Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராளிகளின் விபரங்களைப் பார்வையிட கூட்டமைப்புக்கு அனுமதி

Featured Replies

போராளிகளின் விபரங்களைப் பார்வையிட கூட்டமைப்புக்கு அனுமதி! - சுரேஸ் பிரேமச்சந்திரன் தகவல்!!

சிறிலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளின் பெயர் விபரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியா தடுப்பு முகாமுக்கு எதிர்வரும் 16ஆம் திகதி நேரில் விஜயம் செய்து பார்வையிடவுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (07.04.11) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இதற்கான இணக்கம் காணப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அதன் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளின் விடுதலை தொடர்பாக இப் பேச்சுவார்தையின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். இச் சந்திப்புக் குறித்து அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:

'தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளின் விபரங்களை வெளியிடுவதாக சிறிலங்கா அரசாங்கம் முன்னர் எம்மிடம் தெரிவித்திருந்த போதிலும், இது வரை அவ் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இதனை நேற்று இடம்பெற்ற சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையின் போது சுட்டிக்காட்டினோம்.

இதனை அடுத்து வவுனியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளின் பெயர் விபரங்களை வவுனியா படை முகாம்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேரில் சென்று பார்வையிடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் எதிர்வரும் 16ஆம் திகதி நானும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவுடன் வவுனியாவுக்கு நேரடியாகச் சென்று போராளிகளின் பெயர் விபரங்களை பார்வையிடவுள்ளோம்.

போராளிகளின் பெயர் விபரங்களை சரி பார்த்தபின் பொது மக்களின் பார்வைக்காக அவ் விபரங்கள் வைக்கப்படும். அத்துடன், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 850க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த அரசியல் கைதிகளின் விவரங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் தன்மைக்கு ஏற்ப தரம் பிரிக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா அரசாங்கத்தின் தரப்பில் எம்மிடம் தெரிவிக்கப்பட்டது. அடுத்து வரும் சில வாரங்களில் அவர்களில் குற்றமற்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும், குற்றவாளிகளாக இனம் காணப்பட்டோரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, அவர்களை ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் எனவும் சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகளிடம் நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். இக் கோரிக்கையை சாதகமாகப் பரிசீலிப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் எம்மிடம் உறுதியளித்தனர்.

வன்னியில் திருமுறிகண்டி, முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு ஆகிய இடங்களில் மிதி வெடி அபாயம் உள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் எம்மிடம் குறிப்பிட்டனர். எனினும் அங்கு மிதிவெடி அபாயம் இல்லை எனவும், அப் பகுதிகளுக்கு நாம் சென்று வந்தோம் எனவும், அப் பகுதிகளில் 115 குடும்பங்கள் மீளக்குடியமர முடியாமல் உள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கு சுட்டிக் காட்டினோம்.

அத்துடன் பொத்துவில், திருகோணமலை, மன்னார், மூதூர், யாழ்ப்பாணம், வன்னி ஆகிய பகுதிகளில் மேலும் பல குடும்பங்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படாமல் உள்ளதையும் இப் பேச்சுவார்த்தையின்போது எடுத்துக் கூறினோம்.

சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறும் எனவும், அதற்கு முன்னர் மேற்குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்ததனர்' என சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளார்.

இப் பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனும் முதல் தடவையாகக் கலந்து கொண்டார். அவருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறிலங்கா அரசாங்கத்தின் தரப்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={20DB2FA4-499A-4F6A-BAE7-0E7DA6579543}

  • கருத்துக்கள உறவுகள்
போராளிகளின் விபரங்களைப் பார்வையிட கூட்டமைப்புக்கு அனுமதி! - சுரேஸ் பிரேமச்சந்திரன் தகவல்!!
குதிரை ஓடிய பின், பூட்டிய லாயத்தை பார்ப்பதில்..... சாணமும் கிடைக்காது.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.