Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க் குற்ற விசாரணைகள்: அனைத்துலக பரப்புரை நிறுவனங்கள் எதிர் தமிழர் ஆதரவு அமைப்புகள்

Featured Replies

[ செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2011, 09:44 GMT ] [ தி.வண்ணமதி ]

அனைத்துலக ரீதியில் சிறிலங்காவினது பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில் அனைத்துலக சமூகத்தின் கருத்துருவாக்கத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தியது வேறு யாருமல்ல, சிறிலங்காவிற்கு எதிரான அனைத்துலகப் போர்க் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என தொடர் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் விடுதலைப் புலிகளின் ஆதரவுத் தமிழ் அமைப்புக்கள்தான்.

இவ்வாறு சிறிலங்காவில் இருந்து வெளிவரும் The Sunday Times ஆங்கில வாரஏட்டில் எழுதியுள்ள ஊடகவியலாளரும் பத்தி எழுத்தாளருமான Lasanda Kurukulasuriya தனது சிறப்பு பத்தியில் குறிப்பிட்டுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவது தி.வண்ணமதி.

அப்பத்தியின் முழுவிபரமாவது,

சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறுப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாகத் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நாவின் செயலாளர் நாயகம் பன் கீ மூன் அமைத்த வல்லுநர்கள் குழுவினது இறுதி அறிக்கை எந்த நேரமும் வெளிவரலாம் என்ற நிலையில், ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைச் சபையினது கூட்டத்தொடர் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

போருக்குப் பின்னான சிறிலங்காவினை மேற்குலகில் மோசமாகச் சித்தரிப்பதற்கான இதுபோன்ற செயற்பாடுகள் மூர்க்கமுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பயங்கரவாதத்தினைத் தோற்கடித்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த போரை வெற்றியுடன் முடிவுக்குக் கொண்டுவந்ததோடு தற்போது நாட்டு மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தினை ஏற்படுத்த முனையும் நாடுதான் சிறிலங்கா என்றோ அன்றி போரினால் சிதைந்து சீரழிந்துபொயிருக்கும் அதேநேரம் தனது சிறந்த எதிர்காலத்திற்காக அனைத்துலக ஆதரவினை நாடிநிற்கும் ஒரு நாடுதான் இது என்ற தோற்றப்பாடோ அனைத்துலக ரீதியில் காட்டப்படவில்லை.

மாறாக, இனக்கொலையில் ஈடுபட்ட, தமிழர்களை வதைமுகாம்களில் இட்டு வாட்டிய சிறிலங்கா என்ற இந்த நாடு தண்டிக்கப்படவேண்டும் என்ற தோற்றப்பாடே மேற்குலகில் ஏற்படுத்தப்படுகிறது.

இதுபோல அனைத்துலக ரீதியில் சிறிலங்காவினது பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில் அனைத்துலக சமூகத்தின் கருத்துருவாக்கத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தியது வேறு யாருமல்ல, சிறிலங்காவிற்கு எதிரான அனைத்துலகப் போர்க் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என தொடர் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் விடுதலைப் புலிகளின் ஆதரவுத் தமிழ் அமைப்புக்கள்தான்.

மனித உரிமை மீறல்களிலும் போர்க் குற்றங்களிலும் ஈடுபட்ட 'இரண்டு தரப்பினரும்' தண்டிக்கப்படவேண்டும் என வாதிடும் இவர்கள், விடுதலைப் புலிகளின் இராணுவ அணி தற்போது செயற்பாட்டு ரீதியில் இல்லை என்பதால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் சிறிலங்கா அரசாங்கத்தினையும் இராணுவத்தினரையும் மாத்திரமே பாதிக்கும் என்பதை இந்தப் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் நன்கறியும்.

அனைத்துலக சமூகத்தின் தொடர்புடைய தரப்பினரை இலக்குவைத்துத் தொடர் பரப்புரைகளில் ஈடுபடுவதை பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் இந்த புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றன. இதற்காக இந்த அமைப்புகள் எந்த மக்கள் உறவு அமைப்புக்களையும் பணிக்கு அமர்த்தவில்லை. தாங்களாகவே இந்தப் பரப்புரை நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார்கள்.

மேற்குறித்த நாடுகளில் இதுபோல மக்களுறவு நிறுவனங்கள் பிறிதொரு தரப்புக்காக பரப்புரை நடவடிக்கையில் ஈடுபடுவதானது பல மில்லியன் பெறுமதியானதொரு தொழில்துறை. குறிப்பிட்ட இந்தத் தொழில்துறை சிறிலங்காவில் இல்லை என்பதால் நாங்கள் மக்களுறவு நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக முழுமையாக விளங்கிக்கொள்வது கடினம்.

பிரித்தானியாவினையும் அமெரிக்காவினையும் பொறுத்தவரையில் அரச மற்றும் எதிர்க்கட்சிகள் தாம் சார்ந்த பரப்புரைகளில் ஈடுபடுவதற்காக இதுபோன்ற பரப்புரை முகவர்களைப் பணிக்கமர்த்தியிருக்கிறார்கள். பிரித்தானியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பரப்புரை முகவரை வாரமொன்றுக்கு 100 தடவைகள் தொடர்புகொள்வாராம். அரசுக்கு ஆதாரவான பரப்புரைகளில் ஈடுபடுவதற்காகவே பணம் கொடுத்துப் பணிக்கு அமர்த்தப்பட்ட 17,000 பரப்புரை முகவர்கள் வோசிங்டனில் மாத்திரம் இருக்கிறார்களாம்.

"அரசியல்வாதிகளுக்கும் வர்த்தக ரீதியிலான பரப்புரை முகவர்களுக்கும் இடையிலான வேறுபாடு இந்த நாட்களில் குறைந்து வருகிறது" என நியூ இன்ரநாஸ்நலிட் [New Internationalist - Jan/Feb 2011] என்ற ஆய்விதழில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

"அரசியல்வாதிகள் அரசாங்கத்தில் அல்லது எதிர்க்கட்சியில் வேறு வேறு பதவிகளில் அடிக்கடி மாறி மாறி இருக்கவேண்டிவரும். அதே நிலைதான் அதே போன்றுதான் இந்த வர்த்தக ரீதியிலான பரப்புரை முகவர்களின் பணியும் அமைகிறது. இதனை சுழல்கதவு பணி என்பார்கள். அதாவது எதிரெதிர் நிலைப்பாடுகளை எடுத்து அதற்காக பிரசாரம் செய்யவேண்டிய நிலைமை இவர்களுக்கு ஏற்படும்" என அந்த சஞ்சிகை குறிப்பிடுகிறது.

பிரித்தானியாவின் சனல் -4 தொலைக்காட்சியின் ‘Dispatches’ என்ற நிகழ்ச்சில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தங்களை பரப்புரை நிறுவனங்களாகக் காட்டிக்கொண்ட இந்தத் தொலைக்காட்சியின் மறைமுகப் பத்திரிகையாளர்களிடம் ஐந்து தொழிற்கட்சி அமைச்சார்கள் பரப்புரைப் பணி தொடர்பாக உரையாடிக்கொண்டிருந்தபோது படமாக்கப்பட்டிருந்தது.

மறைத்துவைத்து எடுக்கப்பட்ட இந்த காணொலியில், பிரித்தானியாவின் முன்னாள் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீபன் பையர் தான், 'வாடகைக்கு விடப்படும் ஒரு வாகனம்' எனக் குறிப்பிட்டிருந்ததோடு தன்னிடம் நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். தான் வழங்கும் ஆலோசனை மற்றும் பரப்புரைப் பணிக்காக 4700 தொடக்கம் 7900 டொலர்களை இவர் நாளொன்றுக்குப் பெறுகிறார்.

குறிப்பிட்ட ஒரு தீர்மானத்தினை இல்லாதுசெய்வதற்கு உதவுவேன் என இன்னொரு முகவருக்கு உறுதியளித்திருந்த பிரித்தானியாவின் முன்னாள் சுகாதார அமைச்சர் அதற்காக நாளொன்றுக்கு 4700 டொலர்களைக் கோரியிருக்கிறார். ஆனால் தான் இதுபோன்ற எந்தக் கருத்தினையும் கூறவில்லை என அவர் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

'பணத்தினை ஈட்டுவதற்கு ஏதாவது செய்யவேண்டும்' எனத் தான் கருதுவதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கொவ் கூன் கூறியிருந்தார். குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பான ஆலோசனைக் குழுவில் பங்குபற்றுவதற்குத் தனக்கு 3000 பவுண்டுகள் தரவேண்டும் என இவரும் கோரியிருந்தார்.

"நாடாளுமன்றம் செல்லுவதற்காகத் தமக்கிருக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்தி பிறருக்காகப் பரப்புரை செய்யும் வகையில் செயற்படுவதோடு பணமீட்டும் செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது" என்ற விதியினை இவர்கள் மீறிவிட்டதாகக் கூறி குறிப்பிட்ட இந்தச் சம்பவத்தின் பின்னர் இந்த மூன்று முன்னாள் அமைச்சர்களுக்கும் நாடாளுமன்றத்திற்குத் தங்குதடையின்றிச் செல்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி நீக்கம் செய்யப்பட்டிருந்தது.

"பிறருக்காகப் பரப்புரை செய்வது சட்டவிரோதமானதோ அல்லது தவறானதோ அல்ல" என யூ.கே ஒப்சேவர் [uK Observer] கருத்து வெளியிட்டிருந்தது. "தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர குழுக்களின் பிரதிநிதிகளாக அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் செயற்படுவது ஒன்றும் புதிதல்ல. குறிப்பிட்டதொரு சட்டமூலம் நிறைவேற்றப்படும்போது அது தொடர்பில் கலந்துரையாடுவது பொதுமக்களுக்கோ அன்றில் இதர நிறுவனங்களுக்கோ உள்ள உரிமையே" என அந்தப் பத்திரிகை தனது செய்தியில் தொடர்ந்து குறிப்பிட்டிருந்தது. "ஆனால் அரச அமைச்சர்களும் அதிகாரிகளும் இதுபோன்ற செயற்பாடுகளைப் பணமீட்டுவதற்காக மேற்கொள்ளும் போது அது குற்றமாகிறது. இங்குதான் உண்மையான பரப்புரை செய்தல் என்ற நிலை மாறி ஊழல் ஆரம்பிக்கிறது" என அந்தப் பத்திரிகை தொடர்ந்து குறிப்பிட்டிருந்தது.

"பிரித்தானியாவினது இன்றைய நடைமுறையானது நாடாளுமன்ற உறப்பினர்கள் பல்வேறுபட்ட நிறுவனங்களுக்கு ஆலோசகர்களாக இருப்பதற்கு வழிசெய்கிறது. இதற்காக இவர்கள் பணத்தினை ஊதியமாகப் பெறமுடியும். இந்தச் சலுகையினைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது வருவாயினை இரட்டிப்பாக்க முனைகிறார்கள். இதுபோன்ற செயற்பாடுகள் ஆபிரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஊழலாகவே கருதப்படுகிறது" என அந்தச் செய்திக் குறிப்பு தொடர்ந்து விரிகிறது.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் இதுபோன்ற செயற்பாடுகளில் விளைவாக 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் இவர்களது வருமானம் 16 சதவீதத்தினால் அதிகரித்திருக்கிறது என இந்தப் பத்திரிகை தொடர்ந்து குறிப்பிடுகிறது.

பராக் ஒபாமா அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து இது தொடர்பானதொரு அறிவிப்பினை விடுத்திருந்தார். அமெரிக்க அரசாங்கத்தினில் பணிபுரியும் அதிகாரிகள் பணிவிலகிய உடனேயே இதுபோன்ற வர்த்தக ரீதியிலான மக்களுறவு மற்றும் பரப்புரை நிறுவனங்களில் முகவர்களாகப் பணிசெய்யக் கூடாது என்றும் பரப்புரை முகவர்களிடமிருந்து அன்பளிப்புக்களைப் பெறுவது இலஞ்சம் பெறும் நடவடிக்கையாகவே கருதப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் அதிகம் வாழும் பிராந்தியங்களில் தாம் விரும்பும் கருத்துருவாக்கத்தினை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கும் அந்தந்த நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களைத் தம்பால் கவர்ந்திழுப்பதற்கும் பரப்புரையினை ஒரு உத்தியாக மேற்கு நாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளின் அனுதாபிகளும் புலி ஆதரவு புலம்பெயர் அமைப்புக்களும் பயன்படுத்துகின்றன.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர்தான் இந்தச் செயற்பாடு ஆரம்பிக்கப்படவில்லை. நீண்ட பல பத்தாண்டுகளாக புலிகளின் ஆதரவு அமைப்புக்களும் அவர்களது அனுதாபிகளும் இதுபோன்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்கள். சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக தாம் மேற்கொண்ட பரப்புரைகள் இதுபோல வெற்றியளித்திருப்பதையிட்டு இந்த புலம்பெயர் அமைப்புக்களே அதனை நம்பமுடியாமல் பிரமித்துப் போய் இருக்கின்றன.

சிறிலங்காவிற்கு எதிரான அனைத்துலகப் போர்க் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற புலம்பெயர் தமிழர்களின் வாதத்தினை தற்போது வேறுபட்ட தரப்புக்களும் கையில் எடுத்திருக்கின்றன. சிறிலங்காவிற்கு எதிரான அனைத்துலக போர்க் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என வலியுறுத்தி பிரித்தானியாவின் அனைத்துக் கட்சிப் நாடாளுமன்றக் குழுவினைச் சேர்ந்த 41 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டேவிற் கமரோறுக்கு கடிதமொன்றை எழுதியிருந்தனர் என்றும் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் ஒன்றை அமெரிக்காவினது செனற் சபை கொண்டுவந்திருக்கிறது என்றும் வெளிவந்த செய்திகளை வாசித்தபோது ஒரு விடயம் எமக்குப் பொறிதட்டியது. அரச அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுபோன்ற பரப்புரைகளில் ஈடுபடுவது அனுமதிக்கப்பட்ட தேசங்களில்தான் இத்தகைய முடிவுகளும் தீர்மானங்களும் எடுக்கப்பட்டிருக்கிறது என்பனை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.

இதுபோல மேற்குலகில் விடுதலைப் புலிகளின் ஆதரவுச் சக்திகள் மேற்கொண்டுவரும் அரச எதிர்ப்புப் பரப்புரைகளை முறியடிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் பெல் பொற்றிங்கர் மற்றும் பற்றொன் பொக்ஸ் [Patton Boggs and Bell Pottinger] போன்ற பிரசித்த பெற்ற மக்களுறவு நிறுவனங்களைப் பணிக்கு அமர்த்தியது. இது தவிர அனைத்துலக ரீதியில் தனக்கு ஏற்பட்ட களங்கத்தினைத் துடைக்கும் வகையில் வேறுபட்ட பல நடவடிக்கைகளையும் அது முன்னெடுத்திருந்தது.

ஆனால் விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்கள் முன்னெடுக்கும் வினைத்திறன்கொண்ட ஆனால் வெளியே பெரிதாகத் தெரியாத நடவடிக்கைகளுடன் ஒப்பிடும்போது அரசாங்கம் முன்னனெடுக்கும் இத்தகைய முனைப்புகள் எதிர்பார்த்த விளைவெதனையும் தந்துவிடவில்லை.

கடந்த 30 ஆண்டுகளில் குறிப்பாக மேற்று நாடுகளிலுள்ள சிறிலங்காவினது தூதரகங்கள் தங்களது பணியினை ஒழுங்காகச் செய்திருந்தால், சிறிலங்காவினது நிலைபாடுகள் தொடர்பான முறையான தெளிவுபடுத்தல்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டிருந்தால் இதுபோல விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்களினது கை ஓங்கியிருக்காது.

ஒவ்வொரு முறையில் சிறிலங்காவில் ஏதேனும் சம்பவங்கள் இடம்பெறும்போது அது தொடர்பான தவறான பாதையில் வாசகர்களை இட்டுச் செல்லும் செய்திகளே மேற்குலக ஊடகங்களில் வெளிவந்திருந்தன.

கடந்த பல ஆண்டுகளாக சிறிலங்கா தொடர்பாக வெளிவந்த செய்திகள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் இடைவிடாத செயற்பாடுகளின் விளைவாக மேற்குலகில் ஏற்பட்டிருக்கும் காத்திரமானதொரு கருத்து மாற்றத்தினை பெரும் பணத்தினாலோ அல்லது இதுபோன்ற பிரசித்திபெற்ற மக்களுறவு அமைப்புக்களைப் பணிக்கு அமர்த்துவதாலோ நொடிப்பொழுதில் மாற்றிவிடமுடியாது.

puthinappalakai.com

  • கருத்துக்கள உறவுகள்

dog_with_bone.jpg

அஞ்சு பத்தை விட்டெறிந்து தங்களுக்கான லாபி களை அந்த அந்த நாடுகளின் பாராளுமன்றத்தில் பிரதிபலிக்கும் வண்ணம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்..சொந்தமாக இந்த மன்றத்தில் ஈழ தோழர்கள் நுழையமுடியுமா என தெரியவில்லை.. இங்கிட்டு உள்ளது போல சாதி/மதம் /இனம் என அங்கையும் இருக்கும் போக

டிஸ்கி:

http://74.208.147.65/ahtees/admin/songs/content/discs/Sivaji%20Hits/PADIKKATHA%20METHAI/ENGIRUNDHO%20VANDHAN.mp3&OBT_fname=ENGIRUNDHO+VANDHAN.mp3

அது (வெளிநாடுகள்)ஒன்றும் தமிழ்நாடு கிடையாது. வந்தவன் போனவன் நின்றவன் எல்லாம் கூடி கும்மியடிக்க.எனவே தங்களுக்கான முகவர்களை கொஞ்சம் செலவு செய்து நியமித்து கொள்ளவேண்டும். வக்கீலுக்கு பீஸ் கொடுப்பதில்லையா?வரி கட்டுவதில்லையா? அதை போல நினைத்து கொள்ளவேண்டும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.