Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மருத்துவமனைகளை தமது தேவைக்கு பாவிக்கவில்லை - நிபுணர் குழு அறிக்கை

Featured Replies

வியாழக்கிழமை, ஏப்ரல் 21, 2011

இறுதி நேரம்வரை விடுதலைப்புலிகள் வைத்தியசாலைகளை தமது தேவைக்காக பாவிக்கவில்லை என நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 தை மாதம் தொடக்கமே இலங்கை அரசு படைகள் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்த வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்களை கோத்தபாய புலிகளின் இராணுவ இலக்கு என குறிப்பிட்டிருந்தார். ஒரு கட்டத்தில் தாக்குதல் நடந்தது உண்மை ஆனால் புலிகள்தான் அங்கு இருந்தார்கள் எனவும் அங்கு பொதுமக்களோ நோயாளர்களோ இருக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.

தைமாதம் முல்லைத்தீவு வைத்தியசாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் வீடியோ ஆதாரங்கள், மற்றும் கண்கண்ட சாட்சிகளால சர்வதேச செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் உள்ளார்கள் .

இந்த நிலையில் வைத்தியசாலை மீதான தாக்குதல்கள் பக்கசார்பின்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நிபுணர் குழு அறிக்கை கூறியுள்ளது.

இதே வேளை விடுதலைப்புலிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். ஆனால் இறுதிவரை அவர்கள் இராணுவ தேவைக்கு வைத்தியசாலைகளை பாவிக்கவில்லை எனவும் கூறியுள்ளது நிபுணர் குழு அறிக்கை.

http://eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

மருத்துவமனைகள் மீது இலங்கைப் படைகள் நடத்திய தாக்குதல்கள் குறித்த நிபுணர் குழுவின் அறிக்கையின் பகுதி ஒன்று வெளியாகியது.

வன்னிப் பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மீது இலங்கைப் படைகள் நடத்திய தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையில் உள்ள சில விபரங்களைக் கொழும்பில் இருந்து வெளியாகும் தி ஐலன்ட் நாளேடு இன்று வெளியிட்டுள்ளது.

வன்னிப் பகுதியில் இருந்த அனைத்து மருத்துவமனைகளும் இலங்கைப் படையினரால் தாக்கப்பட்டதாகவும், அவற்றின்போது ஏற்கனவே காயமடைந்திருந்த நோயாளர்களும், மருத்துவமனைப் பணியாளர்களும் உயிரிழந்தார்களெனவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

மருத்துவமனைகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் காயமடைந்த போராளிகள் இருந்தபோதிலும், அவற்றில் இருந்து விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தவில்லையெனவும், அந்த மருத்துவமனைகளின் அமைவிடங்கள் இலங்கைப் படைகளுக்கு நன்கு தெரியுமெனவும் நிபுணர் குழு தெரிவிக்கிறது.

புதுமாத்தளன், மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் அமைந்திருந்த தற்காலிக மருத்துவமனைகள் மருத்துவ உபகரணங்கள் இன்றிச் செயற்பட்டதாகவும், காயமடைந்தவர்களைக் காப்பாற்றுவதற்கு அங்கங்கள் கத்திகளால் வெட்டி அகற்றப்பட்டதாகவும், மயக்க மருந்து இன்றிச் சத்திரசிகிச்சைகள் இடம்பெற்றதாகவும், காயமடைந்தவர்களின் உடலில் இருந்து வெளியேறிய இரத்தம், துணிகளில் வடிகட்டப்பட்டு, நோயாளர்களுக்கு மீளவும் ஏற்றப்பட்டதெனவும் அறிக்கை குறிப்பிடுகிறது. ஊட்டச்சத்து இன்றி இருந்தபோதிலும், மக்கள் இரத்ததானம் செய்தார்களெனவும் அறிக்கை தெரிவிக்கிறது.

மே மாதம் 14 ஆந் திகதி, மருத்துவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்ட பின்னர் மருத்துவமனை மூடப்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் பலர் அப்படியே விடப்பட்டதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது. கும்பலாகத் தப்பிச் செல்ல முற்பட்ட பொதுமக்கள் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம், எறிகணைத் தாக்குதல் என்பவற்றை நடத்தியதாகவும், தப்பிச் சென்றவர்களுக்கு இலங்கைப் படையினர் உதவி புரிந்தார்களெனவும் அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=7490

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.