Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரபு உலகின் அமைதி இன்மையும் மக்கள் புரட்சியும்

Featured Replies

அடக்கு முறையும் சுதந்திரமும் உழுத்துப் போன மன்னராட்சியின் கீழும் வெவ்வேறு பெயர்களில் அடக்குமுறை இராணுவ ஆட்சியின் கீழும் சமய சட்டங்கள் என்ற வேரில் இன்னொருவகை ஆதிக்கத்தின் கீழும் சுதந்திரத்தைப்பறிகொடுத்து நிற்கும் மக்கள் கூட்டத்தினரின் போராட்ட அலைதான் பெரும் சுவாலையாக அரபு நாடுகளை இன்று சூழ்ந்துள்ளது. மேற்கத்தைய வல்லரசுச் சக்திகளுக்குச் சமமாக நிற்க வேண்டிய சாம்ராஜ்யங்களின் பரிதாபமான கதை இது.

"மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான்' என்ற ரூஸோவின் வார்த்தைகளுக்கு உலகம் இன்றும் தீர்வுகளைத் தேடிவருகிறது. ஏனெனில் இந்த வாசகம் இன்னொரு பகுதியையும் உள்ளடக்கி உள்ளது. அவன் எல்லா இடங்களிலும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ளான். மனித சுதந்திரத்தைக் புனிதப்படுத்திய ரூஸோவின் மகாவாக்கியம் இது. முந்நூறு வருடங்களுக்கு முன்னர் ரூஸோ இதைக் கூறினார். இன்று ஒபாமா இதைப் பேசுகிறார். ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட வேதங்களில்"சுதந்திரத்தை' புனிதப்படுத்தும் மேலான வாக்கியங்கள் எதுவும் இல்லையா, நிச்சயமாக அதைத் தேடிக் கண்டுபிடிக்க முடியும்.

ரூஸோ கூறியிருப்பவற்றைவிட ஆழமானதாகவும் அவை இருக்கலாம். சமய உண்மைகளுக்கு யார் வியாக்கியானமளிப்பது? என்ன வகையில் வியாக்கியானங்கள் வழங்கப்படுகின்றன. "சுதந்திரம்' என்பதை எப்படி அதன் உண்மை நிலையில் உணர்வது? தெளிவு தேவை. சுதந்திரத்தை இழந்த மக்களின் அவல ஒலிகளையும் கருகிக்கிடக்கும் அவர்களின் மோசமான வாழ்க்கையையும் அரபுலக மக்களின் கதைகளாக உலகம் இன்று பார்த்து வருகிறது. "அடக்குமுறையாளர் களிடமிருந்து எங்களையும் எங்கள் சந்ததிகளையும் காப்பாற்றுங்கள்' என்று உலக மக்களிடம் யாசிக்கும் நிலை அங்கு தோன்றியுள்ளது. அவர்கள் இரண்டு விடயங்களைப் பேசுகின்றார்கள். ஒன்று "சுதந்திரம்' மற்றது "ஜனநாயகம்' ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்கமுடியாத இரு கருத்தோட்டங்கள்.

புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் அடிப்படைத் தூண்டுதல் “சுதந்திர உணர்வில் தான் அதிகம் உள்ளது. பெரும்பான்மையினரின் ஆதிக்கத்திற்கு எதிரான சிறுபான்மையினரின் முறையீட்டில் ஒளிந்திருப்பதும் சுதந்திரந்தான். பெண்ணுரிமை என்பதன் உண்மையான பொருள் என்ன? அது பெண்களின் சுதந்திரம் பற்றிய கருத்தாடலாகும். 1400 வருடங்களுக்கு முன்னர் திருத்தூதர் முஹம்மது நபிகளால் தரப்பட்டுப் பின்னர் இழக்கப்பட்ட சுதந்திரத்தையே அரபுலகம் மீண்டும் தேடுகிறது என்று கூறியதும் பொருத்தமானதாக இருக்கலாம்.

எகிப்தின் தஹ்ரீர் சதுர்க்கத்திலும் அரிலக்ஸாண்ட் ரியாரிவின் கடற்கரை முற்றவெளியிலும் பஹ்ரைனின் முத்துச் சதுர்க்கத்திலும், யேமனின் தலைநகரிலும் கீரியாவிலும் ஜோர்தானிலும் சவூதியிலும் அரபுலகம் முழுவதிலும் கூடி இன்றும் போராடும் லட்சோப லட்சம் மக்கள் சிந்தும் கண்ணீரிலும் அரபு மண்ணைச் சிவப்பாக்கும் அவர்களின் இரத்தத்திலும் ஒரு செய்தி உள்ளது. அது "சுதந்திரத்தின் சுவாசம்' அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை? அரபு மண்ணையே ஆக்கிரமித்துள்ள இப்புரட்சியை அந்நியரின்சதி, இஸ்ரேலியரின் சூழ்ச்சி என்று ஒரு பழைய பகுப்பாய்வு நடந்து கொண்டிருப்பதையும் அறியமுடிகிறது. அந்தச் சதிகளும் இருப்பதாகவே எடுத்துக் கொண்டாலும் உண்மை நிலை என்ன? புரட்சி வெடிக்கச் சாத்தியமே இல்லாது, உள்நாட்டுப் பிரச்சினைகள் எதுவுமே இல்லாத, நல்லாட்சி நடைபெறும் நாடுகள் என்று இவற்றைக் கூறமுடியுமா? ஆட்சியாளர் மேற்கொள்ளும் சட்ட விரோதக் கொலைகளும் அதிகாரத் துஷ்பிரயோகங்களும் மனிதஉரிமை மீறல்களும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளும், அடக்குமுறைகளும் சித்திரவதைக் கூடங்களும் ஆட்கடத்தல்களும் நடைபெறாத புனித பூமி பற்றியா இங்கு பேசப்படுகிறது? இவை மட்டுமல்ல செல்வங் கொழிக்கும் எண்ணெய் வளங்களுக்கு மத்தியிலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோரும், வேலையின்றி நடைப்பிணங்களாகத் திரிவோரும் அடித்தட்டுமக்களும் இந்நாடுகளில் இல்லை என்று கூறுவது சாத்தியமா?

நிதிவளம்

தற்போதைய அரபுலகின் பதற்றமும் அமைதிக்குலைவும் பேர்லின் சுவர் வீழ்த்தப்பட்டதோடும் செப்டெம்பர் 11 இரட்டைக் கோபுரத்தகர்ப்போடும் ஒப்பிடப்படுகிறது. 1971 இல் நிகழ்ந்த உலக அளவிலான எண்ணெய்ப் புவியியல் அரசியலுக்கு சமமாக 2011 மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நிகழ்வுகளை ஒப்பிட முடியும் என்று எட்வாட் எல்.மோரிஸ் குறிப்பிடுகிறார். புரட்சிகள் தான்தோன்றியாக உருவாவதில்லை. உள்ளேயும் புறத்திலேயுமாகப் பல காரணிகள் அதில் சம்பந்தப்படுகின்றன. அரபுநாடுகள் 1971 ஐத் தொடர்ந்து எண்ணெய் வளங்களை மேற்கத்தைய அரசுகளிடமிருந்து தமதுரிமையாக்கிக் கொண்டதன் பின்னர் காணப்படக்கூடிய இந்நாடுகளின் நிலைமைகளும் மாற்றங்களும் தற்போதைய இக்குழப்ப நிலைக்கும் எழுச்சிக்கும் ஒரு பங்காளியாக இருந்துள்ளது.

வருமானத்தை ஈட்டுவதில் சில ஏற்றத்தாழ்வுகளும் பிரச்சினைகளும் இருந்தபோதும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் வட ஆபிரிக்க நாடுகளுக்கும் செல்வ வளத்தில் குறைவிருக்கவில்லை. 1980 களைத் தொடர்ந்து காளான்கள் போல் தோன்றிய எண்ணெய்க் கம்பனிகளும் விலை ஏற்றங்களின் போது கிடைத்து வந்த மிகை இலாபங்களும் ஏராளமான செல்வத்தைக் கொண்டுவந்து குவித்தன. உட்கட்டமைப்பு மாற்றங்களோடு குறிப்பாக வைத்திய சுகாதார வசதிகளும் விருத்தி செய்யப்பட்டதனால் மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துச் சென்றது. மக்கள் தொகைப் பெருக்கத்திலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு நிகழ்ந்தது இவை செல்வத்தினால் ஏற்பட்ட பலனாக இருந்தாலும் அதிகரித்துச் சென்ற மக்கள் தொகைக்கு ஏற்ப தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை. எண்ணெய் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்படும் போது தனிநபர் வருமான மட்டம் வேகமாக வீழ்ச்சியடைகிறது. அது வறுமையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.

கடந்த வருடம் உலக நிதித்துறையில் ஏற்பட்ட பாரிய நெருக்கடி அதைச் சமாளிப்பதற்காக ரில்லியன் கணக்கில் பிணை விடுதலையாக இறைக்கப்பட்ட டொலர்கள், அதனால் ஏற்பட்ட உலக அளவிலான பணவீக்கம் அதன் விளைவான விலைவாசி அதிகரிப்பு இவை மில்லியன் கணக்கான மக்களைப் பாதித்தன. அமைதியின்மை உலக அளவில் தலைதூக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியையும் அரபுலக மக்கள் புரட்சியுடன் சம்பந்தப்படுத்தாதிருக்க முடியாது. விலைவாசிகளின் உயர்வும் குறிப்பாக உணவுப் பண்டங்களின் விலை அதிகரிப்பும் அரபுலக நெருக்கடியில் விசேட கவனத்தைப் பெற்றிருப்பதையும் இங்கு சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.

எண்ணெய் வளம் வழங்கிய நிதிவளம் மக்களுக்கு முறையாகப் பகிர்ந்தளிக்கப்பட்டதா என்ற கேள்வி ஒருபுறம். மறுபுறத்தில் எண்ணெய்ப் பொருளாதாரத்தைப் பல்துறைப் பொருளாதாரமாக மாற்றி நீண்டகால நோக்கில் நாட்டிற்குப் பயனளிக்கக்கூடிய என்ன பாரிய திட்டங்களில் பண முதலீடுகள் நடந்தன? இவை முக்கியமான கேள்விகளாகும். இதற்குப் பதிலளிக்க ஆட்சியாளர்கள் கடமைப்பட்டுள்ளனர். தெருவில் கையேந்தித் திரியும் பிச்சைக்காரனின் பொறுப்பை அரசு தான் ஏற்க வேண்டும். உண்மையில் அரபு நாடுகளில் நடந்தது என்ன? ஜனநாயக விரோத நடவடிக்கைகள் அதாவது மனித சுதந்திரத்தையும் மனிதனின் அடிப்படைக் கௌரவத்தையும் நசுக்கும் அராஜக முயற்சிகளுடன் கூடிய சர்வாதிகார ஒற்றையாட்சிக்கு மக்கள் பணிந்து போக வேண்டிய ஆபத்தான சூழலை இந்நாட்டு ஆட்சியாளர் உருவாக்கினர்.

எதேச்சாதிகார அரசியல், மக்கள் ஆணைக்கு இடமளிக்காத ஆட்சி, நிதி மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம், அடக்குமுறை போன்ற தமது நாட்டின் அரசியல் தொடர்பில் மக்கள் "செல்வம் ஆட்சியாளனுக்கு துயரம் மக்களுக்கு' என்பதாக இது விரிவு பெற்றுச் சென்றது. செல்வம் சீராகவோ சமமாகவோ மக்களுக்குப் பகிரப்படவில்லை. வாழ்க்கைப் பிரச்சினை, தொழில் பற்றிய மக்களின் கோரிக்கைகளுக்கும் இந்நாடுகள் மதிப்பளிக்கவில்லை. ஏழ்மை உருவாக்கிய துயரம் ஒரு நச்சு அலையாக முழு அரபுலகையும் தாக்கியிருந்தது. ஆட்சியாளர் தமது ஆடம்பரங்களுக்கும் அர்த்தமற்ற செலவீனங்களுக்கும் வழங்கிய முக்கியத்துவத்தை மக்களின் துயர் துடைப்பதற்காக வழங்கவில்லை என்பது இங்கு காணப்படும் பெரிய பிரச்சினையாகும்.

டியூனீஷியா: முஹம்மத் பு ஆஸிஸ் ஒரு சிறு நிகழ்விலிருந்து தான் புரட்சி காட்டுத்தீப் போல் முழு அரபுலகையும் ஆக்கிரமித்தது. தனது வறிய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக கரத்தையில் பழங்கள் விற்று வந்த 26 வயது முஹம்மத் பு ஆஸிஸ் அனுமதிப்பத்திரம் தொடர்பில் பொலிஸுடன் வாக்குவாதப்படுகிறான். பொலிஸ் அவனை அடித்து அவமானப்படுத்துகிறது. தன்மானமுள்ள அந்த இளைஞனுக்கு தற்கொலை முயற்சிதான் ஆயுதமாகத் தெரிந்தது. அவன் சாதாரணமானவன், ஒரு ஏழை. அவனால் முடியக்கூடிய அளவில் ஆபத்தான முயற்சியில் இறங்கினான். டியூனீஷிய நகரின் மத்தியில் உள்ளூராட்சி மன்றத்தின் முன்னிலையில் தனக்குத்தானே தீமூட்டிக் கொண்டான். அதுவரை தூங்கிக் கிடந்த மூடஜனங்களுக்குச் சொல்லக் கூடிய ஒரு செய்தியை தனக்குத்தானே தீமூட்டி வெளிப்படுத்தினான். இது ஜனவரி 11 இல் நடந்தது.

வழமையாக நடப்பது போல் தற்கொலை முயற்சி இஸ்லாம் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா? இல்லையா? என்ற விவாதத்தில் யாரும் கவனம் செலுத்தவில்லை. அநியாயத்தைத் தட்டிக் கேட்பதற்கு பயங்கர ஆற்றலை இது மக்களுக்கு வழங்கியது. "அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வை. எல்லோருக்கும் வேலை கொடு' என்ற பதாகைகள் நகர் முழுக்கத் தோன்றின. மக்களின் மோசமான வாழ்க்கை நிலை, பொலிஸ் அராஜகம், நாட்டை அவதிக்குள்ளாக்கும் வேலையில்லாப் பிரச்சினை, மனித உரிமை மீறல்கள் என்று இதுவரை அமுங்கிக் கிடந்த டியூனீஷிய மக்களின் எரியும் பிரச்சினைகள் முஹம்மத் பு ஆஸிஸின் தீக்குளிப்பில் தான் எரிமலையாக வெடித்தது. ஒரு தினத்திற்குள்ளாகவே டியூனீஷிய இளைஞர்கள் முழுத் டியூனீஷியாவிற்கும் முழு அரபு நாடுகளுக்கும் உலகுக்கும் மனதை உலுக்கும் இக்காட்சிகளைக் கொண்டு சென்றனர். இணையத் தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளிவந்த காட்சிகளையும் அரபு இளைஞர்களின் துணிகர முயற்சிகளையும் கண்டு உலகம் அதிர்ந்தது.

மக்கள் புரட்சி

இது மக்கள் புரட்சி வன்முறையையும் பயங்கரவாதத்தையும் நாடாத மக்களின் புரட்சி. நிராயுத பாணிகளாக மக்கள் தெருவில் இறங்கத் தமது நாட்டிடமும் உலகத்திடமும் நியாயம் கேட்கும் மனிதப் போராட்டம். இராணுவ பலத்தைப் பிரயோகிக்கத் தயங்காத தலைவர்களோடு மோதப் போகிறோம் என்பதை அறிந்த நிலையிலேயே தலைநகரத் தெருக்களிலும் சதுக்கங்களிலும் மக்கள் ஒன்று திரண்டனர். வன்முறையாளர்களை வன்முறையற்ற நிலையில் மக்கள் எதிர்த்த வரலாற்று நாள் டியூனீஷியாவில் தொடங்கிய பல அரபு நாடுகளுக்கும் பரவிய மக்கள் எதிர்ப்பு. அரசாங்கம் யார், ஆட்சித் தலைவனா? மக்களா? இம்மக்கள் புரட்சி எழுப்பிய அடிப்படைக் கேள்வி இது.

தலைவர்கள், இயக்கங்கள், கட்சிகள், ஒழுங்கமைப்பாளர்கள் இன்றி மக்கள் இலட்சக்கணக்கில் தெருக்களில் ஒன்றுகூடினர். எகிப்தின் தஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டக் களத்திலிருந்து பொது மக்களிடம் யார் உங்கள் தலைவர் என்று கேட்ட போது தெரியாது என்று பதிலளித்தனர். இந்தக் கூட்டம் எப்படி இங்கு கூடியதோ அதுபோல் இந்தக் கூட்டத்திலிருந்தே ஒரு தலைவன் தோன்றுவான் என்று ஒரு இளைஞன் பதலளித்தான்.

வன்முறைக்குப் பதிலாக நிராயுதபாணியாக மக்களை இலட்சக்கணக்கில் ஓரிடத்தில் குவித்து ஆட்சியை எவ்வாறு அசைக்க முடியும் என்பதை டியூனீஷியரும் தஹ்ரீர் சதுக்கத்தில் எகிப்திய மக்களும் உலகுக்கு கற்றுக்கொடுத்தனர்.

2009 இல் ஈரானில் அகமதி நிஜாதின் ஆட்சிக்கு எதிராக நிராயுதபாணிகளான மக்கள் தெஹ்ரான் வீதிகளில் குவிந்த காட்சி மக்கள் புரட்சியின் நவீன வடிவமாகக் காட்சி தந்தது.ஆனால் ஈரானிய இளைஞர்களிடம் ஒரு ஆயுதம் இருந்தது.அது அவர்கள் கைகளில் இருந்த நவீன தொழில்நுட்ப ஊடக வலைப்பின்னலைப் பயன்படுத்தும் அறிவு.ஆனால் புரட்சி தோல்வியில் முடிந்தது.மக்கள் உத்தியினாலும் ஊடக வலைப்பின்னலைப் பயன்படுத்துவதாலும் எத்தகைய அடக்குமுறை அரசையும் எதிர்க்க முடியும்.எந்த நம்பிக்கையை அந்த மக்கள் புரட்சி உலகுக்கு வழங்கியது.டியூனீஷிய இளைஞர்களும் பின்னர் எகிப்திய இளைஞர்களும் இதே வழிமுறைகளை மேலும் செயலாக்கமுள்ளதாக தங்கள் தங்கள் நாடுகளில் பரிசோதித்தனர்.

ஒவ்வொரு அரபு நாட்டிற்கும் அவற்றிற்கென்ற தனித்துவமான அம்சங்கள் உள்ளன.வித்தியாசமான வரலாறு,கலாசாரம்,வேறுபட்ட அரசியல்,வேறு பட்ட அரசியல் பொருளாதாரம்,மக்கள் தொகையில் வேறுபாடு,வேறுபட்ட நகரப் புவியியல் என்று இவ்வேறுபாடுகளைக் கூறலாம்.ஆனால் இந்நாடுகளுக்கென்ற சில பொது அம்சங்களும் உள்ளன.அந்த ஒத்த தன்மை அவற்றின் குறைபாடுகளிலிருந்து ஆரம்பிக்கிறது.

அவற்றுள் முக்கியமானவை:

1.சமூக சமத்துவமின்மை அல்லது மார்க்ஸிஸ பரிபாஷையில் கூறுவதானால் வர்க்க பேதம்

2.காலங்கடந்த சர்வாதிகார ஆட்சி அல்லது மன்னராட்சி முறை.

3.வெளியிலிருந்து வரும் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய தேசியப் பற்றுள்ள கொள்கைகள் இன்மை.

4.ஊழல் மலிந்த அரசாட்சி அரச உடைமைகளைச் சூறையாடும் அதிகார வர்க்கம்.

நீதித்துறையின் சுயாதீனமின்மையும் செல்வப்பகிர்வில் அநீதியும் இந்நாடுகள் அனைத்திற்கும் பொதுவான ஏனைய இரு பாதகமான அம்சங்களாகும்.ஏற்றத்தாழ்வான சமூகம்,எதிர்பேச்சுக்கு இடமளிக்காத அரசாங்கத் தடை என்ற அனைத்து அம்சங்களுக்கும் உள்நாடுகளும் உள்நாட்டின் ஆட்சியாளர்களும்தான் பொறுப்பேற்க வேண்டும். மேற்கத்தேய எதிர்ப்புக்கும் இஸ்ரேலியக் கண்டனங்களுக்கும் மட்டுமே வீதி இறங்கவும் சதுக்கங்களில் ஒன்று கூடவும் மக்கள் இதுவரை பழக்கப்பட்டிருந்தனர்.ஆனால் அவ்வப்போது வெடித்துவந்த உள்நாட்டுக் கிளர்ச்சிகளை அரசுகள் பயங்கரமாக அழித்தொழித்தன.புரட்சிகர இயக்கங்கள் தடைசெய்யப்பட்டு அவற்றின் தலைவர்களும் போராளிகளும் தடுப்பு முகாம்களுக்குள் சிறைவைக்கப்பட்டனர்.உண்மையில் புரையோடிப் போயிருந்த பழைய பிரச்சினை ஒன்றிற்குக் கணக்குத் தீர்க்க மக்கள் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தனர்.காலத்தை எதிர்பார்த்திருந்தனர்.ஒரே ஒரு பெரிய கோரிக்கை அவர்களின் இதயங்களில் ஒலித்தது.அது ஆட்சி மாற்றம்.

ஆட்சி மாற்றமும் ஜனநாயகமும் தமது அரசாங்கத்தையும் தமது தலைவர்களையும் மக்கள் எதிர்த்தனர்.அவர்களது கோரிக்கைகள் குறைந்த அளவினதாகவும் தெளிவானதாகவும் இருந்தன.”போதும் போங்கள்’என்பதும் “சுதந்திரம் வேண்டும்’,”ஜனநாயகம் வேண்டும்’இவைதான் மூலாதார கோரிக்கைகள்.அரபுலக ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோத,மனித விரோத நடவடிக்கைகளையும் அரசியல் உபாயங்களையும் ஆட்சியாளர்கள் மூடி மறைத்து வந்த போதும் இவற்றை உலகம் அறியாமல் இருக்கவில்லை.பாரிய விளைவுகள் ஏற்படலாம் என்பதைத் தெரிவிக்கும் அறிகுறிகள் வெளிப்படாமலும் இருக்கவில்லை.

எகிப்தில் சில வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கொண்ட லீசா ரைஸ் கெய்ரோவில் பேசும்போது”எகிப்தில் ஜனநாயகத்திற்கான மாற்றம் தேவை’என்று பேசி இருந்தார்.நிலைமைகள் மோசமடையலாம் என்பதற்கான எச்சரிக்கைக் குரலாகவும் அதை இப்போது எடுத்துக் கொள்ளலாம்.அப்போது எகிப்து அமெரிக்க எதிர்ப்பில் மூழ்கி இருந்ததால் இதை யாரும் ஆழமானதாக எடுத்துக் கொள்ளவில்லை.

பின்னர் ஹிலாரி கிளின்டன் எகிப்தில் பேசும்போது “இது இறுதிச் சந்தர்ப்பம்.சமூக பொருளாதார நிலைமைகள் சீர்திருத்தப்பட்டு மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய ஆட்சிமுறை ஒன்றிற்கு எகிப்து மாறாவிட்டால் எகிப்து பாரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டியேற்படும்’என்று பேசியிருந்தார்.

ஒபாமா உரை 2009 இல் எகிப்திற்கு நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் தனது உரையில் இதே பிரச்சினையை வலியுறுத்தி இருந்தார்.”எகிப்து ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்’என்ற செய்தி அதில் இருந்தது.கைரோ பல்கலைக்கழகத்தில் ஒபாமா தனது உரையை ஆற்றினார்.அவரது நீண்ட உரையின் ஒரு கட்டத்தில் ஒபாமா பின்வருமாறு கூறினார்.

“நாலாவது அம்சமாக நான் ஜனநாயகம் பற்றிப் பேசப் போகிறேன்’.(சபையோரின் கைதட்டல் ஒலி) ஜனநாயகத்தை மேம்படுத்துவது எப்படி என்பது பற்றிக் கருத்து முரண்பாடுகள் உள்ளன.அரசாங்க முறைமை ஒன்றை ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது சுமத்த முடியாது.ஆனால் அரசாங்கம் ஒன்று மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்க வேண்டும்.அதை நான் கூற விரும்புகிறேன்.ஒவ்வொரு நாடும் அவரவர்க்கு இயல்பான முறையில் அந்தநாட்டு மக்களின் மரபுகளில் காலூன்றியவாறு இக்கோட்பாட்டிற்கு உயிரளிக்க வேண்டும்.உலகில் எல்லா மக்களும் அவசியம் என்றிருக்க வேண்டிய விடயங்கள் பற்றி எனக்குள் மாற்றமுடியாத நம்பிக்கை உண்டு.அதாவது பேச்சு சுதந்திரம் அதாவது அது அந்த நாட்டின் ஆட்சிக்கு எதிராகக் கூறக்கூடிய சுதந்திரமாக இருக்க வேண்டும்.

சட்டத்தின்மீது நம்பிக்கை பாரபட்சமற்ற நீதி மக்களிடமிருந்து மறைக்காத வெளிப்படையான அரசியல் செயற்பாடுகள் நீங்கள் விரும்பிய விடயத்தைத் தெரிவு செய்யும் சுதந்திரம்,இவை முக்கியமானவை.(இது எதுவுமே எகிப்திலும் ஏனைய பல அரபுநாடுகளிலும் காணக்கிடைக்காத விடயங்கள் ஆர்)இவை அமெரிக்கக் கருத்துகள் அல்ல.இவைதான் மனிதஉரிமைகள் அதனால்தான் இதனை எல்லா இடங்களிலும் வலியுறுத்தி வருகிறேன்.(கைதட்டல் ஒலி) இவ்வாறு மனித உரிமைகளைப் பாதுகாக்கும் அரசாங்கம்தான் இறுதியில் உறுதியான வெற்றிகரமான அரசாங்கமாக இருக்கும்.

சிலர் ஆட்சிக்கு வெளியில் இருக்கும்போது ஜனநாயகம் பற்றிப் பேசுகிறார்கள்.ஆனால், ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் மற்றவர்களின் உரிமைகளைக் கொடூரமாக நசுக்குகின்றார்கள்.(கைதட்டல் ஒலி) ஒபாமா சிறந்த பேச்சாளர்.ஒபாமாவின் கைரோ உரை அவரது சிறந்த உரைகளுள் ஒன்று.ஜனநாயகம் பற்றியும் மக்களின் சுதந்திரம் பற்றியும் ஒபாமா பேசியபோது எகிப்திய மக்கள் கரகோசம் செய்தார்கள்.தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஒபாமா பொதுவாக பேசினாலும் கொண்டலீசானரஸ்,ஹில்லாரி கிளிண்டனின பேச்சுகளின் மற்றொரு தொடர்ச்சிதான் அது.எகிப்தின் ஜனநாயக விரோத அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான கருத்துகளை அவை வெளிப்படுத்தின.தஹ்ரீர் சதுக்கத்திலும் அலெக்ஸாண்ட்லியா வீதிகளிலும் நின்று “போதும் முபாறக் நீ போ’ என்று மக்கள் கூக்குரல் எழுப்பியதற்குப்பின்னர் ஒபாமா வரிசைப்படுத்திய மனித உரிமைகள் தான் பதிவாகி இருந்தன.மக்களின் கைதட்டல் ஒலிகளுக்குள் எரிமலையின் அனல் ஒளிந்திருந்தது.ஹொஸ்னி முபாறக் அன்று அறிந்திருக்கவில்லை.தனது காலத்தின் பின்னர் தனது சந்ததிக்கு ஆட்சியை ஒப்படைப்பது பற்றிய அவரது ராஜதந்திரம் போராட்ட ஆரவாரத்தில் இது எதுவுமே முபாறக்கின் கண்களுக்குத் தெரியவில்லை.

அரபுலக அல்லது மத்திய கிழக்கு சமூக கலாசார மற்றும் வரலாற்று விடயங்களில் சிலர் கண்களை மூடிக்கொண்டு வெறும் கொள்கைப் பிரசாரங்களில் ஈடுப்பட்டிருந்தபோதும் அரபு மற்றும் ஆபிரிக்க மக்களின் இயல்பான சுதந்திர வேட்கையையும் புதிய விடயங்களைக் கற்றுக் கொள்வதில் அவர்களுக்குள்ள தாகத்தையும் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்ட உணர்வையும் எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிடமுடியாது.

பெயரளவிலான மாற்றங்கள் முதலாம் இரண்டாம் உலக யுத்தங்களைத் தொடர்ந்து முடியாட்சிகள் சரிந்துவிழும் என்று ஆரூடங்கள் வெளிவந்தவண்ணமிருந்தன.19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலேயே ஈரானிலும் துருக்கியிலும் எகிப்திலும் மட்டுப்படுத்தப்பட்ட மன்னராட்சிக்கும் யாப்பு அடிப்படையிலான (பாராளுமன்ற) ஆட்சிமுறைக்குமான அரசியல் கோடிக்கணக்கான மக்கள் வெளிப்படையாக முன்வைத்தனர். மன்னராட்சிக்கு முடிவு தேவை என்ற கருத்துகளை இப்போராட்டங்கள் பிரதிபலித்தன.உண்மையில் மக்கள் நீண்ட போராட்டங்களினால் களைத்துப்போன கதைகள் பல உள்ளன.

சில மாற்றங்கள் 20 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பாதியில் தான் சாத்தியமானபோதும் அவை வெறும் பெயரளவிலான மாற்றங்கள் மன்னர்களை வீட்டுக்கு அனுப்பிய பின்னரும் மற்றொரு மோசமான மன்னராட்சிதான் உருவாகியது.மக்களின் எதிர்பார்ப்புகள் சூன்யமானதொரு மக்களை விரக்திக்குள்ளாக்கும் திட்டங்களுக்கே முன்னுரிமை தரப்பட்டது.இப்போது ஒரு பொறிதான் தேவையாக இருந்தது அது தூனிஷியாவில் நிகழ்ந்தது.

டியூனீஷியப்புரட்சி எகிப்தை நேரடியாகத்தாக்கியது.டியூனீஷியாவின் கோஷங்களையும் கொடிகளையும் புரட்சி நடந்த எல்லா இடங்களுக்கும் மக்கள் கொண்டு சென்றனர்.பேஸ்புக்,டுவிட்டர் உட்பட எல்லா ஊடக வசதிகளையும் இளைஞர்கள் பயன்படுத்தினர்.செய்திகளும் படங்களும் உடனுக்குடன் உலகை வந்தடைந்தன. ஹொஸ்னி முபாறக்கின் நாற்பது வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக தஹ்ரீர் சதுக்கத்தில் மக்கள் ஒன்றுகூடினர்.அநேகமாக எல்லாப் பெரிய நகரங்களுக்கும் புரட்சி பரவியது.

இளைஞர் எழுச்சி யுத்தங்களுக்கும் மோதல்களுக்கும் எப்போதும் ஒரே ஒரு காரணம் மட்டும் இருந்ததில்லை.தூனிஷியா தொடங்கி லிபியா வரையுமான மக்கள் எழுச்சிகளில் இளைஞர்கள் முக்கிய பங்கேற்றிருந்தனர்.இன்னொரு வகையில் இளைஞர் அமைதி இன்மை இங்கு ஒரு பிரதான காரணியாக இடம்பெறுகிறது.அடக்குமுறை ஆட்சி,குறைகள் நிறைந்த அரசாங்கம்,விரக்தியடைந்த இளைஞர்கள்,இது இளைஞர்களை விரைவில் அரசாங்க எதிர்பாளர்களாக்குகிறது.பொதுவாக அரபு நாடுகளில் 15 வயது முதல் 29 வயது வரையான இளைஞர் தொகை 3040 சதவீதம் என்று கூறப்படுகிறது.

இளைஞர்களின் அமைதியின்மை இள வயதோடு ஒட்டிய பல பிரச்சினைகளுடன் தொடர்புடையது.திருமணவயது,பாலியல் கட்டுப்பாடு,மன அழுத்தங்கள்,குடும்பத்திற்குள்ளும் வெளியிலும் இளைஞர் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் அவமானங்கள் அவர்களை ஆத்திரமூட்டுகின்றன.கட்டிளமைப்பருவக்கோபம் வன்முறைக்கு விரைவில் மாற்றப்படக்கூடியது. யேமனில் அலி அப்துல்லா ஸாலி ஹிஸ் 32 வருட ஆட்சியை எதிர்த்து மக்கள் தலைநகர் யனாவில் ஒன்று திரண்டனர்.ஊழல்,குடும்ப ஆட்சி,மனித உரிமைத் துஷ்பிரயோகம்,வறுமை மோசமான ஆட்சி,அல்கைராவுக்கு எதிரான அமெரிக்கத் தாக்குதலுக்கு நாட்டில் இடமளித்தமை என்ற பல காரணங்களை முன்வைத்து அப்துல்லா ஸாலியின் ஆட்சியை மக்கள் எதிர்த்து வருகின்றனர்.

புரட்சிக்கான காரணங்கள் டியூனீஷியா,எகிப்து,யேமன்.லிபியா,பஹ்ஹரன் உட்பட பல அரபு நாடுகளில் புரட்சி தீவிரமாகப் பரவ ஒவ்வொரு நாடுகளுக்கும் அவற்றிற் கென்ற வெவ்வேறு சிறப்புக் காரணங்களிருந்தன.ஆனால், எல்லாநாடுகளுக்கும் பொதுவான அடிப்படைக் காரணங்கள் சில இருந்தன.பொருளாதார நெருக்கடி, வேலை வாய்ப்பின்மை, அரசியல் விரக்தி,இளைஞர் அமைதியின்மை முதலியன உலகின் பெரிய செல்வந்த நாடான சவூதியும் சரி வேறு எந்த அரபு நாடனாலும் சரி செல்வப்பகிர்வு சமத்துவமானதாக இருக்கவில்லை.சுகபோகத்தில் மிதக்கும் செல்வந்த ஷெய்குகளும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோரும் என்ற வர்க்கவேறுபாடு கண்டு கொள்ளப்படாத தீமைகளிலொன்றாக இன்று வரை நீடித்துள்ளது.சட்டத்தின்மீது நம்பிக்கை பாரபட்சமற்ற நீதி மக்களிடமிருந்து மறைக்காத வெளிப்படையான அரசியல் செயற்பாடுகள் நீங்கள் விரும்பிய விடயத்தைத் தெரிவு செய்யும் சுதந்திரம்,இவை முக்கியமானவை.(இது எதுவுமே எகிப்திலும் ஏனைய பல அரபுநாடுகளிலும் காணக்கிடைக்காத விடயங்கள் ஆர்)இவை அமெரிக்கக் கருத்துகள் அல்ல.இவைதான் மனிதஉரிமைகள் அதனால்தான் இதனை எல்லா இடங்களிலும் வலியுறுத்தி வருகிறேன்.(கைதட்டல் ஒலி) இவ்வாறு மனித உரிமைகளைப் பாதுகாக்கும் அரசாங்கம்தான் இறுதியில் உறுதியான வெற்றிகரமான அரசாங்கமாக இருக்கும்.

சிலர் ஆட்சிக்கு வெளியில் இருக்கும்போது ஜனநாயகம் பற்றிப் பேசுகிறார்கள்.ஆனால், ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் மற்றவர்களின் உரிமைகளைக் கொடூரமாக நசுக்குகின்றார்கள்.(கைடத்தல்ஒலி) ஒபாமா சிறந்த பேச்சாளர்.ஒபாமாவின் கைரோ உரை அவரது சிறந்த உரைகளுள் ஒன்று.ஜனநாயகம் பற்றியும் மக்களின் சுதந்திரம் பற்றியும் ஒபாமா பேசியபோது எகிப்திய மக்கள் கரகோசம் செய்தார்கள்.தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.ஒபாமா பொதுவாக பேசினாலும் கொண்டலீஸா ரைஸ்,ஹிலாரி கிளிண்டனின் பேச்சுகளின் மற்றொரு தொடர்ச்சிதான் அது எகிப்தின் ஜனநாயக விரோத அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான கருத்துகளை அவை வெளிப்படுத்தின.தஹ்ரீர் சதுக்கத்திலும் அலெக்ஸாண்ட்ரியா வீதிகளிலும் நின்று “போதும் முபாறக் நீ போ’ என்று மக்கள் கூக்குரல் எழுப்பியதற்குப்பின்னர் ஒபாமா வரிசைப்படுத்திய மனித உரிமைகள் தான் பதிவாகி இருந்தன.மக்களின் கைதட்டல் ஒலிகளுக்குள் எரிமலையின் அனல் ஒளிந்திருந்தது.ஹொஸ்னி முபாறக் அன்று அறிந்திருக்கவில்லை.தனது காலத்தின் பின்னர் தனது சந்ததிக்கு ஆட்சியை ஒப்படைப்பது பற்றிய அவரது ராஜதந்திரம் போராட்ட ஆரவாரத்தில் இது எதுவுமே முபாறக்கின் கண்களுக்குத் தெரியவில்லை.

அரபுலக அல்லது மத்திய கிழக்கு சமூக கலாசார மற்றும் வரலாற்று விடயங்களில் சிலர் கண்களை மூடிக்கொண்டு வெறும் கொள்கைப் பிரசாரங்களில் ஈடுப்பட்டிருந்தபோதும் அரபு மற்றும் ஆபிரிக்க மக்களின் இயல்பான சுதந்திர வேட்கையையும் புதிய விடயங்களைக் கற்றுக் கொள்வதில் அவர்களுக்குள்ள தாகத்தையும் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்ட உணர்வையும் எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிடமுடியாது.

பெயரளவிலான மாற்றங்கள் முதலாம் இரண்டாம் உலக யுத்தங்களைத் தொடர்ந்து முடியாட்சிகள் சரிந்துவிழும் என்று ஆரூடங்கள் வெளிவந்தவண்ணமிருந்தன.19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலேயே ஈரானிலும் துருக்கியிலும் எகிப்திலும் மட்டுப்படுத்தப்பட்ட மன்னராட்சிக்கும் யாப்பு அடிப்படையிலான (பாராளுமன்ற) ஆட்சிமுறைக்குமான அரசியல் கோடிக்கணக்கான மக்கள் வெளிப்படையாக முன்வைத்தனர். மன்னராட்சிக்கு முடிவு தேவை என்ற கருத்துகளை இப்போராட்டங்கள் பிரதிபலித்தன.உண்மையில் மக்கள் நீண்ட போராட்டங்களினால் களைத்துப்போன கதைகள் பல உள்ளன.

சில மாற்றங்கள் 20 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பாதியில் தான் சாத்தியமானபோதும் அவை வெறும் பெயரளவிலான மாற்றங்கள் மன்னர்களை வீட்டுக்கு அனுப்பிய பின்னரும் மற்றொரு மோசமான மன்னராட்சிதான் உருவாகியது.மக்களின் எதிர்பார்ப்புகள் சூன்யமானதொரு மக்களை விரக்திக்குள்ளாக்கும் திட்டங்களுக்கே முன்னுரிமை தரப்பட்டது.இப்போது ஒரு பொறிதான் தேவையாக இருந்தது அது தூனிஷியாவில் நிகழ்ந்தது.

டியூனீஷியப்புரட்சி எகிப்தை நேரடியாகத்தாக்கியது.தூனிஷியாவின் கோஷங்களையும் கொடிகளையும் புரட்சி நடந்த எல்லா இடங்களுக்கும் மக்கள் கொண்டு சென்றனர்.பேஸ்புக்,டுவிட்டர் உட்பட எல்லா ஊடக வசதிகளையும் இளைஞர்கள் பயன்படுத்தினர்.செய்திகளும் படங்களும் உடனுக்குடன் உலகை வந்தடைந்தன. ஹொஸ்னி முபாறக்கின் நாற்பது வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக தஹ்ரீர் சதுக்கத்தில் மக்கள் ஒன்றுகூடினர்.அநேகமாக எல்லாப் பெரிய நகரங்களுக்கும் புரட்சி பரவியது.

இளைஞர் எழுச்சி யுத்தங்களுக்கும் மோதல்களுக்கும் எப்போதும் ஒரே ஒரு காரணம் மட்டும் இருந்ததில்லை.தூனிஷியா தொடங்கி லிபியா வரையுமான மக்கள் எழுச்சிகளில் இளைஞர்கள் முக்கிய பங்கேற்றிருந்தனர்.இன்னொரு வகையில் இளைஞர் அமைதி இன்மை இங்கு ஒரு பிரதான காரணியாக இடம்பெறுகிறது.அடக்குமுறை ஆட்சி,குறைகள் நிறைந்த அரசாங்கம்,விரக்தியடைந்த இளைஞர்கள்,இது இளைஞர்களை விரைவில் அரசாங்க எதிர்ப்பாளர்களாக்குகிறது.பொதுவாக அரபு நாடுகளில் 15 வயது முதல் 29 வயது வரையான இளைஞர் தொகை 3040 சதவீதம் என்று கூறப்படுகிறது.

இளைஞர்களின் அமைதியின்மை இள வயதோடு ஒட்டிய பல பிரச்சினைகளுடன் தொடர்புடையது.திருமணவயது,பாலியல் கட்டுப்பாடு,மன அழுத்தங்கள்,குடும்பத்திற்குள்ளும் வெளியிலும் இளைஞர் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் அவமானங்கள் அவர்களை ஆத்திரமூட்டுகின்றன.கட்டிளமைப்பருவக்கோபம் வன்முறைக்கு விரைவில் மாற்றப்படக்கூடியது.

யேமனில் அலி அப்துல்லா ஸாலி ஹிஸ் 32 வருட ஆட்சியை எதிர்த்து மக்கள் தலைநகர் யனாவில் ஒன்று திரண்டனர்.ஊழல்,குடும்ப ஆட்சி,மனித உரிமைத் துஷ்பிரயோகம், வறுமை மோசமான ஆட்சி,அல்கைராவுக்கு எதிரான அமெரிக்கத் தாக்குதலுக்கு நாட்டில் இடமளித்தமை என்ற பல காரணங்களை முன்வைத்து அப்துல்லா ஸாலியின் ஆட்சியை மக்கள் எதிர்த்து வருகின்றனர்.

புரட்சிக்கான காரணங்கள் தூனிஷியா,எகிப்து,யேமன்.லிபியா,பஹ்ரேய்ன் உட்பட பல அரபு நாடுகளில் புரட்சி தீவிரமாகப் பரவ ஒவ்வொரு நாடுகளுக்கும் அவற்றிற் கென்ற வெவ்வேறு சிறப்புக் காரணங்களிருந்தன.ஆனால், எல்லாநாடுகளுக்கும் பொதுவான அடிப்படைக் காரணங்கள் சில இருந்தன.பொருளாதார நெருக்கடி, வேலை வாய்ப்பின்மை, அரசியல் விரக்தி,இளைஞர் அமைதியின்மை முதலியன உலகின் பெரிய செல்வந்த நாடான சவூதியும் சரி வேறு எந்த அரபு நாடனாலும் சரி செல்வப்பகிர்வு சமத்துவமானதாக இருக்கவில்லை.சுகபோகத்தில் மிதக்கும் செல்வந்த ஷெய்குக்களும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோரும் என்ற வர்க்கவேறுபாடு கண்டு கொள்ளப்படாத தீமைகளிலொன்றாக இன்று வரை நீடித்துள்ளது.

சவூதியில் புரட்சி வெடிக்காவிட்டாலும் புரட்சிக்குத் தேவையான அரபுலகிற்குரிய பொது அம்சங்கள் சவூதிக்கும் பொதுவானதாகவே உள்ளன.போலித் திருத்த வேலைகளாலும் படை பலத்தாலும் சவூதி அரசு போராட்டங்களைத் தடுப்பதற்கும், நசுக்குவதற்கும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருவதை உலகம் அறியும்.

அமெரிக்காவிலும் மேற்கு நாடுகளிலும் கல்வி கற்றுவரும் இளைஞர்களும், நவீன ஊடகத் துறைகளோடு தொடர்புள்ளவர்களும், அடக்குமுறைகளை எதிர்ப்பவர்களும் பழைய மன்னராட்சி மரபையும் காலத்திற்குப் பொருத்தமற்ற சமயக்கட்டுப்பாடுகளையும் எதிர்த்து வருகின்றனர். மக்களின் வறுமையும் வேலையின்மையும் அரபு நாடுகள் முழுக்க ஏற்படுத்திய எதிர்ப்பலை சவூதியையும் தாக்கியது.இளைஞர்களும்,தொழிலாளர்களும் தலைநகர் றியாத்தில் கூடினர். கத்தீர் நகரிலும் எண்ணெய் வளமுள்ள கிழக்குப் பகுதிகளிலும் மக்கள் ஒன்று கூடினர்.அரசியல் எதிரிகளை விடுதலை செய்யும் படியும் சீர் திருத்தங்களை விரைவாக அமுல்நடத்தும் படியும் மக்கள் அரசை வற்புறுத்தி வருகின்றனர்.ஷியாம் பிரிவினர் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் தடுப்புக்காவலில் உள்ள தமது ஷியாத் தலைவர்களை விடுதலை செய்யும்படியும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.ஏனைய அரபு நாடுகளில் நிகழும் போராட்டங்களை சவூதி மக்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். பல வருடகாலமாக சவூதியில் நடைபெற்றுவரும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் சீர்திருத்தங்களும் அரசாங்கத்தைப் பணியவைப்பதற்கும் இக்கால கட்டத்தை சிறந்த சந்தர்ப்பமாக மக்கள் கருதுகின்றனர்.

சவூதியில் வறுமையும் வேலையின்மையும் மோசமான நிலையில் இருப்பதாகவும் வீடற்றவர்களின் பிரச்சினை மற்றொரு அவலம் என்றும் ஆட்சியாளர்களிடையே தலைவிரித்தாடும் நிதி மோசடியைக் கட்டுப்படுத்த முடியாதிருப்பதைப் பற்றியும் எதிர்த் தரப்பினரும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பகிரங்கமாக குரல் எழுப்பிவருகின்றனர்.தங்களுக்கு எதிராக உருவாகிவரும் பாதகமான சூழ்நிலைகளைத் தணிவடையச் செய்வதற்காக கடந்த மாதம் சமூக நிதிக்காக பல மில்லியன் டொலர்களை சவூதி ஆட்சியாளர் ஒதுக்கியதையும் தொழிலாளர்களின் சம்பளத்தை 15 வீதத்தினால் கூட்டியதையும் வெறும் கண்துடைப்பு உபாயம் என்றே கருதவேண்டும்.

பெண்கள் மீது விதிக்கப்பட்டுள்ள அரச கட்டுப்பாடுகளை இன்று பெண்களே எதிர்த்துவரும் சூழ்நிலையை அவதானிக்க முடிகிறது.பெண்களின் உரிமைகள் சார்பாகவும் பொதுவான அநீதிகளை எதிர்த்தும் அரபு நாட்டு ஆர்ப்பாட்டங்களில் பெண்கள் பங்கேற்கின்றனர்.உலகில் ஏனைய பெண்களுக்குத் தரப்பட்டுள்ள அரசியல் உரிமைகள் தங்களுக்கும் தரப்படவேண்டும் என்று சவூதிப் பெண்கள் குரலெழுப்பி வருகின்றனர். “சவூதிய பெண்களுக்கு வாக்களிக்க உரிமையில்லை’ என்ற கருத்திலிருந்து அரசியல் உரிமைப் போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்.

“பால்மைச்சமத்துவம்’ ( எஞுணஞீஞுணூ ஞுணுதச்டூடிtதூ) இனவிருத்தி சுகாதாரம் போன்றவற்றில் பெண்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.இது தொடர்பான தரவரிசைப்படுத்தலில் உலகின் கடைசி நாடாக சவூதி உள்ளது என ஐ.நா.அறிக்கை கூறுகிறது.

சவூதி உட்பட ஒவ்வொரு அரபு நாடும் மோசமான அரசியல்,பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்குள் சிக்கியுள்ளன.நவீன உலகப்போக்குகளையும் புதிய சிந்தனைகளையும், சமத்துவ ரீதியிலான பொருளாதார வளப்பகிர்வையும் கொண்ட நல்லாட்சிக்கு மாறுவதைத் தவிர இப் பிரச்சினைகளுக்கு வேறு தீர்வுகள் இல்லை.ஆட்சி மாற்றத்தினூடாகத் நாம் இம் மாற்றங்களுக்கு வழிவகுக்க முடியும் என்று மக்கள் நன்குணர்ந்துள்ளனர்.அவ் விழிப்புணர்வின் பாரிய முன் நிகழ்வாகத்தான் இப் புரட்சியை அனுமானிக்கத் தோன்றுகிறது.

நன்றி தினக்குரல்

http://www.thinakkural.com/articles/2110-2011-04-07-03-56-02.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.