Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொண்டச்சியில் சிங்கள குடியேற்றம் அடைக்கல நாதன் குற்றச்சாட்டு

Featured Replies

மன்னார் மாவட்டத்தின் தெற்குப் பக்க எல்லைப் பகுதியில் அரசாங்கத்தின் அனுசரணையுடன் பெரும்பான்மை இன மக்கள் மிக வேகமாகக் குடியேற்றப்பட்டு வருகின்றனர்.ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களால் கூடத்தட்டிக் கேட்க முடியாத நிலையில் மரமுந்திரிச் செய்கைக்குப் பெயர்பெற்ற கொண்டச்சிப் பகுதி உட்பட வளம் நிறைந்த பிரதேசங்கள் படைத்தரப்பினரின் உதவி ஒத்தாசையுடன் அபகரிக்கப்படுகின்றன.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். தென் எல்லையில் உள்ள கடற்கரைப் பிரதேசத்தில் அப்பிரதேச மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்படாமல், கடற் படைத் தளமாக மாற்றி அமைக்கப் படுவதாகவும் அவர் விடுத்த அறிக்கை ஒன்றில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரின் அறிக் கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளாதாவது:

மன்னார் மாவட்டத்தின் தென் எல்லையோரமாக உள்ள பகுதிகள் அரசின் திட்டமிட்ட பெரும்பான்மையின குடியேற்றத்துக்கு உட்படுத்தப்படவுள்ளன என அறிய முடிகின்றது.இப்பகுதிகளை உள்ளடக்கிய முள்ளிக்குளம் கிராமம், கொண்டச்சியிலுள்ள தம்பப்பள்ளி மற்றும் மடு வீதியிலுள்ள பல பகுதிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன எனக் கிடைக்கும் தகவல்கள் மூலம் அறிய வருகின்றது.முள்ளிக்குளம் பிரதேசம் யுத்தம் முடி வுக்குக்கொண்டு வரப்பட்ட பின்னர் கடற் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மீள் குடியேற்றம் இதுவரை மறுக்கப்பட்டு இதன் கரையோரப் பிரதேசங்கள் கடற்படைத்தளமாக மாற்றப்பட்டுள்ளன.

கொண்டச்சி பிரதேசம் மன்னார் மாவட்டத்தில் மர முந்திரிகைச் செய்கைக்குப் பெயர் பெற்றது. யுத்தகால நடவடிக்கை யின் காரணமாக மர முந்திரிகைச் செய்கை அங்கு மிகமோசமாக பாதிக்கப்பட்டதுடன் முற்றாக அழிக்கப்பட்டது. தற்போது அப்பகுதியில் புனரமைப்பு என்ற போர்வையில் பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் முயற்சிகளே நடைபெறுகின்றன. இவ்வாறுதான் மடுவீதி மற்றும் மடுப்பிரதேசப் பகுதிகளில் பௌத்த விகாரைகள் விஸ்தரிப்பு, பெரும்பான்மைக் குடியிருப்புகள் ஆகியன தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. மன்னார் மாவட்டத்தின் தென் எல்லையோரப் பிரதேசங்களில் திட்டமிட்ட வகையில் பெரும்பான்மையின மக்களை குடியேற்றும் அரசின் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இல்லையேல் இது பாதகமான விளைவுகளையே எதிர்காலத்தில் உருவாக்கும்.தமிழ் மக்களின் மிகப் பெரும் பாரம் பரிய பிர÷தசங்களில் ஒன்றான யாழ். குடாநாட்டில் அதிகாரத்திலுள்ளவர்களின் துணையுடன் பெரும்பான்மையினக் குடியேற்றம் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இவ்வாறே கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் யுத்தத்துக்கு பிந்திய காலத்தில் தமிழர் தாயகப் பிரதேசங்களை அபகரிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின் றன.

ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் ஆகியோரால் கூட இதனை தட்டிக்கேட்க முடியாத நிலைமையே தொடர்ந்து காணப்படுகின்றது.அதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் முஸ்ஸிம் மக்களுக்குச் சொந்தமான பெருமளவான நிலப்பரப்புகள் பெரும்பான்மை இனத்தவர்களால் அப கரிக்கப்பட்டுள்ளன.

இதனைக்கூட தட்டிக்கேட்க முடியாத நிலையிலேயே ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்ஸிம் அரசியல் வாதிகள் உள்ளனர் என்பதனையும் சுட்டிக்காட்ட வேண்டும்.பெரும்பான்மை இன மக்களின் திட்டமிட்ட குடியேற்றம் தொடருமானால், மக்கள் போராட்டத்தினூடாக கிளர்ந்தெழுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றுள்ளது.

My link

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.