Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி திரும்பிய முதியவர்கள் பலர் வறுமை,தனிமையால் பரிதவிப்பு

Featured Replies

மோதலினால் இடம்பெயர்ந்து பின்னர் வட பகுதிக்கு திரும்பிச் சென்றவர்களில் ஆயிரக்கணக்கான முதியவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் மருத்துவப் பராமரிப்பு தேவைப்படுபவர்களாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த மக்களுக்கு உதவுவதற்கான எந்தவொரு நிகழ்ச்சித்திட்டங்களும் இல்லையென்று கெல்ப் ஏஜ் சிறிலங்காவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சமந்த லியன வதுகே கூறியுள்ளார். வயது முதிர்ந்த இந்த மக்களுக்கு உதவியளிக்கும் சில அமைப்புகளில் ஒன்றாக இந்த கெல் ஏஜ் சிறிலங்கா காணப்படுகிறது.

நிராதரவான நிலையிலுள்ள முதியவர்களின் எண்ணிக்கை தொடர்பாக உத்தியோகபூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆயினும் வன்னியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 60 வயதைத் தாண்டியவர்களாக இருப்பதாக மதிப்பீடுகள் தெரிவிப்பதாக ஐ.ஆர்.ஐ.என். செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

2009 மே யில் யுத்தம் முடிவடைந்த பின்னர் 3 இலட்சத்து 20 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பிச் சென்றோ அல்லது உறவினர்களுடனோ தங்கியிருப்பதாக ஐ.நா. அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த மக்களில் முதியவர்கள் உளநிலை பாதிக்கப்பட்டவர்களாக அல்லது தனித்துவிடப்பட்டவர்களாகக் காணப்படுவதாகவும் தமது அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற போராடிக் கொண்டிருப்பதாகவும் சமூகப் பணியாளர்கள் கூறுகின்றனர். குடும்ப ஆதரவு இல்லாத முதியவர்கள் பலர் வறுமையையும் தனிமையையும் மற்றவர்களில் தங்கியிருக்கும் நிலைமையையும் உடல் நலக் குறைவையும் போஷாக்கின்மையையும் எதிர்நோக்குவதாக சுகாதாரப் பராமரிப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

முதியவர்கள் தாங்கள் கைவிடப்பட்டிருக்கும் உணர்வைக் கொண்டிருப்பதாகவும் சிலர் சடுதியாக தமது கோபத்தை வெளிப்படுத்துவதாகவும் கிளிநொச்சியைச் சேர்ந்த அங்கிலிக்கன் மத குருவான செல்லையா பிலிப் நேசகுமார் என்பவர் கூறுகிறார். வெளித்தோற்றத்திற்கு அவர்கள்

சிறப்பானவர்களாக இருக்கின்றனர். ஆனால், 2 த சாப்தங்களுக்கும் மேலான யுத்த வடுக்களை மனதில் சுமந்து கொண்டு அவர்கள் இருக்கின்றனர் என்று நேசகுமார் கூறியுள்ளார். யுத்தம் முடிவடைந்த பொழுது விடயங்கள் சிறப்பாக இருக்குமென தான் எதிர்பார்த்திருந்ததாகவும் இப்போது வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கின்றது. ஆனால், எங்களை நாங்களே சீர்படுத்திக்கொள்ளவேண்டி உள்ளது என்று வீரன் பண்டாரம் (61 வயது) என்ற கிளிநொச்சியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தெரிவித்தார்.

தமது பகுதியில் அபிவிருத்தி, புனர்வாழ்வுப் பணிகள் இடம்பெறுகின்ற போதிலும் முதிய மற்றும் தனிமையாகவுள்ளவர்களைக் கவனத்தில் கொள்வதாக எந்தத் திட்டங்களும் உள்ளடக்கப்படவில்லையென அவர் கூறுகிறார். என்னைப் போன்ற ஆட்களுக்கு உதவுவதற்கு எதுவும் இல்லை. நாங்கள் முக்கியமானவர்களாக இல்லையா என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

1986 இல் இருந்து ஓரங்கட்டப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் உரிமைகளுக்காக கெல்ப் ஏஜ் சிறிலங்கா செயற்படுகிறது. அதிகளவுக்கு அவர்களுக்கு பணியாற்ற அந்த அமைப்பு விரும்புகிறது. ஆனால், அதற்கான வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டவையாக உள்ளன. ஆதலால் மிகவும் பாரதூரமான விடயங்களிலேயே அந்த முகவரமைப்பு கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகிறது. கடந்த பெப்ரவரியில் இந்த அமைப்பு கிளிநொச்சியில் சிறிய உப அலுவலகத்தைத் திறந்திருந்தது. தனது பணிகள் மற்றும் நடமாடும் மருத்துவ முகாம்கள் போன்றவற்றை ஒருங்கிணைந்து செய்வதற்கு இந்த அலுவலகம் திறக்கப்பட்டிருந்தது.

முதியவர்களில் பலர் கண்பார்வை குறைபாடுடையவர்களாகக் காணப்படுகின்றனர். 60 சதவீதமானவர்களுக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேசமயம், 2030 வீதமானோருக்கு சத்திர சிகிச்சை தேவைப்படுகிறது. அங்குள்ளவர்கள் சிகிச்சை பெறுவதாயின் வவுனியாவிற்கு செல்ல வேண்டியுள்ளது. கிளிநொச்சியிலிருந்து வவுனியாவிற்குச் செல்வதாயின் 70 கிலோ மீற்றர் செல்ல வேண்டும். சத்திரசிகிச்சைக்கான செலவு 55 டொலர்களாகும். பலரிடம் இதற்கான பணம் இல்லை. அந்தளவு தொகை இந்த மக்களால் செலவிட முடியாத நிலைமை காணப்படுகிறது என்று லியன வதுகே கூறியுள்ளார். கிழக்கில் முதியோர் குழுக்களைப் பயன்படுத்தி வீட்டுத் தோட்டம், கோழிப் பண்ணை, சிறிய கால் நடைப் பண்ணை நடவடிக்கைகளை கெல்ப் ஏஜ் மேற்கொண்டுள்ளது.

அதிகளவு தேவைகள் உள்ளன. அவற்றை மேற்கொள்ள வேண்டி இருப்பதை நாம் அறிவோம். ஆனால், எம்மிடம் போதிய நிதிவளங்கள் இல்லை என்று லியன வதுகே கூறியுள்ளார்.

நன்றி தினக்குரல்

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=10365:2011-03-31-03-33-59&catid=34:hotn-news&Itemid=99

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.