Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை விவாதிக்க இந்தியா எதிர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை விவாதிக்க இந்தியா எதிர்ப்பு

ஐ.நா./கொழும்பு, புதன், 27 ஏப்ரல் 2011( 13:59 IST )

எதிர்பார்த்தது போலவே இலங்கைக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ள இந்திய அரசு, நிபுணர்குழு அறிக்கையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்துள்ளதாகவும், அப்பாவி மக்களை பாதுகாப்பு வலயத்திற்குள் வரவழைத்து இலங்கை இராணுவம் குண்டு வீசி கொன்றதாகவும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கை போர்க் குற்றம் புரிந்துள்ளது உண்மைதான் என்பதை ஒப்புக்கொள்ளும் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளிவந்தும்,மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று வீசும்போது கடைபிடிக்கும் அதே கள்ளமவுனத்தை கடைபிடித்தபடியே, தற்போது இலங்கையை போர்க் குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றுவதற்காக கமுக்கமாக களமிறங்கி உள்ளது.

இந்தியாவின் ஆதரவு தங்களுக்கு கிடைத்துள்ளதை உறுதிபடுத்தியுள்ள இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிப்பதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் அமர்வுகளின் போது நிபுணர் குழு தொடர்பான விடயங்களை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்க வேண்டாமென இந்தியா கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிபுணர் குழு அறிக்கையை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்க வேண்டுமானால்,ஐக்கிய நாடுகள் அமைப்பின் அனுமதி பெற வேண்டியது அவசியமென்று அவர் மேலும் கூறினார்.

இலங்கை இராணுவம் தமிழர்களை கொன்று குவிப்பதற்கு துணைபோன மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு, தற்போது போர்க் குற்றச்சாட்டில் சிக்கி உள்ள ராஜபக்சவை காப்பாற்ற முட்டுக்கொடுக்க தொடங்கி இருப்பது, தமிழர்களுக்கு இழைக்கும் பச்சை துரோகம் என இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கு தமிழக தலைவர்கள் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதே சமயம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் இங்கே மற்றொன்றையும் குறிப்பிடுகிறார்கள்.

"போர்க் குற்றத்திற்காக இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப்படுமானால்,ஆயுத உதவி மட்டுமல்லாது போர் வியூகம் அமைத்து கொடுத்தது வரையிலான இந்திய அரசு அளித்த உதவியை இலங்கை காட்டிக்கொடுக்கும்.

அது மட்டுமல்லாது,கிளிநொச்சி வீழ்ந்தவுடன் போரை நிறுத்தி புலிகளை நிர்ப்பந்தத்தின் மூலம் சரணடைய செய்யவோ அல்லது பேச்சுவார்த்தைக்கு வரவோ செய்யலாம் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.ஆனாலும் அப்பாவி தமிழர்கள் உயிர் இழந்தாலும் பரவாயில்லை; போரை தொடர்ந்து நடத்தி புலிகளை முற்றாக அழித்தொழிக்குமாறு இந்தியாதான் கூறியது.

எனவே போரில் பொதுமக்கள் பலியானதற்கு இந்தியாதான் காரணம் என்று கூறி காட்டிக்கொடுக்கவும் இலங்கை தயங்காது என்பதால்தான், இலங்கையை காப்பாற்ற பதறி துடித்துக்கொண்டிருக்கிறது மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு.

எனவே இதர உலக நாடுகளின், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் முயற்சி ஊடாக ஐ.நா.வில் 'வீட்டோ' அதிகாரம் கொண்ட சீனாவையும், ரஷ்யாவையும் கட்டுப்படுத்தி, இலங்கைக்கு எதிராக உலகநாடுகளை அணி திரட்டினாலொழிய நியாயம் கிடைக்காது" என்கின்றனர் அவர்கள்.

http://tamil.webdunia.com/newsworld/news/international/1104/27/1110427018_1.htm

இந்தியா ஒரு இக்கட்டான நிலையில் உள்ளது உண்மை. இந்தியா தனியவே ஆயுதங்கள், புலனாய்வுகளை வழங்கவில்லை. ஆனால், இந்தியா ஆயுதம், புலனாய்வு தகவல்கள் என்பனவற்றை கொடுத்தாலும் சிங்களமே போர்க்குற்றம் புரித்துள்ளது. எனவே சிங்களமே பதில் சொல்லவேண்டும்.

மேலும் இந்தியா லிபியா உட்பட பல்வேறு விடயங்களில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் முன்னால் அமைதியும் காத்தது. நாம் கொஞ்சம் அமைதியாகவும் அவதானமாகவும் இப்பொழுது இருக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தோழர்..

Inbox

X

siruthaai thamizhthesiyan

Muthamizh Vendhan

sure i will speak with thiru may 17 regarding this issue

Reply

|

Muthamizh Vendhan

to muthu.tamil78, Muthamizh, muthamizh78, me

Urge Indian Government to prosecute War Criminals of Sri Lanka

http://www.change.org/petitions/urge-indian-government-to-prosecute-war-criminals-of-sri-lanka

Please Sign this petition and circulate to friends and relatives

Muthamizh

Chennai

இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

1,இலங்கை ராணுவத்திற்கு ஆலோசனை வழங்கியவர் சதீஸ் நம்பியார்

2.இந்திய ராணுவ தொழில் நுட்பவியலாளர்கள்,இந்திய ராணுவ வைத்தியர்கள்,மற்றும் மேல் நிலை உத்தியோகத்தர்கள் வன்னியில் போஸகர்களாக இருந்திருக்கிறார்கள்.

3.இதைவிட அஸாம் பட்டாலியன்கள் போரிட்டுள்ளார்கள்

ஆதாரம்

1.முழங்காலில் பாடசாலை ஒன்றுக்கு முன்னால் அஸாம் பட்டாலியன் கடமையிலிருந்தார்.(தமிழ் இணையத்தளங்களில் படம் வெளியானது)

2.குள உடைப்பின் போது கொல்லபட்டவர்கள் இந்திய ராணுவத்தினர் தான் அதிகம் இவர்களின் சடல ஆதாரங்கள் அலைவரிசை நான்கிடம் உள்ளதாக தகவல் உண்டு பொறுத்திருந்துபார்போம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.