Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண பிதா ஜெயக்குமார் அடிகளார் அவமதிக்கு உள்ளானமை - யாழ் பல்கலைக்கழக சமூகத்தில் போராட்டம்

Featured Replies

தீவகத்திலுள்ள வண பிதா ஜெயக்குமார் அடிகளாரை அவமதிக்கும் வகையில் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிக்கும் வகையில் நேற்று யாழ் பல்கலைக்கழக சமூகத்தில் அடையாள விரிவுரைகளை பகிஸ்கரிக்கும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கியூடெக் எனப்படும் கத்தோலிக்க அமைப்பினது இயக்குனராக வண பிதா ஜெயக்குமார் அடிகளார் நீண்ட காலமாக பணியாற்றியுள்ளார். அப்போது யாழ்க்குடாநாட்டில் சிக்குண்டிருந்த வன்னியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 650க்கும் அதிகமானவர்களுக்கான உணவு உள்ளிட்ட அடிப்படையான உதவிகள் அனைத்தையும் வழங்குவதில் வண பிதா ஜெயக்குமார் அடிகளார் பெரும் பங்காற்றியிருந்தார். இன்று வரை அந்த உதவிகள் கியூடெக் அமைப்பினூடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையிலேயே கியூடெக் அமைப்பின் முன்னாள் இயக்குனரும் தற்பொழுது தீவகப் பகுதியில் பங்குத் தந்தையாகவும் உள்ள வண பிதா ஜெயக்குமார் அடிகளார் அவமதிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஒட்டு மொத்த பல்கலைக்கழக சமூகமும் இந்த அடையாள விரிவுரை பகிஸ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றன.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த சர்வமதக்குழுவிடம் இவர் வடபகுதியின் உண்மை நிலைகளை அம்பலப்படுத்தியிருந்த நிலையிலேயே அவரது வீட்டுக்கு முன்பாக சென்ற சிலர் கழிவுகளை வீசி அவரை அவமதித்த செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தே பல்கலைக்கழக மாணவர் சமூகம் இந்த அடையாள விரிவுரை பகிஸ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.

08-04-2011

அருட்தந்தை ஜெயகுமார் அடிகளார் தாக்கப்பட்டமைக்கு த.தே.ம.முன்னணி கண்டனம்

மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரும் தற்போது ஊர்காவற்துறை பங்குத் தந்தையாகவும் பணிபுரியும் அருட்தந்தை nஐயக்குமார் அடிகளார் மீது கடந்த வெள்ளிக்கிழமை (01-04-2011) அன்று சாக்கடை நீரால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.கடந்த வாரம் தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த சர்வமதக் குழுவினர் யாழ்ப்பாணத்திலுள்ள மனித நேய அமைப்புக்களை சார்ந்தவர்களை கடந்த புதன்கிழமை (30-03-2011) அன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த மனிதநேய அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் யாழ்குடாநாட்டில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் மனிதாபிமான நெருக்கடிகள், இராணுவ நெருக்கடிகள், அபிவிருத்தி புனர்வாழ்வு நடவடிக்கைகளில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்படுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை விளக்கியிருந்தனர். அது பற்றிய விபரங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பு இடம்பெற்ற இரண்டவது நாள் வெள்ளிக்கிழமை(01-04-2011) இரவு ஊர்காவற்துறை மாதா ஆலயத்தில் அமைந்துள்ள பங்குத் தந்தையின் தங்குமிடத்திற்கு இரண்டு நபர்கள் மோட்டார் சைக்களில் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் தேவாலய பின் வாயிலில் மோட்டார் சைக்கிளை ஆயத்த நிலையில் வைத்திருக்க மற்றவர் ஆலய வளவினுள் புகுந்து விடுதி வாசலில் நின்றவாறு பங்குத் தந்தையை அழைத்துள்ளார். அச்சமயம் அங்கு தங்கியிருந்த இளைஞர் ஒருவர் வெளியே செல்ல அவரைத் தொடர்ந்து பங்குத்தந்தை nஐயக்குமார் அடிகளாரும் வெளியே சென்றுள்ளார். குறித்த நபர் தனது கைகளை பின்புறம் வைத்தபடியே பங்குத் தந்தையை நோக்கி நகர்ந்துள்ளார். அவ்வேளையில் பங்குத் தந்தையுடன் சென்ற இளைஞர் குறித்த நபரிடம் என்ன என்று வினவ அவர் மீது மிளகாய்த் தூள் வீசப்பட்டுள்ளது. தொடர்ந்து பங்குத் தந்தை மீது சாக்கடைக் கழிவுகளால் தயாரித்த கழிவு நீரை ஊற்றிய தாக்குதலாளி வாசலில் ஆயத்த நிலையில் இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி இருவருமாக தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக பங்குத் தந்தை பொலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து ஊர்காவற்துறை பொலீசார் அங்கு சென்றுள்ளனர். நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் பங்குத் தந்தையினால் பொலீசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாடு செய்யப்பட்டு எட்டு நாட்கள் கடந்துள்ள நிலையிலும் பொலீசார் குற்றவாளிகள் எவரையும் கைது செய்யவில்லை.பிரதேச மக்களின் தகவலின் படி தாக்குதல் நடத்தியவர் அங்கு இடம்பெற்ற இழுபறியின் போது தொலையேசி ஒன்றினை அங்கு தவறவிட்டுச் சென்றிருக்கின்றார். அத்தொலைபேசியில் சேமிக்கப்பட்டிருந்த பெயர்கள் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர்களது என்றும் அறிய முடிகின்றது. அத் தொலைபேசியும் பொலீசாரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் மூலம் அறிய முடிந்தது. வலுவான ஆதாரம் ஒன்று பொலீசாருக்கு வழங்கப்பட்டும் கூட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் தாக்குதலின் பின்னணியில் அரசாங்கம் இருந்துள்ளதா என்ற வலுவான சந்தேகம் எழுகின்றது.

பாதுகாப்பு என்ற பெயரில் கண்ட இடமெல்லாம் சோதனைகளை மேற்கொண்டுவரும் படையினருக்குத் தெரியாமால் அருட்தந்தை மீதான தாக்குதல் இடம்பெற்றிருக்க வாய்ப்பு இல்லை. இத்தாக்குதலுக்கு அரசாங்கமும் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள ஸ்ரீலங்கா ஆயுதப் படைகளுமே முழுமையான பொறுப்பையும் ஏற்க வேண்டும்.அருட்தந்தை nஐயக்குமார் அடிகளார் கடந்த இரண்டு தசாப்தங்களாக மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். போரினாலும், சுனாமி அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மிகப் பெரும் சேவைகளை ஆற்றியிருக்கின்றார். யுத்தம் தீவிரமாக இடம்பெற்றபோது வன்னியை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவர்களது குடும்பங்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த வேளையில் இரண்டு வருடங்களுக்கு மேலாக அந்த மாணவர்களுக்கு உணவு வழங்கும் மாபெரும் பொறுப்பினை ஏற்றிருந்தார். அதன் மூலம் அந்த மாணவர்கள் தமது கல்வியை இடைநிறுத்தாது தொடர முடிந்துள்ளது.

கடந்த மூன்று தசாப்த காலங்களில் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை வெளிக் கொணர்ந்து மக்களது பாதுகாப்பினை உறுதிப் படுதத வேண்டும் என்பதிலும் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து அவர்களது குடும்பங்களுடன் இணைக்க வேண்டுமென்பதற்காகவும் அற்பணிப்புடன் உழைத்து வருபவர்.யுத்தம் முடிந்த பின்னரும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு பல்வேறு வழி முறைகள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த இன அழிப்பு அட்டூழியங்களை வெளிக் கொணர்ந்து மக்கள் பாதுகாப்பாக வாழும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஏனைய மனித நேய அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து சர்வமதக் குழுவினரிடம் குடாநாட்டு நிலைமைகளை எடுத்து விளக்கியிருந்தார். அதற்காகவே அவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.அருட்தந்தை nஐயக்குமார் அவர்கள் சகல மதங்களையும் சார்ந்த மக்களால் மிகவும் உயர்வாக மதிக்கப்படும் நேர்மையும், அற்பணிப்பும், மனிதநேயமும் மிக்க மதத் தலைவராவார். அவர் மீதான தாக்குதல் தமிழ் மக்களது ஐனநாயக உரிமைகளுக்காக குரல்கொடுப்போர் சகலருக்குமான கொலை அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.இத் தாக்குதலை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஸ்ரீலங்கா அரசு யுத்தத்தினை முழு வீச்சில் முன்னெடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை சர்வதேச சமூகம் வழங்கியது. யுத்தம் முடிவடைந்த பின்னரும் பல்வேறு வழி முறைகளுடாக இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் மீது இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த இன அழிப்பிலிருந்து தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு உண்டு. அருட்தந்தை மீதான தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும், எதிர்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்கும் வகையிலும் சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். இவ்விடயத்தில் சர்வதேச சமூகம் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி புலம்பெயர் தமிழ் மக்கள் அவர்கள் வாழும் நாட்டு அரசுகளுக்கும் மனித உரிமை அமைப்புக்களுக்கும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமெனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோருகின்றது.

செ.கஜேந்திரன்

பொதுச் செயலாளர்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி

www.globaltamilnews.net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.