இந்நாட்டில் சகல உரிமையுடன் வாழவேண்டும் என்பதற்காக அரசாங்கத்தின் அமைச்சு பதவிகளுக்கோ, ஆசை வார்த்தைகளுக்கோ, அவர்களால் வழங்கப்படும் கோடிக் கணக்கான நிதிகளுக்கோ சோரம் போகாது கொள்கைக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி எங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பாகும்.

இன்று அதனை சிதைக்க வேண்டும் என பல நடவடிக்கைகள் அரசாங்க கட்சியாலும், அரசாங்கத்தின் ஒட்டுண்ணி கட்சிகளாலும் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்காக எனக்கு பல தடவை அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வழங்கப் போகின்றார்கள் எனக்கூட வெளியிட்டு வருகின்றனர்.

என்னைப் பொறுத்தவரை நான் எனது கொள்கையில் இருக்கமானவன் மக்கள் எனக்கு மாவட்டத்திலே பெரும்பாலான வாக்களித்தது அரசாங்கத்தால் வழங்கப்படும் கோடிக்கணக்கான நிதியை நான் பெறுவதற்கோ, அரசாங்கத்தின் அமைச்சு பதவி, சுகயோகம், சொகுசு வாகனம் என்பவற்றை பெறுவதற்கோ அல்ல எமது மக்கள் இலட்சக்கணக்கில் இறந்தும், அங்கவீனராகியும், சொத்துக்கள் உடமைகளை இழந்தும், அகதிகளாகியும், அநாதைகளாகவும் உருவாக காரணமாக இருந்த எங்கள் சுதந்தி உரிமைப் போராட்டம் ஓய்வு பெற்றாலும் அரசியல் ரீதியாக எம் தமிழ் மக்களுக்கான வடக்கு, கிழக்கு மண்ணில் சுதந்திரமான ஒரு சுயநிர்ணய உரிமையை பெற்று நிம்மதியாக எதிர்கால தமிழ் சந்ததியினரை வாழ வைப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த அரசியல் விஞ்ஞாபனத்தின் முடிவின் பொருட்டுமே மக்கள் எனக்கு வாக்களித்தனர். எனவே இதற்காக எனது உயிர் உள்ளவரை இம்மக்களின் விடிவுக்கான கொள்கையில் இருந்து மாறாது இதற்காக என்னை அர்ப்பணித்துச் செயற்படுவேன் என உறுதி கூறுகின்றேன். நான் தனிமனிதன் என்னுடன் எனது பரம்பரை நீங்குகின்றது. எனக்கு உழைத்து சேமிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எனது ஆத்மா பிரியும் போது அதனுடன் செல்லக் கூடிய நல்ல தர்மத்துடன் செல்ல வேண்டும் என்ற சுயநலம் மட்டுமே என்னிடம் உண்டு.

ஆகவே எமது உறவான தமிழ் மக்களே உங்கள் உறவுகள் இங்கு மாற்றுக் கட்சியில் போட்டியிடலாம் உங்கள் உறவு என்பதற்காக தமிழ் மக்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையிலான நிலையில் தமிழ் மக்களின் சின்னமான வீட்டுச் சின்னத்தை விடுத்து வேறு சின்னங்களுக்கு வாக்களிக்காதீர்கள்.

உங்கள் சொத்து உங்கள் உரிமைச் சின்னம் வீட்டுச் சின்னம் கண்ணப்பரமாத்மா பாரத யுத்தத்தில் துரியோதனன் படையில் நின்ற தனது உறவுகளை கண்டு யுத்தத்திற்கு தயங்கிய அருச்சுனனுக்கு கடமையை செய் பலனை எதிர்பாராதே செயலில் துறவை மேற்கொள் என கூறிய கீதை உபதேசப்படி நீங்களும் 17ம் திகதி வாக்குச்சாவடிக்கு காலை வேளையில் சென்று உங்கள் புனிதமான வாக்குகளை பணத்துக்காவோ, மதுபான போத்தலுக்காகவோ, வெள்ள நிவாரணத்துக்காகவோ, போலி வார்த்தைகளுக்காகவோ விற்றுவிட வேண்டாம்.

உங்கள் உறவுகள் வீடு தவிர்ந்த வேறு சின்னங்களில் போட்டியிட்டாலும்; எமது தர்மமான தமிழரின் உரிமைச் சின்னம் என விளங்கும் வீட்டுச்சின்னத்துக்கு வாக்களித்து எதிர்காலத்தில் பல்துறையிலும் உரிமை இழந்து தவிர்க்கும் தமிழ் இனம் தலைநிமிர்ந்து வாழ உதவுமாறு வேண்டுகின்றேன்.

இன்று சில அரசியல்வாதிகள் நாங்கள் கிழக்கின் தமிழ் கட்சி ஏனையவை வடக்கு மாகாணத்தையும் இணைத்த கட்சிகள் எமது கிழக்கின் தனித்துவத்தை பேணவேண்டும் எனக்கூறி உங்கள் முன்நிலையில் வந்துள்ளனர்.

எங்களைப் பொறுத்தவரையில் கிழக்கு வடக்கு யாவும் எமது பாரம்பரிய தார்மிக பூமியாகும். இலங்கையில் எங்கு எங்கள் தமிழ் இனம் வாழ்ந்தாலும் அவர்கள் எங்கள் உறவுகளே, எமக்கு வடக்கு, கிழக்கு என்ற பேதம் வேண்டாம். எமது தமிழ் இனம் என்ற பற்றுடன் உறுதியாக இருந்து எமது நோக்கத்தை நாம் நிறைவேற்ற வேண்டும் என்பதே அடியனின் வேண்டுதலாகும்.

இப்பிரதேசவாதம் எமது நோக்கத்தைச் சிதைத்து விடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இதனால் இவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு அடிமையாகி விடாதீர்கள். எதற்கும் துணிந்து நின்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் உங்களுக்கும் எச்சரிக்கைகள் வரலாம் பயப்படாதீர்கள் இன்று என்னை கொல்வதற்குக் கூட சில அரசியல் வாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.

அவர்கள் யார் என்பதைக்கூட சில உயர்மட்டங்களின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளேன். இவர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து எனது மக்களுக்கான உரிமைக்குரலை யாரும் என்னிடம் முடக்கமுடியாது. தேர்தல் காலத்திலும் பல அச்சுறுத்தல், தற்போதும் உயிர் அச்சுறுத்தல் இவற்றைத் தாங்கித்தான் எனது செயற்பாடு நடந்து கொண்டிருக்கின்றது.

நான் இந்த மண்ணில் இறக்கலாம். ஆனால் எமது தமிழ் இனத்தின்; உரிமைப் பயணத்தை யாரும் அழிக்க முடியாது இதற்காக யோகேஸ்வரனைப் போல் பலர் இவ்மண்ணில் உதயமாவார்கள். எப்போவாவது ஒருநாள் எமது இனம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுதியான செயற்பாட்டால் இந்நாட்டில் தலைநிமிர்ந்து நிற்கும் என்பதை உறுதி கூறுகின்றேன்.

17ம் திகதி தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் இத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கொடி வடக்குக் கிழக்கின் உள்ளுராட்சி மன்றங்களில் 18ம் திகதி உதயமாக வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என்று சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.