Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.மாநகர சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் பிளவு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாநகர சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் பிளவு?

மாநகர சபையின் அமர்வுகள் முற்றாக குழப்பம்:

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவிருக்கும் நவீன சந்தையில் இடம்பெறுவதாக கூறப்படும் சுமார் 40 கோடி ரூபா மோசடி தொடர்பில் இன்று மாநகர சபையின் அமர்வுகள் முற்றாக குழப்பமடைந்தது.

மாநகர சபையின் ஊழல் மோசடிகள் தொடர்பாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானதை அடுத்தே மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் முதல் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதன் பின்னர் எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும் ஆளும் பொதுசன ஐக்கிய முன்னணி உறுப்பினர்களும் பரஸ்பரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் உச்சக் கட்டத்தினை அடைந்ததினை அடுத்து மாநகர முதல்வர் சொல்லாமல் கொள்ளாமல் கூட்டத்தினை ரத்துச் செய்து விட்டார்.

மாநகர முதல்வர் இவ்வாறு கூட்டத்திலிருந்து அடிக்கடி வெளியே செல்வதாகக் கூறி சுமார் ஒன்றரை மணித்தியாலத்திற்கு மேலாக மாநகர முதல்வர் இல்லாமலேயே சபை உறுப்பினர்கள் காரசாரமான வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.

அங்கு ஈபிடிபியினதும் ஆளும் பொதுசன ஐக்கிய முன்னணியினதும் ஊழல்கள் தொடர்பாக அம்பலப்படுத்தப்பட்டிருந்தது.

முன்னதாக ஒவ்வொன்றும் 15 கடைகளைக் கொண்ட 5 அடுக்குகளைக் கொண்ட 75 கடைகள் அமைக்கப்படுவதாகவும் கீழுள்ள 15 கடைகளை விற்பதன் மூலம் குறித்த கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு முன் வந்திருக்கும் ஒப்பந்தக் காரர் வருவாயை ஈட்ட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது அதற்கான வரைபடம் மாற்றப்பட்டிருப்பதாக மாநகர முதல்வர் கூறுகின்றார். 75 கடைகளுக்கான அனுமதி பெறப்பட்ட போதிலும் தற்பொழுது 57 கடைகளாக அது மாற்றப்பட்டிருக்கின்றது. மேலுள்ள 2 தளங்களும் மண்டபங்களாக மாற்றப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

கீழுள்ள 19 கடைகளை விற்பதன் மூலம் குறிப்பிட்ட வர்த்தகர் பெருமளவு கறுப்புப் பணத்தைப் பெறுவதாகவும் ஒரு வர்த்தக நிலையத்திற்கு 1 கோடியே 90 லட்சம் மதிப்பிடப்படுவதாகவும் ஆனால் அதில் 1 கோடியே 10 லட்சத்திற்கு மட்டுமே மாநகர சபையின் பதிவுக்கு உட்படுவதாகவும் மிச்சம் 80 லட்சம் கறுப்புப் பணமாக கையில் தரப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுவதாகவும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அம்பலப்படுத்தினர்.

இதனால் 19 கடைகளிலிருந்தும் ஒட்டு மொத்தமாக எவ்வளவு பணம் சுருட்டப்படுகின்றது என அவர்கள் கூச்சல் எழுப்பினர். இதனால் இரு தரப்பினரிடையேயும் இடம்பெற்ற கூச்சல்களை அடுத்து இன்று காலை கூட்டம் குழப்பமுற்றிருந்தது.

இதனிடையே ஈபிடிபியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட மாநகர சபை உறுப்பினர் டொக்டர் நிசாந்தன் என்பவர் பொதுசன ஐக்கிய முன்னணி தனித்து செயற்படப் போவதாக அறிவித்தார். ஆளும்; பொதுசன ஐக்கிய முன்னணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கையன் தலைமையில் தான் யாழ் மாவட்ட உறுப்பினர் எனவும் மாநகர முதல்வர் மற்றும் அவரது படையினரால் மேற்கொள்ளப்படும் கொள்ளைகளை அம்பலப்படுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர சபையின் நவீன கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற மோசடிகளை டொக்டர் நிசாந்தன் என்பரே அம்பலப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் அவர் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்த போதிலும் அவர் பகிரங்கமாக தனது ஊடக அறிக்கையின் மூலம் தனது நிலப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார்.

யாழ்.மாநகர சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் பிளவு?

யாழ்.மாநகர சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. சபையில் இடம்பெறும் ஊழல்களுக்கு ஈ.பி.டி.பியினரே காரணம் என குற்றம்சுமத்தும் அதன் பங்காளிக் கட்சியினரான சுதந்திரக் கட்சியினர் தாம் இனிமேல் தனித்துச் செயற்படப் போவதாக அறிவித்துள்ளனர். இன்று நடைபெறவுள்ள சபைக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் இது குறித்து அறிவிக்க உள்ளனர்.

யாழ். மாநகர சபையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றிய போது அதில் ஈ.பி.டி.பி., முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியன முக்கிய பங்காளிகளாக இருந்தன. சுதந்திரக் கட்சி சார்பில் 4 உறுப்பினர்களும், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 4 உறுப்பினர்களும் சபையில் அங்கம் வகிக்கின்றனர். ஈபிடிபியினர் சார்பில் 6 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

முதல்வரும் அவர் சார்ந்த கட்சியினரும் அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதால் மாநகர சபைக்கு வருமானமாகக் கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான பணம் கைவிட்டுப் போனது என அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து ஆளும் முன்னணிக்குள் கருத்து முரண்பாடுகள் வலுத்து அது இரு பிரிவுகளாக உடைந்துள்ளது.

'முன்னணியில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியினரான நாங்கள் இனிமேல் தனித்துச் செயல்படுவது என்று முடிவெடுத்துள்ளோம். சபையில் ஊழல்கள் மலிந்துள்ளதால் இந்த முடிவை எடுப்பதற்கு நாம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்'' என்று சுதந்திரக் கட்சியின் மாநகர சபை உறுப்பினரான நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

ஈபிடிபியினர் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியதால் அக்கட்சியினர் செய்யும் ஊழல்கள் அனைத்துக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இன்றைய கூட்டம் கடும் காரசாரங்களுக்கு மத்தியிலேயே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவை ஏற்பட்டால் முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றவும் தயங்கப்போவதில்லை என சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, யாழ். நகரின் மத்தியில் மாநகர சபை இடத்தில் 5 மாடிகள் கொண்ட வர்த்தக சந்தை ஒன்றை அமைப்பதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன என கூறப்படுவது தொடர்பில் எதிர்க் கட்சிகள் இன்று சர்ச்சையைக் கிளப்ப உள்ளன.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/59874/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.