Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலம் யாருக்காகவும் காத்திருப்பதுமில்லை : தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள் மீள்வதுமில்லை

Featured Replies

ஈழத்தமிழராகிய நாம் பல சந்தர்ப்பங்களை தவறவிட்டுள்ளோம்.

அதாவது நமது அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்கான போராட்டம் பலவாய்ப்புக்களினை அறுவடைசெய்யாமலேயே நகர்ந்து வந்திருக்கின்றது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் முதிர்ந்த தமிழ் அரசியலாளருமான திரு.இராசம்பந்தன் அவர்களும் எமது இணையத்தளத்திற்கு அண்மையில் வழங்கிய செவ்வியில் இவ்வொத்தகருத்தினையே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எமது அரசியல் நகர்வுகள் முன்னோக்கியதாக இருக்கின்றதா அல்லது வட்டப்பாதையில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றதா என்னும் கேள்விக்கு ஈழத்தமிழ்மக்கள் இன்று வந்தடைந்துள்ள சூழமைவே விடைதருகின்றது.

அதாவது குளிர் வலைய தெருக்களில் பனிச் சேற்றில் கால்புதைய, பதாகைகள் தாங்கிய கைகள் கனத்திருக்க, யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் நாம் குரல் வற்றி நின்றிருந்த அந்த பொழுதில் உலகம் கண்களையும் காதுகளையும் பொத்தி வாய்மூடி மெளனித்திருந்தது.

நம்குரல்கள் எந்த பதிவுமின்றி காற்றில் கரைந்தும் போனது. முள்ளிவாய்க்காலும் மூச்சடங்கிப் போனது. இவை கடந்து சென்ற உண்மைகள்.

ஆனால் இன்று அதே உலகம்தான் அன்று நாம் சொன்னவற்றை அறிக்கையாக பதிவுசெய்து உலகின் முற்றத்தில் விரித்துவிட்டிருக்கிறது.

அண்மைக்காலங்களில நிகழ்ந்து முடிந்த பேரவலங்களில் ஒன்று - அதுவும் நம் வரலாறு - உலகின் முதல்நிலை அமைப்பொன்றால் அதாவது ஐநாவால் 216 பக்கங்களில் ஆவணமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாய்ப்பினை நாம் எவ்வாறு ஆக்கபூர்வமாக கையாளப்போகின்றோம் என்ற கேள்வி நம் எல்லோர் சிந்தனையிலும் தொக்கி நிற்கின்றது.

இந்நிலையில், தமிழ்மக்களின் அகபுற அரசியற்சூழலினையும் எதிர்கொள்ளவுள்ள சவால்களினையும் கவனத்திற்கொண்டு செயற்படுதல் என்பதே இன்றைய காலத்தின் பதிலாக, கட்டளையாக இருக்க முடியும்.

ஐ.நா.செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட சிறிலங்காவில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வல்லுநர்கள் குழுவின் அறிக்கை ஒருவழியாக வெளியிடப்பட்டாயிற்று.

01

சிறிலங்கா அரசின் ஆட்சியாளர்களினையும், தமிழீழவிடுதலைப்புலிகளினையும், புலம்பெயர் தமிழர்களையும், ஐநா கட்டமைப்பையும் நோக்கி தனது சுட்டுவிரலினை நீட்டியுள்ள இவ்வறிக்கையினை இருட்டடிப்பு செய்வதற்கு சகல உத்திகளினையும் சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் பயன்படுத்தி இருந்தனர்.

ஆனாலும் அறிக்கை வெளிவந்துவிட்டது.

இவ்வறிக்கை தொடர்பாக தமிழ்மக்களின் மத்தியில் பல்வேறுபட்ட கருத்துக்கள், எதிர்பார்ப்புகள், எதிர்வுகூறல்கள், என பலவித நிலைகள் காணப்படுகின்றன.

இத்தகைய பின்னணியில்தான் ஈழத்தமிழ்மக்களாகிய நாம், நம் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு ஒன்றினை செய்வது அவசியமாகும்.

அ). சிறிலங்காவின் ஆட்சியாளர்களின் தொடர்பறாத அரசியற் சூழ்ச்சியின் முதிர்வும், அதுதமிழ்ச்சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களும்.

ஆ). ஈழத்தமிழர்களின் இன்றைய இருப்பும் அது தொடர்பான ஒரு கணிப்பும்.

இ).ஐநா செயலாளரின் அறிக்கையும் அதுபோன்ற பல்வேறு முனைப்புகள் தொடர்பான மதிப்பீடுகளும்.

சிறிலங்காவின் அரசியல் நிகழ்ச்சித்திட்டம் அல்லது அரசியல் சூழ்ச்சி திட்டம் என்பது மிகவும் துல்லியமான அதேவேளையில் தூரநோக்குடனான திட்டமிடல் கொண்டது என்பதும், அது தனது பாதையில் தளர்வுறாமலும் இலக்குதவறாமலும் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பதும் நாம் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டியதொன்றாகும்.

சிறிலங்காவின் இந்த அரசியல் திட்டம் சிங்கள பௌத்த தேசியவாத கருத்தியலின் மீது கட்டமைக்கப்பட்ட சிந்தனையாளர்கள் குழாத்தினாலேயே நெறிப்படுத்தப்படுகின்றது.

ஆட்சிபீடம் ஏறும் எந்தவொரு அரசியற்கட்சியும் அதன் தலைவர்களும் இக்குழாத்தின் நிகழ்ச்சித்திட்டத்திலிருந்து விலகிச்செல்வதும் இல்லை செல்லவும் முடியாது.

சிறிலங்கா தனது தொடர்நிகழ்ச்சித் திட்டத்தினை வெற்றிகரமாகவம் தளர்வின்றியும் முன்னெடுப்பதற்கு ஏதுவாகவே தனது வெளிநாட்டுக் கொள்கைகளினையும் அனைத்துலக பிராந்திய உறவுகளினையும் படிப்படியாக கட்டியெழுப்பியும் காலத்திற்கு காலம் மறுசீரமைத்தும் வந்துள்ளது.

அதற்கு இசைவாகவே அபிவிருத்திக்கொள்கைகள், வளப்பங்கீடு, அரசநிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்புக்கள், சனத்தொகைக்கொள்கை, வளர்ச்சிமையங்களினை உருவாக்குதல் என்பனயாவும் வடிவமைக்கப்பட்டன.

சிங்கள தேசியவாதஅரசியற் கட்சிக் கட்டமைப்புக்கள் கூட இந்நோக்கத்திற்காகவே அடித்தளமட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டன.

ஆனால் ஈழத்தமிழர்களாகிய எம்மிடம் இவ்வகை ஈழத்தமிழ் தேசிய கருத்தியலுடனான சிந்தனை மையம் ஒன்றுண்டா? எம்மிடையே சிந்தனையாளர்கள்தான் உள்ளார்களா? என்ற தேடலும் தேவையும் தவிர்க்க முடியாததொன்றாகும்.

இன்று தமிழ்ப்பிரதேசங்கள் எதிர்கொள்ளும் முக்கிய அச்சுறுத்தலே அப்பிரதேசங்களினையும் வளங்களினையும் சனநாயக ரீதியாக ஆட்சிப்படுத்துவதற்கு வேண்டிய மக்கள்தொகைப் பற்றாக்குறையேயாகும்.

அங்கு வேரடிமண்ணுடன் வாழ்வோரில் அரைப்பங்கு அளவாயினும் புலம்பெயர்ந்து வாழ்கின்றோம் என்பதையும், வளத்தையும் நிலத்தையும் கைவிட்டு வந்தோம் என்பதையும் நாம் நினைவில் கொள்வதில்லை.

அடையப்படக்கூடிய நன்மைகளினைத் தக்கவைப்பதற்கு பொருத்தமான முறையில் கடந்த முப்பதாண்டுகளாக நடைபெற்ற ஆயுதப்போராட்டம் தன்னை மீள்கட்டமைக்கத் தவறியுள்ளமையே இன்றைய யதார்த்த நிலை.

யுத்தத்தின் நேரடி மற்றும் மறைமுக தாக்கங்கள் தமிழ்ச் சமூகத்தின் கட்டமைப்பு, நிறுவனங்கள், பொருண்மிய ஆளுமை, மூலதனவாக்கம், தொழிற்திறன், தொழிலாக்கம், வளங்களினைக்கட்டுப்படுத்தும் உரித்தாளுமை ஆகியபரிமாணங்களில் மிகமோசமான பின்னடைவினை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் நாம் முன்னெடுத்த ஆயுதப்போராட்ட வழிமுறை தன்னை முதன்மைப்படுத்துவதற்காக கையாண்ட மாற்றுக் குரல் மறுப்பு அணுகுமுறையானது ஒரு பெரும் வெற்றிடத்தையும் தோற்றுவித்துவிட்டது.

இதனால், சமூகத்தின் சிந்தனை ஆளுமையும், குடிசார் சமூகநிறுவனங்களின் செயற்திறன்கொண்ட வளர்ச்சியும், சனநாயக பண்புகளில் மக்கள்கொண்டிருக்கவேண்டிய பற்றுதியும் மிகமோசமாக சீரழிந்துள்ளது.

இன்று தமிழ்ச்சமூகம் தனக்கு தேவையான தலைமைத்துவத்தினை கட்டியெழுப்புவதற்கு அதிகவிலைகொடுக்கவேண்டியுள்ளதுடன் தங்களது சொல்லுக்கும் செயலுக்கும் பொறுப்புக்கூறத் துணிவற்ற முகமூடிகளின் பொய்மைகளினையும் எதிர்த்து போராடவேண்டியுள்ளது.

ஐநா வெளியிட்ட அறிக்கை சிறிலங்காவின் ஆட்சிபீடத்தினையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையினையும் நோக்கி தனது நெற்றிக்கண்ணை காட்டினாலும் அது விரைவாக செயற்பட்டு நீதியினை நிலைநாட்டும் என நம்புதல் ஏமாற்றத்திற்குரியதே.

அறிக்கையின் முன்மொழிவுகளினை சிறிலங்கா அரசாங்கம் நிர்ப்பந்தத்தின்பேரில் ஏற்றுக்கொண்டாலும், ஐநாவின் பொறிமுறைகள் செயற்படுவது பல படிமுறைகளை தாண்டுவதாகவும் கால நீட்டம்கொண்டதாகவுமே இருக்கும்.

அத்துடன் இவ்வறிக்கையின் அடிப்படையில் தமிழ்மக்களின் சுயநிர்ணயஉரிமைக்கான அங்கீகாரம் தன்னியல்பாக ஐ.நா சபையினால் அங்கீகரிக்கப்படும் என்றோ தமிழர்களின் தன்னாட்சிப்பிரதேசம் பிரகடனப்படுத்தப்படும் என்றோ நாம் எண்ணினால் ஏனையதேசங்களின் அனுபவங்களிலிருந்து எதனையும் நாம் கற்றுக்கொள்ளவில்லை என்பதே வெளிப்படையாகும்.

போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் அனைத்துலகின் அக்கறை என்றுமே பாதிக்கப்பட்ட மக்கள் சார்பானதாக இருந்ததில்லை.

வளமுள்ள நிலப்பரப்புக்களினை பிரித்து ஆட்சிப்படுத்துவதற்கும், தங்களுடைய பொருளாதார நலன்களினையும், வல்லாண்மையினையும் தக்கவைத்துக்கொள்வதற்கும், கீழ்ப்படிவற்ற ஆட்சிகளினை மாற்றுவதற்குமான காரணிகளாகவே இவ்வகைக் குற்றச்சாட்டுகள் மேலெடுக்கப்படுகின்றன என்பதும் கவனத்திற்குரியது.

அவர்களுடைய நலன்களுக்கு சாதகமில்லாத தேசங்களினதும் ஆட்சியாளர்களினதும் மக்களினதும் பிரச்சனைகள் என்றுமே அனைத்துலகத்தின் கவனத்தினையோ ஐ.நாவின் அக்கறையினையோ பெற்றதில்லை.

இலங்கைத்தீவும் சிறிலங்கா ஆட்சியாளர்களும் ஈழத்தமிழ்மக்களும் இதற்கு விதிவிலக்கல்ல. எனினும் ஐ.நாவில் பெயரளவிற்கேனும் முன்னெடுக்கப்படும் முயற்சிகளினை ஆக்கபூர்வமானதாக மாற்றும் வாய்ப்புக்கள் இல்லையென வாதிடமுடியாது.

இதனை கடந்த காலத்தின் அனுபவங்களூடாக கற்றுக்கொள்ளமுடியும். அவற்றில் சில உதாரணங்கள் நம் சிந்தனைக்கு...

02.

இஸ்ராயேல்-பலஸ்தீனம் தொடர்பான ஐ.நா தீர்மானங்கள்:

பாலஸ்தீனப்பிரதேசத்தினை யூதர்களுக்கும் அராபியர்களுக்குமான இரண்டுதேசங்களாக பிரிப்பது தொடர்பான ஐ.நாவின் 1947ம் ஆண்டு நவம்பர் 29ம் திகதிய தீர்மானமும் தாயகத்திற்கு மீளத்திரும்புவதற்கான பாலஸ்தீன மக்களின் உரிமையினை அங்கீகரிக்கும் ஐ.நாவின் 1949ம் ஆண்டுத் தீர்மானமும் இஸ்ராயேல் தேசத்தின் உருவாக்கத்தில் முக்கியமான மைல்கற்களாக அமைந்தன.

எனினும் இவ்விரண்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்படுவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே 1896களில் யூதர்கள் தங்கள் தாயகத்தினை உருவாக்கும் முயற்சிகளினை மிகதூரநோக்குடன் ஆரம்பித்துவிட்டனர்.

ஓட்டோமான் ஆட்சியின் கீழிருந்த பாலஸ்தீன நிலப்பரப்பில் சிறிதுசிறிதாக காணிகளினை கொள்வனவுசெய்து அவற்றில் ஏதிலிகளாக சிதறிக்கிடந்த யூதர்களினை கொண்டு சென்று குடியேற்றியும், அவர்களுக்கு தேவையான பாடசாலைகள், வைத்தியசாலைகள், ஆசிரியர் பயிற்சிமையங்கள் விவசாயபயிற்சிபாடசாலைகள் என நிறுவனக்கட்டமைப்புக்களினை உருவாக்கியும் ஒரு பிரகடனப்படுத்தப்படாத இராட்சியத்தினைக்கட்டியெழுப்பினர்.

உலகெங்கும் சிதறிவாழ்ந்த நிலையிலும் சியோனிச இயக்கத்தின் வழிநின்று தாங்கள் வாழ்ந்த தேசங்களின் அரசியல்,கல்வி, பொருண்மியம், தலைமைத்துவம் போன்ற பல்வேறு துறைகளுக்குள் தங்களினை பலங்கொண்ட சமூகமாக நிலைநிறுத்தினர்.

ஒரு சமூகம் தனது தாயகத்தினை கட்டியெழுப்புவதற்கு நிலமும், மக்கள் தொகையும், சர்வதேசங்களுக்குள் தாங்கள் கொண்டிருக்கக்கூடிய செல்வாக்கும்;, பொருண்மியச் செழிப்பும் இன்றியமையாதவை என இஸ்ராயேல் யூதர்கள் நிரூபித்தனர்.

அவர்களது உறுதிமிக்க முயற்சிக்கு ஐந்து தசாப்தங்களுக்களுக்கு ஐ.நாவின் தீர்மானம் வலுச்சேர்த்தது.

அதேபோன்று 1948 அரபு - இஸ்ரேல் யுத்தத்தினால் அகதிகளான பாலஸ்தீனர்களின் நாடுதிரும்பும் உரிமையினை [right to return]அங்கீகரித்த ஐ.நாவின் 1948 டிசம்பர்11 தீர்மானம், 1974ம் ஆண்டு நவம்பர் 22ல் நிறைவேற்றிய தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட ” தாயகத்திற்கு திரும்புவதற்கான உரிமை பிரிக்கப்படமுடியாததும் ஒவ்வொரு மனிதனதும் அடிப்படை உரிமையுமாகும்” சரத்தினால் வலுவூட்டப்பட்டது.

இது பலதலைமுறைகளுக்குப் பின்பும் தாயகம் திரும்ப உறுதிபூண்டுள்ள யூதர்களுக்கும் பலஸ்தீனர்களுக்கும் மிகவும் உந்துதலாக அமைந்தது.

மேற்குசகாரவும் ஐ.நா தீர்மானமும்:

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கை பரிமாறப்பட்டதற்கு சில தினங்களுக்கு முன்பு அதேவாரத்தில் மேற்கு சகாராவில் மொரக்கோவின் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையும் ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு அதற்குரிய செயலணியினால் கையளிக்கப்பட்டிருந்தது.

எனினும் அவ் அறிக்கை தயாரிப்பு நிலையில் இருக்கும்போதே மொரக்கொவினதும் பிரான்ஸ் நாட்டினதும் அழுத்தம்காரணமாக அறிக்கையின் காரம் குறைக்கப்பட்டது.

ஸ்பெயின் நாட்டின் குடியேற்ற ஆட்சிக்கு கீழிருந்த மேற்குசகாரா பிரதேசத்தினை ஐ.நா. தனது 1960ம் ஆண்டு டிசம்பர் 15ம் திகதிய தீர்மானத்தின் கீழ் ”குடியேற்றஆட்சியிலிருந்து விடுவிக்கப்படவேண்டிய தன்னாட்சியற்ற பிரதேசம்” என பிரகடனம் செய்தது.

தொடர்ந்து 1965 டிசம்பரில் நிறைவேற்றிய தீர்மானத்தினூடாக மேற்குசகாராப் பிரதேசத்திலிருந்து ஸ்பெயின் குடியேற்ற ஆட்சியினை விலகுமாறு ஐ.நா.கோரிக்கை விடுத்ததுடன் 1966டிசம்பர் 20 தீர்மானத்தினூடாக மேற்குசகாராவின் தன்னாட்சியுரிமையினை தீர்மானிப்பதற்கான சர்வசனவாக்குரிமையினை நடாத்துமாறு ஸ்பெயின் ஆட்சியாளரினை கேட்டிருந்தது.

1967ம் ஆண்டிலிருந்து 1973ம் ஆண்டுவரை ஒவ்வோராண்டும் தனது தீர்மானத்தின் மூலம் சர்வசனவாக்கெடுப்பினைசெய்யுமாறு வலியுறுத்திவந்தது.

இடைப்பட்டகாலத்தில் மேற்குசகாரா மக்கள் பலகட்டங்களாக யுத்தம், இடப்பெயர்வு, அண்டைநாடுகளின் படையெடுப்பும் மேலாதிக்கமும் என பலஇன்னல்களினைத் தாண்டிவந்தும் இன்றுவரை அவர்களின் சுயாட்சிக்கான ஆணையினைப்பெறும் சர்வசனவாக்கெடுப்பு நடைபெறவில்லை.

தென்சூடானும் தன்னாட்சிக்கான ஆணைவாக்கெடுப்பும்:

கடந்த வருட இறுதியில் தென்சூடான் மக்கள் தன்னாட்சிக்கான ஆணை வாக்கெடுப்பில் பங்குபற்றினர்.

இவ்சர்வசனவாக்கெடுப்புக்கு சாத்தியமானதற்கு SPLM [sudan People Liberation Army] சூடான்மக்கள் விடுதலை இராணுவமும் அதன்தலைவர்களும் காட்டிய மிகவும் முதிர்ச்சியான அணுகுமுறையே காரணமாகும்.

பலதடவைகள் சூடான் ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டிருந்தும் ஒப்பந்தங்கள் மீறப்பட்டிருந்தும் 2005ல் செய்யப்பட CPA [Comprehensive Peace Agreement] உடன்படிக்கையினை காப்பாற்றுவதில் SPLM அமைப்பின் அன்றைய தலைவர் ஜெனரல் ஜோண் கராங் காட்டிய உறுதியும், உலங்குவானூர்திவிபத்தில் அவர் கொல்லப்பட்ட பின்பும் மிகநிதானமாக பின்பற்றப்பட்ட தலைமைத்துவ மாற்றமும், தற்போதைய தலைவர் தளபதி சல்வா கீர் மாயாடிற் கைக்கொண்ட நண்பர்களினை அணிசேர்க்கும் நேர்மையும் இன்று தென்சூடான் மக்களுக்கு தன்னாட்சியினையும் இறைமையினையும் மீட்டுக்கொடுத்துள்ளது.

ஐ.நாவும் அனைத்துலக நீதிமன்றமும் சூடான் தலைவர் ஓமர் அல் பசீர் அவர்களுக்கு எதிராக முன்னெடுத்த யுத்தக்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான உறுதியான நடவடிக்கைகள் தென்சூடான் மக்கள் தங்கள் மக்கள் ஆணையினை உரியகாலத்தில் செய்வதற்கு எதிராக செயற்படாவண்ணம் சூடான் ஆட்சியாளர்களினை நிர்ப்பந்தித்ததுடன் அவர்களின் கரங்களினைக்கட்டிப்போட்டது.

ஈழத்தமிழர்கள் குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் வாழுகின்ற ஈழத்தமிழர்களாகிய நாம் இவ்வகை அனுபவங்களிலிருந்து மிக அதிகமாக கற்கவேண்டியுள்ளது.

அதேவேளையில் நாம் மிக உற்சாகத்துடன் வரவேற்றிருக்கும் ஐநா வல்லுநர் குழுவின் அறிக்கை புலம்பெயர்ந்துள்ள எம்மைப்பற்றி குறித்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது தொடர்பான விடயம் ஐநாவின் போர்க் குற்ற அறிக்கையின் பரிந்துரை இல.417ல் இருந்து பரிந்துரை 420 வரை இடம்பெற்றுள்ளது. அதில் குறிப்பாக புலம்பெயர்ந்த சமூகத்தின் பெரும்பான்மையான பகுதி சமாதானம் ஏற்படுவதற்குத் தடையாக இருக்கிறது என்றும், போரின் இறுதிப் பகுதியில் இடம்பெற்ற புலிகளின் வன்முறைகள் குறித்து இந்தச் சமூகம் அக்கறையின்மையாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளது.

03.

தற்போது ஐ.நாவின் அறிக்கை உருவாக்கியிருக்கும் மிகவும் அரிதான வாய்ப்பு ஓர் ஒற்றைப் புள்ளியே.

ஆனாலும் அப்புள்ளியினை இணைத்து நாம் விரும்பும் கோலத்தினை வரைவதற்கு மிகக்கடுமையாக உழைக்கவேண்டியுள்ளது.

அத்துடன் மிகவும் நிதானத்துடனும், உயர்புலமையுடனும், அரசியல் சூழ்ச்சிகரமான அணுகுமுறைகளினை தாயகத்திலும் புலம்பெயர்ந்த நம்மிடையேயும் கட்டியெழுப்பவேண்டியுள்ளது.

1. தமிழ்மக்களின் எதிர்காலம் தொடர்பான அரசியல் சூழ்ச்சித் திறனை கண்டறிவதற்கும், குறுகிய நீண்டகால திட்ட வரைபை வகுத்தெடுப்பதற்கும், புலமைசார் அறிஞர்கள் கொண்ட அணியினை குழுநிலைவாதங்களினைக் கடந்த நிலையில் உருவாக்கி செயற்படுத்தவேண்டும்.

2. தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்தவும் விரிவுபடுத்தவும், அவர்கள் முன்னெடுக்கும் அரசியல் முயற்சிகளுக்கு ஆலோசனைகளும் திணிப்பற்ற கருத்துரைப்பும் வழங்கி ஆதரவும் பலமும் சேர்க்கவேண்டும்.

3. தமிழ்ச்சமூகத்திற்கு வெளியே ஏனைய தேசியஇனங்கள், செயற்பாட்டாளர்கள், உரிமைக்கான போராடும் அமைப்புக்கள், அரசியல் சூழச்சியாளர்கள் என பலபரிமாணங்கொண்ட தோழமை ஆதரவுத்தளத்தினைக் கட்டியெழுப்புவதுடன்,

எமக்கு புறம்பாக உள்ள அனைவரினையும் நோக்கி நெற்றியை சுருக்கி புறந்தள்ளும் கலாச்சாரத்தையும் ஒழித்தல்வேண்டும்.

4. புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழுநிலைவாதமும், அதிகாரத்தினையும் வளத்தினையும் தக்கவைத்திருப்பதற்கான போட்டிகளும், தற்புகழ்ச்சிப் பரப்புரைகளும், துரோகிப் பிரகடனங்களும் முற்றாக முடிவுக்கு கொண்டுவரப்படுவதுடன், முகத்தினை மறைத்து அரசியல் செய்தல், அறிக்கைவிடுதல், அச்சுறுத்தல் ஆகியவற்றிலிருந்தும் நாம் முழுமையாக விலகி வரவேண்டும்.

இவை நமக்கு கைகூடி வரும்போதுதான் எமது அரசியல் நகர்வுகள் முன்னோக்கியதாக இருக்கின்றதா அல்லது வட்டப்பாதையில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றதா என்னும் கேள்விக்கு விடைகாண முடியும்.

உழைப்போம்.. கோலமொன்றை வரைந்தெடுப்போம்..

- புதினப்பலகை குழுமத்தினர்

http://www.puthinappalakai.com/view.php?20110427103713

Edited by komagan

  • தொடங்கியவர்

கள உறவு நண்பர் நிர்மல் நெடுக்ஸ் இடம் கேட்கப்பட்ட கேள்வியின் சாரம்சம் இதல் உள்ளது.தம்பி இருக்கின்றாரா இல்லையா என்பதில்லை இப்பொழுது உள்ள கேள்வி,மாறாக இந்தக் காலக் கண்ணாடியில் எமது முகத்தைப் பார்த்து திருத்த வேண்டியிருந்தால் திருத்தி இனி இதைப் பயன்படுத்தி என்ன செய்யப் போகின்றோம் என்பதே நிதர்சனமான கடமையாகும்.

அன்புடன்

கோமகன்

தயவுசெய்து, இணையங்களை தொடங்கி தமிழர்களுக்காக கட்டுரை, கவிதைகள் எழுதுபவர்கள் அதை சற்று நிறுத்திவிட்டு, இந்த முக்கியமான நேரத்திலாவது ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடவும். உங்கள் செய்திகளை வேற்று இன மக்களிடமும் அவர்களின் அரசுகளிடமும் கொண்டு செல்லுங்கள். அவர்களின் மொழி தெரிந்தவர்கள் இணையங்களில் கருத்தாடல்களில் ஈடுபடவும். ஐ நா அறிக்கையையாவது மற்றவர்களுக்கு அறியப்படுத்துவோம்.

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டாம்.

தமிழர்கள் தெளிவாகவே உள்ளார்கள். இந்த அறிக்கையை வைத்து பழையபடி பணம் சேர்ப்பதற்காக கோவில்களில் கூட்டம் நடத்தினாலும் உங்கள் ஒவ்வாமைகளை புலம் பெயர்ந்த தமிழர்கள் கேட்கும் நிலையில் இல்லை.

Edited by thappili

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.