Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் மீதான குற்றப்பத்திரிகையும், வெளிநாடுகளின் இலங்கை மீதான கவனமும்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் மீதான குற்றப்பத்திரிகையும், வெளிநாடுகளின் இலங்கை மீதான கவனமும்.

இல்ஙகையில் இனப்பிரச்சனை உண்டு என்பதை உலகம் 1980களில் இருந்தே ஏற்றுக்கொண்டுள்ளன. இதனால் தான் புலிகளின் போராட்டம் பெருவளர்ச்சியை அடைந்திருந்தது. இருந்தும் புலிகளின் போhட்ட வளர்ச்சியும், வல்லரசுகளின் கீழ்படிதலுக்கு மேவிய நிலைகளும் தான் உலகம் புலிகளை அகற்றினால் தான் இலங்கையில் தங்களின் ஆதிக்கத்தை நிவைநாட்டமுடியும் என்ற நிலையில் நோர்வே மூலம் சமாதானம் என்ற போர்வையில் புலிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியது, சமாதானம் ஒரு புறம், புலிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கை மறுபுறமாக நகர்ந்த நோர்வேயின் சமாதான முன்னெடுப்பு புலிகளின் நிலைகளைக்கண்காணித்து தாக்புதல் திட்டத்திற்கு வழிவகுத்துக்கொடுத்தவர்கள் சமாதாண முன்னெடுப்பாளர்கள் என்ற குங்ஙத்தையும் சமாதான முன்னெடுப்பாளர்கள் ஏற்றுக்கொணடுதான் ஆகவேண்டும்.

மொத்தத்தில் ராஜபக்ஷவை வைத்துக்கொண்டு புலிகளுடன் யுத்தம் ஒன்றை உலகம் தான் பின்னணியில் நின்று நடத்தியது என்பதை பலரும் கண்கூடாகக்கண்ட உண்மை. வராலாற்று உண்மைகள் இதைத் தெளிவாகப்படம் பிடித்துக்காட்டுகின்றன. இருந்தாலும் புலிகளை அழித்தலும் அதனுடன் சேர்ந்த சமாந்திரமான செயற்பாடுகளில் மேற்குலகமும், இந்தியாவும் தங்கள் நிலைகளை இலங்கையில் பலப்படுத்திக்கொள்ளும் செயல்களை ராஜபக்ஷ செயலிழக்கச் செய்து சீனாவின் ஆதிக்கத்தை மேம்படுத்திவிட்டதால் இவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் முழித்தார்கள். இதனால் தான் இலங்கiமீதான குற்றப்பத்திரிகையும், தமிழ்மக்கள் போரின் பின் கைவிடப்பட்ட நிலையும் பின்தள்ளிச் சென்றது.

மீண்டும் தமிழ்மக்கள் மீது மேற்குலகத்தினதும், இந்தியாவினதும் கரிசனை மேலோங்கும் நிலை மெல்ல மெல்ல நகரத்தொடங்கியுள்ளது. ஏனெனில் இலங்கையில் தங்கள் ஆதிக்கம் எப்படியும் நிலைபெறவேண்டும் என்பதே இக்குற்றப்பத்திரிகையின் முக்கிய குறிக்கோண் எனக்கொள்ளலாம். இது தமிழ் மக்கள் மீதான கரிசனையும், அவர்களுக்கான உரிமையைப்பெற்றுக்கொடுத்தலும் அல்ல என்பதை நாம் யதார்த்த ரீதியாக உணர்தல் வேண்டும்.

குற்றப்பத்திரிகைகளில் இரண்டு விதமான முடிவுகள் உள்ளன.

1. ராஜபக்ஷ சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் குறைத்து மேற்குலக சிந்தனைகளுக்கும் கீழ்படிதலுக்கும் இடம் கொடுப்பார் ஆகின், இக்குற்றப்பத்திரிகை இலங்கை சார்பான முடிவுகளுடன் கிடப்பில் போட்டுவிடுவார்கள்.

2. சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தாது மேலும் சீனாவிற்கே முதலிடம் அழிக்கப்பட்டு இந்தியாவும் மேற்குலகமும் இலங்கையிலுள்ள ஆதிக்கநிலை பலமிழக்கப்படுமாயின் இக்குற்றப்பத்திரிகை மிகவும் இறுக்கநிலை அடையும்.

இலங்கை அரசைப்பொறுத்தளவில் இலங்கையின் பாதுகாப்பு விடயத்தை எடுத்துக்கொண்டால் சீனாவை வைத்திருப்பதன் மூலம் தான் இந்தியாவின் தலையீடுகளை இலங்கையிலிருந்து அப்புறப்படுத்தமுடியும். என்னும் கருத்து வலுவாக உள்ளது. இலங்கையில் இனப்பிரச்சனையை விரிவுபடுத்தி போராட்டரீதியிலான வலுவைத்தமிழர்களுக்கு கொடுத்திருந்ததும் இந்தியா தான் என்பதை இலங்கை அரசு நன்றாக அறியும். பின்னர் அந்த வலுவை இல்லாதொழிக்க இந்தியாவையே இலங்கை அரசு பயன்படுத்தியது. உண்மையில் அது இலங்கை அரசின் அரசியல் இராஜதந்திரத்தின் ஒரு மைல்க்கல் என்று சொல்லலாம். போரின் பின்னான பாதுகாப்பு உறுதிப்படுத்தலையும் சமாந்திரமான முறையில் செய்வதற்கான ஆயத்தங்ளைக் கடைப்பிடித்து சீனாவை இலங்கையில் ஆதிக்கத்திற்கு கொண்டுவந்து இந்தியாவை அகற்றியமைதான் இன்று இலங்கையில் சிறிது அமைதிக்கான காரணமாகும்.

எது எப்படி இருப்பினும் தமிழர்களுக்கான தீர்வு என்பது பற்றி இங்கு யாரும் கரிசனையுடன் செயற்படுவதை எந்த அறிக்கையும் தெளிவுபடுத்தவில்லை. இன்று நடக்கும் தமிழர் கொலைகளையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இவர்களுடைய ஆதிக்க முறுகலில் இரண்டாவதாகக் கூறப்பட்ட முடிவின்படி இந்த முடிவு வருமானால், இந்த தாக்கத்தின் ஒரு பக்கவிளைவாக தமிழர்களுக்கு ஒரு உரிமைக்கான விடியல் பிறக்கலாம். அப்படிப்பறக்கும்போது அதையாரும் புறம்தள்ளிவிடமுடியாது. எனவே தமிழர்கள் உன்னிப்பாகக்கவனித்து இவர்களுடைய மோதலினால் தமிழர்களுக்கான உரிமை தானாகவே பிறக்கும் வழியில் இவர்களுடைய மோதலை வழிநடத்த வேண்டும். இதனால் தான் தமிழர்கள் தங்கள் உரிமைகளைப்பெற்;றெடுக்கமுடியும். இந்தத்தாக்கம் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஒரு சொல்லமுடியாத நிலையில் தான் இருக்கின்றது.

இன்யைநிலையில் குற்றப்பத்திரிகை வெளிவந்த தறுவாயில் ஒற்றுமையாக இருந்து புலிகளை வல்லமையை மடக்கிய உலக வல்லரசுகளும், ஏனைய நாடுகளும் பிரிவுபட்ட நிலையில் நிற்பது தமிழர்களுக்கு ஒரு நல்ல சகுனமே. இந்த நிலை தொடரவேண்டும். ராஜபக்ஷ குற்றப்பத்திரகையை ஏற்றுக்கொள்ளாநிலையை வலுப்படுத்தவேண்டும். இங்கு தமிழர் நிலை விளையாட்டு மைதானத்தில் ஒரு கால்பந்துதான். எனவே தமிழர்கள் மீண்டும் கால்பந்து ஆகாமல் தங்ளைப்பாதுகாத்துக்கொண்டு விளைவுகள் தமிழர்சார்பாக விளைய உழைக்கவேண்டும். தமிழருக்கு நேர்ந்த அதே நிலைமையை ராஜபக்ஷமீது திருப்பி விடவேண்டும். தமிழர் ஆகிய நாங்கள் ஆயுதத்தைத்தூக்கக்கூடாது. சாய்கின்ற மரத்தை இலங்கைமீது உரமாகச் சாய்த்துவிட வேண்டும். மொத்தத்தில் இலங்கையில் உள்ள அமைதி வெகுகாலம் நீடிக்காது.

அருமை, புரிந்துகொண்டு செயம்படுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படி இருப்பினும் தமிழர்களுக்கான தீர்வு என்பது பற்றி இங்கு யாரும் கரிசனையுடன் செயற்படுவதை எந்த அறிக்கையும் தெளிவுபடுத்தவில்லை. இன்று நடக்கும் தமிழர் கொலைகளையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இவர்களுடைய ஆதிக்க முறுகலில் இரண்டாவதாகக் கூறப்பட்ட முடிவின்படி இந்த முடிவு வருமானால், இந்த தாக்கத்தின் ஒரு பக்கவிளைவாக தமிழர்களுக்கு ஒரு உரிமைக்கான விடியல் பிறக்கலாம். அப்படிப்பறக்கும்போது அதையாரும் புறம்தள்ளிவிடமுடியாது. எனவே தமிழர்கள் உன்னிப்பாகக்கவனித்து இவர்களுடைய மோதலினால் தமிழர்களுக்கான உரிமை தானாகவே பிறக்கும் வழியில் இவர்களுடைய மோதலை வழிநடத்த வேண்டும். இதனால் தான் தமிழர்கள் தங்கள் உரிமைகளைப்பெற்;றெடுக்கமுடியும். இந்தத்தாக்கம் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஒரு சொல்லமுடியாத நிலையில் தான் இருக்கின்றது.

இன்யைநிலையில் குற்றப்பத்திரிகை வெளிவந்த தறுவாயில் ஒற்றுமையாக இருந்து புலிகளை வல்லமையை மடக்கிய உலக வல்லரசுகளும், ஏனைய நாடுகளும் பிரிவுபட்ட நிலையில் நிற்பது தமிழர்களுக்கு ஒரு நல்ல சகுனமே. இந்த நிலை தொடரவேண்டும். ராஜபக்ஷ குற்றப்பத்திரகையை ஏற்றுக்கொள்ளாநிலையை வலுப்படுத்தவேண்டும். இங்கு தமிழர் நிலை விளையாட்டு மைதானத்தில் ஒரு கால்பந்துதான். எனவே தமிழர்கள் மீண்டும் கால்பந்து ஆகாமல் தங்ளைப்பாதுகாத்துக்கொண்டு விளைவுகள் தமிழர்சார்பாக விளைய உழைக்கவேண்டும். தமிழருக்கு நேர்ந்த அதே நிலைமையை ராஜபக்ஷமீது திருப்பி விடவேண்டும். தமிழர் ஆகிய நாங்கள் ஆயுதத்தைத்தூக்கக்கூடாது. சாய்கின்ற மரத்தை இலங்கைமீது உரமாகச் சாய்த்துவிட வேண்டும். மொத்தத்தில் இலங்கையில் உள்ள அமைதி வெகுகாலம் நீடிக்காது

இது தான் எமக்குள்ள வழி போல் உள்ளது.புலம் பெயர் தலைமைகள் தான் இந்தப் புது விதமான சூழ்நிலையைக் கவனமாகக் கையாளவேண்டும்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.