Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது?

சனி, 26 மார்ச் 2011( 21:12 IST )

தமிழ்நாட்டின் தேர்தல் தலை விதியை நிர்ணயிப்பதே இலவசங்கள்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அரிசி இலவசம், மாவு அரைக்கும் இயந்திரம், மிக்சி என்று தொடங்கி, மடிக்கணினி வரை தி.மு.க. தேர்தல் அறிக்கை முழங்க, உன்னை விட நான் விஞ்சுகிறேன் பார் என்ற ரீதியில் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் எதிர்க்கட்சியின் தேர்தல் அறிக்கையில், ஆடு, மாடு எல்லாம் கூட இலவசம் என்று அறிவித்துள்ளது.

FILE

ஒரு பக்கம் இதையெல்லாம் பார்த்து விவரம் தெரிந்த வாக்காளர்கள் சிரிக்க, மற்றொரு பக்கமோ என்னைப் பார்த்து நீ காப்பியடிக்கிறாய், உன்னால் என்னைப்போல் தர முடியாது என்று இன்னாள் முதல்வர் கூட்டத்திற்குக் கூட்டம் முழங்குகிறார். பெரிதாக அறிவித்தாலும், அதை மையப்படுத்தாமல், தி.மு.க.விற்கு எங்கு வலிக்குமோ அங்கே பார்த்து குத்துகிறார் முன்னாள் முதல்வர். 2ஜி ஊழல், குடும்ப ஆட்சி, அரசியல், சினிமாத்துறை ஆக்கிரமிப்பு ஆகியனதான் இத்தேர்தல் முடிவை நிர்ணயிக்கப் போகின்றன என்கிறார் ஜெயலலிதா.

ஆனால், தி.மு.க. கூட்டணியின் இரண்டாவது பெரிய பிரச்சார பீரங்கியான துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், செய்ததைச் சொல்லி கலைஞர் வாக்கு கேட்கிறார், செய்ய முடியாததைச் சொல்லி ஜெயலலிதா வாக்கு கேட்கிறார் என்று பேசி வருகிறார்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது மட்டுமல்ல, சொல்லாமல் இன்னும் எத்தனையோ செய்ய கலைஞர் திட்டம் வைத்துள்ளார் என்று போகிற இடமெல்லாம் முழங்குகின்றனர் தி.மு.க. முன்னணித் தலைவர்கள்.

இலவசங்களை வழங்குவது உள்ளபடியே ஒரு ஆட்சியின் சாதனைதானா? என்கிற வினாவிற்கு விடை காண முற்பட்டபோது, இதற்கான நிதி எங்கிருந்து வருகிறது என்பதை விடைகாண புறப்பட்டபோது, இலவசங்களுக்கான செலவீனங்களுக்கு நிதி ஆதாரம் எது என்பதை அறிந்தபோது, ‘கொடுப்பவர்கள் மறைந்திருக்க, தருபவர் பெருமை கொள்கிறாரே’ என்றே சொல்லத் தோன்றுகிறது.

எடுத்துக்காட்டாக இந்த ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் தேதி தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் சமர்ப்பித்த 2011-12ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், தமிழக அரசு நடைமுறைப்படுத்திவரும் இலவச மற்றும் நல்வாழ்வுத் திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் பார்ப்போம்.

1. ரூ.1க்கு வழங்கப்படும் அரிசித் திட்டத்திற்கு - ரூ.3,750 கோடி.

2. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் - ரூ.295 கோடி

3. கலைஞர் மருத்துவ காப்பீடு திட்டம் - ரூ.750 கோடி

4. இலவச மருத்துவ ஊர்த்திச் சேவை - ரூ.75 கோடி

5. வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்க - ரூ.500 கோடி

6. கலைஞர் வீட்டு வசதித் திட்டம் - ரூ.262.50 கோடி

7. நிரந்தர வீடு கட்டித்தரும் திட்டம் - ரூ.1,800 கோடி

tamil.webdunia.com

வெய்யலிலும் மளையிலும் நின்று உழைக்கும் அறிவல்லாத மொக்கைகளின் வரிப்பணம் தான்

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

TO

தமிழ்நாடு தேர்தல் ஆணையர்

Subject: அரசியல் கட்சிகளின் இலவச தேர்தல் அறிவிப்பைக் கட்டுப்படுத்த வேண்டுகோள்

மதிப்பிற்குரிய தமிழ்நாடு தேர்தல் ஆணையாளர் அவர்களுக்கு,

தமிழ்நாடு மாநிலத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், தேர்தல் ஆணையம் எடுத்திருக்கும் தீவிர நடவடிக்கையால் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குக் கொடுக்கவிருந்த வாக்குக் கையூட்டு வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஒரு வாக்காளர் என்ற முறையிலும், சிறந்த அரசு தமிழ்நாட்டிற்குத் தேவை என்று விரும்பும் முறையிலும் தேர்தல் ஆணையத்திற்கு நான் மிகவும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

தமிழ்நாட்டின் அனைத்து முன்னணி அரசியல் கட்சிகளும் வாக்காளர்களைக் கவர இலவசங்களை தங்கள் கட்சி தேர்தல் அறிக்கையாக அறிவித்து தங்களின் ஆட்சி நிலைபெற எண்ணம் கொண்டுள்ளது, இதை முன்னிட்டு தமிழ்நாடு தேர்தல் ஆணையாளருக்கு சில கோரிக்கைகளை தாழ்மையுடன் முன்வைக்கிறேன்.

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இலவச பொருட்களை அந்தந்த கட்சிகள் வாக்காளர்களுக்குக் கொடுக்கும் வாக்குக் கையூட்டாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், நாடும் நாட்டு மக்களும் முன்னேறும் வகையில் உள்ள திட்டங்கள் மட்டுமே இடம் பெறச்செய்ய வேண்டும்.

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களுக்கு இலவச பொருட்கள் கொடுப்பதாக கூறப்பட்டுள்ளதை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்ய வேண்டும்.

அரசியல் கட்சிகள் அறிவித்திருக்கும் இலவச பொருட்களின் மதிப்பை தேர்தல் ஆணையம் கணக்கிட்டு அரசின் நிதி நிலைமையுடன் ஒப்பீடு செய்து அதை மத்திய அரசு, ஆளுநர் மற்றும் மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட வகை செய்ய வேண்டும், அல்லது இதை அந்தந்த அரசியல் கட்சிகள் அனுப்பி ஒப்புதல் வாங்கிய பின் அறிக்கையாக வெளியிட வகை செய்யவும்.

அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டின் நிதி நிலமையை கணக்கில் எடுத்துக்கொண்டு அதை மேம்படுத்தும் திட்டங்களை மட்டுமே தேர்தல் அறிக்கையாக அறிவிக்க வகை செய்ய வேண்டும்.

மக்களுக்கு அரசின் நிதிநிலமையை கருத்தில் கொள்ளாமல் இலவசங்கள் என்ற பெயரில் கையூட்டு கொடுப்பதை தேர்தல் ஆணையம் வன்மையாக கண்டனம் செய்ய வேண்டும்.

வேட்பு மனு தாக்கல் செய்திருக்கும் வேட்பாளர்களில் குற்றப்பின்னணி உறுதி படுத்தப்பட்ட வேட்பாளர்களை தேர்தலில் இருந்து தகுதி நீக்கம் செய்தும் அறிவித்து சிறந்தவர்களை மட்டும் வேட்பாளர்களாக தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது என்பதை உறுதிபடுத்தவும்.

மேற்கூறப்பட்ட கோரிக்கைகளை, வாக்காளர்கள் கையூட்டு பெறாமல் சிறந்த அரசை தேர்வு செய்து தங்கள் வாக்கு உரிமையை நேர்மையான முறையில் நிலைநாட்ட தேர்தல் ஆணையம் உடனடியாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

தமிழ் நண்பர்கள்

http://tamilnanbargal.com

==============================================================

தமிழ் நண்பர்களே, மேற்கொடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை தயவு செய்து நல்ல அரசு தமிழ்நாட்டிற்குத்தேவை என நினைக்கும் ஒவ்வொரு இந்தியரும் தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சலாக அனுப்ப வேண்டுகிறோம்.

தேர்தல் ஆணைய மின்னஞ்சல் முகவரி:

To : ceo_tamilnadu@eci.gov.in

CC: syquraishi@eci.gov.in, vs-sampath@eci.gov.in, hs.brahma@eci.gov.in, , feedback@eci.gov.in

"இப்படிக்கு" என்பதின் கீழ் அவரவர் தங்கள் பெயரைக்குறிப்பிடவும்.

நன்றி

==============================================================

இதை இப்படியே உங்கள் தளத்திலும் வலைதளங்களிலும் பதிந்து மற்றும் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி நல்ல அரசு அமைய உதவி செய்யுங்கள்.

நன்றி

http://tamilnanbargal.com/fb_cb/fb_tamil_friends/tamil-articles/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

இலவச செல்பேசி: புதுவையில் காங். அதிரடி

இலவச டிவி,

இலவச கிரைண்டர்,

இலவச வாஷிங்மெஷின்,

இலவச பிரிட்ஜ் வரிசையில்

தற்போது காங்கிரஸ் ஒரு படி மேலே போய் இலவச செல்பேசி வழங்குவதாக தனது புதுவை தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும் என புதுவை காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆண்டு வருமானம் 75 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளவர்கள் இந்த இலவச செல்பேசியப் பெறுவதற்கு தகுதியானவர்கள் எனத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

16 பக்க தேர்தல் அறிக்கையை முதல்வர் வைத்திலிங்கம் மற்றும் மத்திய அமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் புதுவை காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியன் வெளியிட்டார்.

புதுவை மாகாணம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1104/01/1110401020_1.htm

இதைப்பற்றியெல்லாம் யாருங்க கவலைப்படுகிறாங்க? ஓட்டுக்கு ரூ500 கொடுப்பீங்களா? சூரியனுக்கே குத்திரலாம் சார்!

India: A corrupt dynasty or democracy?

India's former finance minister says "dynasticism" played a leading role in fostering culture of political corruption.

Is corruption crippling India? At first glance, such a question seems absurd. After all, India has had a functioning democratic order since before 1947, and its economy weathered the recent global economic crisis when most others faltered.

Yet a combination of factors that have mushroomed over time has raised serious concerns about the threat that corruption poses to the very fabric of the Indian state.

Of course India is not experiencing any Arab-style "youth quakes" in response to the current corruption scandal plaguing the Congress Party-led government, nor is it likely to do so.

.............

The "dynasticism" that has taken such a firm grip on much of Indian politics plays a large role in fostering corruption.

After all, inherited political power is the very antithesis of democracy because accountability is no part of it. And when accountability is absent, both the cunning and the aggrieved feel that they must turn to corrupt means to make their concerns known.

Preserving hereditary privileges invariably means that rules and governmental processes get bent, if not made wholly subservient to dynastic concerns. Today, all of India is paying the price.

http://english.aljazeera.net/indepth/opinion/2011/03/2011328141557707216.html

  • கருத்துக்கள உறவுகள்

சொறி .. எண்ணற்ற இளைஞ்சர்களும் இளைஞ்சிகளும் திருமணம் ஆகாமல் கஸ்டபடுகிறார்கள் . தேர்தல் அறிக்கை இதுகுறித்து(புரோக்கர் வேலை) செய்பவர்களூக்குதான் எனது ஓட்டு :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.