Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லை. மாவட்டத்தின் முக்கிய இடங்களை கையகப்படுத்த அரசாங்கம் முயற்சி - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லை. மாவட்டத்தின் முக்கிய இடங்களை கையகப்படுத்த அரசாங்கம் முயற்சி - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு

யுத்தம் முடிபடைந்து 22 மாதங்களாகியும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 27 கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் மீள் குடியமர்த்தப்படவில்லை.இதில் ஒன்பது (9) பிரிவுகளில் கண்ணி வெடியகற்றுவதற்காக அனுமதி தொடர்ந் தும் மறுக்கப்பட்டு வருகிறது.ஏனைய 18 கிராம அலுவலர் பிரிவுகளில் கண்ணி வெடி அகற்றும் வேலைகள் மிகமிக மந்தகதியில் இடம்பெற்றுவருகின்றன.

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளி வாய்க்கால் மேற்கு, அம்பலவன்பொக் கணை, புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு மேற்கு, மல்லிகைத்தீவு, ஆனந்தபுரம், மந்துவில், சிவநகர் ஆகிய ஒன்பது கிராம அலுவலர் பிரிவுகளில் கண்ணிவெடி அகற்றுவதற்கான வேலைகளை ஆரம்பிப்பதற்கு இராணுவம் இன்னமும் அனு மதிக்கவில்லை.

இவற்றில் கடல்வளம் மிக்க முள்ளி வாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு, அம்பலவன்பொக்கணை ஆகிய மூன்று கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய கடற்கரைக் கிராமங்களை கையகப்படுத்த அரசு திட்டமிட்டு வருவதாக அறியமுடிகின்றது.இவற்றில் அம்பலவன் பொக்கணை கிராம அலுவலர் பிரிவில் (கி.அ.பி.) 12 கிராமங்களைச் சேர்ந்த 468 குடும்பங்களும், முள்ளிவாய்க்கால் மேற்கு கி.அ.பி.இல் 05 கிராமங்களைச் சேர்ந்த 321 குடும்பங்களும், முள்ளிவாய்க் கால் கிழக்கு கி.அ.பி.இல் ஒரு கிராமத் தைச் சேர்ந்த 69 குடும்பங்களும் பாதிக் கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் இன்னமும் தேடுதல் இடம் பெற்றுவருவதாகவும் கண்ணிவெடி அகற்று வதற்கான அனுமதி வழங்க இன்னும் நீண்ட காலம் செல்லும் என்றும் சாட்டுக்கள் கூறப்படுவதாகவும் அறியமுடிகின்றது.அவ்வாறு தேடுதல் முடிந்து கண்ணி வெடி அகற்றுவதற்கான அனுமதி வழங்க நீண்டகாலம் செல்லும் என்றும் அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டாலும் கண்ணிவெடி அகற்றி முடிக்க இன்னும் அதிக காலம் எடுக்கும் என்பதனையும் சாட்டாகக் கூறிக்கொண்டு அப்பகுதி மக் களை வேறு இடத்தில் குடியமர்த்துவதற் கான மாற்று இடம் தெரிவு செய்வதற் கான முயற்சிகள் இரகசியமாக இடம் பெறுவதாக அறிய முடிகின்றது.

இதேபோன்று இன்னமும் கண்ணி வெடி அகற்ற அனுமதி அளிக்கப்படாத புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு மேற்கு, மல்லிகைத்தீவு, ஆனந்தபுரம், மந்துவில், சிவநகர் ஆகிய பிரிவுகளையும் கையகப் படுத்தும் உள்நோக்கம் இராணுவத்தின ரிடமும் அரசாங்கத்தினரிடமும் இருப்ப தனாலா இப்பகுதிகள் கண்ணிவெடி அகற்றுவதற்கு 22மாதங்கள் கடந்தும் அனுமதி வழங்கப்படவில்லை என நாம் சந்தேகிக்கின்றோம். கரைத்துறைப்பற்று உ.அ.அ பிரி வில் 13கிராம அலுவலர் பிரிவுகளிலும் புதுக்குடியிருப்பு உ.அ.அ பிரிவில் 13 கிராம அலுவலர் பிரிவுகளிலும், ஒட்டு சுட்டான் உ.அ.அ பிரிவில் 1 கிராம அலுவலர் பிரிவிலும் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்படவில்லை.

கண்ணிவெடி அகற்றப்படும் பிரிவு களிலும் வேலைகள் மிகவும் மந்தகதி யில் மேற்கொள்ளப்படுகின்றது.இச் செயற்பாட்டில் உள்நோக்கம் இருப்ப தாகவே நாம் சந்தேகிக்கின்றோம். அரசின் இவ்வாறான நடவடிக்கை களால் யுத்தத்தினால் அழிவைச் சந்தித்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 38,452பேர் இன்னமும் மீள்குடியமர்த் தப்படாது மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையிலுள்ளனர்.இவ்வாறு தமிழ் மக்களை சொந்த இடங்களில் குடியமரவிடாமல் தடுப்பது சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை யும் அடிப்படை மனித உரிமைகளை யும் முற்றாக மீறும் செயற்பாடாகும். அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோ தச் செயற்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.

அரசாங்கத்தைப் பொறுத்தவரை தமிழ்த் தேசத்தை இல்லாமல் செய்யும் நோக்கிலான நிலப்பறிப்பு நடவடிக்கை களை தாமாக ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை. அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுபவர்கள் இவ் விட யத்தினை சர்வதேச சமூகத்திடம் முறைப் பாடாக கொண்டு சென்று அரசு மீது சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்தினால் மட்டுமே நிலப்பறிப்பு செயற்பாடுகளை தடுத்து நிறுத்த முடியம்.

தேர்தல் மூலம் பாராளுமன்றம் சென் றுள்ளவர்கள் இந்த யதார்த்தத்தை நன்கு தெரிந்துகொண்டிருந்தாலும், இவ்விட யங்கள் தொடர்பாக இன்றுவரை ஐ.நா மனித உரிமை கவுன்சிலுக்கோ அல்லது அனைத்துலக நாட்டுத் தூதரகங்களின் கவனத்திற்கோ முறைப்பாடாகக் கொண்டு செல்ல எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.இதற்கு காரணம் ஆளும் கட்சியில் அங்கம் வகிப்பவர்களும் ,வார்த்தைகளில் மட்டும் தமிழ்த் தேசியம் பேசியவாறு எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்திருப் பவர்களும் மக்களது நலன்களைக் கை விட்டு அரசாங்கத்தின் நடவடிக்கைக ளுக்கு துணைபோகின்ற நிகழ்ச்சிநிரலில் செயற்பட்டுக் கொண்டிருப்பதேயாகும்.

எனவே புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் இவ்விடயத்தினை அந்தந்த நாட்டு அரசாங்கங்களதும், ஐ.நா மனித உரிமை கவுன்சிலினதும் உடனடியான கவனத்திற்கு கொண்டு வந்து அரசாங்கத் தின் மீது அழுத்தங்களை ஏற்படுத்தி முல் லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள நிலப்பறிப்பு நடவடிக்கையை தடுக்கவும் மக்களை அவர்களது சொந்த இடங் களில் மீள்குடியேற்றவும் விரைவான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்

http://www.valampurii.com/online/viewnews.php?ID=17207

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.